நித்தியத்தின் உள்ளொலி - Whispers from Eternity - Tamil
இது ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் Whispers from Eternity 1929-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பதிப்பின் மொழிபெயர்ப்பு ஆகும். மூலநூலை yogananda.org அல்லது PDF-காப்பியை archive.org-லிருந்து பெறலாம். இந்நூல் உரைநடைச்செய்யுள் வகை, ஆதலால் சற்று கடினமான ஆங்கில வார்த்தைகளின் பிரயோகம் இதில் வெகுவாகக் காணப்படும். இந்த மொழிபெயர்ப்பு தமிழில் நெருங்கிய வார்த்தைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மொழிபெயர்ப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால், தயவுசெய்து எனக்கு phdsiva@mccrf.org என்ற மின்னஞ்சல் மூலம் அறிவிக்கவும்.
இறையன்பில்,
பரமஹம்ஸ தாசன் சிவா.
1. Cosmic Salutation.
1. பிரபஞ்ச வணக்கம்.
பேருணர்வே, நான் என் முற்புறத்திலும், பின்புறத்திலும், இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலுமாகத் உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நான் என் மேற்புறத்திலும், கீழ்புறத்திலுமாக உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நான் என்னைச் சுற்றி எல்லாத்திசைகளிலும் உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நான் என்னுள்ளேயும், வெளியேயுமாக உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன். நீ சர்வவியாபகன் என்பதால் எல்லா இடங்களிலும் உன்னை நோக்கித் தலைவணங்குகின்றேன்.
2. We demand as Thy Children.
2. உன் குழந்தைகளாய் உரிமையுடன் கேட்போம்.
நீ எங்கள் தந்தை. நாங்கள் உந்தன் பிரதிபிம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கடவுளின் குழந்தைகள். நாங்கள் பிச்சைக்காரர்களைப் போலே கேட்கவோ, பிரார்த்திக்கவோ மாட்டோம், மாறாக உன் வாரிசுகளாய் ஞானம், முக்தி, ஆரோக்கியம், இடையறாத இன்பம் ஆகியவற்றை உரிமையுடன் கேட்போம். குறும்புக்காரர்களோ நல்லவர்களோ எப்படியானாலும் நாங்கள் உன் குழந்தைகள். உன் விருப்பத்தை எங்களுக்குள்ளே கண்டுகொள்ளுமாறு உதவு. நீ எங்களிஷ்டம் போல் உபயோகிக்குமாறு கொடுத்த மனித இச்சையை நாங்கள் சுதந்திரமாக, ஞானத்தின்-வழிநடக்கும் உன் இச்சையுடன் இயைந்து, உபயோகிக்க எங்களுக்குக் கற்றுக்கொடு.
3. Demand for recharging body-battery.
3. உடம்பு-பேட்டரியை புத்துணர்வூட்ட உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, எங்கள் உடம்பை உன் பிரபஞ்ச சக்தியினால் புத்துணர்வூட்டி ஆரோக்கியம் அடைய, மனத்தைக் கவனவொருமுகப்பாட்டினாலும் புன்னகைகளாலும், உள்ளத்தை தியானத்திலுதிக்கும் பிரக்ஞையினாலும் பேணிப் பராமரிக்க எங்களுக்குக் கற்பி.
4. Spiritual Interpretation of the Lord's Prayer.
4. ஆன்மீக நோக்கில் "இறைவனிடம் செய்யும் பிரார்த்தனை" ("Lord's Prayer" in the Bible).
பரலோகத் தந்தையே, தாயே, நண்பனே, பிரியமான என் கடவுளே! உன் இருப்பின் ஒளிப்பிரகாசம் எங்கள் எல்லா மனங்களிலும் பரவட்டும். பொருளுலகத்தை நோக்கிச் செய்யும் துதி உன்னை நோக்கிச் செய்யும் துதியாய் மாறட்டும். நீ இல்லாமல் நாங்கள் எதனையும் உண்மையில் விரும்பமுடியாது. ஆகையால், எல்லாவற்றிற்கும் மேலாக, முதலில் உன்னை நேசிக்க நாங்கள் கற்போமாக. உன் பேருணர்வில் உள்ள பரமான ஆனந்த ராஜ்ஜியம் எல்லா தெய்வீகக் குணங்களுடன் இந்நிலவுலகில் நன்கு விளங்கட்டும். பரிச்சேதம், குறைபாடு, துன்பங்கள் போன்றவைகளில் இருந்து எல்லா தேசங்களும் விடுபடட்டும். உள்ளிருக்கும் உன் ராஜ்ஜியம் வெளியிலும் வெளிப்படட்டும். தந்தையே, நாங்கள் கொடையாக உன்னிடமிருந்து பெற்ற அறிவினைத் தவறாக உபயோகித்ததினால், ஆசையெனும் பெருங்குழியில் வீழ்ந்துள்ளோம். எங்களை அந்தக்குழியிலேயே விழுந்து கிடக்குமாறு விட்டுவைக்காதே. நாங்கள் உள்ளதைவிட அதிக விடுதலையுணர்வும் பலமும் பெற்ற பின்னர் -- நாங்கள் உன்னை விட எங்கள் ஆசைகளை அதிகமாக நேசிக்கிறோமா என எங்களை நீ சோதித்துப் பார்க்க விரும்பினால் -- அப்போது நீ உன்னை எல்லா விருப்பங்களுக்கும் மேலான விருப்பமாய் ஆக்கிக்கொள். தந்தையே, எங்களைச் சோதனைக்கு உள்ளாக்குவது உன் விருப்பமெனில், உன் சோதனைகளை நாங்கள் எதிர்க்கொண்டு வெல்லுமாறு எங்கள் இச்சாசக்தி நன்கு வலிமையடைவதற்கு நீ உதவு. எங்களுக்கான தினசரி அமுதான: உடலுக்கு உணவையும், ஆரோக்கியத்தையும், செழிப்பையும்; மனதிற்கு செயல்திறனையும்; எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் உள்ளங்களுக்கு உன் ஞானத்தையும், அன்பையும் எங்களுக்கு நீ நல்கு. எங்கள் சுய கவனக்குறைவினால் பின்னப்பட்ட அறியாமை வலையினில் சிக்கியுள்ள எங்களை நாங்கள் மீட்டுக்கொள்ள எங்களுக்குக் கற்பித்து உதவு.
5. Thou art the best bomb-shelter.
5. நீ தான் குண்டுவீச்சுகளிலிருந்து காக்கும் தலைசிறந்த கவசம்.
நிர்மூலமாக்கும் போர் மேகங்கள் நெருப்பையும், மரணத்தையும் மழையாகப் பெய்யும் போது, கடவுளே, குண்டுவீச்சுகளிலிருந்து என்னைக் காக்க நீ தான் எனக்குத் தலைசிறந்த கவசம் என்பதனை நான் மறக்க மாட்டேன். வாழ்விலும், சாவிலும், வியாதியிலும், பஞ்சத்திலும், தொற்றுநோயிலும், ஏழ்மையிலும், நான் உன்னை இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்வேன். ஏனெனில் நீ மட்டுமே வாழ்க்கை தரும் இருமை அனுபவங்கள் அனைத்திலிருந்தும் நான் பாதிக்கப்படாமலிருக்க எனக்கு வழி காட்டமுடியும். மாறிக்கொண்டிருக்கும் பால்ய, இளமை, முதுமைப்பருவங்களாலும், உலக ஆரவார நடப்புகளாலும் தீண்டப்பட முடியாத நான் மரணமற்றவன் என என்னை உணருமாறு செய்வதற்கு, நீ என்னை எப்போதும் ரட்சித்துக் கொண்டுள்ளாய்.
6. Universal prayer of the Cosmic Temple.
6. பிரபஞ்சக் கோயிலில் செய்யும் பொது வழிபாடு.
ஜீவனுள்ள பல்வேறு எண்ணங்களாலான பக்தியினால், நான் உனக்கு விழிப்புணர்வுடன் கூடிய அமைதிக் கோயில் எழுப்பியுள்ளேன். நான் எல்லா நல்மதங்களில் உதித்த ஞானத்தினாலான பலவண்ண விளக்குகளை உனக்கு எடுத்து வந்துள்ளேன். அவை எல்லாமே உன் ஒரே மெய்ம்மையின் ஒளியினைப் பிரகாசிக்கின்றன. உனக்காக ஏங்கும் மனித ஆசைகளின் ஒன்றுகலந்த வாசனை எங்கள் இதய ஜாடிகளிலிருந்து சுருள்சுருளாக மேலெழும்புகின்றது. உன் புனித சாந்நித்தியம் எல்லாவிடங்களிலுமுள்ள பீடங்களிலும் ஜொலிக்கின்றது. கோயில்கள், கூடாரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என இவை அனைத்திலும் துலங்கும் எல்லா பிரார்த்தனைகளும் ஒரே உலகமொழியான ஆழமான அன்பினால் உன்னை எண்ணி ஜபிக்கின்றன. எங்கள் உணர்வுகளின் வாத்தியக்குழு, எல்லா ஆன்ம கீதங்களின் கூட்டு கானத்திற்கும், அனைவரின் ஆனந்தக்கண்ணீர் ததும்பலுக்கும், அனைத்து ஆனந்தகும்மியினில் பொங்கியெழும் கூக்குரலுக்கும், எல்லா பிரார்த்தனைகளின் மங்களவொலிக்கும் இயைவாக ஒத்திசைக்கின்றது. எங்கள் உள்ளங்களின் சுவரற்றப் பிரபஞ்சக் கோயிலில், எங்களின் ஒரே தந்தையான உன்னை வழிபடுகின்றோம். எங்களுக்கு நீ எப்பொழுதும் இவ்வாறு தரிசனம் தர விருப்பம் கொள்வாயாக. ஆமென், ஓம், ஆமின்.
7. Worshipping the Cosmic Idol.
7. பிரபஞ்ச மூர்த்தியினை வழிபடுதல்.
எல்லையற்ற பேருணர்வே, உன்னை எல்லைக்குட்படுத்தி நான் இன்று பூஜிப்பேன். பிரபஞ்ச அமைதியே, உன்னுடைய முன்கேளாத குரலை ஓடைநீர் சலசலப்பிலும், குயில்களின் பாட்டோசையிலும், முழங்கும் சங்கொலியிலும், சமுத்திரத்தின் அலைத் தாளத்திலும், அதிர்வலைகளின் ரீங்காரத்திலும் நான் கேட்பேன். என் எல்லைக்குட்பட்ட மூர்த்தியே, பிரபஞ்சம் மேவும் என் மனக்கோயிலில், இந்திய-சம்பிரதாயப்படி, நான் உன்னைச் சடங்குகளுடன் பூஜை செய்வேன். சூரியனின் ஜீவசக்தியுடன் ஒளிரும் செம்மையான உன் முகத்தை நான் பணிவுடன் காண்பேன். உன் குளிர்ந்த நிலவொளிக் கடைக்கண் பார்வையினால் என் சோகம் முற்றிலும் விலகும். உன்னைக் காணமுடியாதவரென்று இனி நான் கூற முடியாது, ஏனெனில் என் பூஜையில் நான் உன் ரகசிய இதயத்தை, உன் எல்லையற்ற, நட்சத்திரக் கண்களின் வழியே நேரே காண்பேன். காற்றில் மேலெழும்பும் உன் சுவாசத்தினுடன் காணிக்கையாகப் பெற்ற எனது சுவாசத்தைக் கலப்பேன். உனக்காக ஏங்கும் என் சொல்லற்ற மந்திரங்கள் என் இதயத்துடிப்பின் தாளத்திற்கேற்பக் கவிபாடும். உன் இதயத்தை எல்லா இதயங்களிலும் துடிப்பதை உணர்வேன். உன் உழைக்கும் கரங்களை புவியீர்ப்பு விசையிலும், இதர பிரபஞ்ச சக்திகளிலும் காண்பேன். உன் காலடியோசையை எல்லா ஜீவராசிகளின் காலடியோசையிலும் கேட்பேன். என் வழிபாட்டில், கருமையால் சூழப்பட்டு மின்மினுக்கும் இரவுத் திரையிலும், மங்கலான வெளிச்சம் காட்டும் விடியலிலும், சாம்பல்நிற அந்திசாயும் வேளையிலும் உன் பரந்துவிரிந்த விண்ணுடலைக் காண்பேன். பால்வெளி கேலக்சியின் நட்சத்திர மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையையும், வானவில்லாலான கிரீடத்தையும், ஒளிவீசும் கோளங்களாலான வைரங்களையும் அணிந்துள்ள என் பிரபஞ்ச மூர்த்தியே, உன்னை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். வான்வெளியின் துவாரங்கள் வழியே உன் வாழ்க்கையின் வியர்வை சிந்துகின்றது; நதிகள், நீரோடைகள், கிளைநதிகளெனும் நாளங்கள் வழியேயும், மனிதர்களின் ரத்த அணுக்களின் மூலமாகவும் உன் ரத்தம் பாய்கின்றது; உன்னை இனி நான் கட்புலனாகாதவராக வழிபடாமல், என் கண்ணுக்குப் புலனாகும் பிரபஞ்ச உருக்கொண்ட மூர்த்தியாக வழிபடுவேன். என் ஆன்மாவின் கட்புலனாகும் மூர்த்தியே, இயற்கையின் ஒத்திசையில் ஒலிக்கும் கோயில்-மணிகள், கடலின் உருமலில் இசைக்கும் மேள தாளங்கள், பல்வித மெழுகுவர்த்தியாய் ஒளிரும் மனங்கள், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் ஓதப்படும் மந்திரங்கள், ஜீவாத்மாக்களின் தோட்டங்களில் பூக்கும் பக்தி-மலர்கள், நேசங்களின் சுகந்தம் - இவையாவும் உன் வழிப்பாட்டுக்கு உபசாரமாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மனக்கண்ணுடன் சேர்ந்து திறந்த இரு கண்களுடனும், என் இயற்கை-மூர்த்தியான வாழும் கடவுளான உன்னை நான் கண்டுகளித்து, மந்திரங்களை வாக்காலும், மனத்தாலும் ஜபித்து, பக்தியும், செயலும், ஞானமும் ஒருங்கிணைந்த பூங்கொத்துடன், அன்பின் மொழியினாலும், இதயத்தின் சல்லாப முணுமுணுப்பாலும், தியானத்தின் கண்ணீரற்ற கண்ணீராலும், பிரக்ஞானத்தின் அமைதியான மூச்சிரைப்பாலும் உன்னை வழிபடுவேன்.
8. Salutations to the Great Preceptor (Sanskrit Scriptures).
8. ஸத்குரு வணக்கம் (சமஸ்கிருத சுலோகம்).
பிரம்மானந்தத்தை சுயரூபமாக உடையவர், பரமசுகத்தை அருளுபவர், ஞானமூர்த்தி; இருமை குணங்களுக்கு அப்பாற்பட்டவர்; பரந்த ஆகாயவெளி நிகர் கட்டற்றவர்; அறியவேண்டுவன எல்லாம் அறிந்தவர்; நித்தியமான, தூய்மையான ஒன்றேயானவர்; எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சி; எல்லா கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்; சத்வ, ராஜஸ, தாமச குணங்களால் களங்கப்படாதவர்; என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் என் குருவே - உன்னை நான் தலை வணங்குகின்றேன்.
9. Thou Mother of Flames, show Thy Face, hidden beneath the veil of Cosmic Motion Pictures.
9. ஒளிச்சுடர்களின் தாயான நீ, பிரபஞ்சத் திரைப்படத்திற்குப் பின்னே மறைந்திருக்கும் உன் திருமுகத்தைக் காட்டு.
ஓ தெய்வக்காளி அன்னையே, நீ தேச-கால-ரூப-நிகழ்வுண்மையை உருவாக்கி, ஒரு எல்லையுள்ள ஆனால் பிரம்மாண்ட வடிவெடுத்து, எல்லாவற்றிற்கும் இடம்கொடுக்கும் இயற்கை மூர்த்தியாகத் தோன்றுகிறாய். புலனாகா பரப்பிரம்ம உணர்வே புலனாகும் ரூபத்தில் தெய்வத்தாயான உன் வடிவை எடுத்துள்ளது. அனைத்தையும் காத்து ரட்சிக்கும், தாயின் கருணையால் துடிக்கின்ற இதயம் உன்னுள்ளே உறைகின்றது. ஓ மகாமாயீ அம்பாளே! சந்தியாகாலம், நிசியெனும் உன் இரு புருவங்களுக்கு மத்தியில் சந்திரனே அழகுப்பொட்டாய் அமைந்துள்ளது. நிரந்தரத்தின் மேகங்கள் உன் முகத்தை மூடிமறைக்கின்றன. அருளாளர்களின் வாழ்வெனும் பருவக்காற்று அவ்வப்போது உன் மர்மமான முகத்திரையைத் துணிவுடன் பொருத்தமாக விலக்கி, எங்கள் அறியாமைப் பார்வைக்குப் புலப்படாத உன் திருமுகத்தை சிறிதுகாலத்திற்குப் புலப்படுத்துகின்றது. ஓ மகாமாயீ அம்பாளே, தோற்றத்தின் விடிவுகாலத்தில் நீ நாகரீகம் வளராத பிராகிருத கோலத்தில் சிறு, பருவான பொருட்களுடன் பக்குவமற்ற மனங்களாலான உடைகளையும், கரடுமுரடான இயற்கைக் கிரீடமும் அணிந்துகொண்டு காலப்பாதையில் சுற்றுவதை நான் கண்டேன். தோற்றத்தின் பகல்பொழுதில், தங்கள் பொருளாசைத் தீயினால் வெந்து புழுங்கும் ஜீவாத்மாக்களையும், பளீரெனத் துலங்கும் மனங்களாலாலுமான ஆடை போர்த்திய கோலத்தைக் கண்டேன். உன் செயல் உடம்பு ஆரவாரத்தில் வியர்வை சிந்தியது. உன் எல்லா மக்களும் போராட்டத்தின் வெம்மையைத் தாங்கமுடியாமல், சாந்தமெனும் குளிர்த்தென்றலை அனுப்புமாறு அவர்கள் உன்னிடம் வந்து முறையிட்டனர். உன் மத்தியான மனோ வஸ்திரத்துடன், நீ விழாக்கோலமான பல நூற்றாண்டுகளைக் கடந்து பெரும் கனவு கண்டுகொண்டு பயணம் செய்தாய். மனித வாழ்வு-சாவு, கோளங்களின் வளர்வு-சிதைவு, நாகரீகங்களின் பிறப்பு-இறப்பு, விண்வெளி ஆவிப்படரால் (nebulae) உருவாக்கப்படும் உலகங்கள் - இப்படி புதிதாகப் பிறப்பிக்கப்பட்ட கோளங்கள், நிலநடுக்கங்கள், முடிவுறாத பிரளயங்கள் என ஒரு பெருங்கனா. அப்புறம் கருமையான இரவு நெருங்கியது. நீ இறுக்கமான, சோகக் கருந்திரையை உடுத்திக் கொண்டு, பிரபஞ்சத்தை பயங்கரமான, ஆனால் சுத்தப்படுத்தும், பிரளயத் தீயில் போட்டுப் புரட்டினாய். சூரியன் வெடித்து, நெருப்பைக் கக்கியது; பிரளய பூகம்பம் வானத்தைப் பிளந்தது; விண்மீன்கள் வானிலிருந்து கனலுடன் நழுவி விழுந்தது; முழுத் தோற்றமும் பெரும்சுடருடன் கொழுந்து விட்டு எரியும் நெருப்புலையாய்க் காட்சியளித்தது. எல்லாமே நெருப்புமயம்: பொருள்கள், பாபம், இருள் என இவையனைத்தும் உன் தீக்குவையில் இடப்பெற்று, அதில் அவை தூய்மையடைந்து பிரகாசமாய் ஒளிவீசின. பிரபஞ்சத் தோற்றம் நெருப்பிலிருந்து உருவானது: பொருட்களின் சாம்பலுக்குக் கீழ், தகதகக்கும் பிரபஞ்சம் உறங்கியது; அத்தோற்றம் உன் கரங்களினால், ஓ மகாமாயீ, உலுக்கிவிடப்பட்டு அது தனது சுடரொளி விடும் உடம்பினை சிலிர்த்துக்கொண்டு எழுந்தது. சக்தியினாலான உன் ஒரு கையினால், கட்புலனாகா ஆக்கசக்தியை எழுப்பி, பலவண்ணங்களில் வரம்புக்குட்பட்ட அழகிய ரூபங்களைப் படைக்கின்றாய். மற்றொரு கை, பாதுகாக்கும் சூட்சும அரிவாளைக் கொண்டு, அனைத்து கோளங்களையும் அதனதன் பாதையினில் கதி தவறாமல் சுழற்றிக் காக்கின்றது. உன் மூன்றாவது கை, பிரபஞ்சத்தின் அறுபட்ட தலையைப் பிடித்துக்கொண்டு, பிரளயத்தின்போது எல்லா அகிலாண்டமும் உன்னுள்ளே தான் உறங்குகின்றது என்பதை சூசகமாக உணர்த்துகிறது. உன் நான்காவது கை, மோகக்குழப்பச் சூறாவளிகளைத் தடுத்து அமைதிப்படுத்தி, நாடுகின்ற பக்தர்களுக்கு மோட்சத்தின் ஒளிக்கிரணங்களை நல்குகின்றது. ஓ காளி, நீ மனிதமனங்களைத் தார்மாலையாய் அணிந்து ஆக்கச்செயல்களின் ஆழ்ந்த தோற்றுவாயான ஜனனியாய் விளங்குகிறாய்; உன் பாதம், உன் வரம்பற்ற-கட்புலனாகா-பதியாம் சிவபிரானின் அனைத்திற்கும் அப்பாற்பட்ட நெஞ்சினைத் தொடுகையில் மட்டுமே, உன் பிரபஞ்சத் தோற்றத்தின் கோர நடனத்தின் ஆட்டம் முழுதுமாக நிற்கின்றது. அவ்வமயம் தோன்றிய அகில பிரபஞ்சமும், சிவனிடம் லயம் அடைகின்றது. ஓ முன்னேற்றத்தின் தாயே, உன் வாழ்க்கை நடனத்தை நான் இயற்கை இயைபுடன் வாழ்வோரின் எளிமையான சிரிப்பு மணிகளினில் காண்கின்றேன். என் தளிர்க்கும் எண்ணங்களின் தளத்தில், உன் அண்டகோளங்களின் இசையை ஒத்திசைக்கும் உன் உற்சாகமூட்டும் எண்ணங்கள் மெதுவாக நடனம் புரிகின்றன. பிரபஞ்சத்தோற்றச் சபையில், ஓ காளி, பலத்த அதிரடியுடன் இடிக்கும் மின்னலிலும், சன்னமாக ரீங்காரிக்கும் அணுக்களிலும் என எல்லாப்புறங்களிலும் நான் உன் திருவடித் தாளத்தைக் கேட்கிறேன். வரம்பற்ற பரம்பொருள் புரிபடாத மாயமோகத்தினடியில் உறங்குகின்றது; இருப்பினும், பரத்தின் நெஞ்சிலிருந்து புறப்பட்டு, ஓ ரூபங்களின் இறைவியே, உன் எல்லைக்குட்பட்ட அற்புத நடனங்கள் துவங்குகின்றன. என் ஆன்மத்துடிப்பைக் காட்டிலும் அருகாமையிலே நீ நாட்டியமாடுகின்றாய்; உன் பாதங்கள் எழுப்பும் கூட்டு இசையோசையை என் மனத்தின் வெகுகோடியில் உள்ள திசையந்தத்திலும் நான் கேட்கின்றேன். ஓ மகமாயித் தாயே, நீ எங்கு வேண்டுமானாலும் சென்று ஆடு; ஆனால், நான் உன்னை இறைஞ்சுகிறேன், என் ஆன்மாவின் புனித சந்நிதியில் உன் அற்புதத் திருவடிகளின் இசையை என்றும் விடாமல் தொடர்ந்து இசைப்பாயாக! ஓ காளி மா, உன் மாறிக்கொண்டேயிருக்கும் உடுப்புகள் தோற்றத்தின் ஆக்குதல், காத்தல், அழித்தல் எனும் கனவு நூல்களால் நெய்யப்பட்டுள்ளது. தெய்வத்தாயே, உன் அழகிய மனத்திரையில் பலகோடிப் பிரபஞ்ச சினிமாப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இதனால், உன் நல்ல குழந்தைகளை உல்லாசமாய் பொழுதினைக் கழிக்கச் செய்கின்றாய்; உன் விஷமக் குழந்தைகளை பயமுறுத்துகின்றாய். இறையன்னையே, உன்னை மூடியுள்ள இந்த பளபளக்கும் பிரபஞ்ச சலச்சித்திரத் திரையை நீ விலக்கிக்கொள்; மோகத்தை அழிக்கும் உன் கருணை முகத்தை எனக்குக் காட்டு.
10. Demand for the opening of the Spiritual Temple Doors everywhere.
10. எல்லாவிடங்களிலும் ஆன்மீகக் கோயில் கதவுகளைத் திறக்க வேண்டி உரிமையுடன்-முறையிடுதல்.
இறைத்தந்தையே, நான் முன்பு [ஆன்மீகத்திற்கு] குருடாயிருந்த போது, உன்னையடையும் வழிகாட்டும் ஒரு வாசற்கதவையும் நான் காணவில்லை. ஆனால், என் [ஆன்மீகக்] கண்களை இப்போது நீ திறந்து விட்டபின், பூக்கும் நெஞ்சங்களிலும், நட்பின் குரலோசையிலும், நேசமான அனுபவங்களின் இனிய நினைவுகளிலுமென வாசற்கதவுகளை நான் எல்லாப்பக்கங்களிலும் காண்கின்றேன். என் ஒவ்வொரு பிரார்த்தனையின் எழுச்சியும் உன் சாந்நித்தியத்தின் மகத்தான கோயிலுக்கு எவரும் நுழையாத ஒரு புதிய கதவைத் திறக்கின்றது.
11. Prayer at Dawn.
11. விடியற்காலைப் பிரார்த்தனை.
சிற்றஞ்சிறு விடியற்பொழுதும் தாமரை-மொட்டுக்களும் மலர்கையில், எனது ஆன்மா உன் ஒளியைப் பெறப் பிரார்த்திக்கும் பாவனையில் சன்னமாக விரிகின்றது. என் மனத்தின் ஒவ்வொரு இதழையும் உன் பிரகாசமான கதிர்களால் குளிப்பாட்டு. நான் உன் மணக்கும் சாந்நித்தியத்தில் என்னை அமிழ்த்தி, உன் சுகந்தமணம் கமழ் அன்பின் செய்தியை எல்லோருக்கும் பரப்பத் தயாராகவுள்ளேன். பரவும் இந்த காலைப்பொழுதில், உன் அன்பை எல்லாவிடங்களுக்கும் நான் பரப்ப என்னை ஆசிர்வதி. விடியும் இந்த காலைப்பொழுதில், என் ஆன்மாவினால் மற்ற எல்லா உள்ளங்களையும் ஆன்மவிழிப்புறச் செய்து, உன்னிடம் கூட்டிக் கொண்டுவர என்னை ஆசிர்வதி.
12. Prayer at Noon.
12. மத்தியானப் பிரார்த்தனை.
உச்சிவேளையில் விண்ணுலகினின்று பகலவன் ஓங்கி ஒளிர்கின்றது: அனைத்தும் நன்கு விழிப்புடன் உள்ளன. நீ என்னை அதுபோல விழிப்புறச்செய்! நீ புலனாகாதவன், இருப்பினும் உன் சக்தி பகலவனின் கதிர்கள் வழியே ஒளிர்கின்றது. என் நரம்புநாளங்களில் உன் புலனாகா கதிர்களை நிரப்பி, என்னை வல்லவனாகவும், சோர்வுறாதவனாகவும் ஆக்கு. ஜனநெருக்கடியுள்ள தெருக்களில் எப்படி சூரியன் வெளிச்சம் தருகின்றதோ, அப்படி நான் உன் காக்கும் அன்பினை நெருக்கடியுறுத்தும் என் வாழ்வின் செயல்களிலும் நான் காணுமாறு செய். ஜனநெரிசலானதும் சந்தடியற்றதுமான தெருக்களில் எப்படி ஒளி ஸ்திரமாக, சலனமின்றி பிரகாசிக்கின்றதோ, அப்படி நான் என் வாழ்வின் நெரிசலானதும் சந்தடியற்றதுமான தெருக்களில் உலவும்போது என் சாந்தத்தையும், உறுதியையும் நான் ஸ்திரமாகக் கடைப்பிடிக்குமாறுச் செய். எனக்கு வலிமையைக் கொடு; நான் பெறுவதை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு எனக்குக் கற்பி.
13. Prayer at Eventide.
13. சாயங்காலப் பிரார்த்தனை.
நாட்பொழுது முடிந்தது. நாட்பொழுதில் சூரியவொளியினால் நான் புத்துணர்வும், சுத்திகரிப்பும் அடைந்தபின், மங்கி மினுமினுக்கும் நட்சத்திரங்களுடன் மங்கலாக அலங்கரிக்கப்பட்ட சாயங்காலப் படித்துறைகளின் வழியே உன் அமைதிக்கோயிலுக்குள் நுழைந்து உன்னை வழிபடச் செல்கின்றேன். அங்கு உன் பேருணர்வின் அரும்பிவரும் சாந்தத்தை நான் வழிபடுகின்றேன். என்ன சொல்லி நான் பிரார்த்தனைகளை உனக்கு சமர்ப்பிப்பது, ஏனெனில் உன்னைத் தொழுவதற்கு என்னிடம் வார்த்தைகளேயில்லை? நான் என் பக்தியின் சிறு சுடரை என் ஆன்மபீடத்தில் ஏற்றுவேன். ஆனால், அந்த ஒளி என் அறியாமையின் இருளால் சூழப்பட்டு, மங்கலான வெளிச்சம் கொண்ட என் இருண்ட கோயிலுக்கு போதிய வெளிச்சம் தருமா? வா! நான் உன்னை கெஞ்சியழைக்கின்றேன்; உனக்காக நான் ஏங்குகின்றேன், வா!
14. Prayer at Night.
14. இரவுப் பிரார்த்தனை.
கண்களை மூடிக்கொண்டு, இரவுக்கோயிலில் அமர்ந்து உன்னை வழிபடுகின்றேன். பலகோடி வசீகர விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் சூரியவொளி மறைந்துவிட்டது. ரோசாப்பூவின் மணமோ, குயிலின் பாட்டோ உன்மேல் காட்டும் என் அன்பினுக்கு இடையூறு விளைவிக்குமோ எனும் அச்சத்தால், ஒன்றொன்றாக நான் என் புலன்களின் கதவுகளை மூடிக்கொண்டிருக்கின்றேன். நான் மட்டுமே இப்போது இந்த கும்மிருட்டுக் கோயிலில் அமர்ந்துள்ளேன். அனைத்தையும் விட்டுவிட்டு வந்துள்ளேன், ஆனால் எங்கே இருக்கின்றாய் நீ? இருள் என்னை பயமுறுத்துகின்றது; ஆயினும், பயமின்றி நான் உன்னைத் தட்டுத் தடுமாறி, அழுதுகொண்டே தேடிக்கொண்டுள்ளேன். என்னைத் தனியே தவிக்க விட்டுவிடுவாயா? வா, நீ எனக்குத் தரிசனம் கொடு! என் நினைவின் கதவுகள் திறக்கின்றன. இதயம் துடிதுடிப்புடன் உன்னைத் தேடுகின்றது, அய்யகோ, உன்னை நான் காண முடியவில்லை! ஏ, பலகோடி அனுபவ எண்ணங்களின் எழுச்சியே! நில்! என் புனிதக் கோயிலுக்குள் நுழையாதே. நான் கொந்தளிப்புடன் படபக்கும் என் எண்ணக் கதவினை அழுத்தி மூடிவிட்டு, அங்குமிங்குமாக எல்லாவிடங்களிலும் உன்னைத் தேடி ஓடினேன். எங்கே இருக்கின்றாய் நீ?இருள் மென்மேலும் படர்ந்து அழுத்தியது, திக்குத்தெரியாமல் வருத்தத்துடன் நான் ஸ்திரமாக அமர்ந்திருக்கும் போது, என்னுள் சிறிதாக எரியும் கவன மெழுகுவர்த்தியினைக் கண்டுற்றேன். நான் எழுந்து மெலிதான வெளிச்சத்தில் துலங்கும் கோயிலுக்கு முரட்டுவேகத்தில் ஓடினேன் - நான் ஓட ஓட, இருள் மேன்மேலும் என்னை கவ்வியது. உனைப் பிடிப்பதாக எண்ணி நான் பாழும் இருளைக் கட்டியணைக்கின்றேன். வெறுங்கையுடன் உனைக் காணாமல் நான் திரும்புகின்றேன். என்னுள் மெழுகுவர்த்தி லேசாக இன்னும் எரிந்து கொண்டிருப்பதைக் காண்கின்றேன். நான் பலத்தகுரலில் பிரார்த்தனையை ஓதுகின்றேன். பெரிதாகச் சுரக்கும் என் கண்ணீர்த் துளிகளும், என் பிரார்த்தனையின் பெருமூச்சும் எனது மெழுகுவர்த்தியை அணைத்தே விட்டுவிடும் போல் இருந்தது. நான் இனி வார்த்தைகளால் பிரார்த்திக்க மாட்டேன், இங்குமங்குமாக நரக இருள் கவ்விய கோயிலில் நான் ஓடியலைய மாட்டேன். என் மெழுகுவர்த்தியை என் கண்ணீர்ப் பெருக்கினால் இனி அமிழ்த்தவும் மாட்டேன். உன்மேல் வைத்த என் ஆரவார அன்பினைச் சாடினேன். இப்போது என் தியான மெழுகுவர்த்தி வெளிச்சமாக ஒளிர்கின்றது. புத்திபேதலிக்கும் என்னே ஒரு திகைப்பு! என்னால் வார்த்தைகளால் உன்னை வழிபட முடியவில்லை, ஆனால் ஏங்கும் ஏக்கத்தினால் மட்டுமே உன்னை வழிபட முடிகின்றது. ஒளி மென்மேலும் பெருகுகின்றது: உன்னை நான் இப்போது காண்கின்றேன். நீயே நான். நான் உன்னை வழிபடுகின்றேன். இரவு எல்லாவற்றையும் மறைப்பது போல், நான் உன்னை மறைவான அமைதியில் வழிபடுகின்றேன். இரவில் எல்லா ஜீவராசிகளும் உறங்குகின்றன: இரவில் இருட் போர்வைக்குள் நான் உன்னுள்ளே - நீயும் நானுமாக அன்பினில் கலந்திணைந்து - படுத்துறங்குவேன். எல்லா மனங்களின் இன்பசுகத்தையும் ஒருங்கே அனுபவித்து நான் மகிழ்கின்றேன். நாட்பொழுதினில் மயக்கியிழுக்கும் பொருட்களிலிருந்து என்னை மறைத்துக்கொள்ள நான் இரவுத்திரையை உபயோகிப்பேன். இரவே, நான் கவலையுறும் போது, உன் அமைதியான இருளினாலான மூடுதிரையை என்னைச் சுற்றி வீசு. நான் எங்கெங்கு சென்றாலும் அங்கே ஒரு இருண்ட கோயிலை எனக்காக உருவாக்கு. அதன்மூலம் நான் நேசிக்கும் பெருமானை எந்நேரத்திலும், எந்தவிடத்திலும், எல்லாவிதங்களிலும் கூவியழைப்பேன்.
15. Prayer-Demand before taking food.
15. உணவருந்துமுன் செய்யும் பிரார்த்தனை.
இறைத்தந்தையே, இவ்வுணவை ஏற்றுக்கொண்டுப் புனிதமாக்கு. இதனைப் பேராசைக் கல்மஷம் களங்கப்படுத்தாமல் இருக்கட்டும். உணவு உன்னிடத்திலிருந்து தோன்றுகிறது; அது உந்தன் கோயிலைக் கட்டுவதற்காக. இவ்வுணவை ஆன்மீகமாக்கி முழுமைப்படுத்து. அது பிரம்மத்திடமிருந்து தோன்றி பிரம்மத்தில் சங்கமிக்கிறது. நாங்கள் உன் தோற்றத்தின் இதழ்கள், ஆனால் நீயோ அதன் மலர், அதன் உயிர், அதன் கோமளமான அழகு. எங்கள் நெஞ்சங்களில் உன் சாந்நித்தியத்தின் சுகந்தத்தை விரவிப் பரவச்செய்.
16. Prayer-Demand for recharging of body-battery.
16. உடல்-பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான பிரார்த்தனை.
சின்மயப் பிரபஞ்ச சக்தியே, நீ தான் என் உடலை நேரடியாகப் பேணுகின்றாய். திடமான, திரவ, வளிமய உணவு வகைகள் உன் பிரபஞ்ச சக்தியினால் உருமாற்றப்பட்டு, முழுமையான ஆன்மசக்தியாக பரிமளிக்கப்பட்டு என் உடலைப் பராமரிக்கின்றன. பேருணர்வே, நான் உணவைச் சார்ந்து வாழ்வதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, நேரடியான பிரபஞ்ச சக்தியினைச் சார்ந்து வாழ்வதை மென்மேலும் அதிகப்படுத்தக் கற்றுக்கொள்ள எனக்கு உதவு. உன் சக்தி புலன்களின் பல்பு விளக்குகளில் ஒளியேற்றுகின்றது. நான் உன் சர்வ வியாபக பிரபஞ்ச சக்தியினால் என்னை ரீசார்ஜ் செய்து கொள்கின்றேன்.
17. Prayer before practicing concentration.
17. கவன ஒருமுகப் பயிற்சிக்கு முன்செய்யும் பிரார்த்தனை.
பேருணர்வே, தியானத்தினால் என் மனவெளியெனும் ஏரியில் சீற்றத்துடன் வீசும் சுவாசத்தின் சூறாவளியையும், மனச் சஞ்சலத்தையும், புலன்களின் குறுக்கீடுகளையும் தடுத்து நிறுத்த எனக்குக் கற்பி. என் பிரக்ஞையெனும் மந்திரக்கோல் தாபத்தின் வேகத்தையும், பிரயோஜனமற்ற ஆசைகளையும் தடுத்து நிறுத்தட்டும். என் சலனமற்ற மனவெளி ஏரியில் உன் சாந்நித்தியத்தின் ஒளிதுலங்கும் என் ஆன்மச் சந்திரனின் தத்துரூபமான பிம்பத்தை நான் காண்பேனாக.
18. Demand for Pearls of Wisdom to be obtained in the sea of meditation.
18. தியானக்கடலில் உன் ஞானமுத்துக்களைப் பெறுவதற்கு உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, தியானமெனும் கடலில் ஆழ்ந்து மூழ்கி ஞான முத்துக்களைக் கொணர எனக்குக்கற்பி. ஆசாபாசங்களெனும் சுறாக்கள் வந்தெனை அழிக்காமலிருக்க மனசாட்சியெனும் நீர்மூழ்கியாடையை கவசமாகக் கொண்டு கடலின் அடித்தளத்திற்கு தலைக்குப்புற முழ்குவதற்கு எனக்குக்கற்பி. நான் ஓரிருமுறை முத்துகுளித்துவிட்டு ஞானமுத்துக்களைக் கண்டுகொள்ள முடியவில்லை எனில், தியானக்கடலிலே உன் ஞானமுத்துக்கள் இல்லையென குறைகூறாமலிருக்க எனக்குக்கற்பி. அதற்குப் பதிலாக, என் முத்துக்குளிப்பில் குறைகாண எனக்குக்கற்பி. உன் அழியா ஞான முத்துக்களையும், தெய்வீக ஆனந்தத்தையும் கண்டுகொள்ளும் வரை, தியானத்தில் மீண்டும் மீண்டும், ஒவ்வொரு முறையும் மென்மேலும் ஆழமாகச் செல்ல எனக்குக்கற்பி.
19. Prayer for expanding love from self to all brethren.
19. அகத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பரந்து விரியும் சகோதர அன்பினை வேண்டுதல்.
தெய்வத்தாயே, என் நெஞ்சில் சுரக்கும் உன் அருட்கொடையான அன்பினால் என்னை நான் நேசிப்பதைக் காட்டிலும் மேலாக, என் குடும்ப அங்கத்தினர்களை நேசிக்க எனக்குக்கற்பி. என் குடும்பத்தைக் காட்டிலும் மேலாக, என் அக்கம்பக்கத்தினர்களை நேசிக்க எனக்கு அருள்புரி. என் அக்கம்பக்கத்தினர்களைக் காட்டிலும் மேலாக, என் நாட்டினை நேசிக்க என் மனத்தை விரிவுபடுத்து. என் நாட்டுமக்கள், அக்கம்பக்கத்தினர்கள், குடும்ப உறுப்பினர்களைக் காட்டிலும் மேலாக, என் உலகினையும், அதில் வாழும் எல்லா மனித சகோதரர்களையும் நேசிக்க என் மனத்தை விரிவுபடுத்து. முடிவில், அனைத்திற்கும் உச்சமாக உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. ஏனெனில், உன் அன்பினால்தான் மற்ற அனைத்தையும் நேசிக்கமுடிகின்றது. நீயில்லாமல் என்னால் மற்ற யாரையும், எதனையும் நேசிக்கவே முடியாது. இறைத்தந்தையே, இல்லற அன்பின் வாயில்களின் வழியே நுழைய எனக்குக்கற்பி, மேலும் நண்பர்களின் நேசத்தின் மூலம் விஸ்தாரமான சமூக அன்புக்கட்டிடத்திற்குள் நுழைய எனக்குக்கற்பி. பின், சமூக அன்பின் கதவுகள் வழியே சென்று இன்னும் விரிவான சர்வதேச அன்பின் அரண்மனைக்குள் நுழைய எனக்குக்கற்பி. சர்வதேச அன்பின் வாயில்களின்மூலம் நுழைந்து தெய்வீக அன்பின் முடிவற்ற எல்லைக்குள் செல்ல எனக்குக்கற்பி. ஆங்கே, எல்லா உயிருள்ளவைகளும் ஜடப்பொருட்களும் உன் அன்பினால் சுவாசித்து வாழ்வதைக் காண்பேன். குடும்ப, சமுதாய, சர்வதேச அன்பினாலான எந்தவொரு வசீகரிக்கும் அழகிய வாயில்களிலும் மயங்கித் தாமதிக்காமலிருக்க எனக்குக்கற்பி. அன்பின் சிறிய எல்லைகளுக்கு இட்டுச்செல்லும் இந்த எல்லா வாயில்களின் வழியேயும் நுழைந்து மனித அன்பின் கடைசிவாயில்வரை சென்று, பின்னர் நான் தெய்வீக அன்பின் முடிவற்ற எல்லைக்குள் நுழைய எனக்குக்கற்பி. அங்கே, வாழும் உயிர்களையும், ஜடம்போன்று வாழ்பவைகளையும், ஜடமாக உறங்குபவைகளையும் என்னுடையதாகவே நான் காண்பேன்.
20. A bouquet of all loves of God.
20. கடவுளின் சகல அன்புகளினால் ஆன பூங்கொத்து.
இறைத்தந்தையே, குழந்தைகள் மேல்காட்டும் பரிவு, தாம்பத்தியக் காதல், நட்புறவு, பெற்றோரிடம் காட்டும் பாசம், ஆசிரிய-மாணவ உறவுகளினில் வெளிப்படும் அன்புகளினால் ஆன பலவண்ண பூக்களைக் கொண்ட பூங்கொத்தினை உருவாக்கி, நீ ஆட்சிபுரியும் என் இருதய பீடத்தில் சமர்ப்பிக்க எனக்குக்கற்பி. பூங்கொத்தினை ஒருக்கால் உருவாக்க இயலவில்லையெனில், நான் என் பக்தித் தோட்டத்தில் வளரும் அரிய அன்புமலரைப் பறித்து, உன்முன்னர் நான் அர்ப்பிப்பேன். அதனை நீ ஏற்றுக்கொள்வாயா?
21. Prayer-Demand to the Holy Vibration for Omnipresence.
21. சர்வ வியாபகத்தன்மைக்காக புனித ஓங்காரத்தை உரிமையுடன்-வேண்டுதல்.
புனித ஓங்காரமே, என் உணர்வுதளத்தின் எல்லையில் வந்து உன் பேரொலியை இசைப்பாயாக. உடம்புடன் அடையாளங்காணும் என் உணர்வுதளத்தின் குறுகிய வட்டத்தை உடைப்பாயாக. என் உடல், மனம், ஆன்மா, என் சுற்றுப்புறங்கள், நகரங்கள், பூமி, கோள்கள், பிரபஞ்சம், மற்றும் தோற்றத்திலுள்ள ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அதிர்ந்து ஒலிப்பாயாக. என் உணர்வுத்தளத்தினைப் பிரபஞ்சப் பேருணர்வுடன் இணைப்பாயாக.
22. Prayer-Demand for Self-Realization.
22. ஆன்ம-மெய்யுணர்வுக்காக உரிமையுடன் வேண்டுதல்.
பிரணவ நாதமே, நீ பிரபஞ்சமயமான, அறிவார்ந்த ஒலியாய் என்னுள்ளே அதிர்ந்து ஒலிப்பாயாக. உன்னுள்ளே பிரதிபலிக்கும் கிறிஸ்து (கூடஸ்த) பேருணர்வைக் கண்டுணர எனக்குக் கற்பி. புனித நாதமே, என்னைக் கிறிஸ்து (கூடஸ்த) பேருணர்வுடன் ஐக்கியமாக்கி பிரக்ஞையடைய வழிநடத்து. சர்வ வியாபக, பிரபஞ்ச ஒலியான ஆமென், ஓம் நாதமே, என்னுள்ளே அதிர்ந்தொலித்து, என் உணர்வுத்தளத்தை என்னுடலிலிருந்து விரித்து இப்பிரபஞ்சம் முழுதும் பரவுமாறு செய். எங்கும்-கமழ் வற்றாத ஆனந்தத்தை உன்னுள்ளே உணர எனக்குக் கற்பி.
23. Prayer-Demand for removing the cork of ignorance.
23. அறியாமை மூடியினைத் தகர்த்திட உரிமையுடன்-வேண்டுதல்.
என் உணர்வுதளம் ஊனுடம்பெனும் சிறுசிமிழிக்குள் அறியாமை மூடியினால் மூடப்பட்டு அடைந்து கிடப்பதை இனி விட்டொழியட்டும். பிரபஞ்சப் பேருணர்வுக் கடலில் நான் பகலிரவாய், நாள்தோறும், வருடங்கள்தோறும், ஜென்மங்கள்தோறும் வெகு அருகாமையிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருப்பினும், கடலுடன் தொடர்புறவு கொள்ள முடியவில்லை. பிரபஞ்ச நாதத்தின் பொங்கும் அதிர்வலைகளாலும், உன் புனித நாமத்தின் பேரலைகளாலும், மிக அண்மையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தும், என்னை உன்னிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டிருந்த, அறியாமை மூடியினைத் தகர்த்து எறிந்தேன். இப்போது என் உடம்பினுள்ளே உள்ள உணர்வுதளம், வெளியே சர்வ-வியாபக பேருணர்வுடன் சந்திக்கும். இனி உன்னை அறியாமல், உணராமல், நான் உன் சிந்தனையின்றி உன்னுள் இயங்கமாட்டேன். என் உள்ளேயிருக்கும் உன் பிரதிபிம்ப சைதன்யம் , எங்கும் பரவியிருக்கும் உன் கூடஸ்த-சைதன்ய பிரதிபிம்பத்துடன் ஒருங்கிணையும். என்னுள்ளேயுள்ள "நான்" எனும் அகந்தையை விட்டொழிவதனால், நானே நீ, நீயே சிறு அகந்தைகள் எல்லாமுமாக ஆகியுள்ளாய் என்பதனை நான் அறிகின்றேன்.
24. My Guru.
24. என் குருநாதர்.
என் வாழ்வின் ஒளியே - நீங்கள் என் ஆன்ம பாதையை ஞானசுடரால் ஒளிர்விக்க வந்துள்ளீர்கள். பலநூற்றாண்டுகளாகப் படிந்துகிடந்த இருள் உங்கள் ஒளிப்பிரகாசத்தின் அருளால் மறைந்து போயின. சிறுவயதில், நான் தெய்வத்தாய்க்காக ஏங்கி அழுததின் பயன் அவள் என் குருவாய் - சுவாமி யுக்தேஸ்வராய் [பரமஹம்ஸ யோகானந்தராய்] - வடிவெடுத்து என்னை அணுகினாள். என் குருநாதரே, அச்சந்திப்பின் போது ஒரு ஒளிக்கீற்று உங்களிடமிருந்து வெளிப்பட்டு, பிறவிதோறும் கடவுளுக்காக ஏங்கிய என் தாபங்களை உருக்கி, ஆனந்தச்சுடராய்ப் பரிமளித்தது. என் எல்லா கேள்விகளும் அந்த சுடரும் பொன்மய ஸ்பரிசத்தில் விடைபெற்றன. உங்கள் அருளால் நிலையான, நிரந்தர திருப்தி என்னில் குடிபுகுந்தது. கடவுளின் குரலாய் ஒலிக்கும் என் குருதேவரே, உங்களைக் கண்டது என் ஆன்மதாபங்களின் பயனே. என் துன்பகர உறக்கம் ஒழிந்தது, நான் எல்லையில்லா ஆனந்தத்தில் விழிப்படைந்து விட்டேன். எல்லா தேவர்கள் என்மேல் குறைகாணிணும் பரவாயில்லை, உங்கள் மகிழ்ச்சி ஒன்றே எனக்குப் போதும், நான் உங்கள் திருப்தியெனும் கோட்டையில் பத்திரமாய் இருப்பேன். மாறாக, எல்லா தேவர்களும் என்னை அவர்கள் ஆசீர்வாத வரங்களினால் காக்கினும், உங்கள் அருளாசி எனக்கு கிட்டவில்லையெனில், நான் ஒரு அனாதையாய், உங்கள் ஆன்ம அதிருப்தியெனும் பாழடைந்த இடுபாடுகளில் அலைந்து உழல்வேன். ஏ குருநாதரே, நீங்கள் என்னை அடியில்லாத புதைகுழி இருளிலிருந்து மீட்டு சாந்தி சொர்க்கத்தில் புகுவித்தீர்கள். நம் உள்ளங்கள் வெகுகாலம் பொறுத்து சந்திக்கின்றன. அவை இப்போது எங்கும்நிறை பூரிப்பினால் நம்முள்ளே அதிர்கிறது. நாம் முன்னர் சந்தித்துள்ளோம், அதனால் தான் இங்கு சந்தித்திருக்கின்றோம். நாம் இருவரும் இணைந்து கடவுளின் தீரத்திற்கு பறந்து செல்வோம். அங்கு நம் குறுகிய விமானங்களை முழுதுமாய் சுவடு தெரியாமல் நொறுக்கி அழித்து, நம் எல்லையற்ற வாழ்வினில் கலந்து மறைவோம். அமைதியான கடவுளின் பேசும் குரலாயுள்ள உங்களை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். முக்திக் கோயிலின் தெய்வ வாசலாய் இருக்கும் உங்களை என்றும் தலை வணங்குகிறேன். உங்களையும், உங்கள் குருநாதர் - யோகா அவதாரமாய் தோன்றிய லாஹிரி மஹாசாயரையும் நான் மறவாமல் தலைவணங்குகின்றேன்; என் பக்தி மலர்களை நம் மாபெரும் குருவான மஹாவதார் பாபாஜி பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன்.
25. Come to me, O Christ, as the Divine Shepherd of Souls.
25. ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக.
ஏசு கிறிஸ்துவே, ஆன்மாக்களின் தெய்வமேய்ப்பனாய் வருக. ஏசு கிறிஸ்துவே - அரிய இருதயாம்புஜ மலரே! நீ புயல் கொந்தளிக்கும் உட்கோட்டமுள்ள மனங்களினாலான ஏரியில் இறங்கினாய். அதன் தீயநாற்றமுடைய இருண்ட எண்ண அலைகள் உன் இளகிய அல்லிமலர்நேர் உள்ளத்தை அடித்துத் துன்புறுத்தின. அவற்றின் கொடிய குரூரத்தினால் நீ சிலுவையில் அறையப்பட்டாய். ஆயினும், உன் பிழைபொறுக்கும் நற்குணமணம் தொடர்ந்து வீசியது; நீ அவர்கள் தங்கள் பிராயச்சித்தத்தினால் தூய்மைப்படுத்திக் கொள்ள உதவினாய். அதன்மூலம், எல்லாவற்றையும் நேசத்தால் கவர்ந்திழுக்கும் உன் மணங்கமழ் மலருள்ளம் போன்று அவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள உதவியது. தவறுதலினால் சிதைந்த மனிதகுலத்தை நேசிக்கும் பேரருளாளா! "அவர்களை மன்னித்தருள், அவர்கள் தாம் செய்வதை அறியார் ", என்னும் உன் இயல்கடந்த வார்த்தைகள், கண்ணுக்குப் புலப்படாத, அன்பின் பேரற்புதமான வானோங்கி உயர்ந்த பெருங்கோபுரத்தை ஒவ்வொரு நெஞ்சிலும் எழுப்பியது. நீ எங்கள் கண்களில் படர்ந்துள்ள அறியாமைப் புரையை அகற்றினாய். இப்போது, "உன் பகைவராயிருப்பினும் அவர்களை நீ உன்னை நேசிப்பது போல் நேசிப்பாயாக. அவர்களின் மனம் களங்க நோய்ப்பட்டிருப்பினும், மருளில் உறங்கிக் கொண்டிருப்பினும், அவர்கள் யாவரும் உன் சகோதரர்களே ", என்னும் உன் உபதேசமொழியின் அழகைக் கண்டு அக்கண்கள் இன்புறுகின்றன. அவர்களின் கிறுக்கடிக்கும் வெறுப்பின் உதைகளுக்குப் பதிலாக, பழிக்குப் பழிவாங்கும் தடியினால் சரமாரி அடித்து, அவர்களின் பகைமையை அதிகப்படுத்தாமல் இருக்க எங்களுக்குக் கற்றுக் கொடு. உன் மரணமில்லா தயை, கோபப் பித்தத்தினால் அவதியுறும் எங்கள் சகோதரர்களை, நாங்கள் மன்னிக்கும் பொறுமைக் களிம்பு தடவி, அவர்களை சுகப்படுத்தி விழிப்புறச்செய்ய எங்களுக்கு நல்லூக்கம் நல்குகின்றது. நீ சிலுவையேற்றப்பட்ட நிகழ்ச்சி, நாங்கள் அன்றாடம் சந்திக்கும் வாழ்வின் சோதனைகளை: பொறுமையைச் சோதிக்கும் தொந்தரவுகள், அறிவை மயக்கும் அறியாமை, புலனடக்கத்தை நடுக்கும் ஆசைகள், அன்பைத் தகர்க்கும் தப்பெண்ணங்கள் போன்றவைகளை நாங்களும் எதிர்கொள்ள நினைவுறுத்துகின்றது. சிலுவையில் உன்னை அறைந்த கடும்சோதனை, அறியாமையை ஞானம் வெல்லும், ஊனுடம்பை ஆத்மா வெல்லும், துக்கத்தை சுகம் வெல்லும், வெறுப்பை அன்பு வெல்லும் என்பதை உலகிற்குப் பறைசாற்றியது. வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சோதனைகளை வீரத்துடன் எதிர்கொள்ள, இச்சம்பவம் என்றும் அழியாத உதாரணமாய் எங்களை உரப்படுத்தட்டும். அராஜக அவதிகளுக்குப் பதிலாக பணிவின் இனிமையை அளித்திடவும் , கவலைத் தாக்குதல்களை சாந்தமான பொறுமையினால் தாங்கவும், தவறாகப் புரிந்துகொண்டு எங்களை வெறுப்பவர்களுக்கு நன்மைபயக்கும் புரிதலை இடையறாமல் அளிக்கவும் எங்களுக்குக் கற்றுக் கொடு. ஆன்மாக்களின் நன்மேய்ப்பனே! அலைந்து திரியும் நெஞ்சங்கள் எல்லாம் ஒருமை பக்தியையே நாடுகின்றன. எங்களை இடைவிடாமல் அழைக்கும் உன் வரம்பற்ற கருணையிசையை நாங்கள் கேட்டுவிட்டோம். எங்கள் ஒரே விருப்பம்: உன்னுடன் நம் வீட்டில் ஒன்று சேர்ந்திருந்து, நம் பிரபஞ்சப் பரமபிதாவை ஆனந்தமாய், ஞானக் கண்களைத் திறந்து வரவேற்று, நாம் அனைவரும் நம் ஒரே கடவுளின் குழந்தைகளே என மெய்யாக அறிவது தான். எல்லா சகோதர-உள்ளங்களும் ஒரே கடவுள்நெறியின் கீழ் ஒன்றுபடுவதைத் தடுத்துக் கூறுபடுத்தும் சுயநல சாத்தானை நீ வென்றதுபோல் நாங்களும் வெற்றி கொள்ள எங்களுக்குக் கற்பி. நாங்கள் ஒருவரையொருவர், "உன்னை நேசிப்பவரை நீ நேசி; உன்னை நேசிக்காதவர்களையும் நீ நேசிப்பாயாக ", என்னும் உன் உறுதிபயக்கும் மொழியினால் அரவணைத்து, பிரபஞ்ச நோக்குடைய ஒருமை-கிறிஸ்துவின் வானத்தினடியில் ஒன்றுகூடி அணிவகுத்துச் செல்வோமாக.
26. Come to me, O Krishna, as the Divine Cowherd.
26. கிருஷ்ணா, தெய்வீக கோபாலனாய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.
கிருஷ்ணா, இந்துஸ்தானின் பிரபுவே, தென்றல் காற்றில் தவழ்ந்து வரும் உன் ஆனந்தக் குழலோசை, வழிதவறிச் சென்ற கன்றுகளை அவைகளின் வீடுதிரும்ப வழிநடத்திய அந்த ஜமுனா நதிக்கரையின் தனிமையைக் கண்டு நான் மனமிரங்கினேன். அன்பின் தாமரையே, உன் மயக்கம்-தெளிவிக்கும் கண்களைத் தரிசிக்க முடியவில்லையே என நான் மனம் கலங்கிக் கொண்டிருக்கையில், உன் கட்புலனாகாப் பேருணர்வு என் அடர்ந்த பக்தியின் உறுதியினால் ரூபம் தரிப்பதைக் கண்டேன். நீல-வான ஒளிக் கதிர்களாலான உன் தெய்வீக ரூபம், நிரந்தரத்தைக் காலடியாகக் கொண்டு, என் மனத்தின் கரையோரங்களில் நடந்து சென்று, அங்கு நிலையான மெய்யுணர்வுப் பாதச்சுவடுகளைப் பதித்தது. நான் உன் பூம்பாதச்சுவடுகளைக் காலங்காலமாய்ப் பின்பற்றி நடந்த வழிதொலைந்த கன்றுக்குட்டிகளில் ஒன்று. உன் ஞானக் குழல் கீதத்தினைக் கேட்டு, இருண்ட பின்னணி கொண்ட பலரை ஒளியின் வாசல் வழியே வழிநடத்திச் சென்ற, நடுநிலை மார்க்கமான அமைதியுடன் கூடிய செயல்பாட்டுத்திறனை நான் மேற்கொண்டு வாழுகின்றேன். தெய்வீக கிறிஸ்(ட்)ணா, நாங்கள் அனைவரும் உன் மேற்பார்வைக்குள் உள்ளதால், நாங்கள் முன்னேறிக் கொண்டிருப்பினும், வழிமாறிப் போனாலும், அல்லது அவநம்பிக்கையெனும் மூட்டத்தினால் ஸ்தம்பித்து நின்றிருந்தாலும், உன் வீடான என்றும் நிலைத்திருக்கும் விடுதலைப்பேற்றை நாங்கள் திரும்பப் பெற எங்களை வழிநடத்து. கிருஷ்ணா, உன் அன்பினையறிந்த ஒவ்வொரு அன்பரின் இதயத்திலும் நீ கொலுவீற்று ஆட்சிபுரிகின்றாய்.
27. Come to me as Swami Shankara.
27. சுவாமி ஆதிசங்கரராய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.
சுவாமி ஆதிசங்கரரே, ஞானவானில் பிரகாசிக்கும் நீங்கள் ஒரு அற்புத நட்சத்திரம்! சமய சடங்குகளின் இறுக்கத்தினால் கருமையுற்ற பல ஆன்மாக்கள் மீது நீங்கள் உங்கள் ஒளியை வீசினீர்கள். மனித இருளெனும் பல ஆடுகள் உங்கள் மெய்யுணர்வென்னும் சிங்கத்தின் உறுமலுக்கெதிரே நடுங்கி ஓடி ஒளிந்தன. கிறிஸ்துவைப் போல, நீங்கள்: "இறைவனே நான் ", "நீ இறைவன் ", "நானும் என் இறைத்தந்தையும் ஒன்றே" என முழக்கமிட்டு, எங்களை லோகாயத உறக்கத்திலிருந்து விழிப்புறச் செய்தீர்கள் ". காட்சியில் உண்மையாகத் தோன்றும் பொருட்களின் பொய்ம்மையை" முதலில் விவரித்த உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள். சுவாமிகளின் சுவாமியே, வரையறுக்கப்பட்ட ரூபங்களுடைய பொருட்களெனும் லயிக்கும் அலைகளுக்கு அடியில், மறைவாக நடனமாடும் ஒரே பேருணர்வுச் சமுத்திரத்தைக் கண்டுகொள்ள எங்களுக்குக் கற்றுத் தந்தீர்கள். நம் கடவுள் சுழித்த-முகத்துடன், பழிவாங்குகின்ற, குற்றம் கண்டுபிடிக்கின்ற தன்மைகொண்டவர் அல்ல, மாறாக, அவருடைய முகம் அனைவரையும் வசீகரிக்கும் பிரகாசமான மந்தகாச புன்னகை தரித்தது என நீங்கள் எங்களுக்குப் பகர்ந்தீர்கள். எங்கள் இதயங்களில் மலர்ச்சியாகப் பூக்கும் புன்னகையைப் பெறுவதெப்படி என்பதையும், எங்கள் ஆன்ம மலர்-ஜாடிகளில் மகத்தான, விண்ணுலகப் புன்னகையாலான பூங்கொத்தினை வைத்து அலங்கரிப்பதெப்படி என்பதையும் எங்களுக்கு விளக்கிக் காட்டினீர்கள். எங்கள் மகிழ்வான ஜீவிதங்கள் உங்கள் ஒளிக்கடலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்டவை; எங்கள் பலரின் ஜீவிதங்கள் உங்கள் ஆனந்தக்கடலிலேயே நடனம்புரிகின்றன; எங்கள் ஆசைச் சூறாவளி தணியும்போது உங்கள் பரந்த மகிழ்ச்சியில் நாங்கள் லயம் அடைவோம். ஆதிசங்கரரே, உங்கள் புன்னகையில் பேருணர்வுக்கடல் நடனம்புரிவதை பலர் கண்டுள்ளனர்: உங்களுக்கு எங்கள் சிரம்தாழ்ந்த நமஸ்காரங்கள்!
28. Come to me as Moses.
28. மோசஸாக வந்து தரிசனம் கொடு.
ஓ மோசஸ், தேவதூதர்களின் மலர்ந்த மலர்ச்சுடரே! உங்கள் ஞானத்தின் சக்தி பலரை சோகப் பாலைவனத்தில் இருந்து புறப்பாடு செய்வித்து, மலர்ச்சியான ஆனந்த பூமிக்கு வழிநடத்திச் சென்றது. உங்கள் வாழ்வின் உதடுகள், ஆன்ம-இருளை உண்டாக்கும் முட்புதர்களை ஞானத்தின் கனலினால் சுட்டுப்பொசுக்கி, அதன்மூலம் பிரகாசிக்கும் சுடரொளியில் கடவுளின் கருணை-முகத்தினை தரிசிப்பதற்கான ரகசியமான வழிகளை உபதேசித்தன. அன்பின் "ஒளிர்ந்துசுடரும் புதர்ச்செடியின்" அருகில், அனைவருக்காகவும் கருணையால் சொரியும் கண்ணீர்மல்க நிற்கும் உங்களை அங்கு கடவுள் பார்த்து இவ்வாறு பகர்ந்தார்:"என் சொர்க்க லோகத்து தேவதைகள் பத்து பேர் இங்கு பூலோகத்திற்கு உன்னுடன் வந்து சேர்ந்துகொண்டு, என் பத்து அனுசாசனங்களை, அவர்கள் அமைதியாக வீரக்கொம்பினால் எல்லா காலங்களிலும் ஊதிக்கொண்டு, என் தெய்வீக குணங்களின் கட்புலனாகாத படையின் அணிவகுப்பைப் பிரகடனப்படுத்தி, பாபம், தவறு, அசத்தியம், மற்றும் அவைகளின் மருள்-போதையூட்டம் பெற்ற சிப்பாய்கள் ஆகியவற்றின் துணையால் சூழ்ந்த மனித இருள் சைத்தானைப் போரிட்டு வெல்ல போர்முரசு கொட்டிக் கொண்டேயிருப்பார்கள் ". ஓ மோசஸ், நீங்கள் முக்திக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு! இருண்ட யுகத்தினில் தீய மருட்சக்திகளை போரிட்டு வெல்வதற்காக நடாத்திய உங்கள் இடையறாத அணிவகுப்பில் சேர்வதற்காக பல போர்வீர-ஆன்மாக்கள் தங்களை நாடுகிறார்கள். கடவுளை-நேசிக்கும் மோசஸ், கோழைத்தனத்தை வீரத்தால் வெல்லவும், வென்று, எல்லா இதய அரியாசனத்திலும் ஆட்சிபுரியும் கடவுளர்களுக்கு கடவுளானவரை - அவரைத் தவிர வேறெந்தக் கடவுளையுமன்றி - உன்னதமாக வழிபட எங்களுக்குக் கற்பி.
29. Come to me as Mohammed.
29. முகம்மது நபியாக என்னிடம் வருவாயாக.
முகம்மது நபியே, சுடரும் கடவுளின் மைந்தனே! பிரகாசமாக ஒளிரும் உங்கள் தெய்வீக வீரமுழக்கத்தினால் பலர் தங்கள் போராடும் உள்ளங்களுக்குச் செயலில் நிதானமான சாந்தத்தைக் கண்டுகொண்டு, இருளெனும் கடுங்கோலனிடமிருந்து ஞானக் கன்னியை மீட்கப் பேராவல் கொண்டுள்ளனர். வலுவான அமைதிக்கும் கோழைத்தனமான காம-சுகத்திற்கும் நடுவே நடக்கும் போரில் தெய்வீகப் போராளியைத் தவிர மற்றோர் எவரும் வெல்லமுடியாது. உன் போர்வீரர்கள் அவர்களுடைய பிரகாசமான நன்மைதரும் ஈட்டிகளை தீயவைகளின் நஞ்சு-நெஞ்சங்களில் துளைத்து அவைகளின் உயிரைப் பறித்தனர். முகம்மது நபியே, ஆன்ம-சாரமற்ற விக்ரஹ-அடையாளங்களைக் கண்டனம் செய்பவரே, உருச்சிதைக்கும் அடையாளங்களும் ரூபங்களும் முற்றிலும் இல்லாத சுத்தமான, ஒன்றேயான உருவமற்ற கடவுளை வழிபட நீங்கள் எங்களுக்கு கற்பித்தீர்கள். முகம்மது நபியே, உங்களைச் சார்ந்திருப்பவர்கள் உலகாயத புலனின்பங்களின் வறண்ட பூமிக்கு தவறிச் சென்றுவிடாமல், பெரும்விளைச்சல் கொடுக்கும் அழிவற்ற மனத்தை நாடுமாறு அவர்களை எச்சரித்தீர்கள். புலன்களை மயக்கும், எண்ணங்களைத் தகர்க்கும், கடவுளை விலக்கும் மதுபானங்களுக்கும், போதைப்பொருட்களுக்கும் நீங்கள் பரம வைரி என்பதை உங்கள் வழிநடப்பவர்கள் அறிவார்கள். உண்மையான, சீரான நமாஸ் பிரார்த்தனையெனும் மதுபிழியும் எந்திரத்தினால் வடிக்கப்பட்ட மெய்யான மதுரசத்தின் மேலுள்ள ஏக்கமே, தவறுதலாக மதுபானத்தின் மேல் கொள்ளும் ஆசையாகப் பரிமளிக்கின்றது என்பதனை நீங்கள் கற்பித்தீர்கள். முகம்மது நபியே, உங்கள் திருக்குர்ஆன் எனும் ஒளிவிளக்கு வழிதவறிய பல ஜீவாத்மக் கப்பல்களை, மறைவாய் அமிழ்ந்திருக்கும் பாவமெனும் பாறைகளினின்று காத்துப் பாதுகாப்பாகக் கடவுளின் கரைக்கு வழிநடத்திக் கொண்டிருக்கின்றது. அவ்வப்போது உண்ணா நோன்பினைக் கடைபிடிப்பதன் மூலமும், ஸ்தூல உணவினைச் சார்ந்திருப்பதை விடுவதன் மூலமும், பேருணர்வைப் பக்குவப்படுத்தப்பட்ட பீடத்திற்குக் கீழிறங்கி வர ஏதுவாகி, அது அழியா அமிர்த உள்ளங்களை நுகருமாறுத் திறவாக நீங்கள் கற்பித்தீர்கள். முகம்மது நபியே, எல்லாம் வல்ல இறைவனின் நாமமான அல்லா-ஹூ-அக்பர் எனும் போர் முரசினால் உலகாயதப் பிடிப்பெனும் சாத்தானை விரட்டியடித்தீர்கள். உங்கள் ஆன்மபலம் பொதிந்த போர்-முழக்கங்கள் எங்கள் இதயங்களைச் சூறையாடும் பலவீனங்கள், குறுகிய எண்ணங்களின் இறுக்கப்பிடிகளிலிருந்து விடுபடச் செய்யட்டும்.
30. Come to me as Buddha.
30. நீ புத்தராய் என்னிடம் வருக.
புத்தரே, உன் கருணைச் சொற்பொழிவுகளின் பொன் நாளங்கள், இருள்மண்டிய, கல்நெஞ்சங்களில் விரவி அவைகளின் இருளைப் போக்கி ஒளிமயமாக்கியது. நீ துறவில் வானைத்தொடும் மகிமை பெற்றவன். உன் கடவுட்நோக்குக் கண்களுக்குக் கீழ், புலன்சுகங்கள் தரும் ராஜ்ஜியம், பருமையான பேராசை நதிகள், காமத்தால் எரிக்கப்பட்ட பரந்துவிரிந்த ஆசைப் பாலைவனங்கள், உயர்வான அநித்தியக் குறிக்கோள் மரங்கள், அரிக்கும் உலக-கவலைக் கள்ளிச் செடிகள் - என இவையாவும் உருகி கண்ணுக்குப் புலனாகாமல் சிறுத்து மறைந்தன. புத்தரே, உன் தயையின் ஒளிவீச்சு குரூர நெஞ்சங்களின் கடினத்தை உருக்கி இளக்கியது. நீ ஆட்டின் உயிரை பலியினின்று காக்கும் பொருட்டு, அதற்குப் பதிலாய் உன் உயிரையே தியாகம் செய்ய முனைப்பட்டாய். ஆனந்தக்களி-லயத்தை நாடும் நெஞ்சங்களைத் தேடி, உன் சாந்தமான எண்ணங்கள் இன்னம் மனவெளிகளில் அமைதியாக பவனி வருகின்றன. போதி ஆலமரத்திற்கடியில் அமர்ந்து, நீ பேருணர்வுடன் அமைதியான ஒரு சபதத்தை மேற்கொண்டாய்: "ஆலமரக் கிளைகளுக்குக் கீழே,புனித ஆசனத்தில் அமர்ந்து நான் இச்சபதம் செய்கிறேன்:தோல், எலும்புகள், அநித்திய சதை - இவை கரைந்து மறைந்தாலும் சரி;நான் வாழ்வின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்து,அனைவரும்-நாடும் விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை அடையும்வரை,இவ்விடத்திலிருந்து நான் ஒருபொழுதும் அசையமாட்டேன், இது உறுதி ". நீ கருணையின் சின்னம், தயையின் அவதாரம், உன் உறுதியை எங்களுக்கும் அளி, அதன்மூலம் நாங்களும் உன்னைப் போலவே விடாமுயற்சியால் மெய்ம்மையை நாடுவோம். நாங்களும் உன்னைப் போல மெய்விழிப்புணர்வு பெற்று, பிறரின் சோகத்துடிப்புகள் நிவிருத்தியடைவதற்காக நாங்கள் எங்களுக்காக எப்படி நாடுவோமோ அப்படி அவர்களுக்காகவும் நாட எங்களுக்கு அருள்புரி.
31. Prayer-Demand asking God to be the President of the United States of the World.
31. கடவுளை ஒன்றிணைந்த அகிலஉலக நாடுகளுக்கு தலைவனாக ஆட்சிபுரிய உரிமையுடன் பிரார்த்தனை.
எங்கள் இறைத்தந்தையே, கோளங்கள், கேலக்சிகள், உலகங்கள், பிரபஞ்சங்கள் இவைகளை ஒருங்கே ஆட்சிபுரியும் தலைவனே, சுய-வளர்ச்சி மற்றும் சுதந்திர-இச்சாசக்தியுடன் கூடிய உன் ஜனநாயக ஆட்சியின்மூலம் உன் பிரஜை-குழந்தைகளை உன் பூரணத்துவத்தினை நோக்கிக் கிரமமாக அழைத்துச் செல்கின்றாய். உன் சுதந்திர-இச்சாசக்தி நாடுகளில் பிறந்ததினால், நாங்கள் எங்கள் தெய்வீகப் பிறப்புரிமையான நிரந்தரமான, அழியாத சுதந்திரத்தை பெற்றுள்ளோம். ஆனால், அந்தகோ! எங்கள் எங்கும்நிறைத் தன்மையை புலன்-சுகங்கள், தீயவை, சுயநலம், கண்மூடித்தனம், குறுகியநோக்குடைய நாட்டுப்பற்று போன்ற சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைத்து சிறைப்படுத்திவிட்டோம். கற்பனையில் பனிக்கட்டியாக திடமாகிய குடும்ப, சமுதாய, நாட்டு வரம்புகளையெல்லாம் எங்கள் புரிதலுடன் கூடிய அன்பின் இளஞ்சூட்டினால் உருக்கிக் கரையச்செய்ய எங்களுக்குக் கற்பி. சர்வமும் அறிந்த தந்தையே, நாங்கள் சுயமாக நிர்ணயிக்கும் விவேகத்தைக் கொண்டு எங்களை நாங்களே ஆள, எங்கள் நெஞ்சங்களில் உள்ள எல்லா நற்பிரஜைகளின் சுதந்திர தீர்மானத்தின்மூலம், ஒருங்கிணைந்த அகிலஉலக நாடுகளுக்கு உன்னை நிரந்தரமாகத் தலைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் நாங்கள் வாழுமாறு எங்களுக்கு அருள்புரி. எங்கள் தேசாபிமானத்தை விரிவடையச் செய்து, அதில் ஜாதி, வகுப்பு, கொள்கை, நிற வேற்றுமையின்றி, பூமியில் வாழும் எல்லாரையும் அரவணைக்குமாறு, எங்கள் ஆன்மா, செழுமை, புரிதல் ஆகியவற்றை வளப்படுத்த எங்களுக்குக் கற்பி. பிரபஞ்சத் தலைவனே, உன் வாழ்வின் நெறியை நாங்கள் கடைபிடிக்க எங்களுக்கு அருள்புரி; சுதந்திரமாகப் பிறந்த உன் குழந்தைப் பிரஜைகள் அனைவரையும்: நல்லவர்களையும் தவறின் போதையில் மதிமயங்கியவர்களையும் மட்டுமல்லாது, பாலூட்டிகள், பறவைகள், விலங்குகள், மென்மையான மலர்கள், கவனமின்றி நடக்கையில் எங்கள் காலடியின்கீழ் நசுங்கும் பேசா புற்கள், காட்டுத் தளைகள் போன்றவைகளையும் அவைகளின் சுதந்திரத்தை மதித்து அன்புடன் அணுக எங்களுக்கு அருள்புரி.
32. Prayer-Demand: Make me anything: a Christian or a Hindu - anything to realize Thee.
32. உரிமையுடன் வேண்டும் பிரார்த்தனை: என்னை கிறிஸ்துவனாகவோ, இந்துவாகவோ, அல்லது எந்தவொரு மதத்தவனாகவும் ஆக்கு - நான் உன்னை மெய்யாக உணர்வெனெனில்.
நான் கிறிஸ்துவனாகவோ, யூதனாகவோ, இந்துவாகவோ, புத்தமதத்தவனாகவோ, இஸ்லாமியனாகவோ, அல்லது ஸுஃபியாகவோ இருந்தாலும்: நான் எந்த மதத்தவன், எந்த இனத்தவன், எந்த கொள்கையுடையவன், எந்த நிறத்தவன் என்பதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை, உன்னை அடையும் வழியை மட்டும் நான் பரிசாகப் பெறுவேனெனில்! மாறாக, மதச்சடங்கு, சம்பிரதாயங்களின் குழப்பமான வழிகளில் சிக்கிக் கொள்வேனென்றால், நான் இவைகளில் எந்தவொரு மதத்தையும் சாராமல் இருப்பேனாக. நான் உன்னிடம் கொண்டு செல்லும் மெய்யுணர்வெனும் ராஜவீதிப் பாதையில் பயணிப்பேனாக. எந்த மதமெனும் துணைப்பாதையின் வழியே நான் பயணித்தாலும் என் அக்கறையெல்லாம் இறுதியில், உன்னிடம் நேரே இட்டுச் செல்லும் ஒரே உயர்வழிச் சாலையான பொதுவான மெய்யுணர்வுப் பாதையை அடைவதே. என்னுடைய சக்திகள் அரும்பும் பகற்பொழுதில் என்னை வழிநடத்த உன் ஞானச்சூரியனின் பிரகாசத்தை அனுப்பிவை; சோகத்தின் இராப்பொழுதில் நான் பயணிக்க நேர்ந்தால், உன் கருணைச் சந்திரனை எனக்கு வழிகாட்ட அனுப்பு.
33. Demand to travel on the one Highway of Realization.
33. ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையில் பயணிக்க உரிமையுடன் வேண்டுதல்.
எங்கள் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஒரு ஒளிச் சந்நிதியை அடைய பல நிஜ வழிகளில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். எல்லா மதநம்பிக்கைகளெனும் துணைவழித் தடங்களும் ஒன்றுகூடும் பொதுவான ஒரே மெய்யுணர்வு வேகவழிச் சாலையை எங்களுக்குக் காண்பி. வேறுபட்ட மதங்கள் மெய்ம்மையெனும் உன் ஒரே மரத்தின் கிளைகள் தான் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட எல்லா ஆகம போதனைகளாலான கிளைகளிலும் தொங்கும், அறிவால் சோதிக்கப்பட்ட, கனிந்த, இனிமையான ஆத்மஞானப் பழங்களை நாங்கள் புசித்துமகிழ எங்களுக்கு அனுக்கிரகம் செய். உன் அமைதிக் கோயிலில் நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. எங்கள் அந்த ஆன்ம கீதம் நீ உன் அமைதிச் சபதத்தை மீறி, அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் நீ எங்களைத் தூக்கி அமர்த்தத் துணைபுரியட்டும்.
34. Make me Thy Butterfly of Eternity.
34. என்னை நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் ஆக்கு.
நான் என் இறந்தகாலத்தை எரித்து சாம்பலாக்கினேன்; அரும்பும் விதியினின்று முளைக்கும் வருமுன்னர் உரைக்கும் விதைகளை ஒதுக்கித்தள்ளினேன். இறந்தகால, எதிர்கால பயங்களெனும் சிதறிக்கிடந்த சாம்பல்களுக்கு இடையே நான் சிரமப்பட்டு அவற்றைக் கடந்து சென்றேன். நான் என்றும் இருக்கும் நிகழ்காலம். நான் என் இச்சா சக்தியின் கூர்மையினால், அறியாமை வலைக்கூடுகளை நார்நாராக கிழித்து எரிந்துவிட்டேன். இப்பொழுது, நான் உன் நிரந்தரத்தின் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி, கணக்கிடமுடியாத காலப்பாதையின் வழியே நான் மிதந்து செல்கிறேன். இயற்கை ஈந்த என் இறக்கைகளின் அழகினை எல்லாப்பக்கங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப் படுத்துகிறேன். சூரியர்கள், விண்மீன் துகள்கள் என் இறகுகளில் விரவிக் கிடக்கின்றன. பார், என் அழகை! உன்னை ஏமாற்றிக் கட்டும் அனைத்து பட்டுநூல் பின்னல்களையும் அறுத்து ஏறி! நான் என் அகத்துக்குள்ளே பறந்து செல்வதைப் போல் நீயும் அதனைப் பின்பற்று!
35. I will not offer unto Thee mind-made hothouse Songs.
35. நான் தான்தோன்றித்தனமான அபஸ்வர கீதங்களை உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன்.
எவருடைய குரலினாலும் இசைக்கப்பெறாத பாட்டை நான் உனக்குப் பாடுவேன். என் கன்னி இசைக்கானங்களை நான் உனக்காக அர்ப்பணம் செய்வேன். யாரும் கேட்காத என் இதயகானத்தை நான் உனக்காகப் பாடுவேன். என் சங்கீதமழலையை போஷித்து வளர்த்து, மேலும் பயிற்சிபெறுவதற்காக அதனை உன்னிடம் அழைத்து வந்துள்ளேன். தான்தோன்றித்தனமான, அதிநுணுக்கமான கட்டுப்பாட்டுடன் கூடிய பாட்டினை நான் உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன்; மாறாக, என் இதயத்தின் தெம்மாங்குப் பாட்டுக்களை உனக்கு அர்ப்பிப்பேன். பழகித்தேய்ந்து, உணர்வெழுச்சியில் பிறந்த இசை மற்றும் மனக்கற்பனையில் உருவான பாட்டுப்பூக்களை நான் உனக்கு அர்ப்பிக்க மாட்டேன்; மாறாக, உயர்ந்த மலைப்பாதை போன்ற என் உள்ளத்தில் மலரும் வனமலர்களைக் கொண்டு உன்னை அர்ச்சிப்பேன்.
36. Prayers on the beads of love.
36. அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு பிரார்த்திக்கின்றேன்.
பக்தியினால் கோர்க்கப்பட்ட என் அன்பு மணிகளினாலான மாலையைக் கொண்டு என் பிரார்த்தனைகளை ஜபிக்கின்றேன். கடவுள், பேருணர்வு, பிரம்மம், கிறிஸ்து, ஆதிசங்கரர், ஸ்ரீ கிருஷ்ணர், புத்தர், முகம்மது நபி என எந்த ஒரு நாமத்தையும் நான் குறிப்பிட்டுப் பற்றிக் கொள்வதில்லை; ஏனெனில் இவையாவும் உன் நாமங்களே. நீ பல நாமங்களை விரும்பி ஏற்பதை நான் அறிந்ததனால், சில சமயங்களில் நான் இவை எல்லாவற்றையும் சேர்த்து விளிப்பதும் உண்டு. பன்னெடுங்கால மேடையில் நடக்கும் உன் பிரபஞ்ச நாடகங்களில், அதில் தோன்றும் உன் எத்தனையோ விதமான பாத்திரங்களில், நீ பல்வேறு நாமங்களினால் அழைக்கப்படுகிறாய்; ஆயினும், நீ இடையறாத இன்பம் எனும் என்றும் மாறாத ஒரு பெயரைக் கொண்டுள்ளாய் என்பதை நான் அறிவேன். நான் உன்னுடன் பலமுறை இணைந்து நடித்தும், உன்னுடைய கானங்களைப் பாடியுமுள்ளேன். எல்லா ஜீவனங்களுக்கும் ஆதாரமான உன் நெஞ்சகக் கடலில், ஒரு சிறுதுளி உயிரான என்னைக் காத்துப் போஷித்து வந்துள்ளாய். பிரிவெனும் குளிர்காலம் முடிந்து நான் உனைநாடி வீடு திரும்பும் போதெல்லாம், பல நூற்றாண்டுகளாய் அளாவிய உன் இதமான ஸ்பர்சங்களை நான் நினைவுகூர்கிறேன். மீண்டும் இந்தப் பகல்வேளையில் உன்னுடன் இணைந்து நடித்து உன் கீதங்களைப் பாடுகின்றேன்.
37. Hover over the minaret of my expectations, O Mighty Spirit.
37. சர்வசக்தியுடைய பேருணர்வே, என் எதிர்பார்ப்புகளெனும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக.
சாந்திக்கோயிலினுள்ளே, சுகானந்தக் கடவுளே, நீ வா! பக்திஸ்தலத்திற்குள், பிரம்மானந்தக் கடவுளே, நீ வா! என் நற்குண ஆலயத்தினை உன் சாந்நித்தியத்தால் புனிதமாக்கு. சர்வசக்தியுடைய அல்லா, என் எதிர்பார்ப்புகளெனும் தன்னந்தனியே காத்திருக்கும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக. அல்லா, என் மன மசூதி நிஸ்சலனமெனும் சுகந்தத்தை பரப்புகின்றது. வா! உன் காலடிகளின் ஓசையைக் கேட்க நாங்கள் காத்திருக்கின்றோம். என் சுய-முன்னேற்றமெனும் விஹாரம் உன் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றது. வலுவான, தூய வெண்மையான பக்தியால் எழுப்பப்பட்ட என் கட்புலனாகாப் பிரார்த்தனைத் திருச்சபைக்குள், என் இதயத்தின் அன்பினால் புத்துணர்வூட்டப்பட்ட பணிவான அர்ப்பணங்களை நாள்தோறும் வந்து நீ ஏற்றுக்கொள்.
38. The bee of my mind loves to drink from the Blue Lotus of Thy Feet.
38. உன் நீலோத்பல சரணாம்புஜத்திலிருந்து, என் மனத் தேன்வண்டு அருந்த விரும்புகின்றது.
தெய்வத்தாயே, நீலோத்பல ஒளியுடைய உன் சரணாம்புஜத்தில், என் மனத் தேன்வண்டு லயித்திருக்கின்றது. உன் தாயன்பின் மதுரத்தேனை அது அருந்துகின்றது. உன்னுடையதான அந்த ராணித்தேனீ, உன் மணம் மேவிய மதுரத்தையன்றி வேறெந்தத் தேனையும் அருந்தாது. தெய்வத்தாயே, என் கற்பனைத் தோட்டங்கள் மேலெல்லாம் பறந்துசென்று, எல்லா சிற்றின்ப தேனையும் நான் மறுத்து, இறுதியில் உன் இருதயாம்புஜத்தில் ஊறும் அமிர்தத்தேனை கண்டுகொண்டேன். நான் உன் சுறுசுறுப்பான தேனீ, பல ஜென்ம வயல்நிலங்களின் மேல் பறந்து, அனுபவ சுவாசத்தினை நுகர்ந்து கொண்டிருந்தேன்; உன் சுகந்தம் என் ஆன்மாவின் எல்லா வாசனை-தாகத்தினையும் தீர்த்துவிட்டதால், இனி நான் மேலும் சுற்றித் திரியமாட்டேன்.
40. May I seize Thee at Eternity's end?.
40. நான் உன்னை நிரந்தரத்தின் முடிவில் பிடித்துவிடுவேனா?.
இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன் வருகையை முன்னரே அறிவிக்கும் தூதுவனாக என் உள்ளமைதியிலிருந்து இன்பக் கிரணங்கள் பரந்து விரிகின்றன. பல இரவுகளில் மினுமினுக்கும் வஸ்திரங்களில், பல விடியற்காலைகளில் பளபளக்கும் மரகத முகத்திரைகளையும், பனித்திவலை முத்துக்களையும் அணிந்துகொண்டு, பல சந்திக்காலங்களில் மாட்டின் மணியோசைகளுடன் இயைந்து நாட்டியமாடி, பல வருடங்கள் வசந்தகால மலர்களுடனும், வேனிற்கால காய்கனிகளுடனும், பனிக்கால வைரத்தைப் போன்ற ஆலங்குச்சிகளாலும், மடமடவெனப் பெய்யும் மழைகளாலான பளீரென்று மின்னும் வஸ்திரங்களாலும் அலங்கரிப்பட்டு, உன்னை ஆவலுடன் எதிர்பார்த்து என் ஸ்ம்ருதித் தோட்டத்தில் காத்திருந்தேன். உன் பக்தர்களிடமிருந்து நாட்களைக் கால ஓநாய் திருடிச் சென்றுவிடுவதால், இவையெல்லாம் இப்போது இல்லை. நான் இப்போது தனியாக - தன்னந்தனியாக - உள்ளேன்; கணப்பொழுதில் மறையும் விழாக்கோலங்களின் மேலிருந்த ஆசைகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும், நான் உன் பாதையைக் கண்டுகொள்ள எப்போதும் சுழலும் மணிநேரங்களுடன் பயணித்துத் தேடிக்கொண்டேயிருப்பேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாயினும் எனக்கு கவலையில்லை, ஏனெனில், இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன்னை நிரந்தரத்தின் எல்லையில் எப்போதாவது பிடித்துவிடுவேன் என்பதை நான் அறிவதனால்!
41. Wake me, that I may know the terrors of mundane delusion to be but Dreams.
41. என்னை விழிப்புறச் செய், நடுக்கும் மோக நிகழ்வுகளைக் கனவென அறிய!
பின்னர், என் புன்னகை தளர்ந்து, இன்பத்தின் இதழ்கள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது. திடீரென நான் கிழிந்த துணிகளுடன் பிச்சைக்காரனாய், வறுமையின் கடூரமான கல்லில் உட்கார்ந்திருப்பதாய்க் கண்டேன். நான் அழுதேன், கேளா, இரக்கமில்லா என் சூழ்நிலைக் கற்களின் மேல் என் கண்ணீர் சிந்தியது. உலகம் பறைசாற்றா பரிகாசத்துடன் என்னைக் கடந்து சென்றது. நான் உன் உதவிக்காக கதறினேன். நான் தொடர்ந்து சிந்திய கண்ணீரின் ஏக்கத்தினால் என்னை வேறு வழியின்றி எழுப்பி விழிப்புறச் செய்தாய். அப்போது, நான் செல்வந்தனுமல்ல, ஏழையுமல்ல என்பதைக் கண்டு நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். மகிழும் செல்வச்செழிப்பும், வாட்டும் வறுமையும் என மாறிமாறி வரும் இந்தக் கனவிலிருந்து என்னை நீ அவசியமாக விழிப்படையச் செய். நிழல்-உலகங்களைப் படைப்பவனே, மரணமெனும் இந்த அருவருப்பான, கெட்ட சிம்ம சொப்பனங்களிலிருந்து என்னை விடுவி! மரணமில்லாப் பெருவாழ்வினை என்னில் விழிப்படையச் செய்: சலனமற்ற அமைதியை என்னுள்ளத்துள் எழுப்பு. அதன்மூலம், குழப்ப வைக்கும் இந்த அதிபயங்கரமான உலக நிகழ்வுகள் எல்லாம் வெறும் கனவுகளே என அறிவேன்.
42. I Demand to return Home.
42. நான் "வீடு" திரும்ப வேண்டுகிறேன்.
தடைகளே, உஷார்! என் பாதையை விட்டு அகலுங்கள்! நான் "வீடு" நோக்கிச் செல்கிறேன். காலத்தின் நீள் பாதையில், நான் தவறெனும் குழிகளில் பன்முறை விழுந்து, விழும்போதெல்லாம் உன் மறைவான கைகளால் தூக்கிவிடப்பட்டு, நான் என் நடையைத் தொடர்ந்துள்ளேன். உன் வீடு நோக்கி பயணிக்கும் என் வழியில் விரக்திதரும் இருள், முள்வேலியிடும் பழக்கங்கள், கல்பாறைநிகர் சோம்பல், மலைபோல் உதாசீனம், கடலளவு அவநம்பிக்கை, புலன் அபாயங்கள் போன்றவை குறுக்கிட்டு இடைமறிக்கலாம்; ஆனால் கோடிக்கணக்கான ராஜ்யங்கள், எண்ணிலடங்கா வருடங்களுக்கு மைந்துற அளவில்லா உலக இன்பங்கள் பெறினும், அவைகள் நான் உன்னை விட்டுவிடுவதற்கு என்னை தூண்டாது. ஏ மஹா சமுத்திரமே, எனது மனிதத் தேவைகளெனும் நதிகள் உன்னிடம் கலந்து நிறைவுறுகின்றன. பல்வேறு இடும்பைப் பாலைவனங்கள் வழியே சுற்றி ஓடிய என் ஆசைநதிகள் உன்னில் சங்கமமாகி லயிக்க வேண்டுகிறேன்.
43. Make me a lion of Thy all-conquering Wisdom.
43. என்னை எல்லாம் ஆளும் உன் ஞானத்தின் சிங்கமாய் ஆக்கு.
இறைவியின் சிங்கக்குட்டியான நான் துர்பலமுடைய மனித ஆட்டுமந்தை வாழ்க்கையில் ஏதோ ஒரு காரணத்தால் தூக்கி எறியப்பட்டேன். பயம், தோல்வி, நோய்களுக்கு வசமாகும் ஆடுகளின் நடுவே வெகுகாலமாய் வாழ்ந்து, நானும் அவைகளைப் போலே 'மே-மே'யென கோழைத்தனமாய் கத்தினேன். வஞ்சகமாய், தொடர்ந்து நைக்குந் துன்பங்களை நடுக்கி அச்சமுறுத்தும் என் உறுமலை மறந்து போனேன். மெய்யணர்வின் சிங்கமே, நீ என்னை ஆட்டுமந்தையில் இருந்து வெளியிலிழுத்து என்னை தியானக் குளத்திற்கு இட்டுச்சென்றாய். 'கண்ணைத்திற! உறுமல் செய்!' என நீ எனக்குக் கட்டளையிட்டாய். ஆனால், நான் என் விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டு 'மே-மே'யென பயத்தில் அலறினேன். உன் ஞான கர்ஜனை என்னுள்ளே முழுதும் பரவி அதிரவைத்தது. உன்னுடைய பலமான ஆன்ம வலுவுள்ள ஆட்டுவித்தலினால் என் கண்கள் திறந்தன. ஆ! அங்கு சலனமற்ற தெளிந்த குளத்தில் பிரதிபலிக்கும் என் முகம் உன் முகத்தைப் போலவே இருப்பதை எனக்குக் காட்டினாய்!நான் என்னை இப்போது பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கிய சிங்கமாய் அறிகிறேன். அச்சத்தால், தளர்வால், துன்பத்தால் நடுங்கி எழும் ஆட்டுக்கத்தல் இன்றோடு ஒழிந்தது; இனி, எல்லாம் வல்லவனின் உயிரூட்டும் சக்தியைக் கொண்டு நான் கர்ஜிப்பேன்! அனுபவமெனும் காட்டில் உலாவி, சிறு ஜந்துக்களாய்த் திரியும் விரக்தியூட்டும் கவலைகள், தளர்த்தும் அச்சங்கள், அலைக்கும் கோணாய் அவநம்பிக்கைகள் போன்றவைகளைக் கவ்விக் பிடித்து இரக்கமற விழுங்குவேன். மரணமில்லா சிங்கமே, என்மூலம் சர்வவல்லமை படைத்த உன் ஞான கர்ஜனையால் உறுமுவாயாக!
44. I am Thy Bird of Paradise wishing to fly in Thine Astral Airplane.
44. நான் உன் தேவலோக விமானத்தில் ஏற விரும்பும் உன் சொர்க்கலோகப் பறவை.
பூலோகத்திலிருந்து விடைபெறும் காலத்தில், என் ஜீவாத்மாவை அழைத்துச் செல்ல உன் தேவலோக விமானம் வந்துள்ளது. நான் வியப்புடன், எப்படிப்பட்ட ஆகாயமார்க்கத்தில் மேலெழும்பி, எந்தெந்த லோகங்களில் பயணிக்கப் போகிறோமோ? என எண்ணினேன். நான் பிரபஞ்ச நியதியின் அந்த ரகசிய மாலுமியைக் கேட்டேன். அந்த பேசாமாலுமி மௌனமொழியில் பதிலுரைத்தான்: "நான் வாழ்க்கையின் மாலுமி. ஆனால் அறியாத பூலோகத்தவர்களால் தவறாக அச்சமூட்டும் காலன் என அழைக்கப்படுகிறேன். நான் உன் சகோதரன், உன்னை உயர்த்துபவன், உன் மீட்பாளன், உன் நண்பன் - பளுவான உன் உடற்துன்பச் சுமையை இறக்குபவன். உன் சிதிலமடைந்த கனவுகளெனும் பள்ளத்தாக்கிலிருந்து உன்னை மீட்டு, உயர்தள ஒளியுலகத்திற்கு கூட்டிச் செல்ல வந்துள்ளேன். துயரத்தின் விஷப்புகை அந்த மேலுலகினை ஒருக்காலும் எட்டாது. "நான் உன் ஜீவாத்ம-பறவையை உன் ஊனுடம்புக் கூண்டிலிருந்து விடுவிக்க அக்கூண்டை கருணையின்றி நொறுக்கியுள்ளேன். உன்னைப் பிணைத்த நோய், பயம் எனும் சங்கிலிகளை அறுத்து எறிந்துள்ளேன். நீ நீண்டகாலமாக சதையெலும்புக் கூட்டினிற்குள் சிறைப்பட்டுக் கிடந்ததனால், பழக்க தோஷத்தால் அக்கூட்டை விட்டு வெளியேறத் தயங்குகிறாய். நீ எப்போதும் சுதந்திரத்தையே விரும்புபவன். இப்போது, வெகுநாட்களாய் நீ ஏங்கிய இந்த விடுதலையைப் பெறும்போது, உனக்கு ஏனிந்த நடுக்கம்?""ஏ சொர்க்கலோகப் பறவையே! ஏறு என் எங்கும்நிறை விமானத்தில்! நெடுநாளாய் சிறகடித்து களைத்த உன் இறகுகளுக்கு ஓய்வுகொடு, என்னுடன் இளைப்பாறிக் கொண்டு, எங்கும், எல்லா இடங்களிலும் பரந்து விரிந்த உன் ஆகாய வீட்டிற்குப் பிரயாணம் செய்யப் புறப்படு!"
45. Come into the Garden of my Dreams.
45. என் கனவுகளின் சோலைக்கு வா.
என் கனவுகளின் சோலையில் பல கனவு-மலர்கள் பூத்தன. என் கற்பனையில் மிக அரிய பூக்கள் எல்லாம் அரும்பின. என் கனவுகளின் கதகதப்பில் இன்னம் விரியாத மொட்டுக்களான நிலவுலக விருப்பங்கள் துணிவுடன் தங்களின் பூர்த்தியடைவெனும் இதழ்களை விரித்தன. மங்கிய வெளிச்சத்தில், நான் மறந்துபோன என் அன்புக்குரியவர்களின் முகங்களை ஒற்று பார்த்தேன்; வெகுகாலத்திற்கு முன் மரித்து மனநிலத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்ட நேச உணர்வுகள் பிரகாசமான உடைகளை உடுத்திக்கொண்டு பீறிட்டுக் கிளம்பின. என் கனவு-தேவதைகளின் ஏவலுக்கு, என் எல்லா அனுபவங்களும் புனர்ஜென்மம் பெறுவதை நான் கண்டேன். என் கனவுகளின் மற்றும் எண்ணற்ற கனவுலகங்களின் அரசே, உன் கனவு-கேலக்ஸிகளில் (பலகோடி விண்மீன்களின் கூட்டத் தொகுப்பு) , நான் ஒரு சின்னஞ்சிறிய விண்மீனாய் இருக்க விரும்புகிறேன்; அல்லது உன் அன்புக்குரிய சிறு கனவு-விண்மீனாக உன் பிரபஞ்ச கனவுகளின் மன்றத்தில் நான் உன்னருகில் மின்ன விழைகிறேன்; அல்லது, அப்படி உன் கனவு மணிமாலையில் வாழ்க்கையின் ஒரு சிறு விண்மீன்-மணியாக நான் ஆகமுடியாவிடில், உன் கனவுகளின் நெஞ்சத்தில் எனக்கு எளிமையான ஒரு இடத்தைக் கொடு. உன் இருதய வாசஸ்தலத்தில், நான் புனிதமான வாழ்க்கைக் கனவுகள் உதயமாவதைக் காண்பேனாக. கனவுகளை நெய்வதில் தலைசிறந்த நிபுணனே, உன் நிரந்தரக் கனவுகளின் கோயிலை நோக்கிப் பயணிக்கும் உன் கனவுக் கோலங்களை ரசிக்கும் எல்லா அன்பர்களும் நடந்து செல்லுமாறு விரிக்க, பல வண்ணங்களில் கனவுக் கம்பளங்களை உற்பத்தி செய்ய எனக்குக் கற்றுக்கொடு. மேலும், திவ்யதரிசனக் காட்சிதரும் உன்னை வழிபடும் தேவர்கள் குழாத்துடன் நானும் சேர்வேனாக. அவர்களுடன் சேர்ந்து, புதிதாக உதித்த உன்னைப் பற்றிய என் கனவுகளின் மலர்க்கொத்தை நான் உன் சந்நிதியில் சமர்ப்பிப்பேன்.
46. Let me feel that Thou and I art One.
46. நானும், நீயும் ஒன்று என நான் உணருமாறு செய்.
உன் நெஞ்சச் சுடரிலிருந்து, பிரபஞ்சத் தோற்றத்தின் ஒளிப்பொறிகள் ஆதியில் வெளிப்பட்ட போது, உருவாகப்போகும் உலகங்களை எதிர்நோக்கிப் பாடும் ஒளித்தோரணங்களுடன் நானும் சேர்ந்து பண்ணிசைத்தேன். நான் உன் பிரபஞ்ச நெருப்பின் ஒரு தீப்பொறி. நீ வாழ்வின் சூரியன், உயிர்ப்பொறி திரவத்தால் நிறைந்துள்ள எங்கள் அநித்தியமான மனக்குவளைகளில் நீ எட்டிப்பார்க்கையில், எங்கள் பொன்மயமான சிறு மனித உணர்ச்சிகளில் அகப்பட்டுக் கொண்டாய். அழியும் தன்மையுடைய மாறிக்கொண்டே இருக்கும் ஒவ்வொரு உயிரினத்தின் தசைக் கண்ணாடிகளிலும், நான் உன் எங்கும்நிறை சக்தியின் சஞ்சலமான நாட்டியத்தைக் காண்கிறேன். சலசலக்கும் வாழ்க்கை ஏரியில், நான் உன் சர்வ வல்லமை கொண்ட வாழ்வினைக் காண்கிறேன். என் சாந்தமான மன ஏரியின் மேல் ஆரவாரித்து எழும் சஞ்சல ஆசைப் புயல்களை, நான் என் கவன ஒருமுகத்தினால் அவற்றைத் தடுத்து நிறுத்த, கிறிஸ்துவிற்கு கற்றுவித்ததைப் போல எனக்கும் நீ கற்றுக் கொடு. சலனமற்ற என் ஆன்ம ஏரியில், நான் உன் அசைவற்ற, அமைதியான முகத்தைத் தரிசிக்க விரும்புகிறேன். என் வாழ்வாகிய சிறு அலையின் எல்லைத் தடுப்பை உடைத்து விடு, உன் அளப்பரிய பெருவெளி என்மேல் பரவட்டும். என் இதயம் உன் நெஞ்சில் துடித்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் உணரச்செய். நீயே என் கால்கள் மூலம் நடக்கின்றாய், என் மூச்சின் வழியே சுவாசிக்கின்றாய், என் கைகள் மூலம் செயலாற்றுகின்றாய், என் மூளையில் எண்ணங்களைக் கோர்க்கின்றாய் என்பதனையும் நான் உணரச்செய். நான் அழுது பெருமூச்சு விடுகையில் உன் உறங்கும் சுவாசம் விழிப்படையும். உன் லீலா விநோதத்தினால், உன் கனவுக்குமிழ்களாலான பிரபஞ்சம் எனை மயக்கிக் குழப்பும் உறக்கத்திலான அறைக்குள் மிதக்கின்றன. உன் விண்மீன் மழையான இச்சா சக்தியே என் இச்சை வானில் பொழிகிறது. நீ தான் நானாக ஆகியுள்ளாய் என்பதை எனக்கு உணர்த்து. ஓ, என்னை நீயாகவே ஆக்கிக் கொள்; நானெனும் சிறுகுமிழ் உன்னுள்ளே மிதப்பதை நான் காணுமாறு செய்.
47. Rock me in the cradle of all space.
47. எங்கும்நிறைப் பரவெளித் தொட்டிலில் எனையிட்டுத் தாலாட்டு.
உன் நிரந்தரத்தின் குழந்தையான நான், நீலவண்ணக் கடந்தகால, பளீரெனத் துலங்கும் நிகழ்கால, மங்கலான தூசரநிற (grey) வருங்காலத் தொட்டிலிலிட்டு ஆட்டுவிக்கப்பட்டு, இப்போது அமைதியின்றி சஞ்சலப்படுகின்றேன். நான் ஆற்றல்கொண்ட என் கால்களை அதில் திறனின்றிப் பிரயோகித்துச் சுழுக்கிக்கொண்டேன், ஆனால் ஒருவழியாக முயன்று கடைசியில் நான் அந்த இருமையின் மருட்தூளியிலிருந்து எகிறிக்குதித்து விட்டேன். நீ உன் எல்லையற்ற கரங்களினால் என்னைப் பிடித்துக்கொண்டு, எங்கும்நிறைப் பரவெளியில் என்னைத் தாலாட்டினாய். நான் உன் எங்கும்நிறை நெஞ்சகத் தொட்டிலில் பத்திரமாகக் காக்கப்படும் உன் நிரந்தரத்தின் சிசு.
48. May the Niagara of my Joys inundate all hearts.
48. அனைவரின் இதயத்திலும் என் ஆனந்தவெள்ளம் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும்.
நான் சந்திக்கும் அனைவரின் மேலும் என் இதயத்திலிருந்து சுரக்கும் ஆனந்தவெள்ளம் என்றும் வற்றாமல் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும். அந்த பெரும் வெள்ளம் கனத்த மரக்கட்டை போன்ற மற்றவர்களின் கஷ்டங்களை அடித்துச் செல்லட்டும். என் ஆனந்தம் சிந்தும் நிலவின் கிரணங்களைக் கொண்டு பிரிந்து வாடும் அனைவரும் அவர்கள் ஏக்கத்தைக் கழுவட்டும். பலமைல் தூரம் விரிந்து அகன்று, எண்ணற்றோர் மனோபாவங்களில் சோகத்தினாலான பெருங்கட்டிடங்களை நொறுக்கித்தள்ளும் சிரிப்பின் பெருஞ்சுழற்காற்றாக நான் ஆவேனாக. அனைவரின் நெஞ்சங்கள்படும் அல்லல்களை நான் சுழற்றி எரிந்து தகர்ப்பேனாக. இரவின் இருள் கவ்விக் காணாத மனங்களுக்கடியில் மறைக்கப்பட்ட உன் பரந்த எழிலழகை, மின்னல் ஒளிக்கீற்று போன்று என் புன்னகையினால் துரிதமாக பிறர் காணும்வண்ணம் வெளிக்கொணர்வேனாக. நான் ஒளிக்கதிர்களாகி, மனித மனங்களில் இருண்ட மூலைமுடுக்குகளிலெல்லாம் யுகாந்தரமாக ஆக்கிரமித்திருக்கும் காரிருளை ஒரே அடியில் துரத்தியடிக்க எனக்கு அருள்புரி. உன் அருளால் ஞானஒளியின் சிறுகீற்று, பலகோடி ஆண்டுகளாய்க் குவித்துவந்த தீவினைகளை ஒருகணத்தில் தவிடுபொடியாக்கும்.
49. Make me the Lark of Life, looking only for Thy Rain.
49. உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.
உன் பிரபஞ்ச இருப்பெனும் வானிலிருந்து வெளிப்படும் உன் மழைத்துளிகளைத் தாகத்துடன் எதிர்நோக்கும் நான், வாழ்க்கையின் ஒரு மேகபட்சி. குரூரமானத் தனிமை மேகங்களைப் பிளந்து, உன் எங்கும் வியாபித்த மழையைப் பொழி. வற்றி வாடும் என் உதடுகளைத் தீண்டும் உன் ஒவ்வொரு மழைத்துளிக் காட்சிக்காகவும், நான் கவனத்துடன் எதிர்பார்க்கிறேன். நீ வருகை தருகையில், உள்முகமாக உன்னை நான் அருந்தி உட்கொள்வேன்; உன் அனுபவஉணர்வுகளான பாதங்கள், வெளிமுகமாக மழைத்துளியாய் என் நலிந்த உடலின் மேல் சன்னமாகப் பொழியும் போது, அவைகளை நான் வருடி அணைத்துக் கொள்வேன். இந்த என் நீண்டகாலத் தாகம் உன் தீண்டலினால் மட்டுமே தணியும். அது, உள்ளே, ஏங்கும் என் ஆன்மாவையும், புறத்தே, விடாமுயற்சியினால் தகிக்கும் என் உடலையும் குளிர்விக்கும். என் அவநம்பிக்கை, சோர்வுச் சூறாவளிகள் கடந்து சென்றுவிட்டன. உன் மழைத்துளிச் சாந்தம் என்னுள்ளே உள்ள ஒவ்வொரு வறண்ட அணுவையும் நனைத்துக் குளிர்விக்கின்றது. இனி நான் உன் திருப்தி கானத்தைப் பாடிக்கொண்டே எல்லாத்திசைகளிலும் சிறகடித்துப் பறந்துசெல்வேன். சொர்க்க லோகங்களின் வழியே பொழியும், உன் கனிவான எங்கும்நிறை ஆறுதலெனும் மழைநீரைத் தவிர, வேறெந்த நீரையும் குடிக்கத் தேடிச்செல்லாத இனமான உன் மேகபட்சியாய் என்னை ஆக்கு.
50. Make me a Smile-Millionaire.
50. என்னைப் புன்னகை-கோடீஸ்வரனாக ஆக்கு.
அமைதியான புன்னகையே, என் ஆன்மாவின் வழியே புன்னகை செய். என் ஆன்மா, என் இதயத்தின் வழியே புன்னகை செய்யட்டும். என் இதயம், என் கண்களின் வழியே புன்னகை செய்யட்டும். புன்னகையின் இளவலே! என் உருவத் தோற்ற விதானத்திலுள்ள அரியணையில் வந்து அமர். மிருதுவான ஆன்மாவாகிய உன்னை, எந்த ஒரு பொய்ம்மை எதிரியும் அழிக்க நெருங்கமுடியாத வண்ணம், நான் என் வாய்மையெனும் கோட்டையில் பாதுகாப்பேன். என்னைப் புன்னகை-கோடீஸ்வரனாக ஆக்கு. அதன்மூலம், உன் புன்னகைப் பொக்கிஷத்தை, உலகிலுள்ள எல்லா சோகம் கவ்விய இதயங்களுக்கும், மாரிபோல் நான் வாரி வழங்குவேன்.
51. Save us from the net of matter attachment.
51. லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.
மாற்றமெனும் மீனவன் எங்கள்மேல் பிரபஞ்சமாயையெனும் வலையை வீசியுள்ளான். மனிதக் காப்பீட்டின் பொய்யான வாக்குறுதிகளெனும் நீரில், எங்களை மரணவலை தொடர்ந்து நெருங்குவதையறியாமல், நாங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாயவலைப் பிடிப்பிலும், பல மாட்டிக்கொள்கின்றன - ஒருசிலதே தப்புகின்றன. நான் ஆழ்கடல் தளத்தில் அமைதியான யோகசமாதியில் ஆழ்ந்து மூழ்கி, காலவலையிலிருந்து தப்பிவிட்டேன். அளவற்ற கருணைக்கடலே, என்னையும் என் சகோதரர்களையும் இந்த லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.
52. O King of all our ambitions, open the doors of noble aspirations in the mansion of our souls.
52. எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.
எங்கள் இதயமொட்டுக்களைச் சிறைப்படுத்தும் இதழ்களைத் திற; எங்கள் சிறைப்பட்ட அன்பின் சுகந்தமணம் உன்னைச் சந்திக்க விரைந்து பரவட்டும். பிரபஞ்ச நோக்கெனும் காற்றினால், எங்கள் சுகந்தமணம் உன் எல்லையற்ற கோயிலுக்குத் தவழ்ந்து செல்லட்டும். எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, செம்மையான மேகங்களாலும், அழகு-மிளிரும் மனிதக் கனவுகளாலுமான உன் சாளரக் கதவுகளையெல்லாம் திறந்துவிடு. எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு. இயற்கையின் அனைத்து சாளரங்களுக்கும் பின்னே மறைந்துநிற்கும் உன் கட்புலனாகாப் பாதத்தை வருடுமாறு எங்கள் சுகந்தமணம் வீசவேண்டுமென்பதே எங்கள் ஆசை.
53. Save me from shipwreck on the Ocean of my Dreams.
53. என் கனவுகளின் கடலின் நடுவே உடைபட்டப் படகில் மூழ்கும் என்னை காப்பாற்று.
என் கனவுகளின் கடலின் நடுவே நான் பயணிக்கும் படகு உடைபட்டது. என் இன்பசுகத் தாங்கி உடைந்து நொறுங்கி விட்டது. அச்சமுறுத்தும், சோகமான இருண்ட கனவுகளின் கடல்நீரினூடே நான் மிக்க சிரமத்துடன் தத்தளித்து நீந்தினேன். உன் கருணைக் காற்றினால், ஒரு நம்பிக்கை நல்கும் சிறுதுடுப்பு என்னருகே மிதந்து வந்தது! அதை உடனே பற்றி இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டேன்!கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக மிதந்து கடைசியில் சுகமான அமைதியெனும் பொன்மயத் தீவினை அடைந்தேன். உன் அனுக்கிரகக் கடல்தேவதைகள் அங்கு குழுமி, என்னை நிரந்தர பாதுகாப்புள்ள உன் சாந்நித்தியத்திற்கு அழைத்துச் செல்ல வந்துசேர்ந்துள்ளனர்.
54. Tune us, that we may hear Thy Voice.
54. எங்களை உன் குரலைக் கேட்குமாறு ஒன்றிசைக்கச் செய்.
அன்பு இதயங்களெனும் மைக்ரோபோன்களின் வழியே, சத்குருவான உன் குரலால் எண்ணற்ற ஒலிப்பதிவுகளை உட்பொதித்துள்ளாய். உன் ஞானமொழி மனங்களின் வெளியில் ஆனந்தத்தில் லயித்த இதயங்களைத் தேடி உலவி வருகிறது. புலனின்ப ஒலிச்சிணுக்குகளினால் (static) செவிடாகிய ஆன்மாக்களால் கேட்க முடியாமல், உன் எச்சரிக்கும் உபதேசங்கள் கேட்பாரில்லாமல் வருத்தத்துடன் கடந்துசெல்கின்றன. தெய்வ ஒலிபரப்பாளனே, அசட்டையெனும் ஒலிச்சிணுக்குகளுக்கடியில் நசிந்த எங்கள் ஆன்மாக்களை மீட்டு உன்னுடன் ஒன்றிசைக்கச் செய்; உன் ஒலிபரப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு நுண்ணிய தொடுதல்களினால் எங்களை உன்னுடன் ஒன்றிசைக்கச் செய்; அதன்மூலம் நாங்கள் உன் அற்புதமான ஆனந்தப்பரவச விழிப்பு நல்கும் கீதத்தைக் கேட்க எங்களைப் பக்குவப்படுத்து.
55. I want to build a Rainbow-Bridge of Self-Realization.
55. நான் மெய்யுணர்விற்கு வானவிற் பாலம் கட்ட விரும்புகிறேன்.
பலயுகங்கள் எனக்கும் உனக்கும் இடையில் பெரும் வளைகுடாவை உருவாக்கியுள்ளது. அது உன்னை நான் மறந்த என் மறதி வெள்ளநீரினால் மென்மேலும் விரிவடைந்துள்ளது. நான் இந்தக் கரடுமுரடான பாறைகளுடைய உலகாயதக் கரையில் நின்றுகொண்டு, கண்ணுக்கெட்டா உன் சீரான சாந்திக் கரையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். என் உள்ளத்தின் கட்டிடவல்லுனர்கள் உன்மீதான என் இடைவிடா நினைவினைக் கொண்டு, எனக்காக ஒரு பாலத்தைக் கட்டுகிறார்கள். அதனை என் திண்மையான ஒழுக்கக்கட்டுப்பாடு எனும் தாங்கும் தூண்களால் பொருத்தி அமைக்கிறார்கள். உனைப் பற்றிய என் கனாக்கள் ஒன்று திரண்டு மெய்யுணர்விற்கு வானவிற் பாலத்தை உருவாக்குகிறது. அதன்மூலம், உன்னை விரைவில் வந்தடைவேன்.
56. Make me silent, that I may eloquently converse with Thee.
56. என்னை மௌனியாக்கு, அதன்மூலம் உன்னிடம் விஸ்தாரமாக உரையாடுவதற்காக.
நான் காடுகள் பலவற்றில் அலைந்து திரிந்து இடைவிடாமல் வழிதேடி, உன் இருப்பிடத்தின் ரகசிய வாயிலுக்கு வந்துசேர்ந்துள்ளேன். அந்த அமைதியான வாயிற்கதவில் என் விடா நம்பிக்கையினால் பலமாகத் தட்டி ஓசையெழுப்பினேன். வெட்டவெளியின் அக்கதவுகள் திறந்தன. ஆங்கே, உன்னதமான ஒளிரும் தரிசன பீடத்தில், நீ அமர்ந்திருப்பதைக் கண்டேன். நான் அலைபாயும் கண்களுடன் நீ பேசுவாயென எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தேன். உன் ஆக்க-பூர்வ பிரபஞ்ச ஒலி எனக்குக் கேட்கவில்லை. இறுதியில் நிஸ்சல ஸ்திதி என்னைக் கவ்விக் கொண்டு, மெல்லிய ரீங்காரத்தில் தேவதைகளின் பாஷையில் அது எனக்கு போதித்தது. புதிதாகப் பிறந்த சுதந்திரத்தின் குளறுமொழியால் நான் பேச எத்தனித்தேன், உன் கோயிலின் விளக்குகள் திடீரென பேரொளி சிந்தி, ஒளியால் அக்ஷரங்களை எழுதிக் காட்டியது. சிறிய என் நிசப்த அறைக்குள், நான் எப்போதும் அமர்ந்துகொண்டு: நான் வாயெடுத்துப் பேசுவதில்லை ஆனால் மௌனமொழியால் பேசுகின்றேன். என் மௌனத்தின் வழியே என்னிடம் நீ விஸ்தாரமாக உரையாடு.
57. Teach me to use every dig of criticism to bring myself nearer to the Fountain of Goodness in me.
57. என்மீது ஏவப்படும் குற்றச்சாட்டின் ஒவ்வொரு தோண்டலையும், நான் என்னை என்னுள்ளே சுரக்கும் நற்குண ஊற்றினுக்கருகில் கொண்டுசெல்லுமாறு செய்ய எனக்குக் கற்பி.
என்மீது ஏவப்படும் குற்றச்சாட்டின் ஒவ்வொரு தோண்டலையும், நான் என்னை என்னுள்ளே சுரக்கும் நற்குண ஊற்றினுக்கருகில் கொண்டுசெல்லுமாறு செய்ய எனக்குக் கற்பி. வாழ்க்கைச் சோதனைகளால் ஏற்பட்ட ஒவ்வொரு வடுவையும், உன் தர்மமான நியதியின் புனிதக் கரங்களால் எனக்கு வழங்கப்பட்ட தண்டனைப் பரிசுப் பதக்கங்களாக அணிந்துகொள்வேன். பிறரின் செய்கையால் உண்டான வருத்தத்தினால் சிந்தும் என் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் என் மனதில் மறைவாகப் படிந்திருக்கும் மாசினைக் கழுவி நீக்கட்டும். கூரிய அனுபவக் கோடாலியின் ஒவ்வொரு வீச்சும் என் வாழ்க்கை மண்ணை மென்மேலும் ஆழமாகத் தோண்டட்டும். சுகஜீவித மண்ணில் சூழ்நிலையால் தோண்டப்படும் ஒவ்வொரு வடுப்படுத்தும் அடியும், என்னை என்னுள்ளே பொங்கும் உன் சாந்திச் சுரப்பியினருகே கொண்டுசெல்லட்டும். வாழ்வின் ஒவ்வொரு காயமும் உன் அன்பிற்காக உரக்கக் கூவவைக்கட்டும். எல்லாச் சோதனைகளும் கசப்பான அனுபவத்திற்கு மாற்றுமருந்தாய் ஆகி, என் ஆன்மாவிற்குக் குணமுண்டாக்கட்டும். பிறரின் அருவருப்பான கருணையின்மை, நான் லாவண்யமான காருண்யத்தை மேன்மேலும் பொழிய என்னை உத்வேகமூட்டட்டும். குருடாக்கும் இருள், என்னைத் தூண்டிவிட்டு உன் ஒளியை நோக்கி விரைய வைக்கட்டும். கடுஞ்சொற்கள் என்னைத் திட்டித் தாளித்து, எப்பொழுதும் நான் இனிய சொற்களை மட்டுமே உபயோகிக்கச் செய்யட்டும். என்மீது எறியப்பட்ட தீவினைக் கற்களால் ஏற்பட்ட ஒவ்வொரு காயச்சிராய்ப்பும், நல்லவையின்மேல் கொண்ட என் உறுதியையும், நல்லெண்ணத்தையும் தீவிரப்படுத்தட்டும். மல்லிகைப்பூக் கொடிப்பந்தலின் வேரை வெட்டும் கோடாலியின் கைகளை, அது புறக்கணிக்காமல் எப்படி அக்கைகளின்மேல் மலர்ச்சொரியுமோ, அப்படி என்னை வஞ்சனையால் அறுப்பவர்களுக்கு நான் என் மன்னிக்கும் பொறுமையெனும் மலர்ப்பொழிவைத் தவறாமல் வழங்கவும், அவர்களுக்கு உதவவும், நீ எனக்குக் கற்றுக்கொடு.
58. Teach me to fish for Thee in the deep waters of my Soul.
58. என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க எனக்குக் கற்பி.
என் அதீத-உணர்வுக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க நான் இறங்கினேன். உறுதிதரும் உற்சாகமூட்டும் எண்ணங்களாலான சிறுமீன்கள் என் மீன்தூண்டிலை வந்து பதம் பார்த்தன. என் கவனமெனும் மீன்தூண்டில்மிதவை தத்தளித்தது, ஒவ்வொரு முறையும் நான் தூண்டிலை மேலிழுக்க, நான் உன்னை நழுவவிட்டேன். நான் என் தியான-தூண்டிலில் அன்பின் குழம்புப்பொடியை நன்கு தடவினேன்: சிறுமீன்கள் வந்து தூண்டிலை இழுத்தன, நான் என் மன தூண்டில்மிதவையை கவனத்துடன் கண்காணித்தேன். ஆஹா! என் மனத்தின் தூண்டில்மிதவை உன் ஆனந்த-அலைகளுக்கடியில் அழுந்தி மறைந்தது. என் உணர்வுக் கடலில் வாழும் பிரம்மாண்ட குடியாளனே, நான் உன்னைப் பிடித்திழுத்தேன், ஒரே தாவலில் நீ குதித்து என் நெஞ்சகக் கரைக்கு வந்து சேர்ந்தாய். என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க எனக்குக் கற்பி.
59. Make me remember that Virtuous Ways are more charming than vicious ways.
59. நன்னெறிப் பாதை தீயநெறி வழிகளைக் காட்டிலும் சிறந்தது என்பதை மறவாமல் இருக்கச் செய்.
பரம பேருணர்வே, அனைத்து அறநெறி நியதிகளையும் நான் அச்சத்தினாலன்றி அன்பினால் பகுத்து, அறியுமாறு எனக்குக் கற்றுக்கொடு. நன்னெறி முதலில் பழகச் சற்றுக் கடினமாகவும், அதனை அடிபணிந்து நன்கு பழகியபின், அது என்னை புகழுடைய உன் இன்பத்தால் அலங்கரிக்கும் என்பதையும் நினைவுகூரச் செய். தீயவையோ ஒரு துளி சுகத்தை முதலில் அளிப்பதாகத் தோன்றினாலும், அது நிச்சயமாக முடிவில் பெருந்துக்கத்தையே அளிக்கும் என்பதையும் என் நினைவில் நிறுத்து. என் வளர்ச்சிக்கும் நலனுக்காகவும் இயற்றப்பட்டவை நன்னெறிகள். என் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பவை தீய செயல்கள். நான் நன்னெறி நியதிகளை மதித்துப் பழகவும், தீய செயல்களை அடியோடு விலக்கவும் எனக்குக் கற்றுக்கொடு. எல்லாக் காலங்களிலும் நன்னெறி வழிகளே தீயநெறி வழிகளைக் காட்டிலும் சாலச்சிறந்தது என்பதை நான் கண்டுகொள்ள உதவும் பழக்கத்தை என்னுள்ளே பொதித்து விடு. அறம் முதலில் கசந்தாலும், பின்னர் முடிவில் அமிர்தமாய் இனிக்கும்; ஆனால், தீயன முதலில் இனிப்பாக சுவைத்தாலும், எப்போதும் அவை விஷமாகவே கடைசியில் முடியும் என்பதனை நான் என் நினைவிலிருந்து மறவாமலிருக்க நீ உதவு.
60. I will broadcast my Voice with the Chorus of Thy Songs.
60. உன் பாட்டுக்களின் இன்னிசையை என் குரலில் ஒலிபரப்புவேன்.
என் ஆன்ம-ஆன்டெனாவை நுட்பமாகத் தொட்டு மாறுபாடுகள் செய்து, என் உள்ளொலி வானொலியை ஒத்ததிர (tuning) வைத்தேன். முதலில், நான் உன் அருகிலிருந்து வரும் குரல்களைக் கிரகித்தேன் - ஓர் ஆன்ம-இயைபின் பேரின்னிசைக் கச்சேரி, என் பாடும் இதய உணர்வு வாத்தியக்குழுவின் இனிமையான மெல்லிசை, பன்நெடுங்காலமாய் உனக்காக ஏங்கும் என் தாபங்கள் ஒன்றுபட்டு எழுப்பிய கூட்டிசை - இவையாவும் என் ஆன்ம வானொலியில் இசைத்தன. நான் மேலும் என் கிரகிப்பு மாறுபாடுகளைத் தொடர்ந்து செய்து, எல்லா ஜீவாத்மாக்களின் பரதேவதையான உன் குரலைக் கிரகிக்கக் காத்திருந்தேன். வரம்புகாணா பொறுமையுடன் நான் தொடர்ந்து நுட்பமாற்றங்களைச் செய்து கொண்டிருந்தேன்; அப்படியே நான் கண்ணயரப் போகும் வேளையில், உன் கீதம் என் இதயத்தில் துடிப்புடன் ஒலித்தது. உன் கீதங்களின் இன்னிசைத் தொகுப்பை என் வாழ்வின் குரலினால் பாடி அதனை நான் பரவலாக ஒலிபரப்புவேன்.
61. Teach me to store honey of quality from all soul-flowers in the honeycomb of my heart.
61. மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து, என் இதயத் தேன்கூட்டில் சேகரிக்க எனக்குக் கற்பி.
வாழ்வின் வளமான கோடைக்காலத்தில், மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து சேகரிக்க எனக்குக் கற்பி. சுகந்தமான மன்னிக்கும் குணம், நறுமணங்கமழ் பக்தி, தாமரை-இதய மலர்களின் அரிய சாரம் போன்றவைகளைக் கொண்ட பல லட்சக்கணக்கான ஆன்ம மலர்களிலிருந்து எடுத்த மணமான தேனை என் இதயத் தேன்கூட்டில் நான் சேகரிப்பேன். வாழ்வின் மங்கிய குளிர்காலப் பனிபெய்யும் பாகத்தில், என் பூலோகவாசம் முடியும் தருணத்தில், சேகரித்துவைத்த என் பக்தித்தேனை நீ அடிக்கடி வந்து புகுந்து திருடிச் செல்லும் அந்த என் இதயத் தேன்கூட்டினுக்குள், நான் புகுந்து மறைந்து கொள்வேன். நீ எங்கு வந்துள்ளாயோ - எந்த இடத்தில் உன் காலடிமண் பட்டுப் புனிதமடைந்ததோ - அந்தவிடத்தில் நான் படுத்துக்கிடப்பேன். உன் காலடிச்சுவடுகளின் ஆழத்தில் என் பாதுகாப்பான உறைவிடத்தைக் கண்டு கொள்வேனாக.
62. Teach me to give Sweet Forgiveness, though crushed by Criticism.
62. குற்றச்சாட்டுகளினால் நசுக்கப்படினும், இனிமையான மன்னிக்கும் பொறுமையைக் காட்ட எனக்குக் கற்றுக்கொடு.
சாத்துக்குடிப் பழம் நசுக்கப்படினும் அல்லது கடிக்கப்படினும் எப்படி தனது இனிய சாற்றை வழங்கத் தவறுவதில்லையோ, அப்படி நானும் ஒழுக எனக்குக் கற்பி. கருணையின்மையால் துன்புறுத்தப்படினும், கடுமையாக குற்றம்சாட்டப்படினும், கொடியவார்த்தைகளாலும் குரூர செயல்களாலும் அறுபட்டு புண்படினும், என் இனிமை தோய்ந்த அன்பினை இடைவிடாமல் வார்க்க எனக்குக் கற்பி. சோப்புச் சீவல்களைப் (soap-flakes) போல் நானும் ஆக எனக்குக் கற்பி. அவை நன்கு துவைபட்டு அடிபடினும், அவற்றின் தூய்மைப்படுத்தும் நுரைக்குமிழ்களைத் தருகின்றது. நன்றித் துரோகத்தினால் நான் சோதனைக்குட்பட்டு வெகுவாக அடிபடினும், என் ஞானத்தின் உதவிகொண்டு தூயவெண்ணிற மனப்பாங்கு நுரைக்குமிழ்களை அதற்கு மாறாக நான் வழங்க எனக்குக் கற்றுக்கொடு.
63. Spiritualize our Thoughts and Ambitions.
63. எங்கள் எண்ணங்களையும், லட்சியங்களையும் புனிதமாக்கு.
வரம்பற்ற ஆற்றலுடைய ரஸவாதி, எங்கள் பலஹீனத்தை பலமாகவும், தவறான எண்ணங்களை, நல்லெண்ணங்களாகவும் புனிதமாக்கு. ஒவ்வொரு காரியத்தின் விதைகளிலும் உன் புரிதலெனும் பூவை மலரச்செய். உன் தீர்க்கதரிசனமெனும் தந்திர மாயக்கோலினால், எங்கள் அருவருப்பான சுயநலப்பேய் குறிக்கோள்களை அனைவற்றிற்கும் சேவைபுரியும், மேன்மையான லட்சிய தேவதைகளாக உருமாற்று. ஒவ்வொரு ஆசைக்குதிரைகளையும் உன் இருப்பிடத்தை நோக்கி வேகமாக ஓடுமாறு பழக்கு. எங்கள் இருண்ட மருளை பொன்னார்ந்த ஞானமாக மாற்று. எங்கள் குறைபாடுகளெனும் ஜட மூலதாதுக்களை, புனிதமான சொக்கத்தங்கத்தால் ஆன திரவநதியாக உருமாற்றி, அதனை உன் கரையை நோக்கித் தொடர்ந்து பாயுமாறு செய்.
64. Teach us not to follow the Will-o'-the-Wisp of False Happiness.
64. "சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp) போன்ற போலி சுகத்தை நாங்கள் நாடாமல் இருக்க எங்களுக்கு கற்பி.
கண்மறைக்கும் தவறுகளின் இரவினில், நாங்கள் சதக்க-வெளிச்சம் போன்ற போலி சுகத்தை நாடிச் சென்றோம். இருளுக்கு மேல் இருள் கவ்வியது. முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருந்த எங்கள் கால்கள் சறுக்கி பாசம் மண்டிய மோகக்குழப்ப சதுப்புநிலக் கழியில் நாங்கள் வீழ்ந்தோம். இந்த மயக்கும் புகைமூட்டத்தினால் ஏற்படும் ஆசைக்கனல், பலபேரை அழிவிற்கு இழுத்துச் செல்கிறது. பல்லாயிரக் கணக்கானோர் திகட்டும் புலனின்ப சதக்கலில் மூழ்குகின்றனர். கைகொடுக்கும் தெய்வமே, உன் வீடுநோக்கிப் பயணிக்கும் உன் ரத்தபந்தங்களை தடுமாற்றி நாசமேற்படுத்தும் இந்தப் பொய்யான பந்தவிளக்கை ஊதி அணை. அதற்கு மாறாக, உன் புனித ஒளிவிளக்கை ஏற்று; அதன் துணையால், ஆவலுடன் விரையும் உன் குழந்தைப் பயணிகள் பாதுகாப்பாக உன் வீட்டை வந்தடைவார்கள். ---"சதுப்பு-ஜொலிப்பு" (Will-o'-the-Wisp): இரவு வேளைகளில் சதுப்புநில சகதிப் புதர்களிலிருந்து பாக்டீரிய கிருமிகள் மட்கும் செயல்களால் ஒரு வகை வெளிச்சம் தோன்றும். இந்த இரவுநேர வெளிச்சம் பகல்வேளைக் கானல்நீரைப் போன்றது.
65. May the showers of Thy love flood through the walls of Color, Class, and Race-Prejudice.
65. நிற, ஜாதி, இன வேற்றுமைச் சுவர்களை உடைக்கும் வெள்ளமாய் உன் அன்பு மழையைப் பொழி.
என் மனசாம்ராஜ்யம் குழப்பக் குப்பையால் மண்டிக் கிடக்கிறது. என் ஆன்ம அலட்சியத்தால் உருவாக்கப்பட்ட நகரத்தில் உன் சக்தி மழையைப் பொழி. என்னுள்ளே இருக்கும் கொடூரமான ஆன்ம அறியாமையை முற்றிலும் அகற்ற, உன் கருணை நீரோட்டத்தை வெள்ளமாக அனுப்பு. உன் அன்பின் பெருமழை வெள்ளம் நிற, ஜாதி, இன வேற்றுமைத் தடைகளை அடித்துத் தள்ளட்டும். அழுக்கடைந்த, சீர்மையில்லா என் எண்ணக்குழந்தைகளை உன் ஞானப் பொழிவினால் குளிப்பாட்டு. என் கரடுமுரடான இருண்ட வாழ்க்கைப் பாதையில், உன் அன்பு ரோஜா மலர்களினால் தூவப்பட்ட கம்பளத்தை விரி. உன் சுகந்த மணத்தை நுகர்ந்துகொண்டு, மிருதுவான மலர்ப்பாதையில் நடைபோட்டு, விரைவில் உன் ரோஜா அரண்மனைக்கு வந்துசேர்வேன்.
66. Burn Thou with frailties in the furnace of trials.
66. என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி.
என் வாழ்க்கையின் மூலத்தாதுக்கள் சோதனை உலையில் இடப்பட்டு உஷ்ணத்தால் கொதிக்கின்றன. அனுபவித்தீ என்னுள் உள்ள எல்லாவற்றையும் உருக்குகிறது. ஆனால், தெய்வ சிற்பியே, என்னுள் படிந்து கிடக்கும் கோழைத்தன மாசுக்களைப் பொசுக்கி அகற்றிவிடு; எதையும் தாங்கும் இரும்பினை வெளிக்கொணர்;ஆற்றல் பொதிந்த அமைதியால் அதனைக் கடினமாக்கு. என் மனச்சமநிலையால் வலுவடைந்த கூரிய, திண்மையான ஒழுக்கத்தினால் ஆன ஆயுதங்களை உருவாக்கு; அந்த சமான மனநிலை எனும் ஆயுதங்களால் எண்ணச்சிதறல்கள் எனும் எதிரிகளை வெல்ல எனக்குக் கற்பி. மனச்சமச்சீர் பெற்ற ஆயுதங்களைத் தரித்து கவனத்தைச் சிதறடிக்கும் பகைவர்களை போரிட்டு வெல்ல எனக்குக் கற்றுக் கொடு.
67. The Caravan of my Prayers is moving toward Thee.
67. என் வழிபாட்டு ஊர்தி உன்னை நோக்கி நகர்கிறது.
என் வழிபாட்டு ஊர்தி உனை நோக்கி நகர்கிறது. தயை பொழியும் எல்லா மனிதர்களின் விழிகளிலும், உன் கருணையொளி சிந்துவதைக் காண்கிறேன். இருண்ட ஜீவித மரங்களில், உன் பிரகாசம் மின்மினிப்பூச்சியாய் அவ்வப்போது மின்னுகிறது. மனக்கலக்கமெனும் கடூரமான புழுதிப்புயலினூடே சிக்கி என் வழிபாட்டு ஊர்தி மெதுவாய் முன்னோக்கி ஊர்கிறது. மிக்க சிரமத்திற்குப் பின், கடைசியாக உன் அமைதியான உறுதிமொழிப் பாலைவனச்சோலையின் அறிகுறி தென்படுகிறது. அது என் தளர்ந்த முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கிறது. உன் ஆனந்தச்சுனையில் என் வறண்ட நம்பிக்கை உதடுகளை அமிழ்த்தி அதிலூறும் ஆரா அமுதை அகங்குளிரச் சுவைத்துப் பருகுவேன்.
68. Save us from the bait of Modern Comforts.
68. எங்களை நவீன சொகுசுத் தூண்டில்களிலிருந்து காப்பாற்று.
நாங்கள் அமைதியான கடலில் சுகமாய் நீந்திக் கொண்டிருந்தோம்; பின்பு புகழ், நட்பு, பிரபலமெனும் தூண்டில்-புழுக்கள் எங்களைக் கவர்ந்தன. எங்களில் சில அத்தூண்டில் புழுக்களைத் தொட்டுப் பதம் பார்த்தன; வேறுசில அவற்றைக் கண்டவுடன் ஓடிப் பறந்தன. அய்யகோ, ஆனால் சில உலகக்கவர்ச்சி தூண்டில்-புழுக்களை, மயக்கும் புலனின்ப வலை-மாகுக்களை (sinker) விழுங்கிவிட்டன; மாட்டிக்கொண்ட அவைகள் மிகுதியால் தெவிட்டும் கரைக்கு இழுத்துச் செல்லப்பட்டன. வலியின் துக்கம் தாங்கமுடியாமல் அவை துடித்து, உதாசீனத்தின் இறுக்கத்தால் நெருக்கப்பட்டு இறுதியில் மூச்சுமுட்டி மடிந்தன. ஏ காலமெனும் தெய்வ ஆசிரியனே, எங்களை திளைத்து மயக்கும் புலனனுபவ தூண்டில்களை நாங்கள் தொடமாலிருக்க எங்களைப் பழக்கு.
69. May I reap the greatest Harvest in the short season of Earthly Life.
69. நான் என் குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில் மிகுந்த அறுவடை செய்ய அருள்புரி.
எனக்கு வழங்கப்பட்ட உணர்வுதள நிலம் சிறியது. அதில் வாழ்வை-வளமாக்கும் பயிர்களை இடாமல் அதனை தரிசாகவே போட்டு வைத்திருந்தேன். இப்போது, வாய்ப்புகளைக் கொல்லும் கடுங்குளிர்காலம் முடக்கும் மூடுபனியுடன் நெருங்குகிறது. என் பூமி சிறியது; என் பருவக்காலமும் சிறியது. இருப்பினும் நான் மகத்தான அறுவடையை விரும்பி எதிர்பார்க்கிறேன். ஆதலால், எனக்குள்ளே உள்ள ராஜ்யங்களை போரிட்டு வாகைசூடி, பல தேசங்களை ஆக்கிரமித்து விட்டேன். இப்போது, என் உணர்வுதள எல்லைப்பரப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது. ஆனால், என் தெய்வத்தந்தையே, எனக்குள் பல்கோடி எண்ண-குடும்பங்கள் பசியுடன், அவைகளுடைய குழந்தைகளுக்கு ஊட்டவேண்டி காத்துக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்த சிறுபருவப் புவிவாழ்வில் எனக்கு உனது மௌனபோதனை எனும் அறுவடை பெருத்த அளவு தேவையாயிருப்பதை நீ நன்கு அறிய வேண்டும். ஏக்கமெனும் நீர்ப்பாய்ச்சல் பன்முறை என் நிலத்தில் விழுந்துள்ளது; ஆயினும் அதன் விளைமண் உழக்கப் படாமலேயே இருந்தது. இப்பொழுது, இடைவிடாமல், விஞ்ஞானமுறையில் தொடர்ந்து தேடும் எந்திர ஏர்க்கருவியை உபயோகிக்கின்றேன். ஏ விதை விதைக்கும் தெய்வமே, உன் புலனாகா கரங்களினால், நன்கு உழக்கப்பட்ட என் பண்பட்ட மனத்தினில் உன் உயிர்பொதிந்த விதைகளைத் தூவு! இந்த குறுகிய புவிவாழ்க்கைப் பருவத்தில், நான் உன் பிரபஞ்ச உணர்வுடன் ஒன்றுவதனால் விளையும் மாபெரும் விளைச்சலை அறுவடை செய்ய விருப்பம் பூணுகிறேன்.
70. Make me the Eagle of Progress.
70. என்னை முன்னேற்றத்தின் கருடனாக ஆக்கு.
குறுகிய மனப்பான்மை மற்றும் பிடிவாதங்களாலான சிறு சந்துகளில் அகப்படாமல், அவைகளுக்கு வெகு மேலாகப் பறக்கும் முன்னேற்றத்தின் கருடனாக என்னை ஆக்கு. மேன்மேலும் மேன்மையடைவதற்கு என்னைக் கூவியழை, நான் பூலோக அதிர்வலை மூட்டங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பறந்து செல்வேன். என் ஆன்மாவின் கூர்மையான கவ்வு நகங்களால், மனிதர்களைப் பதம்பார்க்கும் சோகப்பறவைகள் எல்லாவற்றையும் பிடித்துக் கிழித்தெறிவேன். மனித மன-வானில் சாந்தப் புறாக்களைத் தாக்கும் ஆன்ம-அறியாமைக் கழுகுகள் அனைத்தையும் அதிலிருந்து விரட்டி வெளியேற்றுவேன். உன் பார்வைபடும் நுண்ணிய பிரதேசங்களில், தர்ம-வாழ்வெனும் நடுநிலை மேவிய சிறகுகளையடித்துப் பறந்து செல்ல விரும்புகிறேன். சோக-அதிர்வுகளாலான சுழல்-சூறாவளிகளுக்கு மேல், நான் வெகு உயரமாகப் பறந்து, நீ உறைகின்ற கற்பனைக்கு எட்டாத உயரங்களுக்கு மேலெழும்ப விரும்புகிறேன். என்னை உனது பணிபுரியும் முன்னேற்றத்தின் கருடனாக ஆக்கு.
71. Flood me with Thine Omnipresent Love.
71. என்னை உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை.
அன்பின் பேரூற்றே, எங்கள் இதயங்களையும், எங்களை நேசிப்பவர்களின் மேல் செலுத்தும் அன்பினையும், உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை. எங்கள் ஆசைகளெனும் நதிகளின் பெருந்தோற்றுவாயே, தாற்காலிகமான புலன்-சுகங்களெனும் மணல்களில் அங்குமிங்குமாய் ஓடி எங்கள் ஆசை-நதிகளை வற்றிப் போகாமல் இருக்குமாறு எங்களுக்குக் கற்பி. எங்கள் ஏக்க நதிகளைப் பணிவு, சுயநல-தியாகம், மற்றும் பிறர்மேல் அக்கறை எனும் தாழ்வான நிலங்கள் வழியாகப் பாய்ந்து செலுத்துமாறு உன்னை உரிமையுடன் வேண்டுகின்றோம்; அன்பின் பேரூற்றே, உன்னால் எங்கள் நீரோட்டம் மேலும் உறுதியடைந்து, இறுதியில், நிறைவெனும் கடலான உன்னில் சங்கமிக்குமாறு செய்ய உன்னை உரிமையுடன் வேண்டுகின்றோம். எங்கள் கருணை, பாசம், அன்பெனும் நீரோடைகள் யாவும் அலைக்கழிக்கும் சுயநலத்தின் வறண்டபூமியில் ஓடி வற்றாமலிருக்க எங்களுக்கு அருள்புரி. உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பு நதிகள் மெல்லியதாக, தனிமையில், பிரிந்து-ஓடியவையாவும், இறுதியில் உன் மகத்தான சாந்நித்தியத்தில் வந்து லயிக்கட்டும்.
72. O Divine Sculptor, chisel my life.
72. இறைச்சிற்பியே, என் வாழ்வினைச் செதுக்கு!
நான் செய்யும் ஒவ்வொரு சப்தமும், உன் குரலின் அதிர்வலைகளுடன் வெளிப்படட்டும். நான் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், உன் சாந்நித்தியத்தின் உணர்வால் நிரம்பட்டும். நான் உணரும் ஒவ்வொரு உணர்வும், உன் அன்பினால் ஒளிவீசட்டும். என் இச்சாசக்தியினால் செய்யும் ஒவ்வொரு செயலும், உன் தெய்வீக உயிர்ச்சக்தியினால் உள்ளார்ந்து பொதியட்டும். என் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வெளிப்பாடும், ஒவ்வொரு லட்சியமும் உன்னால் அலங்கரிக்கப்படட்டும். இறைச்சிற்பியே, என் வாழ்வினை உன் இஷ்டம்போல் செதுக்கு!
73. Keep the needle of my attention ever pointing toward Thee.
73. என் கவனத் திசைமுள்ளை எப்போதும் உன்னையே நோக்கித் திருப்பு.
இரும்புப்பறவைகளுடன் ஆகாயத்தில் பறந்தாலும், இயந்திரக் குதிரைகளால் இழுக்கப்படும் ரதங்களால் சுற்றிவந்தாலும், ரப்பர் சக்கரங்களால் உருண்டோடினாலும், உள்ளத்தைப் பிளப்பதான சத்தங்கள் செய்பனவற்றின் தாயகமான ஒன்றில் பயணித்தாலும், என் கவனத் திசைமுள், உன்னால் காந்தமயமாக்கப்பட்டு, எப்போதும் தவறாமல் உன்னையே நோக்கி திரும்பும். துரதிருஷ்டமெனும் காற்றினால் அடித்து வீசப்பட்டாலும், துன்பமெனும் மழையினால் நனைத்து முழுக்காட்டப்பட்டாலும், சிக்கவைக்கும் செயல்களெனும் சேற்றில் உழன்றாலும், என் வாழ்க்கைப் பயணம் இருள்-மண்டிய பாதைகளில் அங்குமிங்குமென அலைக்கழிக்கப்பட்டாலும், என் மனம் எப்போதும் உன்னையே நோக்கித் திரும்பிக் கொண்டேயிருக்கும். என் மனப்படகு, ஆசைகளின் சூறாவளியினால் முடுக்கமடைந்து, திருப்தியடையாத அவாவெனும் கற்பாறைகள் மிகுந்த பகுதிக்கு நகர்ந்து சென்று கொண்டிருந்தது. எங்கள் ஞானவானில் பிரகாசிக்கும் துருவ நட்சத்திரமே, உன் ஜோதியின் மின்னும் ஒளி என்னை பூரணதிருப்தியெனும் உன் நிரந்தரமான கரைக்கு திருப்பி அழைத்து வந்தது. என் அன்பின் புறாவானது, விதியின் சுழல்காற்றில் மாட்டிக் கொண்டு தத்தளித்தாலும், விக்னங்களின் பீரங்கிக் குண்டுகள் சுற்றி வீசப்படும் வழியே சென்றாலும், அல்லது அச்சமுறுத்தும் மோகங்களின் அடர்ந்த புகைமண்டலங்கள் வழியே பறந்து சென்றாலும், அது எப்போதும் உன்னையே நோக்கி கவரப்பட வேண்டும்.
74. Be Thou my General in my invasion of Ignorance.
74. ஆன்ம-அறியாமையை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்குச் சேனாதிபதியாகத் தலைமைவகி!
உன் நாமத்திற்காக நான் ரத்தம் சிந்தியுள்ளேன், உன் நாமத்தின் பொருட்டு நான் எப்போதும் ரத்தம் சிந்த தயாராகவுள்ளேன். அங்கங்கள் சிதிலமாக்கப்பட்டு, பழுதடைந்த உடலுடன், தன்மானம் அவமதிக்கப்பட்டு, அவதூறெனும் முட்கீரிடத்தைத் தலையில் சுமந்தும் - நான் ஒரு பெரும் போர்வீரனைப் போல, எவ்வளவு திடமான சோதனைகள் வந்து என்னை வாட்டினாலும், தளர்ந்து பின்வாங்காமல் போரிடுவேன். என்னை ஏளனப்படுத்திக் கொடுமைப்படுத்த வரும் சிப்பாய்களை, சாந்தமெனும் வாளால் நான் தண்டிப்பேன். உன் கட்டுப்பாட்டுடன் கூடிய அன்பின் என் படைகள், உன் நாமத்தை போர்க்கொம்பினால் முழக்கிக் கொண்டே, இருண்ட உள்ளங்களின் ராஜ்ஜியத்தை வென்று ஆக்கிரமிக்க வீறுநடையுடன் அணிவகுக்கின்றன. உதவ உயர்த்திய என் கரங்கள் அடிவாங்கலாம், அன்பிற்குப் பதிலாய் ஏளன தண்டனையின் காயங்களைப் பெறலாம், ஆனால் உன் நாமத்தின் புகழ்பரப்பத் துடிக்கும் உன் போர்வீரனின் ஏக்கத்தை நீ அறிவாய் என்பதை உணரும்போது நான் திருப்தியடைகின்றேன். நான் எனக்கு வரும் சோதனைகளை, வடுக்களாக அன்றி, வீரத்தினாலும், ஊக்கத்தினாலுமான ரோஜாமலர்களாய் அணிந்து, உன் பொன்மய ஜோதியின் எண்ணத்தின் துணைகொண்டு, ஆன்ம-அறியாமையின் இருளை வெல்ல அதனுடன் போரிடுவேன். என்னவனே! ஆன்ம-அறியாமையின் படைகளை ஆக்கிரமிக்கும் என் போரில் நீ எனக்கு சேனாதிபதியாக தலைமைவகி!
75. Make me see that I am just acting in Thy super-sense vitaphone cosmic pictures.
75. நான் உன் அதீத-உணர்வின் பிராணசக்திப் பிரபஞ்சத்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை நான் அறியுமாறு செய்.
பிடிபடாத இந்த உலக ஒலி-ஒளிக் காட்சிகளைக் காண்கையில், தினமும் மாறிக்கொண்டே சுற்றிச்சுழன்று விறுவிறுப்பாக நடம்புரியும் ஜீவராசிகளின் வாழ்க்கை நாடகம், ஒரு மகத்தான கனவுத் திரைப்படக்காட்சியைத் தவிர வேறெதுவுமில்லை என்ற எண்ணம் ஏற்படுவது உறுதி. உலகில் காணும் சோகங்கள், நகைப்புகள், வாழ்வின் முரண்பாடுகள், பிறப்பு-இறப்பெனும் கனவுகள், மாறிக்கொண்டே இருப்பவைகளின் தகவல் துணுக்குகள் என இவையாவும் நம் எல்லாப் புலன்களையும், எண்ணங்களையும் மோகப்படுத்துவதற்கும், பொழுது போக்குவதற்குமான பேசும்படங்களைத் தவிர வேறெதுவுமில்லை. பேரியக்குனரான இறைவனே, எங்களை மகிழ்விக்கவும், பொழுதுபோக்கிற்காகவும், உன் பிரபஞ்ச-அதிர்வலைகளைக் கொண்டு, எல்லாப் புலன்களினால் வழியேயும் அறியுமாறு, பேசும் பிரபஞ்சத் திரைப்படங்களைப் புதுப்புதிதாக, முடிவில்லாமல் தொடர்ந்து அனுதினமும் காட்டிக்கொண்டே இருக்கின்றாய். மாய இயக்குனரே, உன் பிரபஞ்சப்படங்களை நாங்கள் பார்க்கவும், கேட்கவும் முடிவதோடு மட்டுமின்றி அவைகளைத் தொட்டு உணரவும் முடிகின்றன. உன்னுடைய கட்புலனாகின்ற, தொட்டுணரப்படுகின்ற, இரைச்சலிடுகின்ற, போலியாக வாழும் சப்த-நிழல்கள் தினசரி எங்கள் உணர்வுத்தளத் திரையில் காண்பிக்கப்படுகின்றன. உன் அருட்கொடையால், நான் உன் சினிமா கொட்டகையில் துயரமும், நகைச்சுவையும் இரண்டும் கலந்த பகுதிகளை நடிக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன். என் சோகமான பகுதிகளையும், மகிழ்வான பகுதிகளையும் நான் முறையாக நடிப்பதே நன்று. ஆனால், இறைத்தந்தையே, எனக்கு அவ்வப்போது என் வேலைகளிலிருந்து சில நாட்கள் ஓய்வு கொடு. அதன்மூலம், நான் என் அகவிசாரணையின் மேல்மாடத்திற்குச் சென்று, என் எண்ண-அவையோர்களுடன் கூடி, புன்னகைக்கும் இதயத்தினால் என்னுடைய சுய துயரக்காட்சிகளையும், நகைச்சுவைக்காட்சிகளையும் காண்பிக்கப்படுவதைக் கண்டுகளிக்க முடியும். என்னுடைய சொந்த வாழ்வின் துயரக்காட்சிகளை ஒரு விறுவிறுப்பான ஆர்வத்துடன் பார்க்க எனக்குக் கற்பி. அதன்மூலம், ஒவ்வொரு பெருந் துயரமான படத்தைப் பார்த்து முடித்ததும், "ஆ! அது விறுவிறுப்பும் ஜீவக்களையும் நிறைந்த ஒரு சிறந்த படம். அப்படத்தைப் பார்த்ததில் எனக்குத் திருப்தி, ஏனெனில், நான் அதிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்!" என நான் வியந்துரைப்பேன்.
76. Teach me to abhor flies of sarcasm, which sit on the wounds of others.
76. மற்றவர்களின் காயத்தினில் மொய்க்கும் வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி.
அமைதித் தேனீ என் இதயச் சோலைக்கு வழிநாடி வந்து சேர்ந்துள்ளது, அங்கே சரசரக்கும் எண்ண மரங்கள் தங்கள் மெல்லிய கிளைக் கைகளினால், விவேகமுடைய அல்லிமலர்கள், வேண்டிப் பிரார்த்திக்கும் குவளைமலர்கள், ஆன்மக் கதிர்வீசும் சாமந்திப்பூக்கள், அன்பினை அர்ப்பிக்கும் ஊதாப்பூக்கள் போன்றவைகளால் ஆன சுகந்தமான பூங்கொத்தினை நீட்டுகின்றன. அங்கு, பல மலர்களினாலான என் இதயத் தோட்டத்திற்குள், என் அன்பின் இனிமையான மணம்வீசும் தென்றலினால் வருடப்பட்டு, பூக்கும் நற்குணங்கள் தங்கள் அகத்தே உன் இனிமையின் ஈரத்தைக் கொண்டுள்ள அவ்விடத்திலே, என் துறுதுறுப்பான மனத்தேனீ உன் தேனினிமைப் பொக்கிஷத்தில் தாவிக் குதித்துத் தடுமாறித் திளைக்கின்றது. மற்றவர்களின் காயத்தினில் விரும்பி மொய்க்கும், மொய்த்து அவர்களின் வலியை அதிகமாக்கும், வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி. மற்றவர்களின் இதயக்கூட்டிலிருந்து சொட்டும் நற்குணத் தேனைக் கவரும் உன் உற்சாகத்துடிப்புள்ள தேனீயாக நான் ஆவேனாக.
77. Demand for seeing One Fire beneath all soul-flames.
77. எல்லா ஆன்ம-சுடர்களுக்கும் அடியில் ஒளிரும் ஒரு பெருஞ்ஜோதியைப் பார்க்க உதவ உரிமையுடன் வேண்டுதல்.
நித்திய பெருஞ்ஜோதியே, பிரபஞ்ச உணர்வெனும் பலதுளைகள் பதித்த பெரும் எரிவாயு-அடுப்பு வட்டிலுள்ள (gas-stove burner), ஒவ்வொரு மனித பிரக்ஞைகளாம் துவாரம் வழியாகவும் நீ சிறிய ஆன்ம-சுடர்களாக ஜ்வாலையுடன் கனல்வீசுகின்றாய். நீ ஜீவராசித் துவாரங்கள் மூலம் அவைகளின் ஆன்மாவாக ஜ்வாலையுடன் கனல்வீசும்போது, பலவாகவும், குறுகியனவாகவும், சிறியனவாகவும், பகுபட்டதாகவும் வெளிப்படுகின்றாய். ஆனால் நீ எல்லா மனிதமனத் துவாரங்களுக்கடியிலும் ஒளிருமோர் என்றும் அணையாப் பரஞ்ஜோதி.
78. Demand for prosperity.
78. பொருட்செல்வத்திற்காக உரிமையுடன் வேண்டுதல்.
நீ என் தந்தை, நான் உன் குழந்தை. நீ பேருணர்வு, நான் உன் பிரதிபிம்பம். நீ அகிலப் பிரபஞ்சத்திற்கும் தந்தை, அதன் பூரண உரிமையாளன். நான் நல்லவனோ அல்லவோ, ஆயினும் நான் உன் குழந்தை, ஆதலால், பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களையும் பெறுவதற்கு எனக்கு உரிமை உள்ளது; ஆனால், நான் பொறுப்பற்று ஊதாரியாய் உன் பிரபஞ்ச செழுமையெனும் வீட்டை விட்டு வெளியே சென்று சுற்றிக் கொண்டுள்ளேன். முதலில், என் உணர்வினை உன் பேருணர்வுடன் ஐக்கியப்படுத்த நான் கற்க நீ உதவு. என் பயணக்கப்பல் உடலெனும் சின்னஞ்சிறு தீவினில் இடித்து அதனில் அகப்பட்டுக் கொண்ட என் உணர்வினை மீளச்செய். என் உணர்வினை விரிவுபடுத்தி, அது உன் பிரதிபிம்பமாக உள்ளதை நான் மீண்டும் உணரச்செய். உன் அருளால், என்று, உன்னைப் போலவே, நானும் எல்லா இடங்களிலும் மேவியிருப்பதாக உணர்வேனோ, அன்று நீ அனைத்தையும் உடையவராக இருப்பது போல், நானும் எல்லாப் பொருள்களையும் ஆளும் உரிமை கொள்வேன்.
79. Teach me to feel that all men are my brothers.
79. எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி.
எங்கள் அனைவருக்கும் தந்தையான ஒரே இறைவனே, எல்லா மனிதர்களும் என் உடன்பிறந்தவர்கள் என்று உணரக் கற்பி. உன் கருணையால் எனக்குத் தாற்காலிமாக இருப்பிடமாக அமைந்துள்ள நாட்டை எப்படி நான் நேசிக்கின்றோனோ, அப்படி என் எல்லா சகோதர-நாடுகளையும் நேசிக்க எனக்குக் கற்பி. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை நேசிக்காதவர்களையும் நான் நேசிக்க எனக்குக் கற்பி. தவறிழைக்கும் என் உடன்பிறந்தவர்களிலும் உன் சாந்நித்யத்தைப் பார்க்க எனக்குக் கற்பி. அறியாமை-தீண்டிய என் உடன்பிறந்தவர்களை, நான் எப்படி முனைப்புடன் என்னைக் குணப்படுத்த முயற்சிப்பேனோ அப்படி அவர்களையும் குணப்படுத்த எனக்குக் கற்பி. தெய்வத்தாயே, முரட்டுத்தனத்தினின்று மெலிந்தோரைக் காக்கும் பொருட்டு, தவறிழைக்கும் உடன்பிறந்தவர்களைத் தவிர்க்கமுடியாத பட்சத்தில் தனிமைப்படுத்தும்போதோ தண்டிக்கும்போதோ, நான் களிப்புறாமல் இருக்க எனக்குக் கற்பி. வழிதவறியவர்களை உன் கருணையினாலும், என் முன்னுதாரணமான நடத்தையினாலும் குணப்படுத்த எனக்குக் கற்பி. மரணமே சம்பவிக்குமாறு என்னை அடித்துக் காயப்படுத்துபவனும் உன் பிரதிபிம்பத்தில் உள்ள என் சகோதரனே என்றுணர எனக்குக் கற்பி; ஏனெனில் அவன் அறியாமை தற்காலிமாகமானதே. என்னுள் பழிக்குப்பழி வாங்கும் வஞ்சகுணத்தை அறவே ஒழிப்பாயாக. என் குற்றவாளிச் சகோதரர்களைத் தண்டனையின்றி குணப்படுத்த எனக்குக் கற்பி. அவர்களின் அறியாமையை என் தவறான வழிகளினாலோ, பழிவாங்கும் எண்ணத்தினாலோ அதிகப்படுத்தாமல் இருக்க எனக்குக் கற்பி. மாறாக, என் மன்னிக்கும் குணத்தினாலும், ஒழுக்க நெறியினாலும், நெஞ்சுறுதியினாலும், ஞானத்தினாலும், மேன்மையான முன்னுதாரணத்தினாலும், பிரார்த்தனையினாலும் மற்றும் உன் அன்பினாலும் அவர்களை மேம்படுத்த எனக்குக் கற்பி.
80. Demand to be freed from self-created evil habits and temptations.
80. சுயமாக உருவாக்கிய தீய பழக்கங்களிலிருந்தும், இச்சைகளிலிருந்தும் விடுவிக்கப்பட உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, ஆன்மாவின் நிரந்தர சுகத்திற்கும், தொடுவுணர்வு, சுவைத்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல் ஆகிய புலன்களின் அநித்திய இன்பத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைப் பகுத்து அறிய எனக்குக்கற்பி. என் இச்சா சக்தியை வலிமைப்படுத்து; தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க எனக்குக்கற்பி; நல்லோர் நட்பினாலும் தியானத்தினாலும் அமைந்த நற்பழக்கங்களின் வழிநடக்க எனக்குக்கற்பி; அனைத்திற்கும் உச்சமாக, ஞானத்தின் வழிகாட்டுதலின்படி நடக்க எனக்குக்கற்பி; விவேகத்துடன் கூடிய சரியான நிர்ணயத்தினால், என்னைத் தீவினைகளிலிருந்து விலகியிருக்க எனக்குக்கற்பி; இறுகிப்போன கெட்ட பழக்கங்களினால் பலவந்தப்படுத்தப்படாமல், என் சுதந்திரமான இச்சாசக்தியினால் வழிகாட்டப்பட்டு நல்லவற்றை விரும்பி மேற்கொள்ளுமாறு எனக்குக்கற்பி.
81. Demand for balance.
81. சமநிலை எய்த உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, ஆழ்ந்த கவனக்குவிப்புடன் பிரார்த்திக்குமாறு பிரார்த்திக்க எனக்குக் கற்றுக்கொடு. பேருணர்வே, என் தியானத்தை பக்தியால் சமனப்படுத்து, என் பக்தியை உன்மேல் கொண்ட முழு-சரணாகத அன்பினால் தூய்மைப்படுத்து.
82. Demand for fervor in Divine Love.
82. தெய்வீகக் காதலின் தீவிரத்தை உரிமையுடன் வேண்டுதல்.
பேருணர்வே, ஒரு லோபி எப்படிப் பணத்தை முழுமனத்துடன் விரும்புவானோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. ஒரு குடிகாரன் எப்படி மதுவிற்கு அடிமைப்பட்டுப் பிணைந்திருப்பானோ, அப்படி என்னை உன்னிடம் பிணைந்திருக்குமாறு செய். தவறிழைப்பவர்கள் எப்படி அவர்களின் கெட்ட பழக்கங்களினை விடாமல் இறுக்கப் பிடித்துக்கொள்வார்களோ, அப்படி நான் உன்னை விடாப்பிடியால் பிடித்துக் கொள்ள எனக்குக்கற்பி. ஒரு தாய் தனது மகவிடம் எப்படி கவனத்தைப் பிசகாமல் வைத்துக்கொண்டிருப்பாளோ, அப்படி நான் உன்மேல் கவனம் வைக்க எனக்குக்கற்பி. உன்னிடமிருந்து நழுவாமல் ஆணியடித்தாற்போல் என் கவனத்தை வைத்துக்கொண்டு, என் கடமைகளை முனைப்புடன் சிரத்தையாக நிறைவேற்ற எனக்குக்கற்பி. ஒரு லோகாயத மனிதன் எப்படி பொருட்களை விரும்பி நாடுவதில் மும்முரமாக இருப்பானோ அப்படி உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. உண்மையான காதலர்களின் முதற்காதலினால், உன்னைக் காதலிக்க எனக்குக்கற்பி.
83. Demand that the love of God may never fade, through tests and trials.
83. கடவுள்மேலுள்ள அன்பு, சோதனைகளாலும் இடர்ப்பாடுகளாலும் எப்போதும் மங்காதிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, எல்லாத் துயரங்களும் என்னை வந்தடைந்தாலும், எல்லா பொருட்களும் என்னைவிட்டுப் போனாலும் நான் வருந்தமாட்டேன்; நான் வேண்டுவதெல்லாம் இது ஒன்றே: உன்மேலுள்ள என் அன்பு என் அக்கறையின்மையால் எப்போதும் மங்காமல் இருக்கவேண்டும். உன்மேலுள்ள என் அன்பு, என் ஞாபகசக்தி பீடத்தில் என்றும் சுடர்ந்துகொண்டே இருக்கட்டும்.
84. Special universal daily demand for divine guidance.
84. தினந்தோறும் இறை வழிகாட்டுதலை வேண்டிச் செய்யும் சிறப்புப் பொது பிரார்த்தனை.
தந்தையே, தாயே, நண்பனே, பிரியமான கடவுளே, நான் பகுத்தறிவேன், நான் இச்சை கொள்வேன், நான் செயல்புரிவேன்; ஆனால், நீ என் பகுத்தறிவை, இச்சையை, செயலை நான் செய்யவேண்டிய நற்காரியங்களுக்காக வழிநடத்து.
85. Be the Captain of my boat of daily activity.
85. என் அன்றாட செயல்களின் கப்பலுக்கு நீ மீகாமனாயிரு.
இறைத்தந்தையே, என் அன்றாட முயற்சிகளின் கப்பலுக்கு நீ மீகாமனாயிருந்து, அதனை பூர்த்தியெனும் கரையையடைய வழிநடத்து.
86. Be the Pole-Star of my shipwrecked thoughts.
86. சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு.
இறைத்தந்தையே, சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிருந்து, அவைகளை நிரந்தர ஆனந்தத்தினையடைய வழிநடத்து.
87. Worship of God as sacred Joy found in meditation.
87. தியானத்தினில் உதிக்கும் புனித ஆனந்தத்தைக் கடவுளாய்ப் பாவித்துச் செய்யும் துதி.
இறைத்தந்தையே, ஆனந்தத்தினில் இருந்து நான் தோன்றியுள்ளேன்; ஆனந்தத்திற்காக நான் வாழ்கின்றேன்; அந்த ஆனந்தத்தில் நீ என்னை உருக்கி விடு! நீ புனிதமான இடையறாத ஆனந்தம்; நீ தான் நான் விரும்பித் தேடும் அந்த ஆனந்தம்; நீ என்றும் நிலைத்திருக்கும் ஆன்ம ஆனந்தம். வழிதவறிய புலனின்பங்களினால் அன்றி, தியானத்தினிலும், நற்செயல்களிலும் உதிக்கும் ஆனந்தத்தினால் மட்டுமே உன்னைத் துதிக்க எனக்குக் கற்பி.
88. Demand for the enjoyment of everything with the joy of God.
88. இறையின்பத்துடன் அனைத்தையும் போகிக்க உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, என் உள்ளத்துக்குளே உன்னுடன் ரமித்திட எனக்குக்கற்பி; அதன்மூலம், லோகாயதக் கடமைகளை உன் ஆனந்தத்துடன் நான் செய்யவும், உலகைக் கொண்டாடவும் என்னால் முடியும். பேருணர்வே, எல்லா நல்லவைகளையும் போகிக்குமாறு என் புலன்களைப் பயிற்சி செய்ய எனக்கு உதவு. உலக இன்பங்களை உன் ஆனந்தத்துடன் ரமிக்க எனக்குக்கற்பி. என்னை விரக்தி மனப்பான்மையிலிருந்து காப்பாயாக.
89. Demand for calmness in activity.
89. செயலில் சாந்தத்தை நல்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, சாந்தமான செயல்துடிப்புடனும், சுறுசுறுப்பான சாந்தத்துடனும் இருக்க எனக்குக்கற்பி. நான் சாந்தத்தின் இளவரசாக ஆகி, சமபாவனையெனும் அரியாசனத்தில் அமர்ந்து, செயல் ராஜ்ஜியத்தை ஆட்சிபுரிய வேண்டும்.
90. Demand to love God as all Saints love Him.
90. அனுபூதிமான்கள் எல்லோரும் கடவுளிடம் காட்டிய அன்பினைப் போல், அன்புசெய்ய வேண்டி உரிமையுடன் வரம்கேட்டல்.
பரலோகத் தந்தையே, கடந்த காலத்தில் உன்னைப் புதிதாய்க் கண்டுகொண்ட ஒரு அனுபூதிமான் எப்படி உன்னை அன்புசெய்துப் பிரார்த்தித்தாரோ, அத்தகைய அன்பையும், பிரார்த்தனைகளையும் என் இருதயத்தில் தினமும் நிரப்பு. உன்னை யாரெல்லாம் இதுவரை நேசித்துக் கண்டுகொண்டார்களோ அவ்வனைத்து அனுபூதிமான்களின் அன்பினையும் என் இருதயத்தில் நிரப்பச் செய்.
91. Demand that God's Light drive dark ignorance away.
91. அறியாமையிருளை இறையொளி விரட்ட உரிமையுடன்-வேண்டுதல்.
தெய்வ நண்பனே, என் அறியாமையிருள் இவ்வுலகம் தோன்றிய கால அளவுக்குப் பழமையானதாக இருந்தாலும், உன் ஒளி உதயமாகும் போது அந்த இருள் முன்னம் மண்டிய சுவடின்றி மறைந்துவிடும் என்பதனை எனக்கு நன்கு உணரச்செய்.
92. Demand for healing of any bodily disease.
92. உடல் நோய்களிலிருந்து குணம்பெற உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என் பாதிக்கப்பட்ட உடல்பாகத்தில் இருக்கின்றாய். நீ அதனுள்ளே இருப்பதனால், அது நலமாகவே உள்ளது. இறைத்தந்தையே, நீ பூர்ணஸ்வரூபன். நான் உன் பிரதிபிம்பம். நானும் பூரணமாக இருக்கின்றேன்.
93. Demand for healing others.
93. பிறர் நலனுக்காக உரிமையுடன்-வேண்டுதல்.
பேருணர்வே, நீ என்னுள் இருக்கின்றாய் - நான் நலமாக உள்ளேன். நீ அவருள்ளே இருக்கின்றாய். அவர் நலமாக உள்ளார்.
94. Demand for freeing the mind from mental bacteria.
94. மனதிலிருந்து மனக்கிருமிகளை ஒழிக்கக்கோரி உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என் மனத்தினில் இருக்கின்றாய் - நானே நீ. இறைத்தந்தையே, நீ வலிமை: நீ என்னுள் இருக்கின்றாய் - நான் வலிமை.
95. Demand for Wisdom.
95. ஞானத்தை உரிமையுடன் வேண்டுதல்.
பேருணர்வே, நீயே நான் - நானே நீ. நீ ஞானம் - நான் ஞானம். நீ ஆனந்தம் - நான் ஆனந்தம்.
96. Demand for Bliss.
96. ஆனந்தத்தை உரிமையுடன் வேண்டுதல்.
பரலோகப் பேருணர்வே, உன் ஆனந்த ஊற்று, என் எல்லா எண்ணங்கள், இச்சாசக்தி, உணர்ச்சிகள் வாயிலாகப் பொங்கியெழுந்து வெளிப்படட்டும்.
97. Demand that my bubble of life become the Sea of Life.
97. என் வாழ்வெனும் குமிழ் பெருவாழ்வெனும் கடலாக உரிமையுடன் வேண்டுதல்.
இறைத்தந்தையே, நான் உன் பிரபஞ்சப் பேருணர்வின் நெஞ்சில் உதித்த ஓர் உணர்வலை. நான் ஒரு குழிழி: என்னைக் கடலாக ஆக்கு.
98. Demand that God respond.
98. அழைப்பிற்கு பதிலளிக்கக்கோரி கடவுளை உரிமையுடன் வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என் கோயிலுக்கு இன்று வருகை புரிந்துள்ளாய். உன் வருகையால், என் எல்லா சேவகப் புலன்களும் பிரகாசமாக விழிப்படைந்துள்ளன, என் இதயவாசல்கள் எல்லாமே திறந்துவிட்டன. உன் அருளால், யுகாந்தரமாகக் கவ்விய இருள் நீங்கியது. உன் வருகையின் அறிகுறி புலப்படும்போதே அவ்விருள் ஓடிமறைந்தது. ஆரவாரம் செய்யும் என் ஏக்கங்கள் நீ இருப்பதைக் கட்டியம் கூறுகின்றன. என் ஆன்மச்சிமிழிலிருந்து பக்திமணம் உன் சன்னதிபீடத்தை நோக்கி உயர்கின்றது. எனக்கு அருள்புரி! என் அழைப்பிற்குப் பதிலளி!
99. Demand that God reveal Himself.
99. கடவுளைத் தோன்றக்கோரி உரிமையுடன் வேண்டுதல்.
தந்தையே, உனக்காக நான் ஏங்கும் ஏக்கத்தினால் தோன்றிய என் குமுறும் வார்த்தைகளைக் கொண்டு, நீ உள்ளபடி தோன்ற உன்னை வேண்டுகிறேன். என் ஆன்மாவில் அரும்பிய பிரார்த்தனைகளால் உன்னை நான் அழைக்கிறேன்: வா! நான் அறியுமாறு நீ உள்ளபடி எனக்குக் காட்சியளி!
100. Demand to the Holy Trinity.
100. புனிதத் திரியேகத்திற்கு (Holy Trinity) உரிமையுடன் வேண்டுதல்.
பரலோகத் திரியேகமே (ஓம், தத், ஸத்), எல்லாவற்றையும் கடந்ததாய் இருக்கும் கடவுளே (ஸத்), பிரபஞ்சத்தில் கிறிஸ்துப்* பேருணர்வாக இருக்கும் கடவுளே (தத்), படைக்கவல்ல அதிர்வலை சக்தியாக இருக்கும் கடவுளே (ஓம்)! எனக்கு பேருண்மையை அறிய ஞானத்தை அருள்வாயாக! மேலும், என் சுயமுயற்சியுடனும், தர்மநெறி அறிவுடனும், நான் ஆன்மதரிசனம் எனும் அரிய ஏணிப்படிகளில் ஏற விரும்புகின்றேன் - முடிவில் அந்த ஒளிரும் சித்தி முகட்டை அடைந்து, இரண்டற்ற ஒன்றேயான அந்த தெய்வீகப் பேருணர்வினை நேரடியாக அனுபவிக்க! --- கிறிஸ்துப் பேருணர்வு: இதனைக் "கூடஸ்த சைதன்யம்", "கிருஷ்ணப் பேருணர்வு" எனவும் கூறுவர். இது பிரபஞ்சம் முழுவதிலும் பரவி விரவியிருக்கும் ஒரே உணர்வு.
101. Demand that Cosmic Sound lead from ignorance to wisdom.
101. பிரபஞ்ச நாதத்தினை ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்த உரிமையுடன்-வேண்டுதல்.
ஓம் எனும் பிரபஞ்ச நாதமே, என்னுடன் எப்போதும் இரு, என்னை இருளிலிருந்து ஒளிக்கு வழிநடத்து, ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்து, நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு வழிநடத்து, வறுமையிலிருந்து செழிப்பிற்கு வழிநடத்து, துன்பங்களிலிருந்து நிரந்தர ஆனந்தத்திற்கு வழிநடத்து .
102. Demand for Thy Light.
102. உன் ஒளியைப் பெற உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, உன் கருமையான அமைதிக்கோட்டையைத் துளைக்க, நான் இங்கு உன் முன்னால் என் பிரார்த்தனை ஈட்டிகளை மீண்டும் மீண்டும் அதை நோக்கி வீசுகின்றேன். உனக்காக ஏங்கும் என் ஏக்க தாபங்களெனும் பீரங்கிக் குண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து எறியப்பட்டு, என் அறியாமை மற்றும் தியக்க மோகங்களினாலான மதில்சுவர்களைத் தகர்க்கட்டும். என் தன்மையை உள்ளபடி வெளிச்சம்காட்டும் உண்மையான ஞானமெனும் தண்டுவிளக்கொளியை என்மீது பாய்ச்ச நான் உன்னை அழைக்கின்றேன். அதன்மூலம் உடைந்த என் அறியாமைக் கோட்டையில் நான் உன்னைத் தேடியடையமுடியும்.
103. Demand* for the opening of the spiritual eye, to find God in everything.
103. கடவுளை எல்லாவற்றிலும் காணுமாறு ஆன்மீகக் கண்ணைத் திறக்கக் கோரி உரிமையுடன்-வேண்டுதல்*.
இறைத்தந்தையே, பூக்களின் அழகு, கடந்துசெல்லும் வாழ்க்கைக் காட்சிகளின் கோலம், அமைதியாகத் தவழ்ந்து செல்லும் மேகங்களின் வனப்பு ஆகியவை என் கண்களுக்கு விருந்து படைக்கின்றன. என்னுள்ளே உள்ள கண்ணை உன்னைத் தவிர வேறொன்றையும் காணாதவண்ணம் திறக்க வை. அதன் பார்வையால் - மேலே, கீழே, சுற்றிலும், உள்ளே, வெளியே என எங்கும் உன்னையே காண வேண்டும். எல்லாவற்றிலும் உன்னையன்றி வேறெதையும் காணாமலிருக்க எனக்குக் கற்பி. மகத்தான உன் ஆட்கொள்ளும் அழகை எல்லா அழகுகளிலும் காணுமாறு, என்னுள்ளே உள்ள அந்தக் கண்ணினைத் திற!
104. Let all rest in the shade of my peace.
104. எல்லோரும் என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்கட்டும்.
உன் அன்பின் தென்றல்காற்று என்னுள் கலந்ததனால், இறைத்தந்தையே, உன் வருகையை எதிர்நோக்கி என் வாழ்க்கை மரமானது மெதுவாக தனது இலைகளை உன்னை வரவேற்பதுபோல் அசைக்கின்றது. என் ஆன்ம இலைகள் தற்சமயம் விழித்துக் கொள்கின்றன. அவைகள் ஒன்றோடொன்று உரசும் சப்தம், காற்றில் மிதந்துவந்து, களைத்து நைந்துபோனவர்களை உன்னிடமிருந்து பெற்ற என் சாந்தமான நீழலில் தங்கி ஓய்வெடுக்குமாறு அழைக்கின்றது.
105. Demand for realizing the expansion of consciousness in the Cosmic Vibratory Sound.
105. பிரபஞ்ச நாதத்தில் என் விரிவடைந்த உணர்வை உணரவைக்குமாறு உரிமையுடன் வேண்டுதல்.
இறைத்தந்தையே, பகுத்தறிவின் சுடராக, ஞானத்தின் கனலாக, இயைபான ஒற்றுமையின் தென்றலாக நீ எனக்கு விளங்கவேண்டும். அணுக்களும், எலெக்ட்ரான்களுமிடும் ரீங்கார கானத்தின் மூலமாகவும், அவற்றின் அதிர்வுகள் இசைக்கும் இசைகளின் மூலமாகவும் நீ வந்து விளங்கவேண்டும். எல்லா ஸ்வரங்களையும் ஊற்றெடுக்கச் செய்ததும், ராகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவ கானத்தைப் பாடப் பணித்ததுமான உன் பிரபஞ்சக் குரலைக் கேட்க எனக்குக் கற்பி. பிரபஞ்சத்தில் பல்வகைப் பாடல்களின் ஓசைகளுக்கடியில் அமிழ்ந்து தாழாத உன் பிரபஞ்சக் குரலைக் கேட்க நான் விரும்புகின்றேன். தியான மந்திரக் கோல் எல்லா சப்தங்களையும் தொட்டு, பூமி, ஆகாயம், நட்சத்திரங்கள் அதிர பவனி வரும் பிரபஞ்சத்தின் ஒருமை சப்தமான ஓம் எனும் பிரணவத்தில் அவற்றை சங்கமிக்கின்றது. எல்லா சப்தங்களின் பிரபஞ்ச கீதமான ஓம், ஓம் எனும் பிரணவநாதமாக எனக்கு விளங்கு. என் எல்லா உடற்திசுக்களும், எல்லா நாடிநரம்புகளும் இப்பொழுது உன் ஓம் எனும் பிரபஞ்ச கீதத்தைப் பாடட்டும்.
106. Demand for an immediate need to be supplied.
106. உடனடித்தேவையை பூர்த்திசெய்ய உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, என் நிரந்தர உடைமைகளில் அல்ல என் கவனம்; நான் வேண்டுவதெல்லாம் என் அன்றாடத் தேவைகளை இச்சா சக்தியால் பூர்த்திசெய்து கொள்ளும் மன வல்லமையே. அதனை எனக்கருள்!
107. Demand for removal of the veil of illusion.
107. மாயத்திரையை விலக்க உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, என்னைச்சுற்றிலும் ஆவரணத்திரைகள் உன்னை என்னிடமிருந்து மூடிமறைக்கின்றன. செவ்வந்திப்பூக்கள், ரோஜாப்பூக்கள், சுடரும் பொன்னிற மேகங்களாலான அழகிய திரைகளை நான் விரும்பி ரசிக்கின்றேன். விண்மீன்-அலங்கரித்த, கருமையான இரவுத்திரைக்குப் பின்னால் நீ எவ்வளவு காலந்தான் மறைந்திருப்பாய்? உன் திரைகளை நான் விரும்புகிறேன், ஏனெனில் அவை உன்னை மறைத்தபோதிலும், நீ உள்ளதையும் குறிப்பால் உணர்த்துகின்றது. ஆயினும், நான் எந்தவித வெளிப்புற திரைகளும் இன்றி - உன்னை உள்ளபடி பார்க்க விரும்புகின்றேன்.
108. Demand for seeing God in everything.
108. கடவுளை எல்லாவற்றிலும் பார்க்க உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, மேலும், கீழும், பின்புறத்திலும், சுற்றிலும், எங்கெங்கு என் பார்வை நோக்கினும் நான் உன்னையே காணவேண்டும்! என் புலன்-குழந்தைகளை உன் வீட்டிலிருந்து வெளியேறிச் சுற்றாமலிருக்கப் பழக்கு. என் கண்களை அகத்தே திருப்பி, பொழுதோறும் புதிய தோற்றம் கொள்ளும் உன் அழகைப் பார்க்கச் செய்; என் காதுகளை எவரும்-கேட்காத உன் கானத்தைக் கேட்கப் பழக்கு. நான் உனது பரிமளமான இருப்பினால் வீசும் சுகந்தமணத்தை நுகர்வேன். கிழக்கத்திய வழக்கத்தின்படி, நான் எனது ஐந்துபுலன்களை உன் பீடத்தில் ஐந்து விளக்குகளாய் ஏற்றி உன்னை வழிபடுவேன். அதன் பிரகாரமே, விடியற்காலையின் அரும்பும் வெளிச்சம் துலங்கியதும், பிரகாசமான பகல் பொழுதிலும், மறைவாக ஒளிரும் அந்திசாயும் நேரத்திலும், வெள்ளி நிலா வெளிச்சத்திலும், உன்னை நாடி உன் முன்னிலையில் எப்போதும் என் அன்பின் ரகசிய ஒளி விளக்கை ஏற்றுவேன்.
109. Demand to be kept awake and ready.
109. விழிப்புற்றுத் தயாரான நிலையில் வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, நீ என்னை விழிப்புறச் செய்தால், அப்புறம் மறுபடியும் எப்படித்தான் நான் உறங்கமுடியும்? ஒருக்கால் உறக்கம் என்னை மயக்கி ஆட்கொண்டு விட்டால் , நீ மறுபடியும் என்னை விழிப்புறுத்துவாயா? வாழ்க்கையெனும் கனவுலோகத்தின் பயங்கரங்கள் இப்போது மறைந்துவிட்டன. என் சோகத்தை நீ ஆனந்தக்கண்ணீராய் மாற்றிவிட்டாய். என் இன்பங்கள் ஆனந்தமாக ஒளிர்கின்றன. என் தேக-கோயில் உன் ஒளியினால் நிரம்பியுள்ளது. உன் ஒளியின் கிரணங்கள் என் ஞானக்கண்கள் சொக்கி மயங்குவதிலிருந்து காக்கின்றன. என்னை எப்போதும் விழிப்புற்றுத் தயாராக வைத்துக்கொண்டிருப்பதற்காக, என் தந்தையே, நான் உனக்கு மனமார நன்றி செலுத்துகின்றேன்!
110. Master Mariner, come and take charge of my boat.
110. உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.
இறைத்தந்தையே, என் தியானமெனும் சிறுபடகு, சிதறடிக்கும் சூறாவளியால் அலைக்கழிக்கப்பட்டு, சிரமத்துடன் உன் கரையை நோக்கி நகர்கின்றது. என் மனக்கடல் கொந்தளிக்கின்றது, ஆயினும், நான் உன் கரையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் வழிநடத்து.
111. Demand to find God at any time and anywhere.
111. எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கடவுளைக் கண்டுகொள்ள உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, உன்னை நான் என்னுள்ளே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை வெளியேயும் கண்டுகொள்வேனாக. உன்னை நான் வெளியே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை என்னுள்ளேயும் கண்டுகொள்வேனாக. உள்ளே நிசப்தத்திலும், வெளியே சத்தத்திலும் - உன்னை நான் என்னுள்ளேயும், வெளியேயுமாகக் கண்டுகொள்ள எனக்குக்கற்பி. நான் உன்னை எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள கற்பித்தாயெனில், சத்தமோ நிசப்தமோ, எனக்கு ஒரு பொருட்டல்ல.
112. Demand for union with the Almighty.
112. எல்லாம் வல்ல கடவுளுடன் ஐக்கியமடைய உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, வானத்தின் துளைகள் வழியேயும், நட்சத்திரங்களின் மினுமினுப்பின் வழியேயும் என்னைப்பார். சூரிய சந்திரர்களின் மூலம் என்னைக் கண்காணி. என் அன்பின் வழியே என்னை நீ நேசி. தென்றல் காற்றினால் என்னைத் தொட்டுப் பராமரி. என் இதயத்தின் வழியே என்னுளே நீ துடித்து செயல்படு. இந்த என் அழியும் தேகத்தின் வழியே உன் அழியாத் தன்மையினால் சுவாசி. என் குரலின் வழியே பேசு. என் கைகளின் மூலம் மற்றவர்களுக்கு உதவு. என் மனத்தினை உபயோகித்து மற்றவர்களுக்குப் புத்துணர்வூட்டு. என் மூச்சுக்காற்றின் வழியே நீ சுவாசி, ஏனெனில் இந்த பலவீனமான வயலின் வழியே நீ மட்டுமே உன் முழுமையான, நிரந்தர சங்கீதத்தைப் பாடமுடியும்.
113. I want to feel Thee just behind the Voice of my Prayer.
113. என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நான் உன்னை உணர விரும்புகின்றேன்.
இறைத்தந்தையே, என் பார்வைக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் வெளியே தென்படும் உன் அழகைக் காணமுடிகிறது. என் கேட்கும் சக்திக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் பிரபஞ்சத் தோற்றத்தில் வெளிப்படும் உன் குரலைக் கேட்கமுடிகிறது. என் தொடுவுணர்ச்சிக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் உன் உலகைத் தொட்டுணரமுடிகிறது. மலர்களின் இனிமையிலும், போஷிக்கும் உணவின் சுவையிலும், உன் நிரந்தர இனிமையின் இருப்பை உணர்த்தும் சாராம்சம் மறைந்து விளங்குகின்றது. என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். நான் வழிபட உதவும் மனத்திற்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் இளகிய உணர்வுகளுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் எண்ணங்களுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் தியானங்களுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். இயற்கையின் வனப்பின் மறைப்பிற்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் அன்பின் திரைக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். உன்னை நீ உள்ளவண்ணம் எனக்குக் காட்டு, இந்த மர்மத் திரைகளுக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டு.
114. Demand for the realization of God's presence.
114. கடவுளின் சாந்நித்தியத்தை உணர உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, என் பிரார்த்தனைக்கு அடித்தளமாக நீயிருந்தும், ஏன் நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய்? என் உணர்வுகளில் நீ அதிர்ந்தாலும் என் எண்ணங்களின் திரைக்குப் பின்னாலிருந்து உன் சாந்நித்தியம் வெளிப்பட்டாலும், நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய். வா, தந்தையே, வந்து இந்தத் திரையை விலக்கு! வா, எந்தையே, வா! என் பிரார்த்தனைகளின் குரலைக் கேள். நான் உன்னை அறிய விரும்புகின்றேன். நான் உன்னிடம் பேச விரும்புகின்றேன். நான் உன்னிடம் பிரார்த்திக்க விரும்புகின்றேன்; நீ என் பிரார்த்தனைகளைக் கேட்பதையும் நான் அறிய விரும்புகின்றேன். உன்னிடம் என்னை அழைத்துச் செல்லும் பாதையை எனக்கு காண்பி.
115. Prayer between Sleeping and Waking.
115. தூக்க, விழிப்பு நிலைகளுக்கிடையே செய்யும் பிரார்த்தனை.
தந்தையே, விழிப்புநிலைக்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்டபொழுதில் நான் இருக்கையிலே, நீ உன் சேவகனான என்னிடம் வா, வந்து விளையாடு. உன் அன்பென்னும் கடலில் நான் மிதக்கின்றேன். துள்ளிக்குதிக்கும் உணர்வெழுச்சி அலைகளில் நான் நடனமாடுகின்றேன். உன்னிடம் கண்ணாம்பூச்சி ஆட்டம் நான் ஆடுகின்றேன். உன் பெருமகிமை உன் சேவகனான என்னையும் உன் அரியணையில் அமர்த்துகின்றது.
116. Prayer-Demand for Devotion.
116. பக்தியை உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, என் வணங்கும் கரங்களில் என் இதயத்தை இருத்திக் கொள்வேனாக. உன் அன்பினால் என் வேண்டுதல்களை பூரிதமாக்க எனக்குக் கற்பி. ஒரு குழந்தையின் எளிதான, நேர்மையான பக்திக்கு நிகரான பக்தியை உன்மேல் செலுத்த நீ எனக்கு அருள். என் பிரார்த்திக்கும் குரலுக்குப் பின்னே நீ அருகாமையில் உள்ளதை உணர எனக்குக் கற்பி. என் சுவாசத்தினுள் உன் சுவாசத்தினை உணர எனக்குக் கற்பி. என் உணர்ச்சிகளில் உன்னை உணர எனக்குக் கற்பி. என் புரிதலில் உன் ஞானம் உள்ளதென்பதை அறிய எனக்குக் கற்பி. என் வாழ்வில் உன் சர்வவியாபக வாழ்வை உணர எனக்குக் கற்பி. என் புலன்களில் உன் ஒளியை வெள்ளமாகப் பாய்ச்சு.
117. Prayer-Demand for Illumination.
117. ஞான அனுபூதி பெற உரிமையுடன் வேண்டுதல்.
பேருணர்வே, அன்பான இறைத்தந்தையே, ஜகத்தின் பரமாத்மாவே, உணர்வுகளுக்கெல்லாம் உணர்வே, நண்பர்களுக்குள்ளிருக்கும் நண்பனே, என் வாழ்வின் மூல ரகசியத்தை எனக்கு விளக்கு! நான் மூச்சற்றும் மரணமற்றும் சும்மா இருக்கும்போது, உன்னை வழிபட எனக்குக் கற்பி. என் பக்திக்கனலினால் என் அறியாமையைச் சுட்டெரித்து விடு. என் ஆன்ம நிஸ்சல நிலையில் - வா, பேருணர்வே, வா! என்னை முழுதுமாக ஆட்கொள், உன் மரணமற்ற இருப்பை என்னுள்ளேயும், என்னைச் சுற்றியும் நான் உணருமாறு என்னைப் பழக்கு. வா, பேருணர்வே, வா! வா, பேருணர்வே, வா!
118. Prayer before Meditation.
118. தியானம் துவங்குமுன் செய்யும் பிரார்த்தனை.
இறைத்தந்தையே, என் எளிய பிரார்த்தனைகள் எல்லாம் உன்மீதுள்ள மரியாதையினால் விழிப்புற்று உனது வருகைக்காகக் காத்திருக்கின்றன. என் எளிய இன்பங்கள், கோயில் மணியோசையுடன் லயித்து ஆனந்தநடனம் புரிகின்றன. என் ஏக்கங்களின் மந்தமான பறையோசை உனக்காக ஆழமாக அறைகின்றன. என் ஆசைத் தாபங்கள், என் அறியாமை, உன் பீடத்தின்முன்னர் பலிகொள்ளப்போகும் அச்சத்தில் பயந்து நடுங்குகின்றன. என் தூய கண்ணீர்த்துளிகளால் செய்யப்பட்டு, என் அன்பினால் மெருகூட்டப்பட்டப் புனிதமான மணிகளால் ஆன மாலையுடன், நான் எனது பிரார்த்தனை மந்திரங்களை ஓதுவேன். நான் என் இதயபீடத்தைப் பிராயச்சித்தத்தினால் தூய்மைப்படுத்துவேன். வா! வா! உன் வரவுக்காக நான் பிரார்த்திக்கின்றேன்!
119. என் சோகத்தின் எரிந்த சாம்பலுக்குள் மறைந்துள்ள உன் பொன்மய சாந்நித்தியத்தை நான் தேடிக் கண்டுகொண்டேன்.
119. Hidden in the ashes of burnt sadness, I found Thy Golden Presence.
119. என் சோகத்தின் எரிந்த சாம்பலுக்குள் மறைந்துள்ள உன் பொன்மய சாந்நித்தியத்தை நான் தேடிக் கண்டுகொண்டேன்.
இறைத்தந்தையே, என்னை அமைதியாலே புறக்கணிக்காதே. நீயில்லாமல் நான் மட்டும் தனியே வாடி நிற்கின்றேன். நான் என் வேலையில் மூழ்கிச் சிறைப்பட்டு, உன்னை மறக்கும்படி ஆகாமல் செய். என்னுள்ளே உள்முகமாகச் சென்று, நான் உன்னை வெளிக்கொணர்வேன். என்னை எங்கே இருத்தியிருக்கின்றாயோ, அங்கேயே நீ வந்தருள வேண்டும். என் சோகத்தின் எரிந்த சாம்பலுக்குள் மறைந்துள்ள உன் பொன்மய சாந்நித்தியத்தை நான் தேடிக் கண்டுகொள்வேன்.
120. Receive the orphans and the stricken, who have come to Thy door.
120. உன் வாசலை நாடி வந்துள்ள அனாதைகளை, பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுப் பராமரி.
அனாதைகள், துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உன் குணப்படும் சக்தியைக்
கேள்விப்பட்டுள்ளார்கள். அவர்கள் உன் வாசலுக்கு வந்து காத்துக்
கொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பலாமா?
சோகத்தாலும், பயத்தாலும் பீடிக்கப்பட்டு நெஞ்சுடைந்து அவர்கள் சிந்துகின்ற
எரிக்கும் கண்ணீர்த் துளிகளை, உன் கண்ணுக்குப் புலனாகா கரங்களால் துடைத்து
உலர்த்துவாயாக.
மோகக்குழப்பத்தால் வழிதொலைந்தவர்கள் உன்னைத் தவிர வேறு யாரிடம் செல்வார்கள்?
உன்னைப் பார்க்கமுடியாமல் மறைக்கும் திரையை விலக்கு, உன் எல்லாம்வல்ல பேரருள்
முகத்தைக் காட்டு.
நீ தோன்றும் விடிவுகாலம் நெருங்கும்போதே, அவர்களின் இருண்ட கவலைகள்
சுவடின்றிப் பறந்து ஓடிவிடும்.
121. Come to me as Kindness.
121. தாயே, என்னிடம் தயையின் ரூபத்தில் வா.
அந்த நாள் என்று விடியுமோ, பராசக்தித் தாயே, அப்போது உன் பெயரை
உச்சரிக்கையில் என் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து,
என் இதயத்தின் வறட்சியைப் போக்கி, என் அறியாமையின் இருண்ட நிலைக்கதவுகளைப்
பேர்த்தெறியச் செய்யும் (அந்த நாள் என்று விடியுமோ?).
பின்பு, என் கண்ணீர் வெள்ளம் தேங்கிய குளத்தில், பிரகாசமான ஞானத்தாமரை
மலரும்; அதனால், என் மன இருள் முற்றிலும் அகலும். ரூபமற்றவளே,
எங்கும்நிறைந்த என் பராசக்தித் தாயே, என்னால் உணரமுடியும் வண்ணம் தயை
ரூபத்தில் என்னிடம் வா, வந்து என்னை சோகத்தின் கரைகளிலிருந்து மீட்டுச்
செல்.
122. Satisfy my soul-hunger.
122. என் ஆன்ம-பசியைத் திருப்திப்படுத்து.
சர்வ வியாபகப் பேருணர்வே, உன் உற்சாகமூட்டும் எண்ணத் தென்றல் என் இதயத்தின் மூடுமேகங்களை விலக்கியது. என் மனவெளி இப்போது தெளிவாக உள்ளது; நிர்மலமாக்கப்பட்ட தூய ஆன்மாவினால், நான் உன்னை மட்டுமே எங்கும் காண்கின்றேன். உன் ஆனந்தத்தின் கதிரொளி வேகமாகப் பரவி, என் இருப்பின் அடி ஆழத்தைத் தொடுகின்றது. காலங்காலமாய் பசியினால் வாடிய நான், உன் ஒளியமுதினை மனதார அருந்துகின்றேன். உன் கருணையாலும், என் நிலையான விழிப்புணர்வாலும், அத்தகைய ஆனந்தம் என்றென்றும் எனதாகவே ஆகட்டும்.
123. O Divine Hart, I will hunt for Thee in the forest of my Soul.
123. தெய்வ மானே, நான் என் ஆன்மக் காட்டில் உன்னை வேட்டையாடிப் பிடிப்பேன்.
தெய்வ மானே, நான் என் சுயநல ஆசைகளினாலான ஈட்டிகளைத் தாங்கிக்கொண்டு உன்னைப் பிடிக்க உன் பின்னால் ஓடினேன். நீ தப்பி ஓடிவிட்டாய்! நான் பலத்த சத்தத்துடன் கூடிய பிரார்த்தனைகளாலான விமானத்திலேறி உன்னை விடாமல் பின்தொடர்ந்தேன். அது என் மேலுங்கீழுமான சஞ்சலமெனும் பூமியில் இடித்து நொறுங்கி விழுந்தது. அந்த பயங்கரமான ஆரவாரம் உன்னை என்னிடமிருந்து துரத்தியடித்தது! என் கவன ஒருமுகப்பாடென்னும் வில் அம்புடன் உன்னை நாடி மறைவாக ஊர்ந்து பின்சென்றேன். ஆனால் என் கரமோ நிலைதடுமாற்றத்தினால் நடுக்கமுற்றது, நீ என் பார்வையிலிருந்து குதித்து ஓடி மறைந்துவிட்டாய். உன் பாதங்கள், "பக்தியில்லாமல் நீ வெறுமனே ஒரு அசட்டு வில்லாளனே!" என்று எதிரொலித்தன. நான் உறுதியான பக்தியுடன், தியான அம்பினை வில்லில் பூட்டுகையில், உன் தெய்வீகக் காலடிகள், "உன் மனோ அம்புகளின் வீச்சிற்கு நான் அப்பாற்பட்டவன்; நான் அப்பாற்பட்டவன்!" என மீண்டும் ஒலித்துரைத்தன. பெருங்கலக்கமுற்று இறுதியில், நான் என் தெய்வீக அன்பின் இருதய குகையில் தஞ்சம் புகுந்தேன். ஆஹா! அந்த தெய்வ மானான நீ ஆசையுடன் என்னுள்ளே வந்து புகுந்தாய்.
124. Make me the drops of sympathy in tearful eyes.
124. கண்ணீர்சிந்தும் கண்களில் என்னை பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக ஆக்கு.
என் [ஆன்ம]ஒளிப்பொறி, உன் பேரொளியின் பொறியுடன் கலந்து ஒன்றாகி, அது எல்லாருடைய கண்கள் மூலமும் மினுமினுக்கட்டும். நான் ஆன்மாக்களின் கடலில் நீந்த எனக்கு அருள்புரி. மேன்மையான ஆசைகளெனும் மலைச்சிகர சறுக்குப்பாதையில், என்னை உன்னுடன் இணைந்து சறுக்கச் செய். புத்துணர்வுடன் மனங்களில் துளிர்க்கும் எண்ணங்களிலும், முனிவர்களின் அமைதியிலும், உன்னை எனக்கு உணரச் செய். கண்ணீர்சிந்தும் கண்களிலே, [அவர்களுக்காகப்] பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக என்னை ஆக்கு. நீயும் நானுமாகச் சேர்ந்து உணர்வு அலைகளுடன் நடனம்புரிவோம், எல்லா இதயங்களையும், உன் தெய்வீகக் குதூகலத்தால் மகிழ்விப்போம். நீயும், நானும் எல்லா ஜீவராசிகளிலும் உயிர்த்துடிப்பாக இருப்போம்.
125. From peak to peak and heart to heart, I will Fly, singing Thy name.
125. உன் புகழ்ப்பெயரைப் பாடிக்கொண்டே மலையுச்சிதோறும், உள்ளந்தோறும் பறப்பேன்.
பசும்புல்வெளியின் மேல் நான் மல்லாக்கக் கிடந்து உனது பாட்டை பறவைகளை நோக்கிப் பாட எனக்கு அனுக்கிரகம் புரி. மனித இதயங்களில் நான் ஊடுருவி உன் புகழ்கானத்தை அவைகளில் இசைவிக்க எனக்கு அருள் செய். நான் நட்சத்திர மண்டல விளிம்பினைச் சுழன்று சுற்றி, உன் பெயரை சுடரெழுத்துக்களால் அங்கு பதிக்க எனக்கு அருள்புரி. விண்துகள் ஆவிப்படரினைக் (nebulae) கொண்டு நான் உன் புனிதநாமத்தைப் பரப்புவேன். ரீங்காரமிடும் அணுக்களுடன் நான் கூடிச்சேர்ந்து அவைகளுடன் உன் பாடலை சுருதி லயத்துடன் இயைந்து இசைக்க எனக்கு அருளாசி வழங்கு.
126. Teach me to dream Peace with the poppy-petals.
126. கசகசா பூவிதழ்களுடன் நான் சாந்திதரும் கனவுகாண எனக்குக் கற்பி.
தாகத்தால் வாடும் ஆன்ம-மலர்களுக்கு, நான் வானிலிருந்து மழைத்துளிகளாய் உன் அமிர்த-நாமத்தைத் தாரையாகப் பொழிய எனக்குக் கற்பி. விழிப்புணர்வூட்டும் உன் சாந்தி ஒளியுடனான பொன்மயக் கனவு நல்கும் கசகசா பூவிதழ்களுடன்* நான் கனவுகாண எனக்குக் கற்பி. தெய்வப் பிராணமூச்சே, நீ மனிதர்களில் குறுகிய எல்லைக்குள் இயங்கும் பிராணமூச்சாகவும், எல்லா உயிரினங்களிலும் பரந்துவிரிந்த பிராணனாகவும், என்னுடன் சேர்ந்து வீசு.
127. Whether dead or living, I am held in Thine Immortal Arms.
127. வாழ்விலோ சாவிலோ, நான் உன் என்றுமழியாக் கரங்களால் காக்கப்படுகின்றேன்.
தெய்வத்தாயே, எல்லோரையும் மரணம் மறைவாகப் பின்தொடர்ந்தாலும், தீரர்களானவர்கள் அங்குமிங்குமெனப் பறக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் நடுவே செல்லும்போதும் புன்னகைப்பார்கள். ஆனால் நான் புன்னகைக்கின்றேன், ஏனென்றால் நிகழும் இந்த வாழ்க்கையலைகளின் மேலே நான் மிதந்தாலும், மரணச் சுழலலையின் அடியில் நான் மூழ்கினாலும், உன் காக்கும், சர்வவியாபக நிரந்தரமான வாழ்க்கையில் நான் - உன் என்றுமழியாக் கரங்களால் அரவணைக்கப்பட்டு - அமைதியாக வீற்றுள்ளேன்.
128. I beheld Thee hiding behind the flowers.
128. நான் உன்னை மலரில் மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன்.
ஓர் மலரைப் பார்த்து வழிபட ஆரம்பித்தேன். திடீரென, இறைத்தந்தையே, நீ அங்கு மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன். உன் சாந்நித்தியத்தின் நறுமணத்தை அது வீசியது. உன் தூய்மையின் அழகு அதன் இதழ்களை அலங்கரித்தது. உன் ஞானத்தின் சொக்கத்தங்கம் அதன் இதயத்தினின்று ஒளிர்ந்தது. அனைத்தையும் அரவணைத்துத் தாங்கும் உன் சக்தி நளினமான புறவிதழ்களை நிரப்பியது. வாழ்வின் ரகசியமும் உன் என்றுமழியாத் தன்மையும் மகரந்தத்தில் பொதிந்து - உன் இன்னமுதைச் சுவைக்கும் வண்டின் நெஞ்சின் மேல் மேவியது. சாலையோரத்தில் வளரும் சின்னஞ்சிறு தளையின் நெஞ்சினுள்ளும் பிரதிபலிக்கும் உன் தோற்றத்தின் அற்புதத்தை எனக்குக்கற்பி.
129. Thou art slowly rising on the horizon of my mind.
129. என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்.
இறைத்தந்தையே, மாகாற்றால் அலைக்கழிக்கப்பட்ட என் உள்ளம், என் அலட்சியமெனும் மேகங்களினால் மறைக்கப்பட்ட உன் சாந்நித்தியத்தின் வெள்ளிக்கீற்றின் தரிசனத்தைப் பெற நான் பிரார்த்திக்கிறேன். உன் நம்பிக்கையெனும் சந்திரன் என் இதயத்தில் குளிர்கிரணங்களை வீசட்டும். என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்; உன் அன்பின் நிலவொளியின் ஏற்றத்தினால் அறியாமை மூட்டங்கள் விலகுகின்றன. ஒளியின் தந்தையே, சிதிலமடைந்த என் உள்ளப் படகு உன் ஆனந்தக் கரையை மகிழ்ச்சியுடன் தரிசிக்கின்றது.
130. Demand to see the love of God in all human love.
130. அனைத்துவகையான மனித அன்பிலும், கடவுளின் அன்பினைக் காண உரிமையுடன்-வேண்டுதல்.
அனைத்துவகையான அன்பினிற்கும் கடவுளான உன்னை, நான் எல்லா மனித நேசங்களின் அன்பினால் நேசிக்க வந்துள்ளேன். நீயே காக்கும் தந்தை. தனது பெற்றோர்களிடம் மழலையன்பு காட்டும் சிறு குழந்தையும் நீயே. வரம்பற்ற கருணையைப் பொழியும் தாயும் நீயே. ஆருயிர் அன்பர்களுக்கிடையே பாயும் முழுமையான சரணாகத-அன்பின் உயிரோட்டமும் நீயே. நீயே நண்பர்களின் சிநேகித அன்பு. ஒரு சேவகன் தனது எஜமானனிடம் காட்டும் மரியாதையால் என்னைத் தூய்மைப்படுத்து. இம்மையிலும், மறுமையிலும் வற்றாத அன்பின் நீரூற்றான உன்னை, நான் அனைத்துவித தூய அன்பினாலும் நேசிக்க எனக்குக்கற்பி. அனைத்து அன்பினாலும் தெளித்து என்னை நீராட்டு.
131. Open my Inner Eye.
131. என் உள்முகக் கண்ணினைத் திற.
பெருஞ்ஜோதிச் சுடரூற்றே, என் உள்முகக் கண்ணினைத் திற, அதன்மூலம் நான் பலவித வர்ணங்களிலாலான அணுக்களின் நடனங்களுக்கு நடுவே உன்னைக் கண்டுகொள்வேன். என் வானவெளியின் கதவுகளைத் தகர்த்தெறி, அதன்மூலம் நான் ஜடப்பொருள்களின் மாயமேக மூட்டத்தினையூடுருவி அதன் பின்னே உன்னை காண்பேன். பிரகாசமான பிரபஞ்சக் கதிர்களின் மதில்சுவர்களுக்குப் பின்னே நீ மறைந்து நிற்கின்றாய். வாயிற்கதவைத் திற, அதன்மூலம் உன்னை நான் எல்லாவிடங்களிலும் காண்பேன்.
132. Cure my jaundiced vision of duality.
132. இருமை நோய்வயப்பட்ட என் ஈனப் பார்வையை குணமாக்கு.
வெகுகாலமாய் இருமை நோய்வயப்பட்ட என் ஈனப் பார்வையினால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எல்லாப்புறங்களிலும், உன் இருப்பின் ஜீவத்துடிப்பை சத்தில்லாத பொருட்கள் விகாரமாக்கி பங்கப்படுத்துகின்றது. ஞானக்கண்களால் உன் இருப்பை மட்டுமே எங்கும் நான் காணுமாறு, நீ என் பார்வையை குணமாக்குவாயா?
133. Demand for quickening activity.
133. செயல்களைத் துரிதப்படுத்த உரிமையுடன் வேண்டுதல்.
உன் ஆற்றலின் அலைகள் என் செயல்களினில் நடனம் ஆடட்டும். நீ எப்படி அறிவார்ந்த முறையில் அணுக்களை, மலர்களை, பிரபஞ்சங்களை எல்லாம் சுறுசுறுப்பாய் உருவாக்குகின்றாயோ, அப்படி மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாகச் செயலாற்ற எனக்குக் கற்பி. நீ எப்பொழுதும் காரியமாயிருந்தாலும், ஆனந்தம்பொங்கும் இதயங்களின் வழியே நீ நிரந்தரமாக புன்னகை பூக்கின்றாய். நான் வாழ்க்கைத் தொழிற்சாலையில் உழைக்கையில், உன் என்றும் வாடாத புன்னகையை நான் தரிக்க எனக்கு அருள்புரி.
134. Bless me, that I may perceive Thee through the windows of all activities.
134. எல்லா செயல் சாளரங்களின் வழியேயும் உன்னை நான் காணுமாறு எனக்கருள்.
ஆனந்தமாய்ச் செய்யும் எல்லா செயல் சாளரங்களின் வழியேயும் உன்னை நான் காணுமாறு எனக்கருள். நான் என் கடமைகளை நிறைவேற்றப் பணிபுரியும் போது, நீ என்னை நோக்கிப் பார்த்து, என்னை எப்போதும் ஊக்குவிக்க வேண்டும். விழிப்பு, உறக்கம், கனவு என என் ஒவ்வொரு காரியமும் உன் சாந்நித்தியத்தினால் நிறைந்திருக்கட்டும்.
135. Teach me to perform every work just to please Thee.
135. செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி.
இறைத்தந்தையே, செய்யும் எல்லாக் காரியங்களையும் உன் இஷ்டப்படி நான் செய்யுமாறு எனக்குக் கற்பி. எலும்பு, நரம்பு, சதைகளால் ஆக்கப்பட்ட என் உடல் எந்திரத்தை இயக்கும் என் வாழ்வின் மின்சாரம் நீ என நான் உணருமாறு செய். ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், ஒவ்வொரு சுவாசகதியிலும், உயிர்த்துடிப்புடன் வெளிப்படும் ஒவ்வொரு செயலிலும் உன் ஆற்றலை நான் உணருமாறு எனக்குக் கற்பி.
136. I bring for Thee the myrrh of devotion.
136. பக்தியெனும் சுகந்தப் போளத்துடன் நான் உங்களை அணுகுகின்றேன்.
136. பக்தியெனும் சுகந்த சாம்பிராணியுடன் (போளத்துடன்) நான் உங்களை அணுகுகின்றேன். குவிந்த கரங்களால், வணங்கிய தலையுடன், பணிவெனும் சுகந்த சாம்பிராணியை நெஞ்சில் சுமந்து, நான் உங்களை அணுகுகின்றேன். நீங்கள் என் பெற்றோர்; நான் உங்கள் குழந்தை. நீங்கள் என் எஜமானன்; நான் உங்கள் அமைதியான கட்டளைக்கு ஏவல்செய்யத் தயாராகவுள்ளேன். அனைத்து இதயங்களிலிருந்தும் மணக்கும் பக்தியை ஒன்றுகூட்டி, என் ஆனந்தக்கண்ணீரால் கலந்து வைத்துள்ளேன். ஏக்கத்தினாலே பெருகும் என் ஒளிரும் தூய கண்ணீராறு உங்களை சந்திக்க விரைகின்றது. என் கொந்தளிக்கும் பக்திவெள்ளம் நிராசையெனும் பாலைவனத்தில் விரயமாக ஓடி வற்றாமலிக்க நீங்கள் அதைக் கவனிப்பீர்களா? என் காட்டாற்று பக்திவெள்ளம் உங்களை அடையும் சரியான பாதையில் பாயுமாறு நீங்கள் அதைக் கண்காணிப்பீர்களா? ---Myrrh = போளம் (சாம்பிராணி வகை)---.
137. Intoxicate me with the wine of Thy Love.
137. உன் பிரேமபக்தி மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு.
பக்தியின் மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு: நான் சாகும்வரை உன்னுடையதைக் குடித்துக் கொண்டே இருப்பேன். என் உலக ஆசைகள் மடிந்து, உன்னுள்ளேயே இனி நான் எப்போதும் வாழ்வேன். என் உடம்பின் ஒவ்வொரு உயிரணுவிலும் சிலிர்ப்பூட்டும் ஊற்று பொங்கி, உன்மேல் கொண்ட என் அன்பின் ஒவ்வொரு திறவின் வழியேயும் வெளிப்படுகின்றது. பக்தியிலேயே தோய்ந்து, உன் சாந்நித்தியம் நிலவும் மேலுலகத்தினிற்குள் நுழைவேன். குருட்டுத்தனமாக அங்குமிங்குமென தேடியலைந்த என் பக்தியின் வேகம், திடீரென ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திறந்தது; ஆஹா, என்னே ஒரு ஆனந்தவுணர்வு உன் ஜோதியை தரிசிக்கும்போது! ---cell - உயிரணு---
138. Open my soul's secret door.
138. என் ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திற.
நான் தனிமையில் திக்குத்தெரியாமல் கதறியழுது கொண்டிருக்கின்றேன். கண்கள் மூடியவாறு, இருளின் கதவுகளை வெகுகாலமாய் தட்டிக் கொண்டிருக்கின்றேன், அவை திறந்து உன் ஒளியை வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையால். என் நெஞ்சிலுள்ள கோடிக்கணக்கான தாப ஏக்கங்களால், உனக்காக நான் ஏங்குகின்றேன். நீ வருவாயா?
139. I want to hear Thy song in the silence of my soul.
139. என் ஆன்ம சாந்தத்தில் உன் கீதத்தை நான் கேட்க விரும்புகின்றேன்.
உன் சன்னமான குரல், "வீடு திரும்பு", என அழைப்பதை நான் அவ்வப்போது கேட்டுள்ளேன்; ஆனால் அக்குரல் பல ஜென்மங்களில் மேவிய முரட்டுத்தனமான ஆசைகளின் இரைச்சலினால் அமிழ்ந்து போயின. பின்னர், முட்டிமோதும் ஆசைக்கூட்டங்களைத் துறந்தேன். என் மனம் நாடிய தனிமையில், என் பக்தியானது உன் குரலைக் கேட்கப் பேராவலுடன் பொங்குகின்றது. என் மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கும் இந்த பூலோக சத்தங்களின் கனவுகளை அப்புறப்படுத்து: என் ஆன்ம சாந்தத்தில் என்றும் ரீங்காரம் பாடும் உன் அமைதியான குரலை நான் கேட்க விரும்புகின்றேன்.
140. Nothing can steal my love for Thee.
140. உன்மேலுள்ள அன்பை எதனாலும் திருடிச் செல்ல முடியாது.
சத்தமாகவோ அல்லது முணுமுணுத்தோ சொல்லும் பிரார்த்தனை வார்த்தைகள் உன்மேலுள்ள அன்பை திருடிச் செல்லாமல் இருக்கட்டும். ஆன்மாவின் பேச்சற்ற மொழியினால், நான் உன் அவசியத்தை உணர்த்துவேன். உன் மொழி மௌனம், அம்மொழியினால் என் அமைதியின் வாயிலாக, நீ என்னிடம் பேச வேண்டும்; நீ எப்போதும் என்னை நேசித்துக்கொண்டே இருந்திருக்கின்றாய், ஆனால் நான்தான் அதனை அறியாமல் இருந்திருக்கின்றேன் என்ற உண்மையை எனக்கு உரைக்க வேண்டும்.
141. I will be the naughty baby of the Divine Mother.
141. நான் தெய்வமாதாவின் விஷமக் குழந்தையாக ஆவேன்.
மலைகள், பெரு நீர்வீழ்ச்சிகள், வனப்பான காட்சி என இவைகளால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கை அரங்கத்தில், நான் வெகுகாலமாக விளையாடிக் கொண்டிருக்கின்றேன். விளையாட்டில் சோர்வுற்று, நான் உனக்காக அழும்போதெல்லாம், என் ஆசை ஜன்னல்வழியாக புதிதாகப் புகழ், நண்பர்கள், செழுமை எனும் பொம்மைகளைக் கொடுத்து என்னை அமைதிப்படுத்தி விடுவாய். இப்போது, இந்த முறை, தெய்வ மாதா, நான் உன் விஷமக் குழந்தையாக ஆவேன். நான் தொடர்ந்து இடையறாமல் அழுவேன். பூலோக இன்ப பொம்மைகள் என் அழுகையை இனி நிறுத்த முடியா. தெய்வ மாதா, நீ விரைவாக வந்துவிடு; இல்லையேல் நான் அகிலப் பிரபஞ்சத்தையும் என் கதறலினாலே எழுப்பிவிடுவேன். உன் அனைத்து உறங்கும் குழந்தைகளும் எழுந்து என்னுடன் சேர்ந்து கூக்குரலிடுவார்கள். உன் பிரபஞ்ச வீட்டுவேலையை சற்று விட்டு ஒதுக்கு! என்னைக் கவனி. நான் உரிமையுடன் வேண்டுவது உன்னை மட்டுமே, விளையாட்டுப் பொருள்களையல்ல!
142. Make me clean again, Divine Mother.
142. தெய்வத்தாயே, மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து.
புனிதமும் தூய்மையுமுடைய உன் தேசப்பொலிவுடன் என்னை அலங்கரித்து இங்கு விளையாட அனுப்பியுள்ளாய். நான் இருளில் அறியாமையினால் விளையாடி துன்ப வலையில் அகப்பட்டு வழிதெரியாமல் என்னை இழந்து தவித்தேன். நான் தூய்மையாகச் சென்றேன், ஆனால் உன்னிடம் திரும்பி வருகையில் மோகச் சேற்றை முழுவதுமாய் பூசிக்கொண்டு வந்துள்ளேன். தெய்வத்தாயே, என்னை உன் ஞானத்தினால் கழுவி மீண்டும் என்னைத் தூய்மைப்படுத்து.
143. I loved all things, that I might learn to crave Thee only.
143. உனக்காக ஏங்குவதைக் கற்கவே நான் பிரபஞ்சத்திலுள்ள சகலத்தையும் விரும்பியுள்ளேன்.
நான் எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தாலும், இருளில் கிடந்து உழன்றாலும் [எனக்குக் கவலையில்லை; ஆனால்], அன்னை பராசக்தியே, உன் ஞாபகமாக எரியும் என்னுடைய சிறு விளக்கு, அவநம்பிக்கைக் காற்றால் அணைக்கப்படாமல் பார்த்துக்கொள், [அது போதும்]! நான் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் விரும்பிக் கண்டுகொண்டது யாதெனின் உனக்காகத்தான் நான் உண்மையில் ஏங்கியுள்ளேன் என்பதுதான். வா! என்னுடனே எப்போதும் இரு!
144. Make me feel Thee through the touch of the breeze.
144. தென்றல் என்னைத் தொடும்போது உன்னை நான் உணருமாறு செய்.
இறைத்தந்தையே, தென்றல் என்னைத் தொடும்போதும், சூரியவொளி என் உடம்பை மேவும்போதும் அவற்றில் உன்னை நான் உணருமாறு செய். மலர்களின் சுகந்தத்தில் விரவி என்னுள்ளே வந்து புகு. என் அத்தியந்த எண்ணங்களின்மூலம் உன்னை நான் எப்போதும் உணருமாறு செய். உன்னை நான் மறந்தாலும், என்னை நீ மறந்துவிடாதே. உன்னை நான் நினைவு கூரவில்லையெனினும், என்னை நீ நினைவில் கொள். எப்போதும், என்றும், எக்கணமும் என்னுடனேயே நீ இரு.
145. Make me win the battle of life.
145. என்னை வாழ்க்கைப் போரில் வெற்றியடையச் செய்.
ராஜாதிராஜனே, சுயக்கட்டுப்பாடு, சாந்தம் எனும் நற்குணங்களைக் பயில்விக்கும் ஒழுக்கக் கலாசாலையில் எனக்கு நீ பயிற்சிகொடு. ஆக்கிரமிக்க முனையும் இருள், பற்று, பேராசைக் கூட்டங்களுக்கு எதிராக நீ, பகவான் கிருஷ்ணரைப் போல, நற்குணங்களுக்குத் தெய்வ நாயகனாயிருந்து போரில் அவைகளை வழிநடத்த வேண்டும். என் மனத்தின் மேலுலக ராஜ்ஜியத்தினுள் வலிமையான தீய படைவீரர்கள் நுழைவதைத் தடுத்து நீ காக்க வேண்டும். உன் சமாதானக் கொடி என் ஆன்ம உயிர்மண்ணில் எப்போதும் தொடர்ந்து பறக்கவேண்டும்.
146. Demand to eject enemies of bad habits.
146. கெட்ட பழக்கங்களெனும் எதிரிகளை வெளியேற்ற உரிமையுடன்-வேண்டுதல்.
உக்கிரமான எதிரிகள், பிடிமானமுடைய அசுத்த சஞ்சலமனப் பழக்கங்கள், என் இதய எல்லைக்குள் அவ்வப்போது புகுந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. என் சாந்தச் செழிப்பைக் கொள்ளையடிக்க யத்தனிக்கும் அந்த எதிரிகளை நான் வெல்லுமாறு செய். என் போராடும் சக்திகளை ஊக்குவித்து பூரணதிருப்தியெனும் ராஜ்ஜியத்திற்கு நீ வழிநடத்து.
147. Demand not to be enslaved by the ego or by passivity.
147. அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.
என் சுய இச்சாசக்தியை நான் உபயோகிக்க விரும்புகின்றேன், ஆனால், இறைத்தந்தையே, நீ அதை வழிநடத்து. அதை நீ பூரண திருப்தியெனும் பொன்மய சொர்க்கத்திற்குப் பிரயோஜனப்படுமாறு வழிகாட்டு. நீ என்னைப் பலனற்ற ஆசைகளாலும், தளரும் நம்பிக்கையாலுமான சிறைக்கதவுகளுக்குப் பின்னால், என்னைக் குறுக்கி அடைக்காமல் இருப்பதை அறிவதனால், நான் எல்லையற்ற அனந்தத்தின் ஆனந்தக்குழந்தையாகவே இருப்பேன். பழிக்கத்தகு சோம்பல் சங்கிலிகளை நான் உடைத்தெறிவேனாக. அதனால், நான் குறுக்கங்களும், மாயமோகங்களுமாலான காட்டினை, பயமற்ற சுதந்திரத்துடன் வீறுநடை போட்டுத் தீ போலக் கடந்து செல்வேன். என் புல்லிய அஹங்காரம், "என் பெருமையைக் காண்! என்னை வழிபடு!" என மதம்கொண்டு பீற்றுகிறது. ஆனால், நான் அதன் மாயத்தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, கற்பனைக்கெட்டாத அழகுடைய மற்றொரு ரூபத்தைக் காண்பேனாக. உன்னைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் அந்தத் தூசிநிகர், மார்தட்டும் மாயவித்தைக்காரனின் வார்த்தையைக் கேட்பதைத் தவிர்த்து, அமைதியுடன் இயைந்த என் ஆன்மக் காதுகளால், உன் ஒப்பரியாத குரலினால், "நானே அவன்!" என்று காலங்காலமாக சன்னமாக ஒலிக்கும் பிராணவாயுச் சிறகுகளுடன் கூடிய மணங்கமழும் சங்கீதத்தை, நான் மனம் லயிக்கக் கேட்பேனாக.
148. I offer Thee a garland of devotion.
148. நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.
உன் வருகையை எதிர்நோக்கி என் இதயத் தோட்டத்தில் என் பக்தி மலர்கள் மலரட்டும். அம்மலர்களை மாலையாய்க் கோர்த்து, அதை உனது பாத சரணங்களிலே சமர்ப்பிப்பேன்!
149. Demand to set fire to the forest of darkness.
149. இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.
மாயமோகத்தினாலான இருண்ட காட்டில், நான் பக்தியெனும் நெருப்பைப் பற்றவைத்தேன், ஆனால் புகைமூட்டத்தினால் அதன் தீ வளர்வது தடைப்பட்டது. பின்பு, நீ வந்து சில பலவீனங்களுக்குத் தீ வைத்தாய். உன் நெருப்பு சீக்கிரமாகப் பரவி, என் ஆசைகளெனும் முட்செடிகள், டாம்பீகமெனும் நெட்டையான மரங்கள், முரட்டுத்தனமெனும் அடர்ந்து மண்டிய புதர்கள் என இவையாவற்றின் மீதும் விரிந்தது. என் இருளினாலான முழு காடும் எரிகின்றது; உன் ஒளியை நான் எல்லாத்திசைகளிலும் காண்கின்றேன். இறைத்தந்தையே, உன் உதவிக்கு நான் நன்றிகூர்கின்றேன். நான் அனைவருக்காகவும் ஒளியினாலான பாதையை உருவாக்க விரும்புகின்றேன் - எனக்கு நீ இப்போது உதவியது போல் எப்போதும் உதவு!
150. Save me from wrong beliefs.
150. தவறான நம்பிக்கைகளிலிருந்து என்னைக் காப்பாயாக.
இறைத்தந்தையே, நான் தவறான நம்பிக்கைகளின் சேற்றில் வழிதவறித் தொலைந்துவிட்டேன்; என் வீட்டிற்கு வழி தெரியவில்லை. நான் உன் வரவை எதிர்பார்த்து என் ஆன்மக்கதவுகளை எப்போதும் திறந்தே வைத்துள்ளேன், ஆயினும் நான் உன்னை இன்னும் கண்டுகொள்ள முடியவில்லை. என் இருளின்மேல் வந்துதித்து, தத்தித் தடுமாறும் என் மனத்திற்கு துருவ நட்சத்திரமாய் ஒளிர். என்னை என் வீடாகிய உன்னிடம் நீ வழிநடத்து!
151. Lead my body-chariot on the right path (Inspired by the Hindu Scriptures).
151. என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.
என்னால் என்னை ஆட்கொள்ள நீ எனக்குக்கற்பி. என் ஐம்புலக் குதிரைகளை மனக்கடிவாளத்தினால் பூட்டி, என் விவேகமெனும் தேரோட்டி அவைகளை நன்கு வழிநடத்த நீ எனக்கு அருள்புரி. என் ஜீவாத்மா, இந்த உடம்பெனும் சிறு தேரில், ஒழுக்கமெனும் சக்கரங்களுடன், பற்பல பூலோக-ஜென்மங்களெனும் வேகவழிப்பாதைகளில் வெற்றிகரமாக சுற்றி, இறுதிப் பந்தயத்தின் கடைசிச் சுற்றில் ராஜாதிராஜனின் வரம்பற்ற அரசத்தேரில் தான் பத்திரமாக அமர்ந்திருப்பதை உணரும்வரை, ஓடிக் கொண்டேயிருக்கட்டும்.
152. Teach me not to be deceived by the senses.
152. புலன்களினால் ஏமாறாமல் இருக்க எனக்குக் கற்றுக்கொடு.
தெய்வகுருவே, என் ஆன்மாவின் நிரந்தர இன்பத்திற்கும், நிலையற்ற புலனின்பங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிய என்னைப் பழக்கு. என் கண்களை நன்கு திறந்திருக்கமாறு செய்; அதனால், புலன்கள் கள்ளத்தனமாக ராஜவேஷம் பூண்டு, கானலில் தோன்றும் நீர் போன்று, புனிதமான இன்பத்தை நிஜம்போலப் பொய்யாகக்காட்டி, என் வாழ்க்கை மாளிகைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து என்னை ஏமாற்றத்துணிவதைத் தடுக்கமுடியும். விவேகமில்லாமல் தடுமாறும் என் புலன்களை ஒழுக்கப்படுத்து, அதன்மூலம் பளபளவென மின்னிப் புலன்படும் தோற்ற ஜாலத்தைக் கடந்து, அவைகளினால் ஏற்படும் சுகங்களை ஆன்மீகமயமாக மாற்றி, எளிமையின் தூய வெண்ணிறத் திரைக்குப்பின்னே மறைந்திருக்கும் தெய்வீக சுகத்தை அவை எப்போதும் நாடப் பழகட்டும்.
153. Teach me, that my senses may contact nothing but the good.
153. என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.
நான் நல்லவற்றைத் தவிர வேறெதையும் காணாதவாறு எனக்கருள். நான் சுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் தொடாதவாறு எனக்குக்கற்பி. நான் உன் குரலை மட்டுமே எல்லா நற்சொற்களிலும் கானத்தின் இனிமையழகிலும் கேட்குமாறு என்னைப் பழக்கு. பேருணர்வின் மலர்களிலிருந்து வீசும் தூய மணத்தை மட்டுமே நுகருமாறு என்னை வழிநடத்து. ஆன்ம-புஷ்டியளிக்கும் முழுமையான ரசத்துடனுள்ள உணவை உண்டுகளிக்க என்னை அழை. உன் தொடுதலை நினைவுபடுத்துவதையே நான் தொடுமாறு எனக்குக்கற்பி.
154. Keep me away from evil.
154. என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.
நான் தீயன கேட்காமலிருக்க, தீயன பார்க்காமலிருக்க, தீயன பேசாமலிருக்க, தீயன கனாக்காணாமலிருக்க, தீயன எண்ணாமலிருக்க, தீயன உணராமலிருக்க எனக்கருள்.
155. Demand for the opening of the spiritual eye, the Eastern Star of Wisdom.
155. கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்தினைக் காண எனக்கருள். அது என் மனிதக்கண்களின் முன் அல்லும் பகலும் பிரகாசிக்கட்டும். வெகுகாலமாய் லோகாயத விஷயங்களின் பொய்யான-ஜொலிப்பில் என் கண்கள் குருடாகியுள்ளன. நான் அவைகளை எப்போதும் வெளிமுகமாகவே பார்த்து வந்ததால், அவற்றின் உள்ளேயுள்ள பேருணர்வைப் பார்க்க இயலவில்லை. நான் பொருட்களெனும் கடுகு-விதைகளைத்தான் கண்டேனேயன்றி, அதனுள்ளே மறைந்திருக்கும் பேருணர்வெனும் எண்ணெயைக் காணவில்லை. ஞானதிருஷ்டி அளிக்கும் என் மூன்றாம் கண் இப்போது திறந்து கொண்டுள்ளது. அதை, நீ எப்போதும் திறந்தே வைப்பாயாக. மெய்யுணர்வின் அந்த ஒருமைக்கண் என்னைப் பொருட்களின் திரையை ஊடுருவி, கிறிஸ்துவின் [கூடஸ்த சைதன்யத்தின்] வரம்பற்ற இருப்பை எல்லாவிடங்களிலும் காணுமாறு செய்வாயாக. என் புனித, அறிவார்ந்த எண்ணங்கள், இந்த ஞான நட்சத்திரத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்று, எல்லாவற்றிலும் கிறிஸ்துவை சந்திக்குமாறு எனக்கருள்வாயாக.
156. Demand for the rising of the Aurora of Intuition.
156. மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
வரம்பற்ற பேருணர்வே, உன் இருப்பு கதகதப்பான சூரியனின் கதிர்களிலும், குளிர்ந்த நிலவொளியிலும் சமமாக மேவி அவைகளின் பின் மறைந்துள்ளது. அந்த ஒளிமண்டலங்கள், அழகிய இயற்கைக்கன்னியின் பொருள்களாலான மேலாடையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதேயன்றி உன்னைக் காட்டுவதில்லை; எனவே, அவைகள் என்னைப் பொறுத்தவரை இருட்டிற்குச் சமானம். இவ்விதமாக, சர்வத்தையும்-பிரகாசிக்கும் உன் பெருஞ்ஜோதி பொருட்களை-பிரகாசிக்கும் ஒளிமண்டல இருளிற்குப் பின்னால் மறைந்துள்ளது. இந்த இருளை விலக்கு! நான் சுய இருளினால் சூழப்பட்டு, என் கண்களை மூடி அமர்ந்திருக்கையில், மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பின் பிரகாசம் என்னுள் சுடருமாறு செய்; அந்த ஒளியின்மூலம் நான் உன்னை வழிபடும் கண்களால் தரிசிப்பேன்.
157. Keep my Spiritual Eye open forever.
157. என் ஆன்மீகக் கண்ணினை எப்பொழுதும் திறந்தே இருக்க வை.
ஆன்மீகக் கண்ணே*, ஒருமுறை திறந்த பின் என்முன் எப்பொழுதும் திறந்தே இரு. அதன்மூலம், நான் வாழ்க்கைப் பாதையிலிலுள்ள பள்ளங்குழிகளைத் தவிர்த்து, உன் சாந்தி அரண்மனைக்கு இட்டுச்செல்லும் விரைவுவழித் தடத்திற்கு செல்லமுடியும். என் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எனக்கு தீர்வைக் காண்பி. ---ஆன்மீகக் கண்: மூன்றாம் கண், நெற்றிக்கண், ஒற்றைக்கண் (பைபிள்) எனவும் அழைக்கப்படும். இது புருவ மத்தியில் நெற்றிப்புறத்தில் ஜோதியாக விளங்கும் "கண்".
158. With every stroke of my Prayer, I am moving nearer to Thee.
158. ஒவ்வொருமுறை என் பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன்.
தந்தையே, உனக்காக ஏங்கும் என் ஏக்கக்கடலுள் பெரும்சோதனைச் சூறாவளிகளினால் அலைக்கழிக்கப்பட்டு நான் நீந்திக் கொண்டிருக்கின்றேன். சுக-துக்கமெனும் அலைகளின்மேல் நான் மிதந்தாலும், அலட்சியமெனும் ஆழத்திற்கு நான் அமிழ்ந்தாலும், நான் உன் கரையில்லாக் கரையையே தேடிக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொருமுறை நான் பலமாக பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன். நான் ஒருக்காலும் நீந்துவதிலிருந்து ஓயமாட்டேன், ஏனெனில் நீ என் வருகைக்காகக் காத்துக் கொண்டே இருக்கின்றாய் என்பது எனக்குத் தெரியும்.
159. Demand to be fed with Cosmic Rays.
159. பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
நான் அமைதிக்கோயிலுக்குள் நுழைய ஆரம்பித்தேன். கண், காது, சுவை, நுகர்வு, தொடுவுணர்வு ஆகிய மினுமினுக்கும், கவனத்தைக் குலைக்கும் மின்பல்புகளை அணைத்தேன்; ரத்தத்தை-சுத்தீகரிக்கும் மூச்சினைச் சத்தம் செய்யாமல் இயங்குமாறு பணித்தேன். தெய்வத்தாயே, உன் காலடிச்சப்தம் கேட்டவுடன், என் பலகோடி உயிரணுக்களை ஸ்தூல ரத்தத்தினால் அடிமைப்படுத்தும் இதயத்தை நான் அவ்விதம் செய்யாமல் இருக்கச் சொன்னேன், ஏனெனில், நீ வரும்போது உன்னுடன் உயிரளிக்கும் ஆன்மீகக்கதிர்கள் நிரம்பிய குவளையை ஏந்தி வந்தாய். தெய்வத்தாயே, அவைகளால் எனக்கு மேன்மேலும் ஊட்டிவிடு! இதயம், உயிரணுக்கள், மனம், எண்ணங்கள் ஆகியன இனி தேய்மானம் அடையாது, ஏனெனில், உன் நிரந்தர உயிரினால் சாகாத்தன்மை பெற்றதால்.
160. Demand for the cure of the anger habit.
160. சினம் கொள்ளும் பழக்கத்தைக் குணமாக்க வேண்டுதல்.
பரப்ரம்மமே! எங்கள் எல்லோருக்கும் தந்தையே! என் மூளையைத் தகிக்கும், நரம்புகளைப் புடைக்கும், ரத்தத்தை விஷமாக்கும் கோபம் என்னும் தீய நோய் என்னை அணுகாமல் காப்பாயாக. என்னைச் சினம் தீண்டும் போதெல்லாம், மனக்கண்ணால் என்னை ஆராய்ந்து பார்க்கும் கண்ணாடியை என் முன் காட்டு. அஷ்டகோணலாய், அசிங்கமாய் என்னாலேயே சகிக்க முடியாத சினம் தாக்கிய மூஞ்சியை நான் பிறரிடம் காட்டும்படி செய்து விடாதே! என்னையும், பிறரையும் துயர்ப்பட வைக்கும் கோபத்தைக் கரைக்க எனக்குக் கற்பி. எனக்கும் பிறருக்கும் இடையிலுள்ள பரஸ்பர அன்பினை என் சுயவிரக்தியால் மாசு படுத்தாமல் இருக்க அருள்புரி! மேன்மேலும் கோபம் கொண்டு என் கோபத்தை வளர்க்காதிருக்க ஆசிர்வதி. என் சினத் தீயினால் பொசுங்கிய பிறர் நெஞ்சங்களில், சுயமரியாதை மருந்து கொடுத்து, கருணைக்களிம்பு தடவி நான் அவர்களைக் குணப்படுத்த எனக்கு வரம் அருள்! துன்புறுத்தும் கோபப்புயலால் என் அன்புப்பொய்கை எப்போதும் சஞ்சலமடையாதிருக்க ஆணையிடு! மிக மோசமான என் பகைவனும் என் சகோதரனே என எனக்கு அறிவுறுத்து. என்னை நேசிப்பது போலவே, அவனையும் நீ நேசிக்கின்றாய் என்னும் உண்மை எனக்கு எப்போதும் மறக்காமல் ஞாபகத்தில் இருக்க வரமருள வேண்டும்!
161. Demand to be able to conquer fear.
161. பயத்தை வெல்லும் ஆற்றலை உரிமையுடன் வேண்டுதல்.
எல்லையற்ற பேருணர்வே, பயப்படுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை எனக்கு நன்கு புரியுமாறு கற்பி. மரணம் என்பது ஒருமுறை நேர்ந்தால், அது மறுபடியும் வரப்போவதில்லை என்பதை என் நினைவில் நிறுத்த உதவு; எப்போதோ அது நேரும்போது, இயற்கையின் கருணையால் அதைப் பற்றிக் கவலை ஏதுமின்றி, என் அறிவிற்கு எட்டாமலேயே அது நேர்ந்துவிட்டுப் போகட்டும். அதனால், நான் அனாவசியமாக மரணத்தை நினைத்து நடுங்கத் தேவையில்லை. நானே கற்பித்துக் கொண்ட விபத்தின் பயங்கரத்தினாலே என் நரம்புநாளங்களை முடக்கி, அதனை ஒருக்கால் நிஜமாகவே நடக்குமாறு செய்துவிடாமல் இருக்க எனக்குக் கற்பி. வாழ்க்கையின் கஷ்டங்களையும் சோதனைகளையும் மேற்கொள்ள, உன் குழந்தையாகிய எனக்கு அளித்த வரம்பற்ற ஆற்றலை நான் பயத்தினால் மூர்ச்சையடைவிக்காமல் இருக்க எனக்கு அருள்புரி. நான் உறங்குகையிலும், விழித்திருக்கையிலும், கவனத்துடன் இருக்கும் போதும், கற்பனைக்கனவு கண்டுகொண்டிருக்கும் போதும், உன் எல்லாம்-புரக்கும் இருப்பு என்னைச் சூழ்ந்துள்ளதை நான் அறியுமாறு செய். நான் இதை நன்கு உணரும்படி செய்: உறுதியான, மனிதனால் கட்டப்பட்ட கோட்டைக்குள்ளே நான் அங்க கவசங்களை தரித்துக்கொண்டு இருந்தாலும், நீ என்னுடன் கூடி இல்லையெனில் நான் நோய், பூகம்பம், விபத்து இவற்றிற்கு ஆளாகக்கூடும். மாறாக, துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பறந்து கொண்டிருப்பினும், பாக்டீரியக் கிருமிகள் நிறைந்த இடத்திலும், நீ என்னுடன் இருப்பாயெனில் எக்காலத்திலும் காக்கும் உன் கோட்டை மதில்சுவரின் பின் பத்திரமாக நான் இருப்பேன்.
162. Demand for control of the unruly senses.
162. தறிகெட்டப் புலன்களினைக் கட்டுப்படுத்துவதற்காக உரிமையுடன் வேண்டுதல்.
பேருணர்வே, என் தணியாத புலனாசைகள் தவறான செயல்களால் ஊட்டப்படாமல் இருக்கட்டும். அவைகள் என் நிஜமான இன்பத்தை மட்டுமே நாடுமாறு கட்டுப்படுத்த எனக்குக் கற்பி. என் புலன்கள் தறிகெட்டுப் போனால், அவைகளின் ஆசைகளை ஒத்துழையாமையெனும் தடி கொண்டு நிர்வகித்து, அவைகளை முழுமைபொருந்திய செயல்களில் வழிநடத்த எனக்குக் கற்பி. மின்சாரம் எப்படி ஒரு கட்டிடத்தை ஒளிபெறச் செய்யவும் அல்லது அதனை அழிக்கவும் உபயோகப்படுமோ, அதேபோல், மனிதசக்தி ஒருவரின் வாழ்வைப் புகழ்பெறவும் அல்லது சீர்குலைக்கவும் வைக்க முடியும். அதனால், நீ ஒப்படைத்தளித்த என் கட்டுக்குளுள்ள ஆற்றல்களை நான் அறிவுடன் நிர்வகிக்கக் கற்றுக்கொண்டு, இருமுனை வீர்யமுடைய என் உடைமைகளை நல்லவற்றிற்கு மட்டுமே பயன்படுமாறு உபயோகிப்பேனாக. பலநாக்குத் தணல்களாய் எரியும் என் பேராசைத் தீயை ஞான வெண்ணெருப்பினால், அவைகளுடன் அவைவிடும் சாம்பலையும் பொசுக்கி அழிக்கட்டும். என் எல்லா தறிகெட்டப் புலன்களும் ஆனந்தமாய் உன் நெறிப் பிரகாரம் இயைந்து ஒழுகும் வரை, பேருணர்வே, உன் இச்சையுடன் இயைந்து ஒழுகி, என் சிறு இசைப்பகுதியை வாசித்து, என் சிறு கடமையை ஆற்றி, என் சிறு கீதத்தைப் பாடி ஒத்துழைப்பேனாக. என் புலன்விழைவுகள் ஆன்மவிழைவுகளாக உருமாறட்டும். பேருணர்வே, உன் விருப்பத்தின் பாதையிலிருந்து புலன்கள்பக்கம் நான் ஒருக்கால் தவறி நழுவ நேர்ந்தால், உன் ஒழுக்கமெனும் செங்கோலை நான் உணருமாறு செய்வாயாக.
163. Make me feel that everything is Joy.
163. எல்லாம் ஆனந்தமயம் என்று என்னை உணரச் செய்.
நான் ஆனந்த மஹாசமுத்திரத்தில் பொங்கி எழுந்த ஓர் இன்ப நுரைக்கடல். என் வாழ்க்கைச் சாகரம் ஆனந்தப் பேரலைகளால் நிறைந்துள்ளது. முடிவற்ற என் புன்னகையின் சிற்றலைகளும் வாழ்வின் எதிரலைகளும், எல்லா இதயங்களுக்கும் பரவிச்சென்று, இறுதியில் எல்லையற்ற ஆனந்தத்தின் நெஞ்சில் ஓய்வெடுத்துறங்க செல்கின்றன. எல்லா ஆனந்தப் பேரலைகளின் மேலும் நடனமாட விரும்பும் நானொரு ஆனந்தத்தின் சிற்றலை. ஆனந்த சாகரமாகப் பரந்துவிரியப் போராடும் நானொரு ஆனந்தத்தின் சிற்றலை. என்னை ஆனந்த ஒளிவிளக்காக ஆக்கு, அதன்துணையால் புயலால் அவதியுறும் வாழ்க்கைக் கலனங்களை வழிநடத்திப் பத்திரமாக ஆனந்தக் கரைக்குக் கொண்டுசேர்ப்பேன். ஒவ்வொரு செயல் கொடியும் ஆனந்தத் திராட்சைக் கொத்துக்களை சுமக்கட்டும். நான் வாழ்வின் அனைத்துச் சிறு இன்பங்களும் நிறைந்த திராட்சைத் தோட்டத்திலிருந்து சேகரித்த தேவ மதுரசத்தைப் பருகுவேனாக.
164. Slip Thy dewdrop in Thy Sea, not to lose itself, but to enlarge itself. .
164. உன் பனித்துளியான என்னை உன் கடலில் சங்கமம் செய்; சங்கமிப்பது என்னை இழப்பதற்காக அல்ல, ஆனால் விரிவாக்குவதற்காக.
மயக்கும் புலனின்பங்களாம் தாமரையிலை மீது சறுக்கிச்சென்று, உன் ஒளிரும் ஞான சாகரத்தில் ஆழும், உன் அன்பினில்-தோய்ந்த பனித்துளிகள் போல் நான் ஆக எனக்குக்கற்பி. கடந்த-நிகழ்-வருங்கால இலையின்மேல் விளையாடும் நான் உன் அழிவற்ற பனித்துளி. ஆசையின் தாகத்துளைகள் என் பலத்தை உறியாமல் இருக்க, என் மனம் ஓடும் பாதையில் விவேகக் களிம்புடன் கூடிய எண்ணெய்விட்டுப் பராமரித்துள்ளேன். உன் கரையற்ற கடலில், அதிர்ந்துகொண்டே மிதக்கும் பொய்ம்மையான பிறப்பு-இறப்பு இலையின்மீது தத்தளித்துக் கொண்டிருக்கும் நான் உன் ஊதாரிப் பனித்துளி. உன் பொறுப்பற்ற பனித்துளியான நான் இறுதியில் வீடுநோக்கித் திரும்புகின்றேன். இந்த நடனலயம் முடிந்தபின், உயரச்செல்லும் பிறப்பின் காலடிகளும், கீழேவிழும் மரணக் கூட்டிசையின் காலடிகளும் ஓய்ந்தபின், உன் கடலுக்குள் நான் வழுக்கிக் கொண்டு வந்துசேர்வேன். நான் என்னை இழக்கவிரும்பவில்லை - இந்த சின்னஞ்சிறு பனித்துளியின் ஒரே ஆசை என்னவெனில், உன்னோடு சேர்ந்ததினால் நான் நிரந்தரத்தின் மாபெரும் பனித்துளியாக ஆகவேண்டும் என்பது மட்டுமே. கடவுள் நாட்டம் கொண்ட எல்லா உதடுகளினாலும் பருகப்படும் நான் ஒரு வானவில்-வண்ணம்கொண்ட சர்வவியாபக பனித்துளியாக இருப்பேன்.
165. The fire of my ambition and all my rainbow-dreams are for Thee.
165. என் லட்சியக்கனலும், எல்லா வானவில்-கனவுகளும் உனக்காகவே.
என் வானவில்-கனவு விறகுகளால் மூட்டப்படும் என் லட்சியத்தீ மேன்மேலும் வளர்கிறது. பழைய கனவுகள் நினைவிலிருந்து மறைய மறைய, விடாப்பிடியான புது எதிர்பார்ப்புகள் தணிக்க முடியாத, புதிதான சுடர்களாய் பெருகி, என் புத்துணர்வு சக்தியெனும் திடமான பல மரங்களைச் சுட்டெரித்து விழுங்குகின்றன. என் தோட்டத்தை வாழ்க்கையின் பசுமை நிறைத்திருந்தது. இப்போது, உயிருணர்ச்சி பாதி இழந்த, ஒளிமங்கிய நடைப்பிணங்கள் இருண்ட சந்தேகங்களினூடே உலவுகின்றன. அவை உன்னை நோக்கி நான் எடுத்து வைக்கும் என் தயக்கமான காலடிகளை மிரள வைக்கின்றன. தெய்வ நண்பா, என் உதவிக்கு வா, வழித்துணையாக வந்து என்னை இடைவிடாமல் முன்னோக்கி விரைவாக வழிநடத்து.
166. We buy everything but Thee. Pray give me Thyself.
166. உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நாங்கள் வாங்கிவிடலாம். உன்னை எங்களுக்கு வழங்குமாறு இறைஞ்சுகின்றோம்.
கடவுளே, "ஊனுடம்பின் தேவைகள், பசி, மற்றும் லோகாயத சுகங்கள் எனும் பெரும்பாரத்தினால் நீ என்னை பிணைத்துக் கட்டிவைத்துள்ளாய்" என்று நான் புலம்பிக் குறைகூறாமல் இருப்பேனாக. எப்போதும் வேலையாக இருக்கும் வியாபாரிகளை அதற்காக நான் அவர்களைக் குற்றம் சாட்டமாட்டேன். நீ தேனீயை சுறுசுறுப்பாய் இயங்குமாறு செய்யவில்லையா? மழையினை உயிர்-நல்கும் பயிர்களின் மேல் தவறாமல் பொழிய வைக்கவில்லையா? நீர்சுமக்கும் கருமேக வானக வாகனங்களைக் கொண்டு தாகத்தால் ஏங்கும் பசுஞ்செடிகளின்மேல் உயிர்-நீரைத் தெளிக்கவில்லையா?தெய்வக்குயவன் இந்த பூமி எனும் மண்ணுருண்டையை வடித்து, அதனைத் தன்பாதையில் தனக்குத்தானே தொடர்ந்து சுழலவைத்துக் கொண்டு, அதனைக் கதிரவனின் கதிரால் கோர்த்து, அது அக்கதிரவனை லயம் தப்பாமல் சுற்றிவருமாறு இடையறாமல் இயக்குகின்றான். பெரும்பிரபஞ்சக்குயவன் தனது உயிர்ச் சக்கரத்தைக்கொண்டு அழியக்கூடிய ஊன் பாத்திரங்களாலான பலகோடானுகோடி உருவங்களைப் படைக்கின்றான். அமீபா, சிட்டுக்குருவி, விண்வெளிக்காட்டில் உறுமும் பிரம்மாண்டமான நெருப்புகக்கும் கோளங்கள் - என இவையாவும் அவனது செயல்களில் சிலவற்றைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளன. வானில் தோன்றும் கணநேர வெண்ணெருப்பும் மழை பெய்வதற்கு உதவுகின்றது. உயிர்களின் அரசே, நீ தான் எல்லாத் தொழிலாளர்களிலும் மிகுந்த சுறுசுறுப்பானவன். ஓர் குருவி கீழிறங்குவதையும் பார்த்துக்கொண்டு, உடற்சதையில் சிறு கீறலையும் குணப்படுத்திக்கொண்டு, வால்நட்சத்திரத்தின் பாதையையும் வகுத்துக்கொண்டே, நீ எப்போதும் கவனத்துடன் இருக்கின்றாய். நீ கட்புலனாகா உன் தோற்றத் தொழிற்சாலையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய். உன் இயற்கைப் பொருட்களை உற்பத்தி செய்பவனும் நீயே, விளம்பரப்படுத்துபவனும் நீயே. ஆரோக்கியம், மனோசக்தி, ஞானத் தங்கக்கட்டிகளை எங்களுக்கு விற்கும் நீ தெய்வ விற்பனையாளன். நீ எங்களை எல்லாவற்றுக்கும் ஏதோவொரு வழியில் சம்பாவனை கட்டச்செய்கின்றாய்! நாங்கள் எங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக, சுகாதார வாழ்வினை மேற்கொள்ளவும், நல்ல உணவுப் பொருட்களை நாடி உட்கொள்ளவும் நாங்கள் செய்யும் முயற்சியின் மூலம் ஈடுகட்டச் செய்கின்றாய். எங்கள் மனக்குடிலை வெளிச்சப்படுத்தத் தேவையான மின்சார சக்தியை நாங்கள் நாகரீக நாணயங்களைக் கொடுத்து விலைக்கு வாங்குகின்றோம். பக்தியின் தங்கக்கட்டிகளை கொடுத்து உன்னை எங்கள் பிடியில் ஒருக்கால் சிக்குமாறு செய்கின்றோம். நாங்கள் மற்ற எல்லாவற்றையும் ஏதாவதொன்றைக் கொடுத்து வாங்கிவிடலாம்; ஆனால் மக்கள் சிலர் உன்னை விலைகொடுத்து வாங்க முயல்வதை நீ நன்கு அறிந்தபோதிலும், நீ மட்டும் விற்பனைக்கு அல்ல என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். விலைமதிக்கமுடியாத ஒன்றே, உன்னை ஒருவராலும் வாங்கமுடியாது; உனக்கு நிகர விலை நிர்ணயிக்கவே முடியாது. ஆயினும், நாங்கள் உன் குழந்தைகள் - உன் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ராஜ்ஜியத்திற்கு உரிமையுடைய உன் வாரிசுகள் - என்று அறியும்போது, நீ உன்னை எந்த நிபந்தனைகளுமின்றி வழங்குகின்றாய்.
167. Teach us to consider no work more important than Thy work.
167. உன் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி.
பேருணர்வே, உன் ஆன்மீகச் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி, ஏனெனில் உன்னிடம் இருந்து பெறும் சக்தியினால் அன்றி எந்த ஓர் செயலும் செய்ய சாத்தியமில்லை. உனக்கு ஆட்செய்யும் கடமையை விட வேறெந்த கடமையும் முக்கியமானதன்று என்று உணர எங்களுக்குக் கற்பி, ஏனெனில் நீயில்லாமல் எந்த ஓர் கடமையும் சாத்தியமில்லை; உன்னை எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் நேசிக்க எங்களுக்குக் கற்பி, ஏனெனில் உன் பேரன்புப் பேருயிரினால் அன்றி நாங்கள் வாழவோ, எதையும் விரும்பவோ, யாரையும் நேசிக்கவோ முடியாது.
168. Bury the seeds of my devotion in Thy heart-soil.
168. என் பக்தியின் விதைகளை உன் இதய-மண்ணிலே விதைப்பாயாக.
மெய்ம்மைக்கு விழிப்புறும் விடியற்பொழுதில், உன் பல-இதழ்களைக் கொண்ட தாமரைப்பாதத்தின் மேல், பிராயச்சித்த பச்சாதாபத் நீர்த்திவலைகள் படர்ந்துள்ளதைக் கண்டேன். அந்த அன்பு நீர்த்திவலைத் துளிகளினால், என் ஆன்மா தானாகத் தூய்மையுற்றது. பெருங்கவலையின் வறட்சி, உன் அருட்கருணை மழையினால் அறவே நீங்கியது. கடந்த, நிகழ், வருங்கால இதழ்கள் முறையே விடியல், பகல், இரவு என முப்பொழுதிலும் மலர்ந்து விரிந்து, நித்தியமாக வெளிபட்டுக் கொண்டிருக்கும் உன் வாழ்வின் மிருதுவான தன்மையைப் புலப்படுத்துகின்றன. உன் அருட்பீஜங்களை, பிரார்த்தனையால் நன்கு உழப்பட்ட என் இதய மண்ணிலே நீ இடையறாமல் விதைப்பாயாக; அவைகள் மலர்ந்து, மெய்யுணர்வு நல்கும் பலவாறான கனிகளை வழங்கும் மரங்களாக வளரட்டும்.
169. I want to know that Thou wilt be Mine.
169. நீ என்னுடையவனாக ஆகுவாயா என்பதை அறிய நான் விரும்புகிறேன்.
நான் என் ஆசைகளையெல்லாம் நொறுக்கித் தள்ளனும் எனினும், நான் கோடிக்கணக்கான ஜென்மகளெடுத்து அவற்றுள் உழலனும் எனினும், பிறப்புத் துன்பங்களையும், சாவின் கொடுமையையும், எல்லா வலிகளையும் நான் அனுபவிக்க நேரினும் எனக்குக் கவலையில்லை - நான் உன்னைக் கண்டுகொள்ள முடியுமெனில். மேலும், நான் உன்னை அடைவதற்கு மேற்கொள்ளும் கடின முயற்சியில், நான் எடுத்த பிறவிகளின் சடலங்கள் மலைபோல் குவியினும் எனக்குக் கவலையில்லை. என் சுகங்கள் எல்லாவற்றிற்கும் மாற்றாக உன் சுகத்தையே நான் ஏற்க விரும்புகின்றேன். என் எல்லா அநித்திய இன்பங்களையும் நான் துறப்பது உனக்காகவே! உன் ஆனந்தம் ஒன்றே என்னுடையது, அது ஒன்று மட்டுமே என்னுடையது. தெளிவாகக் கூறு என்னிடம்: நீ நிச்சயமாக என்னுடையவனாக ஆகுவாய் என்பதை! பின், நான் பொறுமையுடன் ஒரு லட்ச வருடங்களை ஒரு தினமாகக் கருதிக் காத்துக் கொண்டிருப்பேன். கூறு என்னிடம் - நீ என்னுடையவனாக ஆகுவாயா?
170. Teach me to drown in Thy Light and live. (Inspired by a Hindu song. ).
170. உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.
என் புன்னகை கீதங்களுடன் உன்னிடம் நான் வருகின்றேன். என்னென்ன பொக்கிஷங்கள் என் உள்ளத்தின் ரகசிய சேமநிதியில் உள்ளதோ, அவற்றை உன்னிடம் நான் ஆவலுடன் கொண்டு வந்துள்ளேன். என் இதய தேன்கூட்டிலுள்ள எல்லாத் தேனையும் நான் எடுத்து வந்துள்ளேன். என்னுடையதெல்லாம் உன்னுடையதே!என் சஞ்சலமான எதிர்பார்ப்புகளும், சந்தோஷங்களும் என்னை அதிருப்தியால் பகலவனாய்ச் சுட்டெரித்துக் கொண்டுள்ளன; இப்போது உன்னைப் பருகுவதனால், என் ஆசைத் தாகங்கள் எல்லாம் நிரந்தரமாகத் தணிந்துவிடும். என் சந்தோஷ மெழுகுவர்த்தியின் சுடர் உன் ஆனந்தப் பெருஞ்ஜோதியில் கலந்துவிடும். உன் சுகந்தமான சுடரின் மணமும், பொரிபொரிக்கும் அதன் ஆனந்த தூப அலைகளும் மிதந்து என்னை நோக்கி வருகின்றன. உன் பரமானந்த ஜோதியில், நான் தொடர்ந்து எப்போதும் நீந்துவேன். கானல்-சொர்க்கமான ஒரு லோகாயத உலகில் வாழ்ந்து மடிவதைக் காட்டிலும், உன் திவ்ய ஜோதியில் அமிழ்ந்து நான் வாழ எனக்குக் கற்பி.
171. I want to pour the scent of gratefulness at Thy feet.
171. உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை அள்ளிவீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.
தவிர்க்கமுடியாத நிகழ்வுகளின் பிரளயகால மேகங்கள் வந்து இடிஇடித்தன; அற்பமான சுகங்களாலும் நையப்புடைக்கும் சோதனைகளாலுமான மழை அடையாய்ப் பெய்து என் தைரியத்தாலான மண்நிலத்தை நன்கு நனைத்து மூழ்கடித்தது; பலகோடி இடைஞ்சல்கள் என்னைக் குத்துவதற்குத் தயாராக அழிவெனும் கத்தியுடன் முளைத்தன. எதிர்ப்பாராத விளைவுகளெனும் பீரங்கி குண்டுகள் அதிரடி செய்யும்போதும், துன்பங்களெனும் துப்பாக்கி ரவைகள் என்னைச் சுற்றிலும் வேகமாக வந்து விழும்போதும், நான் உன் என்றுமழியாக் கரங்களாலான துளைக்கமுடியாத கோட்டையினுள் காக்கப்பட்டுள்ளேன் என்பதை நீ எனக்கு உணருமாறு செய். கடும்போராட்டமெனும் இருண்ட மரத்தின்மீது உன் பாக்கியமெனும் ஒளி வந்து விழும்போது, அதன் மலர்கள் நன்கு மலர்ந்து நன்றியைப் பிரதிகூலமாகக் காட்டி, உன் அருட்கருணையின் ஜோதியை வரவேற்பது எளிது. துர்பாக்கியமெனும் இருண்ட இரவுகளிலும், என் நன்றி மலர்கள் புனிதமான அமைதியெனும் உன் பாதத்தில் நன்றிகூர்தலெனும் சுகந்தத்தை வீச வேண்டும் என நான் விரும்புகிறேன்.
172. My soul-submarine is searching for Thee.
172. என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பல் உன்னைத் தேடுகின்றது.
என் ஆன்மாவின் தேடும் நீர்மூழ்கிக்கப்பல், லோகாயத குறிக்கோள்களெனும் இருண்ட வாயுப்பிரதேசத்தை விட்டு வேகமாக விலகி, வழித்தடமற்ற பிரபஞ்சப் பேருணர்வெனும் ஆழமான பிரதேசத்திற்குள் ஆழ்ந்து தாவியது. திமிங்கிலத்தைப் போல நீந்தி, என் மனோ நீர்மூழ்கிக்கப்பல் மிகவும் அடியாழமான சூட்சுமக் கடல் பிரதேசத்திற்குள் உன்னைத் தேடிச் சென்றது. மிகுந்த தேடலினால் களைத்த என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பலின் தேடும் ஒளிக்கண்கள், திடீரென உன் அருளாசியினால் புலனாதீத சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கியது; நான் உன் இருப்பினை எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள ஆரம்பித்தேன்.
173. Bless me, that I may know that I am Dreaming while I think that I am awake.
173. விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைப்பது, நிஜத்தில் நான் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன் என்று விளங்குமாறு எனக்கு அருள்புரி.
எப்படி நாங்கள் தூங்கி ஓய்வெடுத்து, சற்றுநேரம் விழித்து, மீண்டும் உறங்குகிறோமோ, அதேபோல் பிறப்பு-இறப்பு என்னும் நிலையற்ற கனவுகளின் அடித்தளத்திலிருந்து, நாம் சிறிது காலத்திற்கு தோன்றுவோம், பின் மரணத் தூக்கத்தில் ஆழ்வோம், மீண்டும் மற்றொரு ஜென்மப் போராட்டக் கனவினைக் காணத் துவங்குவோம். ஜென்மசுழற்சிச் சறுக்குப்பாதையில், நாம் ஒரு கனவினிலிருந்து மற்றொன்றுக்கு சறுக்கிக் கொண்டுள்ளோம். வானகத்தீயினாலான தேரில் அமர்ந்து கனாக்கண்டு கொண்டே, நாங்கள் ஒரு ஜென்மத்திலிருந்து மற்றொன்றுக்கு உருண்டு சென்று கொண்டுள்ளோம். கனாக்கண்டு கொண்டே, நாங்கள் லட்சியக்கனவுகள், தோல்விகள், வெற்றிகள் ஆகியவைகளைக் கடந்து செல்வோம். கனாக்கண்டு கொண்டே, நாங்கள் ஆழ்கடலாய்ச் சோதிக்கும் துன்பங்கள், சிரிப்புப் பேரலைகள், அலட்சியச் சுழல்கள், பெரிய விழாக்காட்சி நீர்ப்பரப்புகள், மரணங்கள், பிறப்புகள் - ஆகிய கனவுகளைக் கடந்து செல்வோம். நான் உண்மையிலேயே விழித்தது உன்னில் மட்டுமே!பிறகு, நான் விழித்துக் கொண்டிருந்தேன் என்று நான் முன்னம் நினைத்த போது, நான் கனவுதான் கண்டுகொண்டிருந்தேன் என்பதை இப்போது நன்கு உணர்ந்துவிட்டேன்.
174. I locked my sacred aspirations in my soul-vault.
174. என் ஆன்மப் பெட்டகத்துள்ளே என் புனிதப் பேரார்வங்களைப் பூட்டி வைத்துள்ளேன்.
உன் வரம்பற்ற பார்வையின் கைத் தொட்டிலில் என் குறுகிய தன்மை துயில் கொண்டிருந்தது. மிருதுவான உன் சாந்தமெனும் பாதத்தின் காலடியோசையைக் கேட்டு, சத்தம்செய்யும் சிற்றின்பங்களின் இரைச்சல் தணிந்துள்ளது. நான் விழித்துக்கொண்டு காத்திருந்தேன். அமைதியின் அரசே, சிமிழ்க்கையுடனான குதூகலங்கள், ஆன்ம-கானங்கள், மந்திர ஜபங்கள் உன்னை வரவேற்க எழுச்சியுடன் உன் சாந்தம்-பொதிந்த அரியணையை நோக்கிச் செல்கின்றன. இருளினாலே மறைக்கப்பட்ட சிதைந்த கனவுகளின் வைரத்துகள்கள், உன் மின்னொளி வீசும் வரவினால் மங்கி மினுமினுத்தன. நான் என் ஞாபகப் பெட்டகத்துள் பூட்டி வைத்திருந்த என் அனைத்துப் புனிதப் பேரார்வங்களையும், எனக்குமுனக்கும் இடையேயுள்ள விலைமதிப்பற்ற ஒப்பந்தங்களையும் வெளியே எடுத்து, அவற்றை அன்பின் ஒப்பற்ற மதிப்புடைய செம்பொன்னாகப் பண்டமாற்று செய்தேன். அவற்றைக் கொண்டு நான் உனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு ரகசிய கோயிலை என் ஆன்மாவிற்குள் எழுப்புவேன், அங்கு உன் சாந்த அரியணை அமைந்திருக்கும்.
175. Dance in me Thy dance of Infinity.
175. என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.
தெய்வத்தாயே, உனக்கு நாச நாட்டியம் (நாஸ்யம்) ஆடுவதில் பிரியம். பலவீனமான அழியும் (உடற்) சுடர்களை உன் நாசமேற்படுத்தும் போர்-நடனத்தில் சிதைவிக்கின்றாய், அதன்மூலம், எங்கள் ஆன்மாக்கள் சிதையாமல் பத்திரமாக இருப்பதை நீ புன்னகையுடன் காட்டுவதற்காக. உன் கருணையினால், நீ எங்களைச் சுற்றி மூடியிருக்கும் கடினமான மாயமோகங்களின் களிம்புப் படலத்தைத் தேய்த்து அகற்றுகின்றாய். தெய்வத்தாயே, நீ அழிவு நடனத்தை விரும்புவதினால், நான் என் ஆசைகள், குறைகள், பலவீனங்கள், குறுகிய குணங்கள் ஆகிய அனைத்திற்கும் அவை என்றும் திரும்பாவண்ணம் ஒரேயடியாய்க் கொள்ளிவைத்துவிட்டு, தீயனவற்றை ஒழிக்கும் உன் நாட்டியத்தில் இணைந்து ஆடுகின்றேன். தெய்வத்தாயே, இப்போது என் குறுகிய தன்மை விட்டொழிந்ததால், நீ அழிக்க வேண்டுவது என்னுள் எதுவும் மீதமில்லை, ஆகையால் உன் அழிவு நடனத்திற்குப் பதிலாக என்னுள் உன் வரம்பற்ற அன்பு நடனத்தை ஆடு.
176. We are Thy burned children, wailing for Thy help.
176. நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.
தவறான சுகங்களின் மயக்கும் தீ, அதனுடன் விளையாட உன் குழந்தைகளைக் கவர்ந்தது. அந்த நாசமேற்படுத்தும் ஜ்வாலைகளின் கறுக்கி, வடுப்படுத்தும் விளைவுகளைக் குறித்து உன் அமைதியான குரல் அவர்களை எச்சரித்தது. ஆனால் அவர்கள் உத்வேகத்துடன் அந்த அற்ப சுகத்தின் கனல்களை முனைந்து பற்றிக் கொள்ள விழைந்தனர். விழுங்கும் தழலின்கண் பலர் அவர்களின் பேராசைக் கைகளை அழுத்திக் கோரமாக அடிபட்டுக் கொண்டனர். பின், அவர்களின் அதிருப்திக் காயங்களும், சிற்றின்ப திகட்டல்களும், உன் உதவியை நாடி, உனக்காக அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தன. பெரும் பொறுமையுடைய மருத்துவரே! என்றும்-தவறாமல் குணமாக்கும் உன் மன்னிப்பும் அன்பும் கலந்த மருந்துக் களிம்பை வைத்துக் கொண்டு நீ அருகிலேயே நிற்கின்றாய். உன் எச்சரிக்கும் குரலை நாங்கள் கேட்கக் கற்றுக் கொடு; அதன்மூலம், நாங்கள் தேவையற்ற வேதனையால் துடித்து, அனாதரவாய்க் கதறாமல், மாறாக உன்னை நோக்கி இனிய பாட்டுக்களாய்ப் பாடுவோம். நாங்கள் உன் சொல் கேளா குழந்தைகள், இவ்வுலகின் தீய கேளிக்கைகள் எங்களைச் சுண்டி இழுக்கிறது. அவற்றின் இழுவைக்கு ஆட்படாமல், தெய்வீகமான உன் பேருணர்வு ஜோதியுடன் மட்டுமே இனி நாங்கள் விளையாட எங்களுக்குக் கற்றுக் கொடு.
177. I want to merge in the vastness of Thy Presence.
177. உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.
அன்பின் ஊற்றே, உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் எங்கள் நெஞ்சங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை நாங்கள் உணருமாறு செய். எங்கள் ஆசைநதிகள் எல்லாவற்றிற்கும் ஆதிமூலமே, எங்களை அற்பமான புலனின்ப மண்ணில் பாய்ந்து, வறண்டு ஆவியாகிப்போகாமல் இருக்க எங்களுக்குக் கற்பி. எங்கள் ஆசைநதிகள் பணிவு, சுயநலத் தியாகம், பிறர்நலம் பேணுதல் எனும் எல்லா தாழ்வான நிலங்களின் வழியேயும் பாய்ந்து, இறுதியில், உன் அருட்கொடை மழையினால் மேலும் பெருகி, அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்க நாங்கள் உரிமையுடன்-வேண்டுகின்றோம். எங்கள் அனுதாபம், அன்பு, பாசமெனும் கிளைநதிகள், வறண்ட சுயநலமெனும் பூமியில் வழியே பாய்ந்து அருகிப் போகாமலிருக்க எங்களுக்கு அருள். உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பின் தனித்தனியே பிரிந்து ஓடும் சிற்றோடைகள் எல்லாம், இறுதியில் அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்கட்டும்.
178. Blow Thy music through my shattered reed.
178. உன் இசையை என் உடைந்த குழலின்மூலம் ஊது.
[பிரணவ] வேணுகானம் இசைப்போனே, உன் இசையை உடைந்த குழல்களெனும் மதங்கள் எல்லாவற்றின் வழியேயும் ஊதி, உன் ஒரே உண்மைக்கானத்தை வெளிக்கொணர். அந்த தெய்வீக கானத்தை உன் பேருணர்வின் வளமை பொதிந்த பலவித பொன்மய ஆடைகளினால் போர்த்தி அலங்கரி. வேணுகானம் இசைப்போனே, அகன்ற, குறுகியவழிகளிலெல்லாம் வெளிப்படு பாவனைகளான உன்னுடன் ஒத்திசைக்க நாடும் முழுமையடையாத இதயகானங்கள் எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி, அவற்றை அன்பிசைக்கும் வாழ்க்கைக் குழலின் மூலம் முழுமையான ஆனந்தத்தை நோக்கி செலுத்து. அந்த பரிச்சயமுள்ள உன் சன்னமான-மிருதுவான ஸ்வரங்களுக்காக, நான் அனுதினமும் அமைதியுடன்-லயித்த என் மன-வானொலிப் பெட்டியில் தொடர்ந்து செவிமடுத்தேன். நான் வெகுதொலைவிலிருந்து உன்னுடன் ஒத்திசைக்க முயன்றேன். முதலில், பல ஆரவார சத்தங்கள் குறுக்கிட்டு என் அமைதியைக் குலைத்தன. ஆனால், என் ஒருமுகப்பாட்டில் ஜாக்கிரதையாக சில நுண்ணிய மாற்றங்களை செய்தபின், நீ விண்வெளி இறக்கைகளில் பறந்து வந்து சேர்ந்தாய். உடனே, பூமியின் அனைத்து நல்லவைகளுடனும், எல்லா இதயங்களின் புனிதங்களுடனும் சேர்ந்து நீ பாடும் அமைதி கானத்தை நான் கேட்டேன்.
179. Heal my nerves and install in me a new set of telephonic nerves.
179. என் நரம்புகளைக் குணப்படுத்து; என்னுள் புதிய நரம்பு வயர்களின் மண்டலத்தை பிரதிஷ்டை செய்.
வாழ்க்கையெனும் சிறு ஓடையினருகே உள்ள என் ஆன்மக்குடில் நீ வந்தபோது புன்னகைபூத்தது. ரகசிய எலெக்ட்ரீஷியனே, என் பல வண்ணப் புலன் பல்புகள் உன் ஒளியைப் பிரகாசிக்க மறுக்கின்றன. என் நரம்பு-வயர்கள் ஆரவாரமான வாழ்க்கையின் பெருங்காற்றினால் நைந்து சிதிலமடைந்துள்ளன. நரம்பு மண்டல கட்டுமானத்தையும் ஒளிர்ந்து பரவும் பிராண சக்தியையும் உருவாக்குபவனே, படுகாயப்பட்டு உயிரிழந்த என் நரம்பு வயர்களை மறுமுறை உயிர்ப்பித்து எழச்செய்; உன் கங்குகரை காணா ஆற்றலை அவற்றின்வழியே பாய்ச்சு. அதனால் என் எரியாத எல்லா புலன் பல்புகளும் சட்டென துடித்தெழுந்து உன் புகழொளியை வீசட்டும். நான் ஓர் பல்பு; நீ அதில் பிரகாசிக்கும் புனித ஒளி. உண்மையில், நீயே பல்பும், ஒளியுமாக இருக்கின்றாய். இந்த அற்புத உண்மையை நான் உணருமாறு செய். என் சிதிலமடைந்த நரம்புகளைக் குணப்படுத்து; உன் ஒளியின் தெய்வீக ஜோதியை என் நோயினால் பீடிக்கப்பட்ட சதைப்பிண்ட பல்பின் வழியே வெள்ளமாய் செலுத்து.
180. Make us Transparent, that Thy Light may shine through us.
180. உன் ஒளி எங்கள் வழியே பிரகாசிக்க எங்களை ஒளியூடுருவுமாறு செய்.
உன் பிரபஞ்சக் குடும்பத்திலுள்ள தேவதூதன், வெற்றிவீரன், பட்டுப்பூச்சி, நான் என எல்லா உறுப்பினர்களுக்கும், உன் அன்பின் சூரியக்கதிர்கள் சமமாகப் பிரகாசத்தை நல்குகின்றன. எங்கள் மந்தபுத்தியினால் நாங்கள் எங்களை ஒளிபாயாத ஜடமாக ஆக்கிக்கொண்டால் அது எங்கள் குற்றமே. நாங்கள் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் எங்கள் கண்ணாடியில் படிந்திருக்கும் தவறெனும் அழுக்கின் படலத்தைத் துடைக்க எங்களுக்குக் கற்பி. எங்கள் ஆன்மீகப்பிடிப்புக் கரங்கள் பலவீனமாக இருக்கின்றன. தலைசிறந்த தூய்மையாளனே, எங்கள் அங்கங்களில் உன் சக்தியை புகுத்து. அதன்மூலம், எங்கள்மேல் படிந்து உன் ஒளியை தங்குதடையின்றி பிரகாசிப்பதைத் தடுக்கும் இருள்மண்டிய தூசியை துடைத்து அகற்றுவோம். உன்னைப் பிரதிபலிக்கும் கேடில்லா, பிரகாசமான கண்ணாடிகளாக எங்களை ஆக்கு.
181. Teach me to Conquer Discord by holding close my own Harmony.
181. பேதங்களை என் சமரசத்தின் பக்கத்துணைகொண்டு வெல்ல எனக்குக் கற்பி.
என்னைச் சுற்றி சோதனை அணுகுண்டுகள் கீச்சிட்டுப் பறந்தாலும் எனக்குக் கவலையில்லை; என் தன்மானத்தினைக் குறிவைக்கும் பீரங்கிக்குண்டுகள் என்னை நோக்கி அடிக்கப்பட்டாலும் நான் அதைக் கண்டுகொள்ள மாட்டேன்; எந்திரத்துப்பாக்கியால் வஞ்சனைக்குறும்பு ரவைகள் என்னை சல்லடைபோட்டு துளைத்தாலும் நான் பொருட்படுத்த மாட்டேன், நீ என்னுடன் இருக்கும்போது உன் கோட்டைமதிலுக்குப் பின்னால் எத்தகைய தாக்குதலினின்றும் நான் காக்கப்படுவேன். மாறாக, நீ என்னுடன் இல்லாதபோது, நான் நவீன விஞ்ஞானத்தின் துணையால் எழுப்பப்பட்ட அதீததிண்மையான கோட்டையில் இருந்தாலும், எனக்கு பாதுகாப்பு உறுதியில்லை. எனக்கு மற்றவர்களின் கோபத்தை உசுப்பி, அவர்களின் அனல்கக்கும் சினத்தை எழுப்பிவிட நாட்டமில்லை; ஆனால், என் ஆன்மாவின் மறைவான குகையில் எனக்கு உறுதியான பாறைபோல் புகலளிக்கும் உனக்கு என் நன்றியை என்றும் உரித்தாக்குவேன். என் சூழ்நிலைச் சதையில் கூரியஆணிபோல் துருவிய கலக்கக் காயங்களை நான் குணப்படுத்த எனக்கு அருள்புரி. ஒளி அரசே, உன் வாகைசூடிய பதவியேற்றத்தின்மூலம் , இருளை அரியணையிலிருந்து நீக்க எனக்குக் கற்றுக்கொடு. தனிமை ஏக்கத்தால் பீடிக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு, புன்னகை மருந்திட்டு குணப்படுத்த எனக்கு அருள்புரி; காய்ந்து வறண்ட மனங்களுக்கு இதமளிக்கும் பருவமழையாய் பெய்ய எனக்கு அருள்புரி; கலக்கமூட்டும் கள்வனைத் துரத்தியடிக்கும் ரோந்துசுற்றும் ஒளிவிளக்காக நான் ஆக எனக்கு அருள்புரி; சோகத்தினால்-கருகிய இதயங்களுக்கு சாந்தமெனும் அமிர்தமாக ஆக எனக்கு அருள்புரி; இருண்ட வஞ்சனையை அருளொளியால் ஒழிக்க எனக்கு அருள்புரி. என் சமரசத்தின்மேல் நான் கொண்ட உறுதியான ஆக்டொபஸ் பிடியினால் பேதங்களை வெல்ல எனக்குக் கற்பி. என் நேர்மையின்மூலம் அலட்சியத்தை வெல்ல எனக்குக் கற்பி. பிறரின்மேல் அனாவசியமாக குற்றம்காணும் என் பழக்கத்தை, அதற்கு மாறாக, என்குற்றத்தைக் கண்டு கண்டிப்பதன்மூலம் மாற்ற எனக்கு அருள்புரி. புலம்பிப் பொருமும் மனங்களுக்கு உன் சாந்தத்தின் அமிர்த-தூக்கமருந்தைக் கொடுத்து, உன் மடியில் உறங்கவைக்க எனக்குக் கற்பி.
182. Baptize the bubbles of my blood and flesh in the flood of Thy Grace.
182. நீர்க்குமிழிகளான என் ஊனுடலையும், ரத்தத்தையும் எல்லையற்ற உன் கருணை வெள்ளத்தினால் ஞானஸ்நானம் செய்.
மேகத்தினின்று-தோன்றும் மழைகள், மலையிலிருந்து பெருகும் சுனையூற்றுக்கள், பெற்றோரின் ரத்தம், தாயின் நெஞ்சில் சுரக்கும் பால் - இவை எனக்குச் ஊனுடம்பின் உணர்வினை அறிமுகப்படுத்தின. தாயின் பாசமிகுந்த அரவணைப்புடன், காயப்படத்தக்க சதைக்கூண்டில் சிறைப்படுத்தப்பட்டு அடைந்துகிடந்த என் ஆன்மா சுதந்திரத்திற்காகக் கதறி அழுதது. இனிய புலன் தோட்டங்களின் இரும்பு-வேலிகளுக்குள்ளே மேலும் அடைந்துகிடக்க எனக்கு விருப்பமில்லை. பின்பு, அமைதி மேகம் இடித்து உன் கருணை மழையை வெகுவாகப் பொழிந்து, உன் அருள்பொங்கும் வெள்ளத்தை உருவாக்கியது. உன் பேருணர்வின் வேகம் என் ஆன்மாவின் எல்லைகளை உடைத்தெறித்தது. நான் தடைகளை உடைக்கும் உன் நிரந்தரத்தின் பொங்கும் வெள்ளநீரினால் ஞானஸ்நானம் செய்யப்பட்டேன். உன் பிரபஞ்சப் பேருணர்வின் வெள்ளத்தின் ஆற்றல், என்னைச் சுற்றிமூடிய என் புலன்களாலான வேலிகளை உடைத்தது; சிறிய நீர்க்குமிழிகளான என் ஊனுடலும், ரத்தமும் எல்லையற்ற சர்வவியாபகத்தினில் கரைந்து ஞானஸ்நானம் செய்யப் பெற்றன.
183. Demanding forgiveness.
183. மன்னிக்கும் தன்மையை உரிமையுடன்-வேண்டுதல்.
என்னைப் பிறரினுள் காண எனக்குக் கற்பி. நான் என் குற்றங்களை மன்னித்து, அவைகளைக் கமுக்கமாகக் களைய விழைவதுபோல், பிறரை மன்னித்து, அவர்களுடைய குற்றங்களை அவர்கள் சரிசெய்ய விரும்பினால் அவைகளை நிவர்த்திக்க அமைதியாக ஆலோசனையளிக்க எனக்குக் கற்பி. தடுமாறிக் கொண்டுள்ளோர், அடம்பிடிப்போர் ஆகிய அனைவரையும், கோழைத்தனமான அராஜக சக்தியை விலக்கிவிட்டு, மென்மையான பொறுமையின் வலிமையின்மூலம் நான் உன்னை நோக்கி வழிநடத்திச் செல்வேனாக. உன் ஒளியானது நல்ல, வைரம்போல் பிரகாசிக்கும் ஆன்மாக்களிலும், கெட்ட, கரிய உள்ளமுடையவர்களிலும் சமமாகவே ஒளிர்கின்றது என்பதனைக் காண எனக்குக் கற்பி. தீயவர்களையும், இருண்டமனங் கொண்டோரையும், பளீரெனத் துலங்கும் ரிஷிகளாக ஆக்கி, அவர்கள் உன் பாரபட்சமற்ற ஞானக்கதிர்களை முழுமையாகப் பிரகாசிக்குமாறு மாற்ற என் புரிந்துகொள்ளும் திறனையும், ஆற்றலையும் நீ வழிநடத்து. என் ஆன்மாவை மூடிச் சுற்றிலும் அலட்சியக் கரிப்பிடித்திருந்ததை நீ தேய்த்துக் கழுவிவிட்டாய், அது உன் ஒளியைப் பிரகாசிக்கின்றது. இப்போது நான் உன் குழந்தையென்பதை அறிகின்றேன். அதேபோல், அன்பினாலே எல்லா ஆன்மாக்களையும் கழுவ என்னைத் திறம்படுத்து. அதன்மூலம், மிகவும் இருண்ட ஆன்மாக்களையும் உன் குழந்தைகளாக, உறக்கத்தின் வசப்பட்ட என்னுடைய சொந்த சகோதரர்களாகக் காண வை. உன் ஒளியானது வலிமைகுன்றிய இருள் மண்டிய ஆன்மாவிலும் மறைவாக இருக்கின்றது; அது சுய-முயற்சியினால் உதிக்கும் நல்லோர் உறவினில் தோன்றும் சக்தியினால் அங்கீகரிக்கப்பெற்று, தானாக வெளிப்பட அது காலவரம்பற்றுக் காத்திருக்கின்றது. அதேபோல், என்னையும் அப்படிப்பட்ட பொறுமையை உடையவனாகப் பண்படுத்து; அதன்மூலம், உண்மையைத் தவறவிட்ட எல்லா ஆன்மாக்களையும் அவர்கள் விரும்பும்போது உதவ நான் எப்போதும் தயாராக இருக்குமாறு செய். பெருந்தூற்றலுக்காளான கொலையாளிக்கும் அவன் நல்லவனாக மாற மீண்டும் வாய்ப்பளித்து, புதிதாக மற்றொரு ஜென்மத்தில் அடையாளங் காணமுடியாத படி உடம்பளித்து, வேறு சூழலில் அவனைப் புழங்க வைக்கின்றாய். அதேபோல், தவறிழைத்து உலகத்தால் கைவிடப்பட்டவனையும் எங்கள் மன்னிக்கும் பொறுமைக் கூடாரத்தில் அடைக்கலம் கொடுக்க எங்களுக்குக் கற்பி. பேருணர்வே, உன்னிடமிருந்து பெற்ற எங்கள் அன்பின் கதிரொளி அவனின் தவறினால்-உறைந்த ஆன்மாவின் நடுக்கத்தை விலக்கட்டும். இவ்வுலகம் தவறான காரியங்களின் கடலிலிருந்து அதன் இச்சைப்படி எப்போது மீண்டு வெளிவருகிறதோ, அப்போது உன்னை விளங்குமாறு செய்ய நீ ஆவலுடன் காத்திருக்கின்றாய். தவறினுள் ஆழ்ந்த இவ்வுலகின்முன் நீ காட்டும் அமைதி, உன் பொறுமையையும், மன்னிக்கத் தயாராகவுள்ள குணத்தையும் புலப்படுத்துகின்றது. பிறர் எங்களைக் கசப்புணர்வினால் குரூரமாகக் காயப்படுத்தினாலும், எங்கள் இனிமையான உதவும் கரங்களை அவர்களுக்கு நீட்ட மறுக்காமலிருக்க எங்களுக்குக் கற்பி; அதுவும், எந்தவித எதிர்பார்ப்புமின்றி, அவர்கள் தாங்களே தங்களுக்கு உதவிக்கொள்ளுமாறு உதவ எங்களுக்குக் கற்பி. அதன்மூலம், ஒருக்கால் நாங்கள் அவர்களுக்கு உதவமுடியாத பட்சத்தில் அவர்கள் எங்களுக்கெதிராக மாறினாலும், நாங்கள் அவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்வோம். எங்களை மிகவும் துன்புறுத்துபவர்களை, முதலில் உள்முகமாகவும், பின் வெளிப்படையாகவும் மன்னிக்க எங்களுக்குக் கற்பி. மன்னிக்கும் குணத்தின் நறுமணத்தை நாங்கள் எங்கும் தெளித்து, புளித்துப்போன வியப்பிற்குப் பதிலாக இனிய சொற்களையும், வெறுப்பிற்கு அன்பையும், சினத்திற்கு கருணையையும், தீங்கிற்கு நன்மையையும் நல்குமாறு எங்களுக்கு அருள்புரி. மிகவும் இருள் மண்டிய ஆன்மாவும், பிழைபட்ட கனாக்காணும் ஒரு நித்தியனே என்பதை நாங்கள் உணருமாறு எங்களை விழிப்புறச் செய். மன்னிப்புக் குணத்தின் தெய்வீகத் தன்மையினால், அவனின் உணர்வு நிலையை தூய, அமிருத, விண்ணுலக மைந்தன் எனும் ஸ்தானத்திற்கு விழிப்புறச் செய்யுமாறு எங்களுக்கு மேம்படுத்தும் சக்தியளி.
184. Cutting through the Cocoon of Ignorance.
184. அறியாமைக் கூட்டினை அறுத்துக்கொண்டு வெளியேறுவதற்காக.
[ஓ பராசக்தித் தாயே! நான் உன் குரலால் இச்செய்தியைச் சொல்லக் கேட்டேன்,] "நீ வெகுகாலமாய் தவறான மனிதப் பழக்கங்களாலான கூட்டினில் அடைப்பட்டுக் கிடக்கிறாய். பட்டுஇழைகளை சேகரிக்கும் அந்தகன் வந்து உன்னை அழிக்குமுன்னர், நீ சீக்கிரம் வெளியே வா! மயக்கமுறுத்தும், சொகுசு தரும், கவரும் பழக்கங்களெனும் பட்டுக்கயிறுகளால், நீ காலனின் பிரத்தியேக அறைக்குள் பிணைக்கப்பட்டுள்ளாய். "வெளியே வா! தவறுதலாக, பலவீனத்தைத் தன் சுபாவமென எண்ணி உறங்கும் மனிதப் புழுவாய் இருப்பதை விட்டொழி. மோகக் கூட்டிலிருந்து வெளியே வா! உன் வேண்டுதல்களையும், குறிக்கோள்களையும் ஆன்மீகப்படுத்தி, அதன் மூலம் உன் இறகுகளில் வரம்பற்ற சக்தியையும், தேஜஸையும் பெருக்கி, அவைகளை விரித்துப் பரப்பு ". வெளியே வா! நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய் நீ ஆகு! இயற்கையின் எண்ணற்ற அழகுகளினால் உன் உணரும் இறகுகளை அலங்கரித்துக் கொள்; அவைகளைக் கொண்டு விண் முழுதிலும் எல்லாப்புறங்களிலும் விரித்து, எல்லா ஜீவராசிகளையும் உல்லாசப்படுத்து ". எல்லையற்ற வானவெளியில் உன் அழகிய இறகுகளினால் சிறகடித்துப் பறந்து செல்; அழகை ஆராதிக்கும் அனைவரையும் ஈர்த்து உன் கவின்மிகு அழகினை ரசிக்கச் செய். சூரிய-விண்மீன் பொறிகள் உன் இறகுகளினில் மினுமினுக்கும்; நிரந்தரத்தின் வண்ணத்துப்பூச்சியாய், ஆனந்த மார்க்கத்தில் நீ சிறகடித்துப் பறக்கும்போது, உன் வழியில் தென்படும் நெஞ்சங்களினில் உள்ள கலக்கத்தை எல்லாம் அது துரத்தியடிக்கும் ".
185. I will hop from Eternity to Eternity.
185. நான் நிரந்தரத்திலிருந்து நிரந்தரத்திற்கு தாவுவேன்.
உன் மரணமற்ற ஒளிப்பொறியினால் மின்னும் என் பொன்மய நீராவி போன்ற சூட்சும உடல், பிரபஞ்ச இருப்பின் ஒரு புல்லில் இருந்து இன்னொரு புல்லிற்கு தாவிக் கொண்டுள்ளது. வெட்டவெளி நிரந்தரத்தை நீ மாறிமாறித் தோன்றும் பலவண்ண நிறங்களாலான பசும் புற்களைக் கொண்டு ஆடையாகப் போர்த்தியுள்ளாய். நான் ஒவ்வொறு புல்லாக எல்லாவற்றையும் தாவிக் கடந்து செல்வேன். உன் காக்கும் அபயக்கரங்களில் வந்துபுகும் வரை நான் ஒரு சுகப் புல்லிலிருந்து மற்றொன்றிற்கு குதூகலத்துடன் குதித்துக் கொண்டே இருப்பேன். உன் அழகின் உயிரோட்டமுள்ள இழைகளினால் என் கள்ளமற்ற அழகிய இறகுகள் பின்னப்பட்டுள்ளன. உன் என்றும் மாறா சாம்ராஜ்ஜியத்தை நான் வந்தடையும் வரை, என்னை விடாமல் துரத்திக் களங்கப்படுத்தும் ஒவ்வொரு மாற்றத்தின் பிடியினின்றும் நான் பிடிபடாமல் தப்பிச் செல்வேன். பிரபஞ்ச வளர்ச்சிப் பிறப்புகளெனும் மெதுவாய் நடைபோடும் ஒட்டகங்களில் ஏறி, இறப்புகளெனும் பாலைவனங்களைக் கடந்து, கடைசியில் உள்ளிருந்து சுரக்கும் உன் ஞானமெனும் மிருதுவான மெத்தையை அடைவதற்காக, இந்த பிராண சரீரம் ஒரு லோகத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறிமாறிப் பயணித்துக் கொண்டுள்ளது.
186. I want to be Thy cleansed Bird of Paradise.
186. நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.
பரந்து விரியத்தக்கப் பொன்மய இறக்கைகளையும், மிருதுவான கோமள சிறகுகளையும் கொண்டு வர்ணப் பொலிவுடன் அழகிய ரூபத்தில் உன்னால் சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கலோகப் பறவை நான். முன்னேற்றத்திற்காகத் தணியாத ஆசைகொண்ட என் இறக்கைகளை வீசி, சாந்தி சொர்க்கத்தை நாடி, இறுக்கமான வாழ்க்கை வானத்தில் நான் இடையறாமல் சிறகடித்துப் பறந்துள்ளேன். கலக்கமெனும் இருள் பலமுறை என் பிரகாசமான மனத்தின் இலகுவான இறகுகளை மூடி, அவற்றின் ஒளியை மங்கச் செய்துள்ளன. கடவுளே, மாசடைந்த உன் சொர்க்கலோகப் பறவையை உள்காட்சியெனும் தூய்மைப்படுத்தும் சூரிய-ஒளிக் கதிர்களாலும், இனிமையாக சலசலக்கும் சாந்தி நீரோடையிலும் நீ நீராட்டு.
187. Bless Thy Humming Bird to drink of Thy honey.
187. உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.
என் கனவுகளினாலான தோட்டத்தைத் தேடி, உன் நாமத்தை ரீங்காரித்து, இடையறாமல் எண்ணிலடங்கா மைல்கள் தூரம் நான் பறந்துசென்றேன். நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி; ஆயினும், என் செயலாக்க இறகுகளை எப்போதும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஏனெனில், உயர்ந்தோங்கிய மலையுச்சி நிகர் கனவுகளில் வண்ணமயமாகப் பூத்துக்குலுங்கும் உன் அரிய பூந்தோட்ட மலர்களைத் தேடி நான் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நான் உன் நாமத்தை ரீங்காரிக்கும் ஒரு ரீங்காரப்பட்சி, அதன் உணர்வெனும் நீண்ட அலகுகளைப் பொன்மய, நீலவண்ண, செந்நிற, மற்றும் பலவண்ண மலர்-குணங்களின் நெஞ்சில் ஆழ்த்தி சுவைக்கின்றது. தீயனவற்றின் கடுக்கும் தேனை சுவைப்பதிலிருந்து என்னை உன் அருள் காக்கட்டும். உன் சோர்வடையா அபரிமித சக்தியினால் நான் துறுதுறுவென்று ரீங்காரித்து, உன் புகழ்மகிமையாலான தொங்கும் தோட்டங்களிலும், பணிவான மனித இனிமை மேவும் பாதையோரங்களிலும் வளரும் அன்பினால்-தோய்ந்த மலர்களிலிருந்து மதுரத்தை அருந்தும் நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி.
188. Many doors opened before me.
188. என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.
உன் வருகையால் என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன. கடவுளே, நீ வந்தபோது எல்லாமே ஜீவகளையுடன் பிரகாசித்தன. கோயிலில் நான் நின்றிருந்த இடத்தில் பளிங்குத்தளம், உன் சாந்நித்தியதால் எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. உன் தொடுகையால் ஜடப்பொருட்கள் உணர்வுப் புனருத்தாரணம் பெற்று, எல்லாப்புறங்களிலுமிருந்து அவை பேசின. உன் ஆனந்த நறுமணத்தைச் சுமந்து, நிஸ்சலமெனும் சுகந்தமான காற்று எல்லாப்பக்கங்களிலும் தவழ்ந்து பரவியது. உடைந்துபோன அமைதிப்பாறைகளின் அடியில் மறைந்திருக்கும் உன் சரணாலயத்தைக் கண்டுகொண்டேன். புனிதமெனும் தூய பலிபீடத்தின் மேல் உன் ஆனந்தப் பேரூற்று துள்ளிக் குதிக்கின்றது. ஏந்திய என் உள்ளங்கைகளில், உன் ஆறுதலெனும் உயிரூற்று நீரை வாங்கி அருந்துகின்றேன். இனி எனக்கு தாகமென்பதே கிடையாது என்பதை நான் அறிகின்றேன்.
189. Driving the Rebel-King, Ignorance.
189. எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.
185. எதிரி-அரசனான அறியாமையை விரட்டியடிக்க.
ஓ வாழ்வின் ரகசியமான மாண்புமிகு நீதிபதியே, உன்னை நான் என் ஆன்ம-நிஸ்சல நிலையில் "பாபம் எனப்படுவது யாது?" என வினவினேன். உன் சன்னமான நிசப்தமொழி பெருகி என் எண்ண அலைகளாய் விளங்கியது. "பாபம் என்பது எதிரி-அரசனான அறியாமை" என்று உன் பதிலின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன். அதுவே எல்லாவிதமான தீயவைகளும் ஏற்பட மூலகாரணம். அது நோயெனும் மரத்திற்கு ஆணிவேர், அதுவே அனைத்து செயல் திறனின்மைக்கும், ஆன்ம-குருட்டுத்தனத்திற்கும் முதற்காரணம். அறியாமை அரசன், அவனுடைய படைகளான உடல்நோவை உண்டாக்கும் பாக்டீரியக் கிருமிகள், மனத்தளர்ச்சியைத் தரும் எண்ணக் கோளாறுகள், பேராசை, தவறான குறிக்கோள், கடவுளின் மேல் கவனம் செலுத்தாமை போன்றவைகளுடன் கூடி, போஷாக்கு செய்யும் ஆன்மீகப்பயிர் விளையும் நிலங்களில் அப்பயிர்களை துவம்சம் செய்வதற்கென்றே அணிவகுத்துச் செல்கின்றன. பல்விதப் பயிர்கள் உனது அனுக்கிரகத்தால் போகமடைந்து அறுவடையாகும் சமயத்தில், அந்தத் தவறின் கொடூரமான அணிநடை அறுவடையை மிதித்து அழித்தது. நான் தாளாத் துயரத்தில் அழுகத் தொடங்கும் போது, உனது குரலோசை, "செம்மையுடன் பிரகாசிக்கும் உனது நாட்களிலும், கருமையாய் இருண்ட நாட்களிலும் எனது சூரியக் கரங்கள் உனக்கு சமமாகப் பாதுகாப்பை அளிக்கும். அதனால், நீ நம்பிக்கையுறுதி கொள், புன்னகை புரி; சந்தோஷம் இன்மையே எனக்கு எதிராகச் செய்யும் எல்லா பாபங்களிலும் கொடிய பாபம். உனது முகத்தில் என்றும் புன்னகை பூத்துக் குலுங்கட்டும். உனது கள்ளமற்ற புன்னகையின் வாயிலாய் என் ஒளி உனக்கு வந்து உதவும். நீ மகிழ்வாய் இருத்தலே, எனக்கு நீ செய்யும் திருப்திதரும் தொண்டு!" எனச் சொல்ல நான் கேட்டேன்.
190. Cure Spiritual Deafness and make me listen to the chorus of Noble Qualities.
190. ஆன்மீகச் செவிட்டுத்தனத்தை குணப்படுத்து; உன்னத குணங்களின் இன்னிசையைக் கேட்கச் செய்.
பார்வையற்ற மனிதன் ஒளியின் அழகையும், மகத்துவத்தையும் பார்த்து ரசிக்க முடியுமா? காதுகேளா மனிதன் தெய்வீகக் குரல்களால் இசைக்கும் பண்களைக் கேட்டு ரசிக்க முடியுமா?எங்கள் தந்தையே! தற்காலிகப் புலனின்பங்களால் கண்மறைக்கப்பட்டவன், எப்படி சுயஒழுக்கச் சூரியனின்று தோன்றும் ஆரோக்கிய, அழகுக் கதிர்களைக் கண்டுகொள்ள முடியும்? தந்தையே, ஒரு பெரும் செல்வந்தன் ஆனால் ஆன்மீகச் செவிடன் எப்படி புனித ஆன்மாவின் உன்னத குணங்கள் எழுப்பும் சாந்தி தரும் விண்ணுலக இன்னிசையைக் கேட்க முடியும்? நற்குணங்களின் ஒளியால், அறவினை தீவினையைக் காட்டிலும் அதிகப் பொலிவும் இனிமையும் உடையதெனக் காணுமாறும், உன் வழிகாட்டும் குரலை மற்ற எல்லா சத்தங்களுக்கும் மேலாக கேட்குமாறும் எங்களுக்கு அனுக்கிரகம் செய்.
191. Teach me to spend for others as I spend for myself.
191. நான் எனக்குச் செலவழிப்பது போல், பிறருக்கும் செலவழிக்க எனக்குக் கற்பி.
உன் கருணையால் நான் மற்றவர்களைக் காட்டிலும் அதிக செல்வம் உடையவனாக இருந்தால், என் தேவைக்கதிகமான செல்வத்தை வறியவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க எனக்குக் கற்பி. ஏனெனில், நீயே தான் வறியவனாய் ஒரு உடலிலும், செல்வந்தனாக மற்றொன்றிலுமாக லீலை புரிகின்றாய். நீ, செல்வந்தனான உனக்கு செல்வத்தை அளித்துக் கொண்டு, அவன் தாராளமனத்துடன் உன்னுடைய செல்வத்தை வறியவர்களாகத் தோன்றும் உனக்கு அளிக்கிறானா? இல்லையா? என்று அவனைச் சோதித்துப் பார்க்கின்றாய். பாக்கியசாலிகள் துர்பாக்கியம் தீண்டியவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில், அவனாலே உன் சர்வவியாபகத் தன்மையை உணரமுடியாது. வறியவர்களினிடத்தில் உன்னைக் காணாத, கொழுத்த சுயநலச் செல்வத்தால் குருடானவர்கள் இங்கு மறுபடி வறித்தவர்கள் ஆக்கப்படுவர். நெஞ்சிலிரக்கமற்ற செல்வந்தர்கள் மறுபடி வறுமையில் உழன்று, சொகுசுகளைப் பிரிந்து, அவர்கள் அதனால்படும் அல்லல்பாட்டை உணர்ந்து, அதன்மூலம் மற்றவர்களின் தேவைகளையும் ஒருவாறு உணர்வார்கள். தானம் செய்யக் கற்பதற்காக மனிதர்களுக்கு நீ ஈந்த பரிசுகளை, பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். ஆனால், தேவையுடைய தங்கள் சகோதரர்கள் உதவிக்காக கதறியழும்போது, உபயோகத்துக்கு உகந்த உன் பரிசுகளை முடக்கி, வெறுமனே புழுத்துப்போக வைப்பவர்கள், ஆன்ம சோகையால் நெஞ்சம் குறுகி வறுமையில் காலாவதியாவார்கள். எதையும் யாருக்கும் கொடாமல் செல்வந்தனாக இறப்பவன் வறியவனே. ஆனால், மற்றவர்களுக்கு கொடுத்ததனால் வறுமையுற்று காலதேவன் வாயிலுக்கு செல்பவர்கள், உண்மையிலேயே செல்வந்தர்கள். செல்வத்தையும், உடல்நலத்தையும் இழந்த மற்றவர்களின் தேவைகளைக் கவனித்து, நம் செல்வம், உடல்வலிமை இழந்தால் நாம் எப்படித் உணர்வோமோ, அதைவிட அதிகமாக நாங்கள் அவர்களுக்காக உணர எங்களுக்குக் கற்பி. நமக்கு வறுமை ஒருக்கால் வந்துவிடுமோ எனும் நினைப்பே நமக்கு அச்சத்தையூட்டினால், தேவைச்சக்கரத்தின் கீழ் அகப்பட்டு நசித்தவர்களுக்காக, பலமடங்கு இரக்கப்பட எங்களுக்குக் கற்பி. தங்கள் உண்மையான தேவைகளுக்கு எப்படி சந்தோஷமாகவும், உரிமையுடனும் செலவழிப்பார்களோ, அப்படி மற்றவர்களின் அத்தியாவசியங்களுக்காகவும் செலவழிக்க எங்களுக்குக் கற்பி. எல்லாவற்றையும் வழங்கும் சர்வ கொடையாளனான உன்னை மறந்து, உன் கொடைகளை மட்டும் நேசிப்பவர்களாக நாங்கள் இல்லாதிருக்க எங்களுக்குக் கற்பி. உன் பரிசுகளை உன்னைவிட பெரிதாக எண்ணுபவர்கள், தங்களை உன்னிடமிருந்து பிரித்துக் கொள்கிறார்கள். நீ எப்படி ஜீவராசிகளுக்கு வழங்குகிறாயோ, அப்படி உன் பரிசுகளை மற்றவர்களுக்கு எதையும் எதிர்பாராமல் அளிப்பவர்கள், தங்களை ஒன்றே பலவாறாக எல்லா ஜீவராசிகளிலும் காண்பார்கள்.
192. Teach me to spend for God's work as I spend for myself.
192. எனக்காக நான் செலவிடுவதைப் போல கடவுட் பணிக்கும் செலவிட எனக்கு கற்பி.
எனக்கு தூய நலத்தைக் கொடு, ஆனால் என் உடன்பிறந்தவர்களுக்கு அதிக நலத்தைக் கொடு. அதனால், நான் என் விரிவுபெற்ற உள்ளத்தினில் என் மேம்பட்ட நலத்தினால் மகிழ்வேன். எனக்கு ஆற்றலைக் கொடு, ஆனால் என் நேசர்களுக்கு அதனை விட அதிகமாய் அள்ளிக் கொடு. அதனால், நான் எல்லா மனங்களின் சக்தியையும் ஒருங்கிணைக்கப்பட்ட என் மனத்தினால் உபயோகிப்பேன். எனக்கு ஞானத்தைக் கொடு, அதன் மூலம் என் அன்பர்களை நான் மேன்மையான ஞானியர்களாக்குவேன். அதனால், எல்லையில்லாமல் அகன்று இணைந்த என் சகோதர உள்ளங்களில் விரியும் ஞானஒளிக்கதிர்களை நான் உணர்வேன். நான் அனைவருடைய விழிகளினால் காணவும், அனைவருடைய கைகளின் மூலம் செயல்புரியவும், அனைவருடைய இதயத்துடிப்பை உணரவும் எனக்கு கற்றுக் கொடு. நான் எவ்விதம் எனக்கு செய்துகொள்கிறேனோ, அவ்விதமே நான் அனைவருக்காகவும் நெஞ்சுணர, செயலாற்ற, கடினமாய் உழைக்க, ஊதியம்பெற, குறிப்பாக, செலவிட எனக்கு கற்றுக் கொடு. எனக்கு ஆரோக்கியம் வேண்டும், எனக்கும், மற்றவர்களுக்கும் முன்மாதிரியாய்த் திகழ்வதற்காக. நான் திறனாளியாக வேண்டும், புவியின் வாசலிலிருந்து திறனின்மையை விரட்டுவதற்காக. எனக்கு ஞானத்தின் சுதந்திரம் வேண்டும், அதனால் நான் என் உரிமையை அனைவரின் ஆன்ம விடுதலையுடன் கூடிய பூரண சுதந்திரத்தில் மட்டுமே மகிழ்ந்து அனுபவிக்க!
193. Teach me to see Thine Omnipresent Spirit suffering in the sick.
193. உன் சர்வவியாபகப் பேருணர்வே நோயாளிகளில் துன்பப்படுகிறது என்பதைக் காண எனக்குக் கற்பி.
உன் கருணையையும் ஞானத்தையும் நல்லவிதமாக உபயோகிக்கத் தவறியிருந்தால், நான் ஒரு முடவனாகவோ, தொழுநோயாளனாகவோ, குருடனாகவோ இருந்திருப்பேன் என்பதை உணர எனக்குக் கற்பி; அப்படி ஒருக்கால் நான் முடவனாகவோ குருடனாகவோ ஆவதற்கு பாத்திரமாக இருந்திருந்தால், நான் அவற்றிலிருந்து குணமாக முழுமுனைப்புடன் ஏங்கியிருப்பேன். அதனால், முடங்கியோ, சோகத்தால் பீடிக்கப்பட்டோ இருக்கும் மனிதர்களை நான் எப்பொழுதெல்லாம் காண்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் உன் சர்வவியாபகப் பேருணர்வே அந்த மனிதரூபங்களில் துன்பப்படுகிறது என்பதை எனக்கு நன்கு உணரச்செய்; என் உடலில் குடிகொண்டிருக்கும் ஆரோக்கியத்தையும், சாந்தத்தையும் அவர்கள் உடலிலும் பிரதிஷ்டை செய்ய எனக்குக்கற்பி. பிறருடைய கதறல்கள், ஏக்கங்கள், துன்பங்கள்மேல் நான் பச்சாதாபம் கொள்ள எனக்குக்கற்பி; அதன்மூலம் நான் இவைகளிலிருந்து விடுபட எப்படிப் போராடுவேனோ, அப்படி அவர்களுக்காகவும் போராடுவேன். அனைவருக்காகவும் நான் ஏங்கி, போராடி, அழுது, மற்றும் நகைத்து, என் மகத்தான ஆன்மாவை இறுதியில் எல்லோரிலும் காண்பேனாக.
194. In the Whisper-Sobs of my mind I heard Thy Magic Voice.
194. என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலில் நான் உன் மாய கீதத்தைக் கேட்டேன்.
லோகாயத ஆரவாரயிசையின் கனத்த முகமூடியைத் தள்ளி விலக்கினேன். வரம்பற்ற கீதமே, உன் குரலைப் பிறகு நான் கேட்டேன். வயலின்களின் கூக்குரலிலும், யாழின் ரீங்காரத்திலும், என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலிலும் நான் உன் கீதத்தைக் கேட்டேன். என் ஆன்மாவின் அற்புத கீதமே, என் இதயத் தந்திகளுக்குள்ளே மறைந்திருக்கும் உன் மெல்லிய நளினமான புலரும் இசை என் இருண்ட மனத்தளத்தில் பரந்து விரவுவதை, நான் இறுதியில் கண்டுகொண்டேன். மாயமந்திரக் குரலே, யுகங்களாய் என்னைப் பிணைத்த சோம்பலை விட்டொழிக்க வைத்தாய். என் கீதங்கள் அனைத்தினையும் உன் என்றும்-சாந்திதரும் கீத சந்நிதியில் நான் சமர்ப்பிக்க இங்கு வந்துள்ளேன்.
195. I will be Thine always.
195. நான் எப்பொழுதும் உன்னுடையவனாக இருப்பேன்.
நான் மிக தொலைவிற்கு, வெகுசேய்மையிலுள்ள விண்மீன்களை விட நெடுதூரம் சென்றாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்!பக்தர்கள் வருவார்கள், செல்வார்கள்; ஆயினும் நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்!நான் அலைபோல்வரும் ஜென்மந்தோறும் தாவி பல ஜீவிதங்களை எடுப்பினும், தனிமை வானிற்கடியில் அநாதரவாய்க் கிடந்தாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்! உலகம் உன் கேளிக்கையில் மயங்கி உன்னை விடுத்தாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன். நீ எனக்குக் கொடுத்த அனைத்தையும் திருப்பி எடுத்துக் கொண்டாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன். மரணம், நோய், சோதனைகள் - இவை என்னை சல்லடையாய்த் துளைத்து நார்நாராகக் கிழித்தாலும், நினைவின் பிரகாசம் மங்கி அணையும் வேளையில், என் உயிர்நீக்கும் கண்களைப் பார், அவை அமைதியாக சொல்லும், "நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன் ". என் குரல் நுடங்கி ஒடுங்கி எனைவிட்டு அகன்றிடினும், என் ஆன்மாவின் மோனக் குரலினால் பூரித்து நான் உன்னிடம் சன்னமாய் ஒலிப்பேன், "நான் எப்பொழுதும் உன்னுடையவனே!"
196. I baptize myself in the sacred waters of my tears of love for Thee.
196. உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.
நீளமான, துரதிருஷ்டமெனும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளின் வழியாக, நெடுங்காலப் பிரிவெனும் மனோராஜ்ஜிய இடைவெளிகளைத் தாண்டி, முடிவற்ற ஜென்மங்களெனும் பந்தயத் தொடர் பாதைகளில் ஓடி, பல லட்சியங்களெனும் படிக்கட்டுக்களைக் கடந்து, பல்வேறு ஆசைகளெனும் வழிகளைப் பின்தொடர்ந்து, சோகமும் இன்பமும் மாறிமாறி வரும் சுழல்பாதைகளிலிருந்து விடுபட்டு - இறுதியில் நான் என் பயணத்தின் முடிவில் நிற்கின்றேன். நான் என் கடந்த அனுபவங்களை இனிமையாக நினைவுகூர்கின்றேன்; ஒவ்வொரு கடந்த காலத்துத் துன்பமும், இப்போது ஒரு இனிமையான ஆனந்தக் கண்ணீரூற்றைத் திறந்துவிடுகின்றது. உன் மேலுள்ள அன்பினால் பரிமளிக்கும் அந்தப் புனிதமான கண்ணீரில், நான் தினமும் ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.
197. Mayest Thou reinforce our blended prayers.
197. எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.
எங்கள் நெஞ்சிலிருந்து ஒருமித்துப் பொங்கும் எங்கள் பிரார்த்தனை நீரோடைகள் எல்லாம் ஒன்றாக இணைந்து பெருவேகத்துடன் பாய்கிறது. இந்த அகலமான, ஆழமான பிரார்த்தனை நதிகள் அனைத்தும் உன் சன்னிதானமெனும் கடலைத் தேடி அதிவேகமாக ஓடுகின்றன. எங்கள் வெள்ளம், அலட்சியமெனும் தடைகள், மயக்குறு மனிதப் பழக்கவழக்கங்கள், லோகாயத-விகல்பங்கள் என இவையாவற்றையும் தகர்த்துக் கொண்டு பாய்கின்றது. எங்கள் வெள்ளம் சோதனைகளாலும் வாழ்க்கை அனுபவங்களாலுமான பரந்த பிரதேசத்தில், மனித அறியாமையெனும் மணல்களின் வழியாக ஓடிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆயினும், உன் கடற்கரை வெகு தொலைவில் இருப்பதுபோல் தோன்றுகின்றது, தாகத்துடன் கூடிய எங்கள் வெள்ளம் உன் பிரகாசமான பெரும்பரப்பைத் தேடி பரபரப்பாக ஆனால் உறுதியாக சென்று கொண்டுள்ளது. உன் கருணை மழையை இடைவிடாமல் அடைமழையாய்ப் பொழி. எங்கள் பிரார்த்தனை வெள்ளங்களை பலப்படுத்தி, எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உன் கரைக்கு அவைகளை விரைந்துசெலுத்தி ஜெயமடையச் செய்.
198. Rock me to sleep on Thy Bosom of Peace.
198. உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.
நெடுங்காலமாக வேண்டி இறுதியாக என் கோயிலுக்குள் நீ வந்துள்ளாய். என் புலன்களின் கதவுகள் அகலமாகத் திறந்திருக்கின்றன. இருட்பறவை தன் சிறகுகள் விரித்துப் பறந்துசென்றுவிட்டது. பழமையான என் காதல்கவிதையைப் புதிதாகப் பாடியிசைக்க நான் என் இதய யாழ்-தந்திகளை இயைத்துக் கொண்டுள்ளேன். என் ஆன்மாவிலிருந்து மலரும் புதிய ஸ்வரங்களைக் கொண்டு நான் உனக்குப் புதிய பொலிவுடன் துலங்கும் ஒரு கானத்தைப் பாடுவேன். என் கானத்தின் ஒலியலைகள் உன் பிரபஞ்ச-தாளக் கடல்மீது நடனம் புரியும். அப்படியே, என்னை பக்திப் பேரலைகளால் மிதக்கவைத்து உன் கரைக்கு அழைத்துச்செல். கான-அலைகளின் தாலாட்டே, உயிரினும் பிரியமான என் நிரந்தரத் தாயின் தாலாட்டை எனக்காகப் பாடு. கடவுளன்பின் கந்தர்வ கானமே, என்னை உன் இனிய ராகத் தொட்டிலிலிட்டு ஆட்டி, கடவுளின் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் தூங்கச் செய்.
199. I perched in many trees of lives and sang Thy songs.
199. நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.
சொர்க்கத்தின் குயிலான நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன். என் பாடல்கள் ஆன்ம-இலைகளின் பசுமை-பொதிந்த நரம்புகளினுள்ளே உன் உயிர்ச்சக்தியைச் செலுத்தி அவைகளைத் துடிப்புடன் அசையவைத்தன. பல நூற்றாண்டுகாலத் தோட்டங்களில், உறங்கும் ஆன்மாக்களை விழிப்புறச்செய்து உன்னிடம் சேர்க்க, உன் பாடல்களைப் பாடியுள்ள குயில் நான். நல்லிதயங்களின் தோட்டங்களில் உன் பாடல்களைக் கச்சேரி செய்துகொண்டு நான் பயணிக்கின்றேன். நான் மீண்டும் மீண்டும் வருவேன், வந்து வழிதவறிய கானக்குயில்களைக் கவர்ந்து, உன் பாடல்களைக் கற்றுத்தந்து, உன் பிரபஞ்ச சுதந்திரமெனும் வான்வெளியில் அவர்களுடன் சேர்ந்து நானும் பறப்பதற்காக மீண்டும் வருவேன்.
200. Endless throngs of Intoxications visit me.
200. தெய்வீக மதகளிப்புகளின் பெருங்கூட்டம் என்னை நாடி விடாமல் வந்துகொண்டேயுள்ளன.
என்னுடைய வாழ்வை உன்னுடையதுடன் பிணைத்துவிட்டேன், இப்போது என் வாழ்வு இடையறாத பரவசம். இரவு-பகலாய், விழிப்பு-கனவு-ஆழ்ந்தவுறக்க நிலைகளெல்லாவற்றிலும், உன் ஆனந்தவூற்று என்னைக் களிமதப்பில் அமிழ்த்துகின்றது. ஆஹா, என்ன ஆயிற்று எனக்கு? களிமதப்பின் மேல் மதகளிப்பு! முடிவற்ற, விவரிக்கமுடியாத தெய்வீக மதகளிப்புகளின் பெரும்பொழிவு என் மீது சொரிந்தவண்ணம் உள்ளன. பல நூற்றாண்டுகால முதிர்வினால் சுவைசெறிந்த தேன்ரச மதுவே, உன்னை இறுதியில் கண்டுகொண்டேன்; உன் மதுரத்தை என்றும், என்றும், என்றென்றும் சுவைத்துக்கொண்டே இருப்பேன்.
201. Teach me to fish for all goodness in the net of searchlights.
201. எல்லா நற்குண மீன்களையும் ஒளிவிளக்கு பொருத்திய வலைகளால் பிடிக்க எனக்குக்கற்பி.
நெடுங்காலத்திற்கு முன் நான் ஒரு மனோ டார்ச்விளக்கை உபயோகம் செய்து கொண்டிருந்தேன். அதனைக் கணத்திலே வேலைபார்க்குமாறு செய்வேன், உடனே அது தேடும்-ஒளிக்கீற்றை வீச ஆரம்பிக்கும். அவ்வொளியில் நான் தேடிப் பலப்பல பொன்னிறமாய் ஜொலிக்கும் ஆக்கப்பூர்வ-சிந்தனைப்-பொடிமீன்களை பிடித்துள்ளேன். அவற்றைத் தூண்டில்புழுவாக வைத்து என் உணர்வுநிலைக் கடலிலுள்ள பெரிய கடல்வாழினங்களையும் பிடித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரே இருட்டாக இருக்கும், மேலும் என் விளக்குபொருந்திய வலையின் சுற்றளவு சிறிதாக இருந்ததால், பல நயமான வகைகள் நழுவிவிட்டன. இப்போது, நான் பல டார்ச்விளக்கு-வலைகளை அடுக்கி ஒரு கட்டாக சுமந்துசெல்கின்றேன். அவைகளை நான் எல்லோரிடமுமிருந்து, பொன்னால் பின்னப்பட்ட கனவுகளினாலும், வெள்ளியினாலான பாடல்களினாலுமான அரிய நாணயங்களைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளேன். எண்ணற்ற இந்த விளக்குபொருந்திய இழு-வலைகளை எல்லாம் ஒருங்கே பின்னி, நான் உன் ஞானக் கடலில் வலைவீசுவேன். பார்! உன் இன்னும் பிறவா நற்குணங்களெனும் முட்டைகள், பிரகாசிக்கும் உணர்வுகளினாலான பொடிமீன்- கூட்டங்கள், பொன்மய செயல்கள் - இவையனைத்துடன் இறுதியாக உன்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வருவேன்!
202. என் பார்வையை உன்மீதன்றி வேறெந்தபக்கத்திலும் செலுத்தமாட்டேன். ஆரோக்கியம்-நோய் ஆகிய இருமைகள் கனவென்று நான் அறியுமாறு செய்.
202. I shall ne'er turn my gaze away from Thee. Make me see that health and sickness both are dreams.
202. என் பார்வையை உன்மீதன்றி வேறெந்தபக்கத்திலும் செலுத்தமாட்டேன். ஆரோக்கியம்-நோய் ஆகிய இருமைகள் கனவென்று நான் அறியுமாறு செய்.
நான் ஓர் புனித சபதம் செய்கின்றேன்! என் அன்பின் பார்வையை உன் இடையறாத நினைப்பின் தொடுவானத்தில் இருந்து ஒருபோதும் கீழ்நோக்கிச் செலுத்தமாட்டேன். என் மேனோக்கிய கண்களின் காட்சியை ஒருபோதும் கீழிறக்க மாட்டேன்; அதனை உன் மேலல்லாது வேறெதன்மேலும் வைக்க மாட்டேன்! என் மனதை ஒருக்காலும் உன்னை நினைவுறுத்தாத எதனை நோக்கியும் திருப்பமாட்டேன்! கெட்டகனவு போன்ற அறியாமை தீண்டிய செயல்களினை நான் வெறுப்பேன். நற்காரிய சாதனைக் கனவுகளை நான் நேசிப்பேன். அனைத்து நல்லவைகளின் கனவுகளையும் நான் நேசிப்பேன், ஏனெனில் அவை உன் கனவுகள் என்பதால். நான் பல கனவுகளைக் காண்பேன், ஆனால் நான் உன்னில் விழிப்புற்று எக்கணமும் உன்னையே நினைத்திருப்பேன். என் ஆன்மபீடத்தில் எரியும் புனித வேள்வித்தீயான இடையறாமல் தொடரும் நினைவில், நான் உன் திருமுகத்தை என்றும்-விழித்திருக்கும் என் அன்பின் கண்களினால் தொடர்ந்து தரிசிப்பேன். உன் கருணையால், ஆரோக்கியம்-நோய், வாழ்வு-சாவு ஆகியவை கனவென்று நான் அறிகிறேன். என் நல்ல கனவுகளின் கனவு-கதை முடிவுற்று, பிரபஞ்ச ஓவியம் வரையப்பட்ட மாயத்திரைக்குப் பின்னால் விழிப்புறும்போது, நீ மட்டுமே ஒரே பேருண்மை எனக் கண்டுணர்வேன்.
203. In the bursts of blue brine I shall bound with Thee.
203. பொங்கும் நீலக்கடலில் நான் உன்னுடன் துள்ளிக்குதித்து விளையாடுவேன்.
பொங்கும் நீலக்கடலில், ஆனந்தத்தினால் என் ஆவி அமைதியான கடற்கரையில் துள்ளிக்குதிக்கின்றது. தாழ்வுநில துர்நாற்ற வாயுக்கள், தனிமையில் ஒதுங்கி நிமிர்ந்திருக்கும் வறண்ட குன்றுகளும் நீங்கின. உப்பு மணம் என் ரத்தவோட்டத்தில் கலந்து, என் ஆற்றல் கரைபுரண்டு ஓடுகின்றது. ஆஹா! கடற்காற்றினால் என்னே ஒரு ஜீவப் புத்துணர்வு அயராமல் என்னுள்ளே பாய்கின்றது! ஆஹா, நீலக்கடலோரச் சீரான கடற்கரையே, நீ ஆரோக்கியத்திற்கு பெயர்பெற்ற தேவலோகத்தை அடுத்த ஒரு சொர்க்கம். நீலக்கடலோரத்தின் அருகில் உன்னிடமிருந்து நான் ஆரோக்கியத்தைப் பருகுவேன். நீ ஆழமான நீலக்கடலை எப்படி வெளிரிய நீலவானுடன் பின்னிப் பிணைக்கின்றாயோ, அதுபோல மகத்தான உன் பேருணர்வை எங்கள் அரும்பும் நம்பிக்கையுடன் நெய்து, அதனை எல்லாத்திசைகளிலும் பரப்ப விழைகின்றாய்.
204. Save us from religious bigotry.
204. மத வேறுபாட்டுணர்வுகளின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக.
எங்கள் அனைவரின் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஜோதித் தலத்தை நாடி பல நிஜமான பாதைகளில் பயணிக்கின்றோம். பல்வேறு மதங்கள் எல்லாம் உன் ஒரு உண்மை மரத்தின் கிளைகள் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட ஆகம உபதேசங்களெனும் கிளைகள் அனைத்திலிருந்தும் தொங்கும், பிரக்ஞானத்தால் சோதிக்கப்பெற்ற, கனிந்த, சுவையான ஆன்ம-ஞானப் பழங்களை நாங்கள் சுவைத்து இன்புற எங்களுக்கு அருள்புரி. ஒன்றேயான உன் அமைதிக் கோயிலில், நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை, நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. அந்த ஆன்ம கீதத்தின் மூலம் நீ உன் அமைதிச் சபதத்தை விட்டு, எங்களை அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் தூக்கி அமர்த்திக் கொள்வாயாக. அதன்மூலம் எங்கள் எல்லா மென்மையான பாடல்களிலும் உன் பாடலின் சாரத்தைக் கேட்போமாக.
205. Prayer-Demand to reach the One Highway of Realization.
205. ஒரே மெய்ஞ்ஞான உயர்வழிச்சாலையை அடைய உரிமையுடன்-வேண்டுதல்.
கலங்கரை ஒளிவிளக்கே, சுகந்தமலரே, எங்கள் புலன்களை விழிப்புறச்செய்!"தேவலோக வேட்டைநாய்"* மோப்பம் பிடிப்பது போல, எங்களையும் நேரே உன்னிடம் கொண்டுசெல்லும் அந்த ஒரே மெய்யுணர்வு வேகவழிச்சாலைக்கு விரைவாக இட்டுச் செல்லும் சரியான அணுகுசாலையை நாட வைப்பாயாக. அணையா கலங்கரை ஒளி விளக்கே, உன் ஒளிரும் வெளிச்ச விரலை எங்கள் அறியாமை இருளின்மேல் காட்டு; அதன்மூலம் வழிதவறாமல், தாமதமின்றி நாங்கள் சரியான வழியை கண்டுகொள்ள முடியும். எந்த மரபு வழிபாட்டு நெறியைப் பின்பற்றினாலும், எங்களை இறுதியில் உன்னிடம் கொண்டுவிடும் பொதுவான விவேகஞான உயர்வழிச்சாலைக்கு வழிநடத்து. குறுகிய கொள்கைப் பிடிவாதமெனும் சந்துகளுக்கும், விட்டுக்கொடுக்காத மனச்சாய்வு சுவர்களுக்கும் மேலே, எங்கள் உள்ளங்கள் உன் மேன்மையாக்கும் விமானத்தில் பாதுகாப்பாகப் பயணிக்கட்டும். இறுதியில், அனைத்துப் பிரபஞ்சமும் கூடும் பொது வழிபாட்டுக்காக நாங்கள் (மனிதனால் உருவாக்கப்பட்ட, விளக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட நம்பிக்கைகள், குறுக்கல்களால் தடுக்கப்பட முடியாத) சுதந்திரமான வானவெளிக் கோயிலில் சந்தித்து, எங்கள் இதயங்களின் எல்லா புனித மந்திரங்களையும் கொண்டு உன் சர்வவியாபக சாந்நித்தியத்திற்கு நாங்கள் ஓதுவோமாக!முக்திபெறுவதற்கான விஞ்ஞானபூர்வ வழிமுறைகளையும், விஞ்ஞான-தாயகத்தின் ஒளியில் பிறந்த குழந்தையான மெய்யுணரும் ஆன்மநெறியையும் எங்களுக்குக் கற்பி. ஸ்தூல விமானங்கள் பறக்கும் இந்த யுகத்தில் செய்வதுபோல, எங்கள் இரும்புப்பறவை விமானங்களை பனிமூட்டம் மற்றும் இரவினிருள் தடைகளை ஊடுருவி, ஒரு கட்டுப்பாட்டறை கோபுரத்திலிருந்து மற்றொன்றிற்கென மனித-நெறிமுறைப்படி இயங்கும் ஒளிரும் மின்சார திசைகாட்டியைப் பின்பற்றி, ஒரு ஊரிலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றிற்கென பாதுகாப்பாய் வழிநடத்துவோமாக. பெருஞ்ஜோதி விளக்கே! எங்கள் அறியாமையிருளை ஊடுருவிச்சென்று வழிகாட்ட உன் இனிய மணங்கமழ் ஞானப்பிரகாசக் கதிரை அனுப்பி வை; அதன்மூலம் நாங்கள் சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இறங்குமிடத்திலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு ஜென்மத்திலிருந்து மற்றொன்றிற்கென எங்கள் ஆன்மவழியைக் கண்டுகொண்டு பயணிப்போமாக. மேலும், சுகந்த மலரே! நாங்கள் மெய்ஞ்ஞான கோளத்தில் முன்னேறுகையில் எங்களை எல்லாப் பொழுதிலும் உற்சாகமூட்ட உன் அன்பின் சுவாசக் காற்றை அனுப்பி வை; அதன்மூலம், உன் வானத் தோட்டம் எங்கள் கற்பனைக்கு எட்டி, தணியாமல் உன்னைத் தேடும் எங்கள் தாகமான எங்கள் ஆன்ம பயணங்களை விரைவுபடுத்துவோமாக. ---தேவலோக வேட்டைநாய் - "The Hound of Heaven" எனும் தலைப்பில் பிரான்சிஸ் தாம்ப்ஸன் இயற்றிய செய்யுள், ஜீவர்களின் [குறிப்பாக தவறிழைப்பவர்களின்] மேலுள்ள கடவுளின் தீவிரமான அன்பை, ஒரு வேட்டைநாய் முயலைத் துரத்துவது போன்ற உருவகத்தில் சித்தரிக்கின்றது. ---
206. Flowers and skies, heralds of Thee.
206. பூக்களும் வானமும் உன் சேதி சொல்லும் கட்டியக்காரர்கள்.
பூக்கள், வானம், அழகிய மலர்ச்சோலை போல் வானில் தோன்றும் காட்சி - இவையெல்லாம் தெய்வீகச்செய்தி பகர்பவை. நான் அவைகளை ஆனந்தமாய் அனுபவித்துத் திளைக்கின்றேன். ஆனால் அவரை [கடவுளை] நினைவுபடுத்திய பின்னர், அவ்வழகிய தூதுவர்கள் மறைந்து போகின்றன; ஆயினும், என்னுயிர்க்குயிரான நேசனின் வரம்பில்லா கவின்மிகு அழகு என்னைத் தொடர்ந்து சிலிர்ப்பித்து மகிழ்விக்கின்றது.
207. Divine Mother, come Thyself into the waiting Temple of our Love.
207. தெய்வத்தாயே, உனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் குடிபுக வா.
தெய்வத்தாயே, எங்கள் நெஞ்சங்களில் நீ மட்டுமே முழுவதுமாக விளங்கி சுடரொளி வீசு; எங்களுக்குள் இருக்கும் எல்லா இருள்களையும் சுட்டு எரித்துவிடு. தெய்வத்தாயே, எங்கள் இதய பூஜாடிகளில் நீ எப்போதும் இருந்து நறுமணம் வீசு; அது உன்னிடம் பக்தி செய்யும் எங்கள் அன்பர்களுக்கு, அவர்கள் எந்த மூலையில் இருப்பினும் அங்கு சென்று பரவட்டும். உன்மேல் கொண்ட எங்கள் அன்புக்கண்ணீரால், பொருட்கள் மேல் உள்ள எங்கள் எல்லா ஆசைகளையும் கழுவித் தூய்மைப்படுத்து. உன்னைச் சேர்கையில் தோன்றும் ஆனந்தக் கண்ணீரால், எங்கள் துயரங்கள் அனைத்தையும் அவை மீண்டுவராவண்ணம் துடைத்து அப்புறப்படுத்து. தெய்வத்தாயே, எங்கள் சிறிய இதயங்களை இணைத்துப் பெரிதாக்கி உன் எங்கும்நிறைத்தன்மை இடையறாமல் என்றும் அதில் தங்குமாறு செய். உன் புனிதக் கண்ணாடியில் எங்களை நாங்கள் உள்ளபடி காணுமாறு பழக்கு. உன்மேல் கொண்ட எங்கள் அன்புச்சுடர், உலகாயத ஆசைகளெனும் சிறிதாகச் சீறும் கனல்களைத் தாண்டி வானுயரத்திற்கு மேல் எழும்பட்டும். என் தெய்வத்தாயே, மறதியெனும் இருண்ட வானில், முழங்கும் இடியாய் எங்கள் அன்றாடவேலைகள் இடித்தபோதிலும், உன்மேல் கொண்ட எங்கள் பக்தி வால்-நட்சத்திரமாக ஒளிர்ந்து பாயட்டும். இறைவியே, கோயில்கள், நிறுவனங்கள், பணம், கோடிக்கணக்கான அலைக்கழிப்புகள் என அவை உன் தெய்வீக ரூபத்தில் வந்து எங்களை குழப்பமடையச் செய்கிறது. போதும் இச்சோதனை, இதுவே தருணம்! நீ உள்ளபடி நிஜரூபத்தில் வந்து உனக்காகக் காத்திருக்கும் எங்கள் அன்புக்கோயிலில் உடனே குடிபுகு. அம்மா! அறியாமையெனும் இருண்ட இரவினில் உழலும் எங்கள் செயல்களுக்கு, நீ துருவ நட்சத்திரமாய் இருந்து எங்களை பத்திரமாக உன் இருப்பிடத்திற்கு வழிநடத்திச் செல்.
208. O Divine Mother, I am Thine, for Thou art eternally mine.
208. தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே.
அழகிய பலவண்ணமான பக்திப் பூமாலைகளால் உன் சர்வவியாபகமான அன்பின் தாமரைப்பாதங்களைச் சுற்றி அலங்கரிக்கின்றேன். நான் உன் செயல்களின் நாட்டியமாடும் பாதத்தை நட்சத்திரங்களின் மின்மினுப்பில் கண்டுற்றேன். உன் ஒளியின் நடனத்தை நீலக்குவளை மலர்களிலும், ஊதாநிற மத்தாப்புப்பூக்களிலும் கண்டுற்றேன். உன் காலடிகளின் பிரதிபலிப்பு அலையலையாக விரவும் அரோரா ஒளிர்மேகங்களில் தெரிகின்றது. உன் அற்புத நடனத்தை ஜீவராசிகளின் வாழ்க்கைப் பரிணாமவளர்ச்சி அரங்கங்களில் கண்டுற்றேன். ஆனால், தெய்வத்தாயே, உன் ஆனந்தமுகத்தின் சாந்தமான கருணை வெளித்தோற்றங்களின் மேகமூட்டங்களின் பின்னும், என் அலைபாயும் எண்ணங்களின் மாயத்திரைக்குப் பின்னும் எப்போதும் மறைந்தே இருக்கின்றது. நான் வெகுகாலமாய் உன் முகத்தைத் தரிசிக்க காத்திருக்கின்றேன். என் பொறுமையின்மை லட்சக்கணக்கான தீநாக்குகளினால், உனக்காக ஏங்கும் என் ஏக்கத்தின் பெரும் சுடருடன் சுட்டெரித்துக் கொண்டுள்ளது. நான் வானத்தை எரித்தேன். நட்சத்திரங்களைப் பற்றவைத்தேன். கோளங்களுக்கு கட்டமைப்புதரும் அணுக்களை உருக்கினேன். என் உருகும் ஒளியில், உன்னைத் தேடும்போது, வான ஒளிவிளக்குகள் தங்கள் நிலை தடுமாறி, தலைக்குப்புற விழுந்தன. வான்வெளியின் நிழல்கள், மனோ நிழல்கள், அறியாமை நிழல்கள் எல்லாம் என் வாழ்வின் ஒளியின் ஆற்றல்மிக்க சிதறலால் விலகி ஒதுங்கின. என் பேராற்றலுடைய ஜோதி எல்லாவற்றையும் விழுங்கி, என் ஒளிரும் அன்பின் பலகரங்கள் உன்னை பிடித்துக் கட்டித்தழுவ யத்தனிக்கும்போது, எல்லாப்புறங்களிலும் இருந்து என்னை நோக்கிப் பாழ்சூன்யம் நகைத்தது; அந்தோ, என் அன்பொளியின் இதயம் சுக்குநூறாய் உடைந்தது!எல்லா வெட்டவெளியிலும் எனது ஒளியின் கிரணங்கள் நிரப்பும்வரை, என் ஒளி மினுமினுக்கும் விண்மீன்களாய் கண்ணீர்சிந்தியது. என் கதறும் சுடர் எல்லாப்புறங்களிலும் உன்னை நாடிக் கூவியழைத்தது, உனது சர்வவியாபக வெளியில் எதிரொலித்த அதன் சத்தத்தில், உனது குரல் நிசப்தமாகச் சொல்லியது:"எல்லாவற்றையும் ஒரே ஜோதியில் விழுங்கிய உன் அன்பின் ஜோதியானது நானே! நீயாக ஆகிய என்னைத்தான் நீ தேடியுள்ளாய், ஆனால் என்னை உன்னிடமிருந்துத் தொலைவில் இருத்தியிருந்தாய். என்மூலம் உன்னைக் கண்டுகொண்டதற்குப் பின், என்னை உன்னிடமிருந்து தள்ளியிருப்பதாக, அதாவது, உனது இதய எல்லைக்கு வெளியே இருப்பதாக எண்ணி, இனி என்னை நாடாதே. நீயே நான்; நானே நீ!"பூமி தூள்தூளாகத் தெறித்து விண்வெளியில் எறியப்படினும், காலமெனும் திரையில் பல பிரபஞ்சத் திரைப்படங்கள் வந்து சென்றாலும், தெய்வ மாதா, நான் உன்னுடையவனாகவே எப்போதும் இருப்பேன், ஏனெனில் நீ நிரந்தரமாக என்னுடையவளே.
209. Thou didst reveal Thy silver rays of speaking Silence.
209. நீ உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.
தெய்வத்தாயே, ரோஜாப்பூவின் பேசும் மணத்தில் உன் குரலைக் கேட்டேன். என் பக்தியின் சன்னமாக முணுமுணுக்கும் பிரார்த்தனைகளில் உன் குரலைக் கேட்டேன். என் ஆரவாரிக்கும் எண்ணங்கள்போடும் இரைச்சல்களின் அடியிலும் உன் குரலைக் கேட்டேன். உன் அன்பே தான், நட்பின் குரல் மூலமாகப் பேசியது. உன் மிருதுவான தன்மையை நான் அல்லிமலர்களின் மென்மையில் தொட்டுணர்ந்தேன். தெய்வத்தாயே, விடியலைப் பிளந்து, எனக்கு உன் ஒளிமுகத்தைக் காட்டு! பகலவனைப் பிளந்து, உன் சக்திமுகத்தைக் காட்டு! இரவினைப் பிளந்து, எனக்கு உன் சந்திரவதனத்தைக் காட்டு! என் எண்ணங்களைப் பிளந்து, உன் ஞானமுகத்தைக் காட்டு! என் உணர்வுகளைப் பிளந்து, உன் அன்புமுகத்தைக் காட்டு! என் மானத்தைப் பிளந்து, உன் பணிவுமுகத்தைக் காட்டு! என் ஞானத்தைப் பிளந்து, உன் பூர்ணமுகத்தைக் காட்டு!நான் தனிமையின் திக்கற்ற தவிப்பில் உன்னை வேண்டி ஓலமிட்டபோது, அருணோதயத்தில் நீ வெளிப்பட்டு, ஆனந்தத்தால் என்னை வாழ்த்தி வரவேற்றாய். குழம்பாய்க் கொதிக்கும் கதிரவனின் கதவுகளின் வழியே நீ தோன்றி, என் உயிரின் துவாரங்கள் வழியே உன் ஆற்றலை ஊட்டுவித்தாய். என் அறியாமை இரவினை நீ கிழித்துக்கொண்டு, உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.
210. In the Temple of United Hearts.
210. இணைந்து ஐக்கியமான இதயங்களின் கோயிலில்.
ஜீவர்களின் கடினமான கல்நெஞ்ச பூமியில் உன் மிருதுவான அல்லிமலர்ப் பாதம் நடனமாடாதென்பது பொருத்தமே. மற்றவர்களுக்காகக் காட்டும் தயையின் இதழ்களின்மேல் உன் கோமள பாதாம்புஜம் என்றும் நடனம்புரியட்டும். தெய்வத்தாயே, உன் நெஞ்சத்துடிப்புகளை நான் என்நெஞ்சில் உணரவேண்டும்; உன் ஆனந்தத்தை என் சுகத்திலும்; உன் ஆற்றலின் வழிகாட்டுதலை என் செயலிலும்; உன் பேருணர்வை என் ஆன்மாவிலும் உணரவேண்டும். தெய்வத்தாயே, என் அன்புமலர்கள் யாவற்றையும் உன் நிரந்தர பாதங்களில் நான் சமர்ப்பிக்கின்றேன். தெய்வத்தாயே, என் பக்தி மலர்மொட்டினை நன்கு விரித்து, உன் நறுமணத்தை அதன்மூலம் வெளிப்படுத்து; அது உன்னைப் பற்றி ரகசியக்குரலில் என்றும் ஒலித்துக்கொண்டே, என் ஆன்மாவிலிருந்து மற்றவர்களின் ஆன்மாக்களுக்கு பரவட்டும். என் அன்பை பிறரிடம் நான் காணுமாறு செய்ய வேண்டுகின்றேன். அந்த பேரன்பின் ஒளிப்பிரகாசத்தில் முகத்திரை நீங்கிய உன் சாந்தமுகத்தை நான் காணுமாறு செய்வாயாக. நான் என்னை மற்றவர்களினில் காணுமாறு செய்வாயாக. எங்கள் இணைந்து ஐக்கியமான இதயங்களினில் நீ வீற்றிருப்பதை நான் என்றும் பார்க்குமாறு செய்வாயாக. என் இதயத்தின் ரகசியக்குரலில், உன் ரகசியக்குரலின் சிலிர்ப்பை நான் உணர்கின்றேன். உன்மேல் கொண்ட என் அன்பின் தாபத்தினின்று வீசும் ஒளியில், உன் அமைதியானப் புனிதத் திருமுகத்தை மிகுந்த முயற்சிக்குப் பின் இறுதியில் நான் காண்கின்றேன். தெய்வத்தாயே, எங்கள் இதயங்களை இணைத்து ஐக்கியமாக்கி ஒரே இதயமாக்கு. அந்த இணைந்து ஐக்கியமான இதயத்தின் புனிதபீடத்தின்மேல், உன் எங்கும்நிறை இறைத்தன்மை கொலுவீற்றிருப்பதை நாங்கள் என்றும் கண்டுகளிக்குமாறு செய்வாயாக.
211. I pour my love at Thy roseate Feet of Immortality.
211. உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்! .
விடியலின் இதயத்திலிருந்து நான் ஒளியினாலான பூக்களைப் பறித்து உனக்கு சமர்ப்பணமாக அர்ச்சிக்கின்றேன். விடியற்காலையின் விளக்கையும், என் விழிப்பின் விளக்கையும் கொண்டு, என் காலை அமைதிக்கோயிலில் ஒளியேற்றுகின்றேன். பன்னெடுங்காலமாக உன்னை மறைத்திருந்த அறியாமை நிழலினிலிருந்து விலகி வெளிப்பட்ட உன் ஆனந்தமுகத்தைத் தரிசனம் செய்தேன். பிறகு உன் ஆனந்த முகத்தை என் உள்முக கண்ணின்மணி வழியே பார்த்து, என் வாழ்க்கையின் முகம் உனது ஆனந்த அருட்முகத்தை ஒத்தே அமைந்துள்ளது என்று கண்டுகொண்டேன். உன் அன்பின் கண்ணாடியில், என் அன்பின் வெளித்தோற்றமானது உன் சாயலை பிரதிபலிப்பதை கண்டுகொண்டேன். விதியினை இனி நான் சாடமாட்டேன். அன்பான தெய்வத்தாயே, என்னாலே உருவாக்கப்பட்ட அறியாமை இருள்தான் நம் அன்பின் ஒளியை இதுவரை மறைத்திருந்தது. இனி, உன் ஆனந்த முக ஸ்படிகக் கண்ணாடியில், நான் என்னைப் பார்த்து, நான் பூரணமான ஆனந்த ஸ்வரூபன் என அறிகின்றேன். நிஸ்சலனமான என் இன்பக் கண்ணாடியில், நான் உன்னை - என்றும் புனிதமான, ஒன்றேயொன்றான, பூரண ஆனந்தமாகக் காண்கின்றேன். உன் அழிவற்றச் செம்மையான ரோஜாமலர்ப் பாதங்களில் என் அன்பினை நான் தாரை வார்க்கின்றேன்! என் ஆன்மச் சிமிழிலிருந்து பொங்கி வடியும் என் இதயத்தை நான் தாரை வார்க்கின்றேன்! என் மரியாதையின் மயக்கும் பரிமள கஸ்தூரியை அனைவற்றையும் முன்னேற்றும் உன் என்றும்-இயங்கும் பாதங்களில் நான் தாரை வார்க்கின்றேன்!
212. All futurity danced in me the Infinite Rhythm.
212. வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது.
நான் என் மனத்தின் எண்ணக் கதிரோட்டத்தை, புலன்களின் சிற்றின்ப எல்லைப்பரப்புகளிலிருந்து, வரம்பற்ற தளத்திற்குச் செல்லுமாறு மாற்றி முடுக்கிவிட்டேன். என் கவனத்தின் பிரகாசம் எல்லா திசைகளிலும் பரவி, அது வரம்பற்ற எல்லையைத் தழுவிநின்றது. நான் வரம்பற்ற எல்லையினுள் ஆழ்ந்திருக்கையில், என் எண்ணம் ஊனுடம்பின் புறத்தோற்றங்களெனும் திரைகளுக்குப் பின்னால் அகப்படவில்லை; மாறாக, நான் வெட்டவெளி தளத்தில் நின்றுகொண்டு பாய்ந்து வரும், ஒளிரும் எண்ண ஓட்டங்களைக் கண்டேன்; மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலங்களாக உலகில் தோன்றிய மற்றும் இன்னும் தோன்றாத நாகரீகங்களைப் பற்றிய எண்ண அலைகளையும் உணர்ந்தேன். வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது!
218. Thou art Love because my mother loves me.
218. என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய்.
கடவுளே, என் தாயும், என் தந்தையும் என்னை நேசிப்பதனால், அன்பே நீ என்பதை நான் அறிவேன்: நீயே ஆதிமூலமான என் தந்தையும் தாயும். நீ என் நண்பர்கள் இதயத்தில் இருப்பதாலேயே தான் அவர்கள் என்னை நேசிக்கிறார்கள்: நீயே என் தலைசிறந்த நண்பன். நீயே என் குரு; நீ எப்படி என்னை நேசிக்கின்றாயோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி.
214. The rocket of my love.
214. என் அன்பின் ராக்கெட்.
என் பிராணனை என் உடம்பிலிருந்து உள்ளிழுத்தேன்; என்னை என் உடலுடன் கட்டிவைத்துள்ள மூச்சுக்காற்று மறைந்தது. என் வாழ்வின் அனல்கக்கும் ராக்கெட், அனைத்தையும் காணும் ஒளிக்கண்ணில் தோன்றும் நட்சத்திரம் வழியே பறந்துசென்றது. பிறகு, என் கொந்தளிக்கும் உணர்வுகளாலான அந்த ராக்கெட் எண்ணற்ற கலனங்களின் இதயங்களில் பரந்துவிரிந்தது; எவராலும் தடுக்கமுடியாத அந்த என் அன்பின் ராக்கெட், இறுதியில் பெரிய வால்நட்சத்திரம் போல பேருணர்வின் ஆழமான வெளியில், உன் சர்வவியாபக அமைதியின் அடியாழத்தின் உள்ளத்துக்குள்ளே சென்று அமிழ்ந்தது.
215. My lost music sprang from the heart of everything.
215. அனைத்து இதயங்களினிலிருந்தும் தொலைந்து போன என் இசை ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது.
இந்தப் புதிய இசையின் தெய்வீக கீதத்தைப் போல் வேறு ஏதேனும் இசையைக் கேட்டுள்ளோமா என நினைத்தவாறு, பொறுமையுடன் நான் காத்திருந்தேன். அப்படி ஒன்றும் சிக்கவில்லை; கனவில் வந்து செல்லும் மங்கலான ஆவி போல் வந்து சென்ற அந்த இசையினைப் போன்றதொரு இசையை என் வளமான ஞாபகப் பெட்டகத்துள் நான் முழுவதுமாகத் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. நான் அந்த இசையை உண்மையிலேயே கேட்டுள்ளேனா? அல்லது நான் அதன் ஒத்திசையை கனவுகண்டேனா? அது என் எல்லாக் கனவுகளின், எல்லா லட்சியங்களின் அதியற்புத நிஜமான இசையா? அல்லது கலைந்து போகும் கனவில் ஒத்திசைத்த மெல்லோசையா?நான் காத்திருந்தேன். என்னுள்ளே புகுந்து அடியாழத்திற்கு ஆழ்ந்தேன். எல்லா புலன்களின் துறைகளின்பின்னும் சென்று பித்தனாய் அலைந்து, பேயாய்ப் பறந்து, நான் என் கனவுகளில் கேட்டு, பின் தொலைந்த அந்த இசையை மீண்டும் ஒருமுறை கேட்கத் தவித்தேன். கடைசியில், நான் என் கனவுகளின் ஒளியலைகளைக் கண்டேன்; அவற்றில் என் பூலோக ஜென்மங்களிலுற்ற எல்லா ஆசைகளின் விருப்ப அலைகளும் நடனமாடுவதையும் கண்டேன். நான் பல தேவலோக இன்னிசைகளை செவிமடுத்துக் கேட்டேன்; ஆனால் அவை முன்னம் நான் ஒருமுறை கேட்டு, பின் தொலைந்த அந்த இசையைப் போன்றில்லை. திடீரென்று, நான் கனாக்கண்டு மறுபடியும் என் ஆன்மாவின் அந்த தொலைந்த இசையைக் கேட்டது போல் எனக்குத் தோன்றியது. நான் எல்லாக் கனவுகளையும் ஒரேகணத்தில் கண்டுற்றேன் - குறிப்பிட்ட எந்த ஒரு இசைக்காகவும், அந்த இசை ஒலித்த ஒரு குறிப்பிட்ட கனவிற்காகவும் என் நாட்டம் செல்லவில்லை. ஆஹா, அத்தருணத்தில், தொலைந்து போன என் இசை, என் எல்லாக் கனவுகளிலும் கண்ட அனைத்து வாழும் இதயங்களினிலிருந்தும் ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது. எந்த செவியும் கேட்காதது,எந்த எண்ணத்தாலும் பிடிக்க முடியாதது,எந்த அன்புணர்ச்சியும் உணராதது,எந்த கனவின் கற்பனைக்கும் எட்டாதது, எந்த நாக்கும் விளக்காதது,எவரால் கூற முடியும்,அந்த என் ஆருயிர் இசையைப்பற்றி. ஆனால் அனைவற்றையும் மறைத்திருக்கும் திரைகளுக்குப் பின்னே -என் ஆன்மாவின் ஆருயிரான,அந்த தொலைந்து-மீட்கப்பட்ட இசையை நான் உணர்ந்தேன்.
216. A million salutations at Thy petaled feet, O Lotus of Light.
216. பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!
பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்! உன் பாதத்தில் என் இதயத்தை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். உன் பாதத்தில் என் ஆன்மாவை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். சர்வவியாபகமான உன் பாதத்தில் என் அன்பின் மணமான கஸ்தூரி கந்தத்தை முழுவதுமாகச் சமர்ப்பிக்கின்றேன். அருமையான அருளாளனே, என் இதயத்தின் இருள்கவ்விய மூலைகளில் உன் ஆனந்த கானத்தை எப்போதும் இசைப்பாயாக. நான் முழுதுமாக உன்னவனே! நான் என்றென்றும் உன்னவனாகவே இருப்பேன்! என் மறவா நினைவின் பொற்சிமிழுக்குள் உனது காக்கும் அன்பினை நான் எப்போதும் வைத்துக் கொண்டிருப்பதால், எல்லா பயங்கரங்களையும் கண்டு நான் எள்ளி நகைப்பேன். என் அனைத்து ஆசைகளையும், உலக சுகங்களையும் உன் வேள்வித்தீயில் இட்டு, உன்மேலுள்ள என் பக்திக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பேன். என் கற்பனையின் நிழல்கள் மற்றும் அச்சங்கள் அனைத்தையும், உன் அருட்ஜோதியில் சுட்டெரிப்பேன். உன் அருட்ஜோதியில் நான் எப்போதும் விழித்திருந்து, உன் அரிய, சர்வவியாபக முகத்தை என் உன்னிப்பான கண்களால் யுகாந்தரமாக என்றும் நிரந்தரமாய் பார்த்துக் கொண்டேயிருப்பேன். உன் அன்பு என் பக்தி கோயிலில் எப்போதும் பிரகாசிக்கட்டும், அதன்மூலம் நான் எல்லா இதயங்களிலும் உன் அன்பினை விழிப்புறச் செய்வேனாக. கடவுளே! என் ஆன்மாவை உன் கோயிலாக்கிக் கொள்! என் இதயத்தை உன் பீடமாக்கிக் கொள்! என் அன்பினை உன் இல்லமாக்கிக் கொள்!
217. The imprisoned Bird of Omnipresence was released.
217. சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது.
தியானத்தின் கதவுகள் வழியாக, சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது. அது வெளியே பறந்து சென்று, தனது இறக்கைகளை எல்லையற்ற ஆகாசத்தில் விரித்தது. துன்பத்தால்-வாட்டப்பட்ட எல்லா உயிர்களின் மீதும் அதன் ஆனந்த இறக்கைகளின் சாந்த நிழலை வீசியது. பின், அந்த சொர்க்கலோகப் பறவை திரும்ப தனது சிறு கூண்டெனும் பழைய பழக்கங்களின் எண்ணங்களை நினைவுகூர்ந்தது; உடனே, அது தனது இறக்கைகளை மடக்கிக் கொண்டு, லோகாயதத் தன்மைகொண்ட அந்த இரும்புக்கம்பிகளுக்குப் பின்னே சென்று முடங்கியது. நிரந்தரத்தின் பறவையே, சித்திரவதைப்படுத்தும் கனவுகளாலான உன் சிறு கூண்டை உடைத்துத் தள்ளிவிட்டு, எல்லாவற்றிலும் குடிகொண்டுள்ள உன் சர்வவியாபகக் கூட்டிற்குப் பற.
218. Thou art Love because my mother loves me.
218. என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய்.
கடவுளே, என் தாயும், என் தந்தையும் என்னை நேசிப்பதனால், அன்பே நீ என்பதை நான் அறிவேன்: நீயே ஆதிமூலமான என் தந்தையும் தாயும். நீ என் நண்பர்கள் இதயத்தில் இருப்பதாலேயே தான் அவர்கள் என்னை நேசிக்கிறார்கள்: நீயே என் தலைசிறந்த நண்பன். நீயே என் குரு; நீ எப்படி என்னை நேசிக்கின்றாயோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி.
218A. A prayer (Received after a great test of God).
218A. ஒரு பிரார்த்தனை (கடவுளின் பெரும் சோதனைக்குப்பின் வழங்கப்பட்டது).
நோய்வாய்ப்படினும், சுகமாய் இருப்பினும், தோல்வியிலும், வெற்றிக்களிப்பிலும், வறுமையிலும், வளத்திலும், பெருநஷ்டத்திலும், பாதுகாப்பிலும், சாவிலும், வாழ்விலும், என் பரலோகத் தந்தையே, நான் உனக்கு என்றென்றும் விசுவாசத்துடன், பக்தியுடன், அன்புடன், விகாரமடையாமல், குறைப்படாமல், மாறுபடாமல் என்றென்றும் உறுதியாக நிற்பேன்.
219. By loving all friends may I find Thy love.
219. என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதன்மூலம் உன் அன்பைக் காண்பேனாக.
தெய்வத்தாயே, என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா பால்ய நண்பர்களையும் நான் நேசிக்குமாறு செய். என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதனால், எல்லா இதயங்களிலும் உன் அன்பையே காண்பேனாக. என்னை நேசிப்பவர்களை நான் நேசிக்க எனக்குக்கற்பி; அதை விட, என்னை நேசிக்காதவர்களுக்காக நான் நெஞ்சுருகிப் பிரார்த்திக்குமாறு எனக்குக்கற்பி. அவர்கள் அனைவரும் என் சகோதர, சகோதரிகள் என்ற காரணத்தினால் நான் அவர்களை நேசிப்பதில் மகிழ்ச்சியடைவேன்.
220. Teach me to give smiles to all.
220. எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி.
இறைத்தந்தையே, நான் எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி. மற்றவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமலிருக்க எனக்குக்கற்பி. மற்றவர்களை புன்னகையாலும் துன்பப்படுத்தாமலிருக்க எனக்குக்கற்பி. எப்படி நான் சந்தோஷமாக இருக்க விரும்புவேனோ, அப்படியே மற்றவர்களையும் நான் சந்தோஷப்படுத்துமாறு எனக்கு அருள்புரி.
221. Come to me as Peace in sleep and as Joy when I am awake.
221. உறங்கும்போது நீ சாந்த உருவிலும், விழித்திருக்கும்போது நீ ஆனந்த உருவிலும் என்னிடம் வரவேண்டும்.
பிரியமான இறைத்தந்தையே, நான் உறங்கும்போது, சாந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் விழித்திருக்கும்போது, ஆனந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் என் நண்பர்களை நேசிக்கும்போது, அன்பு உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் ஓடிவிளையாடும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து ஓடி வரவேண்டும். நான் சிந்திக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து சிந்திக்கவேண்டும். நான் இச்சாசக்தியை பிரயோகிக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து இச்சாசக்தியை பிரயோகிக்கவேண்டும். நீ என் அருகிலேயே இருப்பதால், நல்வழியில் நான் சிந்திக்கவும், விளையாடவும், ஒழுகவும், இச்சாசக்தியை பிரயோகிக்கவும் எனக்குக்கற்பி. நீ என் நலத்தை-விரும்புபவர்களில் மேன்மையானவராதலால், நான் உன் வழிகாட்டுதலின்படி நடக்க விரும்புகின்றேன்.
222. Thou art so plainly present everywhere, I bow to Thee.
222. நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய், உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
பிரியமான இறைத்தந்தையே, நான் அலைகள்மீது விளையாடும்போது, நான் உன்னுடன் விளையாடுகின்றேன். வானத்தில் நீ அழகிய வர்ணக் கோலமிடுவதை நான் ஒவ்வொரு நாளும் பார்க்கின்றேன். நீ பசும்புல்லினால் வெற்றுநிலத்தைப் போர்த்துவதை நான் காண்கின்றேன். நீ சூரியவொளியிலே இருக்கின்றாய். கடவுளே, நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய்! உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
223. My parents and friend love me, dear Father, because Thou do love me.
223. என் பெற்றோரும் நண்பர்களும் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால்.
பிரியமான இறைத்தந்தையே, என் பெற்றோர் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். என் நண்பர்கள் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். நான் என் நாட்டை நேசிக்கின்றேன், ஏனெனில் நீ அதனை நேசிப்பதனால். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
224. Thou art the cause of everything - I bow to Thee.
224. நீ தான் எல்லாவற்றிற்கும் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
பிரியமான இறைத்தந்தையே, என்னை இருளிலிருந்து விடுவிக்க நிலவொளி வருகின்றது. எனக்கு கதிரொளி நல்க பகலவன் வருகின்றது. எனக்கு உணவை அளிக்க தட்பவெப்ப காலங்கள் (ருதுக்கள்) வருகின்றன. ஆனால் நீ தான் இவைகளின் இயக்கக் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
225. I bow to Thee in the sunshine, breeze, dawn, and hearts of loving friends.
225. நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
பிரியமான இறைத்தந்தையே, எனக்குத் தாகமாக இருக்கும்போது தண்ணீரைப் பருகுகிறேன், ஆனால் நீதான் அதன்மூலம் உயிரூட்டும் சக்தியை எனக்குத் தருகின்றாய். குளிக்கும்போது நான் புத்துணர்வு பெறுகின்றேன், நீதான் உன் தூய்மையாக்கும், புத்துணர்வூட்டும் சக்தியை நீருக்கு அளித்துள்ளாய் என்பதை நான் உணர்கின்றேன். என் முகத்தில் சூரியவொளி விழும்போது, உனது போஷிக்கும் கதகதப்பினால் என்னைத் தொடுவதாக உணர்கின்றேன். நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், மத்தியானத்திலும், சந்தியாகால ஒளியிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
226. Teach me to find happiness in the joy of others.
226. பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.
தெய்வத்தாயே, நான் பிறரை நேசிக்கவும், அவர்களுக்கு நான் சேவையாற்றவும் எனக்குக்கற்பி. பிறர் என்னிடம் உண்மையாக இருப்பதை விரும்புவதைப் போல, நானும் பிறரிடம் வாக்குத் தவறாமல் உண்மையாக இருக்குமாறு எனக்குக்கற்பி. பிறர் என்னை நேசிப்பதை நான் விரும்புவதைப் போல, நானும் பிறரை நேசிக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறரை நான் மகிழ்வித்து, அவர்களைப் புன்னகைப் பூக்க வைக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.
227. Teach me to feel Thee as silence when I close my eyes.
227. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி.
இறைத்தந்தையே, நான் கேட்பதை சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மையை எனக்குக்கற்பி. நான் கற்கும் அனைத்து நல்விஷயங்களையும் என் அன்றாட வாழ்க்கையில் நான் பயில்வதற்கு உதவு. உன்னை இயற்கையின் செயல்களில் காணுமாற்றை எனக்குக்கற்பி. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி. உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் - ஓம்! ஆமென்!
ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து!
ஹரி: ஓம்!
Send Your Comments to phdsiva@mccrf.org