W137. உன் பிரேமபக்தி மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு. (Whispers from Eternity - Tamil & English)
137. உன் பிரேமபக்தி மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு.
பக்தியின் மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு: நான் சாகும்வரை உன்னுடையதைக் குடித்துக் கொண்டே இருப்பேன். என் உலக ஆசைகள் மடிந்து, உன்னுள்ளேயே இனி நான் எப்போதும் வாழ்வேன். என் உடம்பின் ஒவ்வொரு உயிரணுவிலும் சிலிர்ப்பூட்டும் ஊற்று பொங்கி, உன்மேல் கொண்ட என் அன்பின் ஒவ்வொரு திறவின் வழியேயும் வெளிப்படுகின்றது. பக்தியிலேயே தோய்ந்து, உன் சாந்நித்தியம் நிலவும் மேலுலகத்தினிற்குள் நுழைவேன். குருட்டுத்தனமாக அங்குமிங்குமென தேடியலைந்த என் பக்தியின் வேகம், திடீரென ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திறந்தது; ஆஹா, என்னே ஒரு ஆனந்தவுணர்வு உன் ஜோதியை தரிசிக்கும்போது!
---
cell - உயிரணு
---
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
137 Intoxicate me with the wine of Thy Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org