W120. உன் வாசலை நாடி வந்துள்ள அனாதைகளை, பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுப் பராமரி. (Whispers from Eternity - Tamil & English)
120. உன் வாசலை நாடி வந்துள்ள அனாதைகளை, பாதிக்கப்பட்டவர்களை ஏற்றுப்
பராமரி.
அனாதைகள், துன்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உன் குணப்படும் சக்தியைக்
கேள்விப்பட்டுள்ளார்கள். அவர்கள் உன் வாசலுக்கு வந்து காத்துக்
கொண்டிருக்கிறார்கள். நீ அவர்களை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பலாமா?
சோகத்தாலும், பயத்தாலும் பீடிக்கப்பட்டு நெஞ்சுடைந்து அவர்கள் சிந்துகின்ற
எரிக்கும் கண்ணீர்த் துளிகளை, உன் கண்ணுக்குப் புலனாகா கரங்களால் துடைத்து
உலர்த்துவாயாக.
மோகக்குழப்பத்தால் வழிதொலைந்தவர்கள் உன்னைத் தவிர வேறு யாரிடம் செல்வார்கள்?
உன்னைப் பார்க்கமுடியாமல் மறைக்கும் திரையை விலக்கு, உன் எல்லாம்வல்ல பேரருள்
முகத்தைக் காட்டு.
நீ தோன்றும் விடிவுகாலம் நெருங்கும்போதே, அவர்களின் இருண்ட கவலைகள்
சுவடின்றிப் பறந்து ஓடிவிடும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
120 Receive the orphans and the stricken, who have come to Thy door
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of
https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org