W51. லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று. (Whispers from Eternity - Tamil & English)
51. லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.
மாற்றமெனும் மீனவன் எங்கள்மேல் பிரபஞ்சமாயையெனும் வலையை வீசியுள்ளான். மனிதக் காப்பீட்டின் பொய்யான வாக்குறுதிகளெனும் நீரில், எங்களை மரணவலை தொடர்ந்து நெருங்குவதையறியாமல், நாங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாயவலைப் பிடிப்பிலும், பல மாட்டிக்கொள்கின்றன - ஒருசிலதே தப்புகின்றன. நான் ஆழ்கடல் தளத்தில் அமைதியான யோகசமாதியில் ஆழ்ந்து மூழ்கி, காலவலையிலிருந்து தப்பிவிட்டேன்.
அளவற்ற கருணைக்கடலே, என்னையும் என் சகோதரர்களையும் இந்த லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
51 Save us from the net of matter attachment.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org