W59. நன்னெறிப் பாதை தீயநெறி வழிகளைக் காட்டிலும் சிறந்தது என்பதை மறவாமல் இருக்கச் செய். (Whispers from Eternity - Tamil & English)
59. நன்னெறிப் பாதை தீயநெறி வழிகளைக் காட்டிலும் சிறந்தது என்பதை மறவாமல் இருக்கச் செய்.
பரம பேருணர்வே, அனைத்து அறநெறி நியதிகளையும் நான் அச்சத்தினாலன்றி அன்பினால் பகுத்து, அறியுமாறு எனக்குக் கற்றுக்கொடு. நன்னெறி முதலில் பழகச் சற்றுக் கடினமாகவும், அதனை அடிபணிந்து நன்கு பழகியபின், அது என்னை புகழுடைய உன் இன்பத்தால் அலங்கரிக்கும் என்பதையும் நினைவுகூரச் செய். தீயவையோ ஒரு துளி சுகத்தை முதலில் அளிப்பதாகத் தோன்றினாலும், அது நிச்சயமாக முடிவில் பெருந்துக்கத்தையே அளிக்கும் என்பதையும் என் நினைவில் நிறுத்து.
என் வளர்ச்சிக்கும் நலனுக்காகவும் இயற்றப்பட்டவை நன்னெறிகள். என் வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பவை தீய செயல்கள். நான் நன்னெறி நியதிகளை மதித்துப் பழகவும், தீய செயல்களை அடியோடு விலக்கவும் எனக்குக் கற்றுக்கொடு. எல்லாக் காலங்களிலும் நன்னெறி வழிகளே தீயநெறி வழிகளைக் காட்டிலும் சாலச்சிறந்தது என்பதை நான் கண்டுகொள்ள உதவும் பழக்கத்தை என்னுள்ளே பொதித்து விடு.
அறம் முதலில் கசந்தாலும், பின்னர் முடிவில் அமிர்தமாய் இனிக்கும்; ஆனால், தீயன முதலில் இனிப்பாக சுவைத்தாலும், எப்போதும் அவை விஷமாகவே கடைசியில் முடியும் என்பதனை நான் என் நினைவிலிருந்து மறவாமலிருக்க நீ உதவு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
59 Make me remember that Virtuous Ways are more charming than vicious ways.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org