Holy Kural - 087
87. பகைமாட்சி - Noble hostility
1. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. Turn from strife with foes too strong With the feeble for battle long. V# 861 2. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. Loveless, aidless, powerless king Can he withstand an enemy strong? V# 862 3. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. Unskilled, timid, miser, misfit He is easy for foes to hit. V# 863 4. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. The wrathful restive man is prey To any, anywhere any day. V# 864 5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது. Crooked, cruel, tactless and base Any foe can fell him with ease. V# 865 6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். Blind in rage and mad in lust To have his hatred is but just. V# 866 7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. Pay and buy his enmity Who muddles chance with oddity. V# 867 8. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப்பு உடைத்து. With no virtue but full of vice He loses friends and delights foes. V# 868 9. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். The joy of heroes knows no bounds When timid fools are opponents. V# 869 10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. Glory's light he will not gain Who fails to fight a fool and win. V# 870
Post a Comment