W71. என்னை உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை. (Whispers from Eternity - Tamil & English)
71. என்னை உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை.
அன்பின் பேரூற்றே, எங்கள் இதயங்களையும், எங்களை நேசிப்பவர்களின் மேல் செலுத்தும் அன்பினையும், உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் கொழிக்க வை. எங்கள் ஆசைகளெனும் நதிகளின் பெருந்தோற்றுவாயே, தாற்காலிகமான புலன்-சுகங்களெனும் மணல்களில் அங்குமிங்குமாய் ஓடி எங்கள் ஆசை-நதிகளை வற்றிப் போகாமல் இருக்குமாறு எங்களுக்குக் கற்பி.
எங்கள் ஏக்க நதிகளைப் பணிவு, சுயநல-தியாகம், மற்றும் பிறர்மேல் அக்கறை எனும் தாழ்வான நிலங்கள் வழியாகப் பாய்ந்து செலுத்துமாறு உன்னை உரிமையுடன் வேண்டுகின்றோம்; அன்பின் பேரூற்றே, உன்னால் எங்கள் நீரோட்டம் மேலும் உறுதியடைந்து, இறுதியில், நிறைவெனும் கடலான உன்னில் சங்கமிக்குமாறு செய்ய உன்னை உரிமையுடன் வேண்டுகின்றோம்.
எங்கள் கருணை, பாசம், அன்பெனும் நீரோடைகள் யாவும் அலைக்கழிக்கும் சுயநலத்தின் வறண்டபூமியில் ஓடி வற்றாமலிருக்க எங்களுக்கு அருள்புரி.
உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பு நதிகள் மெல்லியதாக, தனிமையில், பிரிந்து-ஓடியவையாவும், இறுதியில் உன் மகத்தான சாந்நித்தியத்தில் வந்து லயிக்கட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
71 Flood me with Thine Omnipresent Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org