W221. உறங்கும்போது நீ சாந்த உருவிலும், விழித்திருக்கும்போது நீ ஆனந்த உருவிலும் என்னிடம் வரவேண்டும். (Whispers from Eternity - Tamil & English)
221. உறங்கும்போது நீ சாந்த உருவிலும், விழித்திருக்கும்போது நீ ஆனந்த உருவிலும் என்னிடம் வரவேண்டும்.
பிரியமான இறைத்தந்தையே, நான் உறங்கும்போது, சாந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் விழித்திருக்கும்போது, ஆனந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் என் நண்பர்களை நேசிக்கும்போது, அன்பு உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் ஓடிவிளையாடும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து ஓடி வரவேண்டும். நான் சிந்திக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து சிந்திக்கவேண்டும். நான் இச்சாசக்தியை பிரயோகிக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து இச்சாசக்தியை பிரயோகிக்கவேண்டும். நீ என் அருகிலேயே இருப்பதால், நல்வழியில் நான் சிந்திக்கவும், விளையாடவும், ஒழுகவும், இச்சாசக்தியை பிரயோகிக்கவும் எனக்குக்கற்பி. நீ என் நலத்தை-விரும்புபவர்களில் மேன்மையானவராதலால், நான் உன் வழிகாட்டுதலின்படி நடக்க விரும்புகின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
221 Come to me as Peace in sleep and as Joy when I am awake (#209 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org