Holy Kural - 082
82. தீநட்பு - Bad friendship
1. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. Swallowing love of soulless men Had better wane than wax anon. V# 811 2. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். Who fawn in wealth and fail in dearth Gain or lose; such friends have no worth. V# 812 3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். Cunning friends who calculate Are like thieves and whores wicked. V# 813 4. அமரகத்து ஆற் றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. Better be alone than trust in those That throw in field like faithless horse. V# 814 5. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. Friends low and mean that give no help- Leave them is better than to keep. V# 815 6. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். Million times the wise man's hate Is better than a fool intimate. V# 816 7. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். Ten-fold crore you gain from foes Than from friends who are vain laughers. V# 817 8. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். Without a word those friends eschew Who spoil deeds which they can do. V# 818 9. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. Even in dreams the tie is bad With those whose deed is far from word. V# 819 10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. Keep aloof from those that smile At home and in public revile. V# 820
Send Your Comments to phdsiva@mccrf.org