Holy Kural - 103
103. குடிசெயல் வகை - Promoting family welfare
1. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். No greatness is grander like Saying 'I shall work without slack'. V# 1021 2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. These two exalt a noble home Ardent effort and ripe wisdom. V# 1022 3. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். When one resolves to raise his race Loin girt up God leads his ways. V# 1023 4. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. Who raise their races with ceaseless pain No need for plan; their ends will gain. V# 1024 5. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. Who keeps his house without a blame People around, his kinship claim. V# 1025 6. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். Who raise their race which gave them birth Are deemed as men of manly worth. V# 1026 7. அமரகத்து வன்கண்ணார் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. Like dauntless heroes in battle field The home-burden rests on the bold. V# 1027 8. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். No season have they who raise their race Sloth and pride will honour efface. V# 1028 9. இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. Is not his frame a vase for woes Who from mishaps shields his house? V# 1029 10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. A house will fall by a mishap With no good man to prop it up. V# 1030
Send Your Comments to phdsiva@mccrf.org