MCCRF - A global volunteer network

Holy Kural - 075

75. அரண் - Fortress




1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். The fort is vital for offence Who fear the foes has its defence. V# 741 2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண். A crystal fount, a space a mount Thick woods form a fort paramount. V# 742 3. உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல் An ideal fort's so says science: High, broad, strong and hard for access. V# 743 4. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். Ample in space, easy to hold The fort foils enemies bold. V# 744 5. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். Impregnable with stores of food Cosy to live-That fort is good. V# 745 6. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். A fort is full of stores and arms And brave heroes to meet alarms. V# 746 7. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண் Besieging foes a fort withstands Darts and mines of treacherous hands. V# 747 8. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண் A fort holds itself and defies The attacks of encircling foes. V# 748 9. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண். A fort it is that fells the foes And gains by deeds a name glorious. V# 749 10. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். But a fort however grand Is nil if heroes do not stand. V# 750

 

Powered by Blogger.