W40. நான் உன்னை நிரந்தரத்தின் முடிவில் பிடித்துவிடுவேனா? (Whispers from Eternity - Tamil & English)
40. நான் உன்னை நிரந்தரத்தின் முடிவில் பிடித்துவிடுவேனா?
இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன் வருகையை முன்னரே அறிவிக்கும் தூதுவனாக என் உள்ளமைதியிலிருந்து இன்பக் கிரணங்கள் பரந்து விரிகின்றன.
பல இரவுகளில் மினுமினுக்கும் வஸ்திரங்களில், பல விடியற்காலைகளில் பளபளக்கும் மரகத முகத்திரைகளையும், பனித்திவலை முத்துக்களையும் அணிந்துகொண்டு, பல சந்திக்காலங்களில் மாட்டின் மணியோசைகளுடன் இயைந்து நாட்டியமாடி, பல வருடங்கள் வசந்தகால மலர்களுடனும், வேனிற்கால காய்கனிகளுடனும், பனிக்கால வைரத்தைப் போன்ற ஆலங்குச்சிகளாலும், மடமடவெனப் பெய்யும் மழைகளாலான பளீரென்று மின்னும் வஸ்திரங்களாலும் அலங்கரிப்பட்டு, உன்னை ஆவலுடன் எதிர்பார்த்து என் ஸ்ம்ருதித் தோட்டத்தில் காத்திருந்தேன்.
உன் பக்தர்களிடமிருந்து நாட்களைக் கால ஓநாய் திருடிச் சென்றுவிடுவதால், இவையெல்லாம் இப்போது இல்லை. நான் இப்போது தனியாக - தன்னந்தனியாக - உள்ளேன்; கணப்பொழுதில் மறையும் விழாக்கோலங்களின் மேலிருந்த ஆசைகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும், நான் உன் பாதையைக் கண்டுகொள்ள எப்போதும் சுழலும் மணிநேரங்களுடன் பயணித்துத் தேடிக்கொண்டேயிருப்பேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாயினும் எனக்கு கவலையில்லை, ஏனெனில், இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன்னை நிரந்தரத்தின் எல்லையில் எப்போதாவது பிடித்துவிடுவேன் என்பதை நான் அறிவதனால்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
40 May I seize Thee at Eternity's end?
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org