Holy Kural - 093
93. கள்ளுண்ணாமை - Not drinking liquor
1. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். Foes fear not who for toddy craze The addicts daily their glory lose. V# 921 2. உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். Drink not liquor; but let them drink Whom with esteem the wise won't think. V# 922 3. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. The drunkard's joy pains ev'n mother's face How vile must it look for the wise? V# 923 4. நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. Good shame turns back from him ashamed Who is guilty of wine condemned. V# 924 5. கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து மெய்யறி யாமை கொளல். To pay and drink and lose the sense Is nothing but rank ignorance. V# 925 6. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். They take poison who take toddy And doze ev'n like a dead body. V# 926 7. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். The secret drunkards' senses off Make the prying public laugh. V# 927 8. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். Don't say 'I'm not a drunkard hard' The hidden fraud is known abroad. V# 928 9. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று. Can torch search one in water sunk? Can reason reach the raving drunk? V# 929 10. கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. The sober seeing the drunkard's plight On selves can't they feel same effect? V# 930
Send Your Comments to phdsiva@mccrf.org