W168. என் பக்தியின் விதைகளை உன் இதய-மண்ணிலே விதைப்பாயாக.(Whispers from Eternity - Tamil & English)
168. என் பக்தியின் விதைகளை உன் இதய-மண்ணிலே விதைப்பாயாக.
மெய்ம்மைக்கு விழிப்புறும் விடியற்பொழுதில், உன் பல-இதழ்களைக் கொண்ட தாமரைப்பாதத்தின் மேல், பிராயச்சித்த பச்சாதாபத் நீர்த்திவலைகள் படர்ந்துள்ளதைக் கண்டேன். அந்த அன்பு நீர்த்திவலைத் துளிகளினால், என் ஆன்மா தானாகத் தூய்மையுற்றது. பெருங்கவலையின் வறட்சி, உன் அருட்கருணை மழையினால் அறவே நீங்கியது.
கடந்த, நிகழ், வருங்கால இதழ்கள் முறையே விடியல், பகல், இரவு என முப்பொழுதிலும் மலர்ந்து விரிந்து, நித்தியமாக வெளிபட்டுக் கொண்டிருக்கும் உன் வாழ்வின் மிருதுவான தன்மையைப் புலப்படுத்துகின்றன.
உன் அருட்பீஜங்களை, பிரார்த்தனையால் நன்கு உழப்பட்ட என் இதய மண்ணிலே நீ இடையறாமல் விதைப்பாயாக; அவைகள் மலர்ந்து, மெய்யுணர்வு நல்கும் பலவாறான கனிகளை வழங்கும் மரங்களாக வளரட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
168 Bury the seeds of my devotion in Thy heart-soil.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org