W61. மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து, என் இதயத் தேன்கூட்டில் சேகரிக்க எனக்குக் கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
61. மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து, என் இதயத் தேன்கூட்டில் சேகரிக்க எனக்குக் கற்பி.
வாழ்வின் வளமான கோடைக்காலத்தில், மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து சேகரிக்க எனக்குக் கற்பி.
சுகந்தமான மன்னிக்கும் குணம், நறுமணங்கமழ் பக்தி, தாமரை-இதய மலர்களின் அரிய சாரம் போன்றவைகளைக் கொண்ட பல லட்சக்கணக்கான ஆன்ம மலர்களிலிருந்து எடுத்த மணமான தேனை என் இதயத் தேன்கூட்டில் நான் சேகரிப்பேன்.
வாழ்வின் மங்கிய குளிர்காலப் பனிபெய்யும் பாகத்தில், என் பூலோகவாசம் முடியும் தருணத்தில், சேகரித்துவைத்த என் பக்தித்தேனை நீ அடிக்கடி வந்து புகுந்து திருடிச் செல்லும் அந்த என் இதயத் தேன்கூட்டினுக்குள், நான் புகுந்து மறைந்து கொள்வேன்.
நீ எங்கு வந்துள்ளாயோ - எந்த இடத்தில் உன் காலடிமண் பட்டுப் புனிதமடைந்ததோ - அந்தவிடத்தில் நான் படுத்துக்கிடப்பேன். உன் காலடிச்சுவடுகளின் ஆழத்தில் என் பாதுகாப்பான உறைவிடத்தைக் கண்டு கொள்வேனாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
61 Teach me to store honey of quality from all soul-flowers in the honeycomb of my heart.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org