W214. என் அன்பின் ராக்கெட். (Whispers from Eternity - Tamil & English)
214. என் அன்பின் ராக்கெட்.
என் பிராணனை என் உடம்பிலிருந்து உள்ளிழுத்தேன்; என்னை என் உடலுடன் கட்டிவைத்துள்ள மூச்சுக்காற்று மறைந்தது. என் வாழ்வின் அனல்கக்கும் ராக்கெட், அனைத்தையும் காணும் ஒளிக்கண்ணில் தோன்றும் நட்சத்திரம் வழியே பறந்துசென்றது.
பிறகு, என் கொந்தளிக்கும் உணர்வுகளாலான அந்த ராக்கெட் எண்ணற்ற கலனங்களின் இதயங்களில் பரந்துவிரிந்தது; எவராலும் தடுக்கமுடியாத அந்த என் அன்பின் ராக்கெட், இறுதியில் பெரிய வால்நட்சத்திரம் போல பேருணர்வின் ஆழமான வெளியில், உன் சர்வவியாபக அமைதியின் அடியாழத்தின் உள்ளத்துக்குள்ளே சென்று அமிழ்ந்தது.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
214 The rocket of my love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org