Holy Kural - 097
97. மானம் - Honour
1. இன்றி யமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். Though needed for your life in main, From mean degrading acts refrain. V# 961 2. சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். Who seek honour and manly fame Don't do mean deeds even for name. V# 962 3. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. Be humble in prosperity In decline uphold dignity. V# 963 4. தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. Like hair fallen from head are those Who fall down from their high status. V# 964 5. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். Even hill-like men will sink to nought With abrus-grain-like small default. V# 965 6. புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. Why fawn on men that scorn you here It yields no fame, heaven's bliss neither. V# 966 7. ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. Better it is to die forlorn Than live as slaves of those who scorn. V# 967 8. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. Is nursing body nectar sweet Even when one's honour is lost? V# 968 9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். Honour lost, the noble expire Like a yak that loses its hair. V# 969 10. இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. Their light the world adores and hails Who will not live when honour fails. V# 970
Send Your Comments to phdsiva@mccrf.org