W198. உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய். (Whispers from Eternity - Tamil & English)
198. உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.
நெடுங்காலமாக வேண்டி இறுதியாக என் கோயிலுக்குள் நீ வந்துள்ளாய். என் புலன்களின் கதவுகள் அகலமாகத் திறந்திருக்கின்றன. இருட்பறவை தன் சிறகுகள் விரித்துப் பறந்துசென்றுவிட்டது. பழமையான என் காதல்கவிதையைப் புதிதாகப் பாடியிசைக்க நான் என் இதய யாழ்-தந்திகளை இயைத்துக் கொண்டுள்ளேன். என் ஆன்மாவிலிருந்து மலரும் புதிய ஸ்வரங்களைக் கொண்டு நான் உனக்குப் புதிய பொலிவுடன் துலங்கும் ஒரு கானத்தைப் பாடுவேன்.
என் கானத்தின் ஒலியலைகள் உன் பிரபஞ்ச-தாளக் கடல்மீது நடனம் புரியும். அப்படியே, என்னை பக்திப் பேரலைகளால் மிதக்கவைத்து உன் கரைக்கு அழைத்துச்செல்.
கான-அலைகளின் தாலாட்டே, உயிரினும் பிரியமான என் நிரந்தரத் தாயின் தாலாட்டை எனக்காகப் பாடு.
கடவுளன்பின் கந்தர்வ கானமே, என்னை உன் இனிய ராகத் தொட்டிலிலிட்டு ஆட்டி, கடவுளின் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் தூங்கச் செய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
198 Rock me to sleep on Thy Bosom of Peace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org