W151. என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.(Whispers from Eternity - Tamil & English)
151. என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.
என்னால் என்னை ஆட்கொள்ள நீ எனக்குக்கற்பி. என் ஐம்புலக் குதிரைகளை மனக்கடிவாளத்தினால் பூட்டி, என் விவேகமெனும் தேரோட்டி அவைகளை நன்கு வழிநடத்த நீ எனக்கு அருள்புரி. என் ஜீவாத்மா, இந்த உடம்பெனும் சிறு தேரில், ஒழுக்கமெனும் சக்கரங்களுடன், பற்பல பூலோக-ஜென்மங்களெனும் வேகவழிப்பாதைகளில் வெற்றிகரமாக சுற்றி, இறுதிப் பந்தயத்தின் கடைசிச் சுற்றில் ராஜாதிராஜனின் வரம்பற்ற அரசத்தேரில் தான் பத்திரமாக அமர்ந்திருப்பதை உணரும்வரை, ஓடிக் கொண்டேயிருக்கட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
151 Lead my body-chariot on the right path (Inspired by the Hindu Scriptures).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org