W164. உன் பனித்துளியான என்னை உன் கடலில் சங்கமம் செய்; சங்கமிப்பது என்னை இழப்பதற்காக அல்ல, ஆனால் விரிவாக்குவதற்காக.(Whispers from Eternity - Tamil & English)
164. உன் பனித்துளியான என்னை உன் கடலில் சங்கமம் செய்; சங்கமிப்பது என்னை இழப்பதற்காக அல்ல, ஆனால் விரிவாக்குவதற்காக.
மயக்கும் புலனின்பங்களாம் தாமரையிலை மீது சறுக்கிச்சென்று, உன் ஒளிரும் ஞான சாகரத்தில் ஆழும், உன் அன்பினில்-தோய்ந்த பனித்துளிகள் போல் நான் ஆக எனக்குக்கற்பி.
கடந்த-நிகழ்-வருங்கால இலையின்மேல் விளையாடும் நான் உன் அழிவற்ற பனித்துளி.
ஆசையின் தாகத்துளைகள் என் பலத்தை உறியாமல் இருக்க, என் மனம் ஓடும் பாதையில் விவேகக் களிம்புடன் கூடிய எண்ணெய்விட்டுப் பராமரித்துள்ளேன்.
உன் கரையற்ற கடலில், அதிர்ந்துகொண்டே மிதக்கும் பொய்ம்மையான பிறப்பு-இறப்பு இலையின்மீது தத்தளித்துக் கொண்டிருக்கும் நான் உன் ஊதாரிப் பனித்துளி. உன் பொறுப்பற்ற பனித்துளியான நான் இறுதியில் வீடுநோக்கித் திரும்புகின்றேன்.
இந்த நடனலயம் முடிந்தபின், உயரச்செல்லும் பிறப்பின் காலடிகளும், கீழேவிழும் மரணக் கூட்டிசையின் காலடிகளும் ஓய்ந்தபின், உன் கடலுக்குள் நான் வழுக்கிக் கொண்டு வந்துசேர்வேன்.
நான் என்னை இழக்கவிரும்பவில்லை - இந்த சின்னஞ்சிறு பனித்துளியின் ஒரே ஆசை என்னவெனில், உன்னோடு சேர்ந்ததினால் நான் நிரந்தரத்தின் மாபெரும் பனித்துளியாக ஆகவேண்டும் என்பது மட்டுமே.
கடவுள் நாட்டம் கொண்ட எல்லா உதடுகளினாலும் பருகப்படும் நான் ஒரு வானவில்-வண்ணம்கொண்ட சர்வவியாபக பனித்துளியாக இருப்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
164 Slip Thy dewdrop in Thy Sea, not to lose itself, but to enlarge itself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org