W155. கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.(Whispers from Eternity - Tamil & English)
155. கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்தினைக் காண எனக்கருள். அது என் மனிதக்கண்களின் முன் அல்லும் பகலும் பிரகாசிக்கட்டும். வெகுகாலமாய் லோகாயத விஷயங்களின் பொய்யான-ஜொலிப்பில் என் கண்கள் குருடாகியுள்ளன. நான் அவைகளை எப்போதும் வெளிமுகமாகவே பார்த்து வந்ததால், அவற்றின் உள்ளேயுள்ள பேருணர்வைப் பார்க்க இயலவில்லை. நான் பொருட்களெனும் கடுகு-விதைகளைத்தான் கண்டேனேயன்றி, அதனுள்ளே மறைந்திருக்கும் பேருணர்வெனும் எண்ணெயைக் காணவில்லை. ஞானதிருஷ்டி அளிக்கும் என் மூன்றாம் கண் இப்போது திறந்து கொண்டுள்ளது. அதை, நீ எப்போதும் திறந்தே வைப்பாயாக. மெய்யுணர்வின் அந்த ஒருமைக்கண் என்னைப் பொருட்களின் திரையை ஊடுருவி, கிறிஸ்துவின் [கூடஸ்த சைதன்யத்தின்] வரம்பற்ற இருப்பை எல்லாவிடங்களிலும் காணுமாறு செய்வாயாக. என் புனித, அறிவார்ந்த எண்ணங்கள், இந்த ஞான நட்சத்திரத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்று, எல்லாவற்றிலும் கிறிஸ்துவை சந்திக்குமாறு எனக்கருள்வாயாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
155 Demand for the opening of the spiritual eye, the Eastern Star of Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org