MCCRF - A global volunteer network

Holy Kural - 022

22. ஒப்புரவறிதல் - Duty to society




1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு Duty demands nothing in turn; How can the world recompense rain? V# 211 2. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு All the wealth that toils give Is meant to serve those who deserve. V# 212 3. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற In heav'n and earth 'tis hard to find A greater good than being kind. V# 213 4. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் He lives who knows befitting act Others are deemed as dead in fact. V# 214 5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு The wealth that wise and kind do make Is like water that fills a lake. V# 215 6. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் Who plenty gets and plenty gives Is like town-tree teeming with fruits. V# 216 7. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் The wealth of a wide-hearted soul Is a herbal tree that healeth all. V# 217 8. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் Though seers may fall on evil days Their sense of duty never strays. V# 218 9. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு The good man's poverty and grief Is want of means to give relief. V# 219 10. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து By good if ruin comes across Sell yourself to save that loss. V# 220

 

Powered by Blogger.