W218. என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய். (Whispers from Eternity - Tamil & English)
218. என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய்.
கடவுளே, என் தாயும், என் தந்தையும் என்னை நேசிப்பதனால், அன்பே நீ என்பதை நான் அறிவேன்: நீயே ஆதிமூலமான என் தந்தையும் தாயும். நீ என் நண்பர்கள் இதயத்தில் இருப்பதாலேயே தான் அவர்கள் என்னை நேசிக்கிறார்கள்: நீயே என் தலைசிறந்த நண்பன். நீயே என் குரு; நீ எப்படி என்னை நேசிக்கின்றாயோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
218 Thou art Love because my mother loves me (#206 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org