W200. தெய்வீக மதகளிப்புகளின் பெருங்கூட்டம் என்னை நாடி விடாமல் வந்துகொண்டேயுள்ளன. (Whispers from Eternity - Tamil & English)
200. தெய்வீக மதகளிப்புகளின் பெருங்கூட்டம் என்னை நாடி விடாமல் வந்துகொண்டேயுள்ளன.
என்னுடைய வாழ்வை உன்னுடையதுடன் பிணைத்துவிட்டேன், இப்போது என் வாழ்வு இடையறாத பரவசம். இரவு-பகலாய், விழிப்பு-கனவு-ஆழ்ந்தவுறக்க நிலைகளெல்லாவற்றிலும், உன் ஆனந்தவூற்று என்னைக் களிமதப்பில் அமிழ்த்துகின்றது. ஆஹா, என்ன ஆயிற்று எனக்கு? களிமதப்பின் மேல் மதகளிப்பு! முடிவற்ற, விவரிக்கமுடியாத தெய்வீக மதகளிப்புகளின் பெரும்பொழிவு என் மீது சொரிந்தவண்ணம் உள்ளன.
பல நூற்றாண்டுகால முதிர்வினால் சுவைசெறிந்த தேன்ரச மதுவே, உன்னை இறுதியில் கண்டுகொண்டேன்; உன் மதுரத்தை என்றும், என்றும், என்றென்றும் சுவைத்துக்கொண்டே இருப்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
200 Endless throngs of Intoxications visit me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org