W153. என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.(Whispers from Eternity - Tamil & English)
153. என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.
நான் நல்லவற்றைத் தவிர வேறெதையும் காணாதவாறு எனக்கருள். நான் சுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் தொடாதவாறு எனக்குக்கற்பி. நான் உன் குரலை மட்டுமே எல்லா நற்சொற்களிலும் கானத்தின் இனிமையழகிலும் கேட்குமாறு என்னைப் பழக்கு. பேருணர்வின் மலர்களிலிருந்து வீசும் தூய மணத்தை மட்டுமே நுகருமாறு என்னை வழிநடத்து. ஆன்ம-புஷ்டியளிக்கும் முழுமையான ரசத்துடனுள்ள உணவை உண்டுகளிக்க என்னை அழை. உன் தொடுதலை நினைவுபடுத்துவதையே நான் தொடுமாறு எனக்குக்கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
153 Teach me, that my senses may contact nothing but the good.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org