W219. என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதன்மூலம் உன் அன்பைக் காண்பேனாக. (Whispers from Eternity - Tamil & English)
219. என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதன்மூலம் உன் அன்பைக் காண்பேனாக.
தெய்வத்தாயே, என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா பால்ய நண்பர்களையும் நான் நேசிக்குமாறு செய். என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதனால், எல்லா இதயங்களிலும் உன் அன்பையே காண்பேனாக. என்னை நேசிப்பவர்களை நான் நேசிக்க எனக்குக்கற்பி; அதை விட, என்னை நேசிக்காதவர்களுக்காக நான் நெஞ்சுருகிப் பிரார்த்திக்குமாறு எனக்குக்கற்பி. அவர்கள் அனைவரும் என் சகோதர, சகோதரிகள் என்ற காரணத்தினால் நான் அவர்களை நேசிப்பதில் மகிழ்ச்சியடைவேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
219 By loving all friends may I find Thy love (#207 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org