W28. மோசஸாக வந்து தரிசனம் கொடு. (Whispers from Eternity - Tamil & English)
28. மோசஸாக வந்து தரிசனம் கொடு.
ஓ மோசஸ், தேவதூதர்களின் மலர்ந்த மலர்ச்சுடரே! உங்கள் ஞானத்தின் சக்தி பலரை சோகப் பாலைவனத்தில் இருந்து புறப்பாடு செய்வித்து, மலர்ச்சியான ஆனந்த பூமிக்கு வழிநடத்திச் சென்றது.
உங்கள் வாழ்வின் உதடுகள், ஆன்ம-இருளை உண்டாக்கும் முட்புதர்களை ஞானத்தின் கனலினால் சுட்டுப்பொசுக்கி, அதன்மூலம் பிரகாசிக்கும் சுடரொளியில் கடவுளின் கருணை-முகத்தினை தரிசிப்பதற்கான ரகசியமான வழிகளை உபதேசித்தன.
அன்பின் "ஒளிர்ந்துசுடரும் புதர்ச்செடியின்" அருகில், அனைவருக்காகவும் கருணையால் சொரியும் கண்ணீர்மல்க நிற்கும் உங்களை அங்கு கடவுள் பார்த்து இவ்வாறு பகர்ந்தார்:
"என் சொர்க்க லோகத்து தேவதைகள் பத்து பேர் இங்கு பூலோகத்திற்கு உன்னுடன் வந்து சேர்ந்துகொண்டு, என் பத்து அனுசாசனங்களை, அவர்கள் அமைதியாக வீரக்கொம்பினால் எல்லா காலங்களிலும் ஊதிக்கொண்டு, என் தெய்வீக குணங்களின் கட்புலனாகாத படையின் அணிவகுப்பைப் பிரகடனப்படுத்தி, பாபம், தவறு, அசத்தியம், மற்றும் அவைகளின் மருள்-போதையூட்டம் பெற்ற சிப்பாய்கள் ஆகியவற்றின் துணையால் சூழ்ந்த மனித இருள் சைத்தானைப் போரிட்டு வெல்ல போர்முரசு கொட்டிக் கொண்டேயிருப்பார்கள்."
ஓ மோசஸ், நீங்கள் முக்திக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு! இருண்ட யுகத்தினில் தீய மருட்சக்திகளை போரிட்டு வெல்வதற்காக நடாத்திய உங்கள் இடையறாத அணிவகுப்பில் சேர்வதற்காக பல போர்வீர-ஆன்மாக்கள் தங்களை நாடுகிறார்கள்.
கடவுளை-நேசிக்கும் மோசஸ், கோழைத்தனத்தை வீரத்தால் வெல்லவும், வென்று, எல்லா இதய அரியாசனத்திலும் ஆட்சிபுரியும் கடவுளர்களுக்கு கடவுளானவரை - அவரைத் தவிர வேறெந்தக் கடவுளையுமன்றி - உன்னதமாக வழிபட எங்களுக்குக் கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
28 Come to me as Moses.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org