W77. எல்லா ஆன்ம-சுடர்களுக்கும் அடியில் ஒளிரும் ஒரு பெருஞ்ஜோதியைப் பார்க்க உதவ உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
77. எல்லா ஆன்ம-சுடர்களுக்கும் அடியில் ஒளிரும் ஒரு பெருஞ்ஜோதியைப் பார்க்க உதவ உரிமையுடன் வேண்டுதல்.
நித்திய பெருஞ்ஜோதியே, பிரபஞ்ச உணர்வெனும் பலதுளைகள் பதித்த பெரும் எரிவாயு-அடுப்பு வட்டிலுள்ள (gas-stove burner), ஒவ்வொரு மனித பிரக்ஞைகளாம் துவாரம் வழியாகவும் நீ சிறிய ஆன்ம-சுடர்களாக ஜ்வாலையுடன் கனல்வீசுகின்றாய். நீ ஜீவராசித் துவாரங்கள் மூலம் அவைகளின் ஆன்மாவாக ஜ்வாலையுடன் கனல்வீசும்போது, பலவாகவும், குறுகியனவாகவும், சிறியனவாகவும், பகுபட்டதாகவும் வெளிப்படுகின்றாய். ஆனால் நீ எல்லா மனிதமனத் துவாரங்களுக்கடியிலும் ஒளிருமோர் என்றும் அணையாப் பரஞ்ஜோதி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
77 Demand for seeing One Fire beneath all soul-flames
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org