Holy Kural - 129
129. புணர்ச்சி விதும்பல் - Longing for reunion
1. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. Rapture at thought and joy when seen Belong to love and not to wine. V# 1281 2. தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். When passion grows palmyra-tall Sulking is wrong though millet-small. V# 1282 3. பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணாது அமையல கண். Though slighting me he acts his will My restless eyes would see him still. V# 1283 4. ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. Huff I would, maid, but I forget; And leap to embrace him direct. V# 1284 5. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து. When close I see not lord's blemish Like eyes that see not painter's brush. V# 1285 6. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. When he's with me I see not fault And nought but fault when he is not. V# 1286 7. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. To leap in stream which carries off When lord is close to feign a huff. V# 1287 8. இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. Like wine to addicts that does disgrace Your breast, O thief, is for my embrace! V# 1288 9. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். Flower-soft is love; a few alone Know its delicacy so fine. V# 1289 10. கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. She feigned dislike awhile but flew Faster for embrace than I do. V# 1290
Post a Comment