W122. என் ஆன்ம-பசியைத் திருப்திப்படுத்து. (Whispers from Eternity - Tamil & English)
122. என் ஆன்ம-பசியைத் திருப்திப்படுத்து.
சர்வ வியாபகப் பேருணர்வே, உன் உற்சாகமூட்டும் எண்ணத் தென்றல் என் இதயத்தின் மூடுமேகங்களை விலக்கியது. என் மனவெளி இப்போது தெளிவாக உள்ளது; நிர்மலமாக்கப்பட்ட தூய ஆன்மாவினால், நான் உன்னை மட்டுமே எங்கும் காண்கின்றேன். உன் ஆனந்தத்தின் கதிரொளி வேகமாகப் பரவி, என் இருப்பின் அடி ஆழத்தைத் தொடுகின்றது. காலங்காலமாய் பசியினால் வாடிய நான், உன் ஒளியமுதினை மனதார அருந்துகின்றேன். உன் கருணையாலும், என் நிலையான விழிப்புணர்வாலும், அத்தகைய ஆனந்தம் என்றென்றும் எனதாகவே ஆகட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
122 Satisfy my soul-hunger.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org