W159. பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.(Whispers from Eternity - Tamil & English)
159. பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
நான் அமைதிக்கோயிலுக்குள் நுழைய ஆரம்பித்தேன். கண், காது, சுவை, நுகர்வு, தொடுவுணர்வு ஆகிய மினுமினுக்கும், கவனத்தைக் குலைக்கும் மின்பல்புகளை அணைத்தேன்; ரத்தத்தை-சுத்தீகரிக்கும் மூச்சினைச் சத்தம் செய்யாமல் இயங்குமாறு பணித்தேன். தெய்வத்தாயே, உன் காலடிச்சப்தம் கேட்டவுடன், என் பலகோடி உயிரணுக்களை ஸ்தூல ரத்தத்தினால் அடிமைப்படுத்தும் இதயத்தை நான் அவ்விதம் செய்யாமல் இருக்கச் சொன்னேன், ஏனெனில், நீ வரும்போது உன்னுடன் உயிரளிக்கும் ஆன்மீகக்கதிர்கள் நிரம்பிய குவளையை ஏந்தி வந்தாய்.
தெய்வத்தாயே, அவைகளால் எனக்கு மேன்மேலும் ஊட்டிவிடு! இதயம், உயிரணுக்கள், மனம், எண்ணங்கள் ஆகியன இனி தேய்மானம் அடையாது, ஏனெனில், உன் நிரந்தர உயிரினால் சாகாத்தன்மை பெற்றதால்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
159 Demand to be fed with Cosmic Rays.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org