MCCRF - A global volunteer network

Holy Kural - 077

77. படையாட்சி - The glory of army




1. உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாம் தலை The daring well-armed winning force Is king's treasure and main resource. V# 761 2. உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது Through shots and wounds brave heroes hold Quailing not in fall, the field. V# 762 3. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும் Sea-like ratfoes roar ... What if? They perish at a cobra's whiff. V# 763 4. அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. The army guards its genial flame Not crushed, routed nor marred in name. V# 764 5. கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. The real army with rallied force Resists even Death-God fierce. V# 765 6. மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. Manly army has merits four: Stately-march, faith, honour, valour. V# 766 7. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. Army sets on to face the foes Knowing how the trend of war goes. V# 767 8. அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். Army gains force by grand array Lacking in stay or dash in fray. V# 768 9. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. Army shall win if it is free From weakness, aversion, poverty. V# 769 10. நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். With troops in large numbers on rolls Army can't march missing gen'rals. V# 770

 

Powered by Blogger.