W16. உடல்-பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)
16. உடல்-பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான பிரார்த்தனை.
சின்மயப் பிரபஞ்ச சக்தியே, நீ தான் என் உடலை நேரடியாகப் பேணுகின்றாய். திடமான, திரவ, வளிமய உணவு வகைகள் உன் பிரபஞ்ச சக்தியினால் உருமாற்றப்பட்டு, முழுமையான ஆன்மசக்தியாக பரிமளிக்கப்பட்டு என் உடலைப் பராமரிக்கின்றன. பேருணர்வே, நான் உணவைச் சார்ந்து வாழ்வதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, நேரடியான பிரபஞ்ச சக்தியினைச் சார்ந்து வாழ்வதை மென்மேலும் அதிகப்படுத்தக் கற்றுக்கொள்ள எனக்கு உதவு. உன் சக்தி புலன்களின் பல்பு விளக்குகளில் ஒளியேற்றுகின்றது. நான் உன் சர்வ வியாபக பிரபஞ்ச சக்தியினால் என்னை ரீசார்ஜ் செய்து கொள்கின்றேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
16 Prayer-Demand for recharging of body-battery.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org