Holy Kural - 089
89. உட்பகை - Secret foe
1. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். Traitorous kinsmen will make you sad As water and shade do harm when bad. V# 881 2. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. You need not sword-like kinsmen fear Fear foes who feign as kinsmen dear. V# 882 3. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவுஇடத்து மட்பகையின் மாணத் தெறும். The secret foe in days evil Will cut you, beware, like potters' steel. V# 883 4. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவுந் தரும். The evil-minded foe within Foments trouble, spoils kinsmen! V# 884 5. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவுந் தரும். A traitor among kinsmen will Bring life-endangering evil. V# 885 6. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. Discord in kings' circle entails Life-destroying deadly evils. V# 886 7. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. A house hiding hostiles in core Just seems on like the lid in jar. V# 887 8. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. By secret spite the house wears out Like gold crumbling by file's contact. V# 888 9. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. Ruin lurks in enmity As slit in sesame though it be. V# 889 10. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. Dwell with traitors that hate in heart Is dwelling with snake in selfsame hut. V# 890
Send Your Comments to phdsiva@mccrf.org