Holy Kural - 100
100. பண்புடைமை - Courtesy
1. எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. To the polite free of access Easily comes courteousness. V# 991 2. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. Humanity and noble birth Develop courtesy and moral worth. V# 992 3. உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. Likeness in limbs is not likeness It's likeness in kind courteousness. V# 993 4. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. The world applauds those helpful men Whose actions are just and benign. V# 994 5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புஉள பாடறிவார் மாட்டு. The courteous don't even foes detest For contempt offends even in jest. V# 995 6. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். The world rests with the mannered best Or it crumbles and falls to dust. V# 996 7. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். The mannerless though sharp like file Are like wooden blocks indocile. V# 997 8. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை. Discourtesy is mean indeed E'en to a base unfriendly breed. V# 998 9. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். To those bereft of smiling light Even in day the earth is night. V# 999 10. பண்பிலான் பெற்ற பெருஞ் செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந்த தற்று. The wealth heaped by the churlish base Is pure milk soured by impure vase. V# 1000
Send Your Comments to phdsiva@mccrf.org