Holy Kural - 023
23. ஈகை - Charity
1. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து To give the poor is charity The rest is loan and vanity. V# 221 2. நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று To beg is bad e'en from the good To give is good, were heaven forbid. V# 222 3. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள No pleading, 'I am nothing worth,' But giving marks a noble birth. V# 223 4. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு The cry for alms is painful sight Until the giver sees him bright. V# 224 5. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் Higher's power which hunger cures Than that of penance which endures. V# 225 6. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி Drive from the poor their gnawing pains If room you seek to store your gains. V# 226 7. பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது Who shares his food with those who need Hunger shall not harm his creed. V# 227 8. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் The joy of give and take they lose Hard-hearted rich whose hoarding fails. V# 228 9. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல் Worse than begging is that boarding Alone what one's greed is hoarding. V# 229 10. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை Nothing is more painful than death Yet more is pain of giftless dearth. V# 230
Send Your Comments to phdsiva@mccrf.org