W156. மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.(Whispers from Eternity - Tamil & English)
156. மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.
வரம்பற்ற பேருணர்வே, உன் இருப்பு கதகதப்பான சூரியனின் கதிர்களிலும், குளிர்ந்த நிலவொளியிலும் சமமாக மேவி அவைகளின் பின் மறைந்துள்ளது. அந்த ஒளிமண்டலங்கள், அழகிய இயற்கைக்கன்னியின் பொருள்களாலான மேலாடையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதேயன்றி உன்னைக் காட்டுவதில்லை; எனவே, அவைகள் என்னைப் பொறுத்தவரை இருட்டிற்குச் சமானம். இவ்விதமாக, சர்வத்தையும்-பிரகாசிக்கும் உன் பெருஞ்ஜோதி பொருட்களை-பிரகாசிக்கும் ஒளிமண்டல இருளிற்குப் பின்னால் மறைந்துள்ளது. இந்த இருளை விலக்கு! நான் சுய இருளினால் சூழப்பட்டு, என் கண்களை மூடி அமர்ந்திருக்கையில், மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பின் பிரகாசம் என்னுள் சுடருமாறு செய்; அந்த ஒளியின்மூலம் நான் உன்னை வழிபடும் கண்களால் தரிசிப்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
156 Demand for the rising of the Aurora of Intuition.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Post a Comment