W5. நீ தான் குண்டுவீச்சுகளிலிருந்து காக்கும் தலைசிறந்த கவசம். (Whispers from Eternity - Tamil & English)
5. நீ தான் குண்டுவீச்சுகளிலிருந்து காக்கும் தலைசிறந்த கவசம்.
நிர்மூலமாக்கும் போர் மேகங்கள் நெருப்பையும், மரணத்தையும் மழையாகப் பெய்யும் போது, கடவுளே, குண்டுவீச்சுகளிலிருந்து என்னைக் காக்க நீ தான் எனக்குத் தலைசிறந்த கவசம் என்பதனை நான் மறக்க மாட்டேன். வாழ்விலும், சாவிலும், வியாதியிலும், பஞ்சத்திலும், தொற்றுநோயிலும், ஏழ்மையிலும், நான் உன்னை இறுக்கமாய்ப் பிடித்துக் கொள்வேன். ஏனெனில் நீ மட்டுமே வாழ்க்கை தரும் இருமை அனுபவங்கள் அனைத்திலிருந்தும் நான் பாதிக்கப்படாமலிருக்க எனக்கு வழி காட்டமுடியும். மாறிக்கொண்டிருக்கும் பால்ய, இளமை, முதுமைப்பருவங்களாலும், உலக ஆரவார நடப்புகளாலும் தீண்டப்பட முடியாத நான் மரணமற்றவன் என என்னை உணருமாறு செய்வதற்கு, நீ என்னை எப்போதும் ரட்சித்துக் கொண்டுள்ளாய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
5 Thou art the best bomb-shelter.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org