W15. உணவருந்துமுன் செய்யும் பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)
15. உணவருந்துமுன் செய்யும் பிரார்த்தனை.
இறைத்தந்தையே, இவ்வுணவை ஏற்றுக்கொண்டுப் புனிதமாக்கு. இதனைப் பேராசைக் கல்மஷம் களங்கப்படுத்தாமல் இருக்கட்டும். உணவு உன்னிடத்திலிருந்து தோன்றுகிறது; அது உந்தன் கோயிலைக் கட்டுவதற்காக. இவ்வுணவை ஆன்மீகமாக்கி முழுமைப்படுத்து. அது பிரம்மத்திடமிருந்து தோன்றி பிரம்மத்தில் சங்கமிக்கிறது. நாங்கள் உன் தோற்றத்தின் இதழ்கள், ஆனால் நீயோ அதன் மலர், அதன் உயிர், அதன் கோமளமான அழகு. எங்கள் நெஞ்சங்களில் உன் சாந்நித்தியத்தின் சுகந்தத்தை விரவிப் பரவச்செய்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
15 Prayer-Demand before taking food.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org