W180. உன் ஒளி எங்கள் வழியே பிரகாசிக்க எங்களை ஒளியூடுருவுமாறு செய்.(Whispers from Eternity - Tamil & English)
180. உன் ஒளி எங்கள் வழியே பிரகாசிக்க எங்களை ஒளியூடுருவுமாறு செய்.
உன் பிரபஞ்சக் குடும்பத்திலுள்ள தேவதூதன், வெற்றிவீரன், பட்டுப்பூச்சி, நான் என எல்லா உறுப்பினர்களுக்கும், உன் அன்பின் சூரியக்கதிர்கள் சமமாகப் பிரகாசத்தை நல்குகின்றன. எங்கள் மந்தபுத்தியினால் நாங்கள் எங்களை ஒளிபாயாத ஜடமாக ஆக்கிக்கொண்டால் அது எங்கள் குற்றமே. நாங்கள் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் எங்கள் கண்ணாடியில் படிந்திருக்கும் தவறெனும் அழுக்கின் படலத்தைத் துடைக்க எங்களுக்குக் கற்பி.
எங்கள் ஆன்மீகப்பிடிப்புக் கரங்கள் பலவீனமாக இருக்கின்றன. தலைசிறந்த தூய்மையாளனே, எங்கள் அங்கங்களில் உன் சக்தியை புகுத்து. அதன்மூலம், எங்கள்மேல் படிந்து உன் ஒளியை தங்குதடையின்றி பிரகாசிப்பதைத் தடுக்கும் இருள்மண்டிய தூசியை துடைத்து அகற்றுவோம். உன்னைப் பிரதிபலிக்கும் கேடில்லா, பிரகாசமான கண்ணாடிகளாக எங்களை ஆக்கு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
180 Make us Transparent, that Thy Light may shine through us.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org