W128. நான் உன்னை மலரில் மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன். (Whispers from Eternity - Tamil & English)
128. நான் உன்னை மலரில் மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன்.
ஓர் மலரைப் பார்த்து வழிபட ஆரம்பித்தேன். திடீரென, இறைத்தந்தையே, நீ அங்கு மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன். உன் சாந்நித்தியத்தின் நறுமணத்தை அது வீசியது. உன் தூய்மையின் அழகு அதன் இதழ்களை அலங்கரித்தது. உன் ஞானத்தின் சொக்கத்தங்கம் அதன் இதயத்தினின்று ஒளிர்ந்தது. அனைத்தையும் அரவணைத்துத் தாங்கும் உன் சக்தி நளினமான புறவிதழ்களை நிரப்பியது. வாழ்வின் ரகசியமும் உன் என்றுமழியாத் தன்மையும் மகரந்தத்தில் பொதிந்து - உன் இன்னமுதைச் சுவைக்கும் வண்டின் நெஞ்சின் மேல் மேவியது. சாலையோரத்தில் வளரும் சின்னஞ்சிறு தளையின் நெஞ்சினுள்ளும் பிரதிபலிக்கும் உன் தோற்றத்தின் அற்புதத்தை எனக்குக்கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
128 I beheld Thee hiding behind the flowers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org