W141. நான் தெய்வமாதாவின் விஷமக் குழந்தையாக ஆவேன். (Whispers from Eternity - Tamil & English)
141. நான் தெய்வமாதாவின் விஷமக் குழந்தையாக ஆவேன்.
மலைகள், பெரு நீர்வீழ்ச்சிகள், வனப்பான காட்சி என இவைகளால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கை அரங்கத்தில், நான் வெகுகாலமாக விளையாடிக் கொண்டிருக்கின்றேன். விளையாட்டில் சோர்வுற்று, நான் உனக்காக அழும்போதெல்லாம், என் ஆசை ஜன்னல்வழியாக புதிதாகப் புகழ், நண்பர்கள், செழுமை எனும் பொம்மைகளைக் கொடுத்து என்னை அமைதிப்படுத்தி விடுவாய்.
இப்போது, இந்த முறை, தெய்வ மாதா, நான் உன் விஷமக் குழந்தையாக ஆவேன். நான் தொடர்ந்து இடையறாமல் அழுவேன். பூலோக இன்ப பொம்மைகள் என் அழுகையை இனி நிறுத்த முடியா. தெய்வ மாதா, நீ விரைவாக வந்துவிடு; இல்லையேல் நான் அகிலப் பிரபஞ்சத்தையும் என் கதறலினாலே எழுப்பிவிடுவேன். உன் அனைத்து உறங்கும் குழந்தைகளும் எழுந்து என்னுடன் சேர்ந்து கூக்குரலிடுவார்கள். உன் பிரபஞ்ச வீட்டுவேலையை சற்று விட்டு ஒதுக்கு! என்னைக் கவனி. நான் உரிமையுடன் வேண்டுவது உன்னை மட்டுமே, விளையாட்டுப் பொருள்களையல்ல!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
141. I will be the naughty baby of the Divine Mother.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org