Holy Kural - 008
8. அன்புடைமை - Loving-kindness
1. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும் What bolt can bar true love in fact The trickling tears reveal the heart. V# 71 2. அன்பிலார் எல்லாந் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு To selves belong the loveless ones; To oth'rs the loving e'en to bones. V# 72 3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு Soul is encased in frame of bone To taste the life of love alone. V# 73 4. அன்புஈனும் ஆர்வம் உடமை; அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு Love yields aspiration and thence Friendship springs up in excellence. V# 74 5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்துஞ் சிறப்பு The crowning joy of home life flows From peaceful psychic love always. V# 75 6. அறத்திற்கே அன்புசார்பு யென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை 'Love is virtue's friend' say know-nots It helps us against evil plots. V# 76 7. என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம் Justice burns the loveless form Like solar blaze the boneless worm. V# 77 8. அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று Life bereft of love is gloom Can sapless tree in desert bloom? V# 78 9. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு Love is the heart which limbs must move, Or vain the outer parts will prove. V# 79 10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு The seat of life is love alone; Or beings are but skin and bone! V# 80
Send Your Comments to phdsiva@mccrf.org