MCCRF - A global volunteer network

Holy Kural - 127

127. அவர்வயின் விதும்பல் - Mutual yearning




1. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left. V# 1261 2. இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. Beauty pales and my bracelets slide; Why not forget him now, bright maid? V# 1262 3. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். Will as guide he went to win Yet I live-to see him again. V# 1263 4. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறும்என் நெஞ்சு. My heart in rapture heaves to see His retun with love to embrace me. V# 1264 5. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்றோள் பசப்பு. Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders flies. V# 1265 6. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. Let my spouse return just a day Joy-drink shall drive my pain away. V# 1266 7. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின். If my eye-like lord returneth Shall I sulk or clasp or do both? V# 1267 8. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. May the king fight and win and give And with my wife I will feast this eve! V# 1268 9. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. One day seems as seven to those Who yearn return of distant spouse. V# 1269 10. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். When her heart is broken, what is The good of meeting and love-embrace? V# 1270

 

Powered by Blogger.