MCCRF - A global volunteer network

W26. கிருஷ்ணா, தெய்வீக கோபாலனாய் வந்து எனக்குத் தரிசனம் கொடு. (Whispers from Eternity - Tamil & English)



26. கிருஷ்ணா, தெய்வீக கோபாலனாய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.

கிருஷ்ணா, இந்துஸ்தானின் பிரபுவே, தென்றல் காற்றில் தவழ்ந்து வரும் உன் ஆனந்தக் குழலோசை, வழிதவறிச் சென்ற கன்றுகளை அவைகளின் வீடுதிரும்ப வழிநடத்திய அந்த ஜமுனா நதிக்கரையின் தனிமையைக் கண்டு நான் மனமிரங்கினேன்.

அன்பின் தாமரையே, உன் மயக்கம்-தெளிவிக்கும் கண்களைத் தரிசிக்க முடியவில்லையே என நான் மனம் கலங்கிக் கொண்டிருக்கையில், உன் கட்புலனாகாப் பேருணர்வு என் அடர்ந்த பக்தியின் உறுதியினால் ரூபம் தரிப்பதைக் கண்டேன்.

நீல-வான ஒளிக் கதிர்களாலான உன் தெய்வீக ரூபம், நிரந்தரத்தைக் காலடியாகக் கொண்டு, என் மனத்தின் கரையோரங்களில் நடந்து சென்று, அங்கு நிலையான மெய்யுணர்வுப் பாதச்சுவடுகளைப் பதித்தது. நான் உன் பூம்பாதச்சுவடுகளைக் காலங்காலமாய்ப் பின்பற்றி நடந்த வழிதொலைந்த கன்றுக்குட்டிகளில் ஒன்று. உன் ஞானக் குழல் கீதத்தினைக் கேட்டு, இருண்ட பின்னணி கொண்ட பலரை ஒளியின் வாசல் வழியே வழிநடத்திச் சென்ற, நடுநிலை மார்க்கமான அமைதியுடன் கூடிய செயல்பாட்டுத்திறனை நான் மேற்கொண்டு வாழுகின்றேன்.

தெய்வீக கிறிஸ்(ட்)ணா, நாங்கள் அனைவரும் உன் மேற்பார்வைக்குள் உள்ளதால், நாங்கள் முன்னேறிக் கொண்டிருப்பினும், வழிமாறிப் போனாலும், அல்லது அவநம்பிக்கையெனும் மூட்டத்தினால் ஸ்தம்பித்து நின்றிருந்தாலும், உன் வீடான என்றும் நிலைத்திருக்கும் விடுதலைப்பேற்றை நாங்கள் திரும்பப் பெற எங்களை வழிநடத்து. கிருஷ்ணா, உன் அன்பினையறிந்த ஒவ்வொரு அன்பரின் இதயத்திலும் நீ கொலுவீற்று ஆட்சிபுரிகின்றாய்.


தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா

Original:
26 Come to me, O Krishna, as the Divine Cowherd.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!
Powered by Blogger.