W38. உன் நீலோத்பல சரணாம்புஜத்திலிருந்து, என் மனத் தேன்வண்டு அருந்த விரும்புகின்றது. (Whispers from Eternity - Tamil & English)
38. உன் நீலோத்பல சரணாம்புஜத்திலிருந்து, என் மனத் தேன்வண்டு அருந்த விரும்புகின்றது.
தெய்வத்தாயே, நீலோத்பல ஒளியுடைய உன் சரணாம்புஜத்தில், என் மனத் தேன்வண்டு லயித்திருக்கின்றது. உன் தாயன்பின் மதுரத்தேனை அது அருந்துகின்றது. உன்னுடையதான அந்த ராணித்தேனீ, உன் மணம் மேவிய மதுரத்தையன்றி வேறெந்தத் தேனையும் அருந்தாது.
தெய்வத்தாயே, என் கற்பனைத் தோட்டங்கள் மேலெல்லாம் பறந்துசென்று, எல்லா சிற்றின்ப தேனையும் நான் மறுத்து, இறுதியில் உன் இருதயாம்புஜத்தில் ஊறும் அமிர்தத்தேனை கண்டுகொண்டேன்.
நான் உன் சுறுசுறுப்பான தேனீ, பல ஜென்ம வயல்நிலங்களின் மேல் பறந்து, அனுபவ சுவாசத்தினை நுகர்ந்து கொண்டிருந்தேன்; உன் சுகந்தம் என் ஆன்மாவின் எல்லா வாசனை-தாகத்தினையும் தீர்த்துவிட்டதால், இனி நான் மேலும் சுற்றித் திரியமாட்டேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
38 The bee of my mind loves to drink from the Blue Lotus of Thy Feet
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org