W66. என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி (Whispers from Eternity - Tamil & English)
66. என் புன்மைகளைச் சோதனை உலையில் போட்டுச் சுட்டெரி
என் வாழ்க்கையின் மூலத்தாதுக்கள் சோதனை உலையில் இடப்பட்டு உஷ்ணத்தால் கொதிக்கின்றன. அனுபவித்தீ என்னுள் உள்ள எல்லாவற்றையும் உருக்குகிறது.
ஆனால், தெய்வ சிற்பியே,
என்னுள் படிந்து கிடக்கும் கோழைத்தன மாசுக்களைப் பொசுக்கி அகற்றிவிடு;
எதையும் தாங்கும் இரும்பினை வெளிக்கொணர்;
ஆற்றல் பொதிந்த அமைதியால் அதனைக் கடினமாக்கு.
என் மனச்சமநிலையால் வலுவடைந்த கூரிய, திண்மையான ஒழுக்கத்தினால் ஆன ஆயுதங்களை உருவாக்கு; அந்த சமான மனநிலை எனும் ஆயுதங்களால் எண்ணச்சிதறல்கள் எனும் எதிரிகளை வெல்ல எனக்குக் கற்பி.
மனச்சமச்சீர் பெற்ற ஆயுதங்களைத் தரித்து கவனத்தைச் சிதறடிக்கும் பகைவர்களை போரிட்டு வெல்ல எனக்குக் கற்றுக் கொடு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
66 Burn Thou with frailties in the furnace of trials
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org