W172. என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பல் உன்னைத் தேடுகின்றது.(Whispers from Eternity - Tamil & English)
172. என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பல் உன்னைத் தேடுகின்றது.
என் ஆன்மாவின் தேடும் நீர்மூழ்கிக்கப்பல், லோகாயத குறிக்கோள்களெனும் இருண்ட வாயுப்பிரதேசத்தை விட்டு வேகமாக விலகி, வழித்தடமற்ற பிரபஞ்சப் பேருணர்வெனும் ஆழமான பிரதேசத்திற்குள் ஆழ்ந்து தாவியது.
திமிங்கிலத்தைப் போல நீந்தி, என் மனோ நீர்மூழ்கிக்கப்பல் மிகவும் அடியாழமான சூட்சுமக் கடல் பிரதேசத்திற்குள் உன்னைத் தேடிச் சென்றது. மிகுந்த தேடலினால் களைத்த என் ஆன்ம-நீர்மூழ்கிக்கப்பலின் தேடும் ஒளிக்கண்கள், திடீரென உன் அருளாசியினால் புலனாதீத சுடரொளியுடன் பிரகாசிக்கத் தொடங்கியது; நான் உன் இருப்பினை எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள ஆரம்பித்தேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
172 My soul-submarine is searching for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org