W72. இறைச்சிற்பியே, என் வாழ்வினைச் செதுக்கு! (Whispers from Eternity - Tamil & English)
72. இறைச்சிற்பியே, என் வாழ்வினைச் செதுக்கு!
நான் செய்யும் ஒவ்வொரு சப்தமும், உன் குரலின் அதிர்வலைகளுடன் வெளிப்படட்டும். நான் நினைக்கும் ஒவ்வொரு எண்ணமும், உன் சாந்நித்தியத்தின் உணர்வால் நிரம்பட்டும்.
நான் உணரும் ஒவ்வொரு உணர்வும், உன் அன்பினால் ஒளிவீசட்டும். என் இச்சாசக்தியினால் செய்யும் ஒவ்வொரு செயலும், உன் தெய்வீக உயிர்ச்சக்தியினால் உள்ளார்ந்து பொதியட்டும். என் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வெளிப்பாடும், ஒவ்வொரு லட்சியமும் உன்னால் அலங்கரிக்கப்படட்டும்.
இறைச்சிற்பியே, என் வாழ்வினை உன் இஷ்டம்போல் செதுக்கு!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
72 O Divine Sculptor, chisel my life.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org