MCCRF - A global volunteer network

Holy Kural - 003

3. நீத்தார் பெருமை - The merit of Ascetics




1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு No merit can be held so high As theirs who sense and self deny. V# 21 2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று To con ascetic glory here Is to count the dead upon the sphere. V# 22 3. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு No lustre can with theirs compare Who know the right and virtue wear. V# 23 4. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து With hook of firmness to restrain The senses five, is heaven to gain. V# 24 5. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி Indra himself has cause to say How great the power ascetics' sway. V# 25 6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் The small the paths of ease pursue The great achieve things rare to do. V# 26 7. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு They gain the world, who grasp and tell Of taste, sight, hearing, touch and smell. V# 27 8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் Full-worded men by what they say, Their greatness to the world display. V# 28 9. குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. Their wrath, who've climb'd the mount of good, Though transient, cannot be withstood. V# 29 10. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் With gentle mercy towards all, The sage fulfils the virtue's call. V# 30

 

Powered by Blogger.